வியாழன், 31 டிசம்பர், 2020

2020 டேக் இட் ஈஸி..

தங்களில் அநேகருக்கு இந்த 2020 பெரிய சவாலாக அமைந்து இருந்தாலும், எனக்கும் என் குடும்பத்திற்கும் இந்த வருடம் ஒரு சுவாரஸ்யமான படிப்பினையாக தான் இருந்தது.

இங்கே அமெரிக்காவில் பல துறைகள் கோவிட் காரணத்தினால் மூட பட்டு அந்நிறுவனத்தில் பணிபுரிவோர்களின் நிதிநிலைமை பாதிக்க பட்டு இருந்த போதிலும் அம்மணியின் மருத்துவ துறை மற்றும் என் நிதி துறை இரண்டும் "அத்தியாவாசியதுறையாக " நிர்ணயிக்க பட்டதால் இருவரின் வேலைகளின் சில சிறிய மாற்றங்கள் இருந்தாலும் பெரிதான பாதிப்பு ஒன்றும் ஏற்பாவிலை,

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

Losing our Way... :( Varun!!!!!

 



What an embarrassing loss Man. It was awful. 


Hope the Packers put one across Bears next week, for I think it's not working out well for us against the Cardinals next Sunday.


Just want to make the play off and from then on its anyone's game.


Still Hoping....


வியாழன், 10 டிசம்பர், 2020

Dr. அன்டர்சன் அமலன் குமார் (1971 -2020)

 "வரும் போது மறக்காம சமையலுக்கு காய்கறி ஏதாவது வாங்கின்னு   வந்துடுங்க!!"

அலை பேசியில் கணவனிடம் கூறினார் அம்மணி.

அம்மணி மருத்துவர் தானே, கண்டிப்பாக கணவனும் மருத்துவராக தான் இருப்பார் என்று நினைத்தால் தவறே இல்லை.

அருமையான குடும்பம். அம்மணி திருச்சியில் ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து கொண்டு இருக்கின்றார்கள்.. ஆஸ்தி, ஆசை இரண்டிற்கும் சேர்த்து ஒரே ஒரு செல்ல மகன்.


Anderson Amalan Kumar
கணவன் மருத்துவர் அல்ல, மருத்துவ துறைக்கு தேர்ச்சி பெரும் அறிவும் ஆற்றலும் இருந்தாலும் விவசாய துறையில் படித்து முனைவர் பட்டம் பெற்று பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார்.

வெள்ளி, 4 டிசம்பர், 2020

மூன்று வாரம் முன்னதாக வெளிவந்த - ரஜினியின் டிசம்பர் 31 ம் தேதி அறிவிப்பு!

டிஸ்கி:

இது முற்றிலும் என் கற்பனையே. ரஜினி என்ற ஒரு நடிகனை நான் மிகவும் ரசித்து கொண்டாடி இருக்கின்றேன்.  ஒரு எளிமையான ஆரம்பத்தில் இருந்த வந்தவர் தன் நம்பிக்கையாலும் விடா முயற்சியினாலும் சற்றும் பின் வாங்காமல் தன் இலட்சியத்தை நோக்கி பல முறை எதிர் நீச்சல் போட்டு திரை உலகத்தில் சக்ரவர்த்தியாக திகழ்ந்தார்- திகழ்கின்றார்-திகழுவார்.

செவ்வாய், 3 நவம்பர், 2020

டிரம்ப் ஆண்டாலும் பைடன் ஆண்டாளும் எனக்கொரு .....

"எப்ப வோட்டு போட போறீங்க"

காது கிழிய கேட்டு கொண்டே நேற்று என் அருகில் வந்தாள், இளைய ராசாத்தி.

"நாளைக்கு தானே  காலையில் போய் போடுவேன்

" கடைசி நாள் வரை வைக்கணும், போஸ்டலில் அனுப்ப வேண்டியது தானே.."

"மக, நான் எல்லாம் அந்த காலத்து ஆள். நமக்கு அங்கே போய் வரிசையில் நின்னு .. என் வோட்டு என்ன ஆச்சி? என் வோட்டு என்ன ஆகும்ன்னு டென்ஷனில் நின்னு, பேரை சொல்லி அவங்க, எல்லாம் சரியா இருக்கு, அங்கே போய் வோட்டை போடுங்கன்னு சொல்லும் போது கிடைக்குற த்ரில் வேணும்"

"இதுல என்ன த்ரில்..?"

"நம்ம ஓட்ட நமக்கும் முன்னால எவனும் போட்டு இருக்க கூடாது இல்ல!!"

"அது எப்படி, ஐடென்டிபிகேஷன் கேப்பாங்க தானே "

வியாழன், 22 அக்டோபர், 2020

"எழுமின்" - சர்வதேச தமிழ் பெண்களுடன் ஒரு காலை!

 எழுமின் - சர்வதேச தமிழ் பெண்களுடன் ஒரு காலை!

அனைத்திற்கும் முன்...

எனக்கும் "எழுமின்" பெண்களுக்கும் என்ன?

மூன்று தலைமுறை மகளிரோடு வாழும் என் வாழ்வின் இலட்சியத்தை சொன்னால் அது புரியும்  .

அம்மா (எனக்கு நான்கு வயது இருக்கும் போது கணவனை இழந்தவர்கள்) :

இவன் வாழ்வை பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று எண்ண வேண்டும்.

மனைவி : நான் பெற்ற என் இரு மகள்களுக்கும் இவனை போலவே ஒருவன் அமைய  வேண்டும்.

மகள்கள் : நாளை  எங்களுக்கும் மகள்கள் பிறக்கையில் இவனை போல் ஒரு தந்தை வேண்டும்.

இந்த மூன்றை மட்டுமே இலட்சியமாக வைத்து கொண்டு வாழும் ஒரு சராசரி மனிதன் தான். வாழ்வின் மற்ற அனைத்துமே இந்த மூன்றில் தான் அமைந்துள்ளது. இதில் வெற்றி என்றால் வாழ்வே வெற்றி.

சரி, தலைப்பிற்கு வருவோம்.



நேற்று, "எழுமின்" என்ற அமைப்பை சார்ந்த அருமை தோழி புவனா கருணாகரன்...

"விசு!!, எழுமின் சார்பாக  TWI  (சர்வதேச தமிழ் பெண்கள்) ஒரு Zoom நிகழ்ச்சி நடத்த போறோம், நேரம் இருந்தால்  வரவும்" 

என்று ஒரு அழைப்பை தர.. 

"அங்கே என்ன செய்ய போகின்றீர்கள்?!!"

"என்னையும் சேர்த்து பதினாறு பெண்கள் பேச போகின்றோம், பெண்களில்  எழுச்சியை (Empowerment?) பத்தி!!!"

புதன், 21 அக்டோபர், 2020

சொன்னது நீ தானா . சொல் ! Cell ! செல்! ...

புத்தம் புது காலை போல முடியாவிட்டாலும் ஒரு மீளாவது  போடலாம். 

"வா வாத்தியாரே.. ஐரோப்பா பயணம் எல்லாம் எப்படி ?"

"நல்ல போச்சி தண்டம்... நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கோம் வாத்தியாரே..!!!"

என்று பேசி கொண்டே இருக்கும் போதே.. தண்டபாணியின் மனைவி திருபுரசுந்தரி அங்கே வந்து சேர்ந்தார்கள்.

"ஹலோ சுந்தரி.. எப்படி இருக்கீங்க ..?"

"நல்லா இருக்கோம் .. அண்ணா.. நீங்க, அக்கா ராசாத்திங்க எப்படி?"

"எல்லாம் நல்லா இருக்கோம்."

"இந்தா,சுந்தரி ஐரோப்பா மில்க் சாக்லேட்..."

"ஏன் வாத்தியாரே .. உங்க ஆபிசில் கொண்டு போய் வைச்சியே .. அதுல ரெண்டு பேக்கட் எனக்கு வாங்க வேண்டியது தானே.."

ரொம்ப அவசியம் பாணி..அங்கே நான் பட்ட அவஸ்த்தை போதாதா ? (அதை படிக்க இங்கே சொடுக்கவும்...ஒரு கோப்பையிலே என் ....)

அப்படி பேசி கொண்டு இருக்கும் போதே...சுந்தரி,,

"ஏன் அண்ணே,, ஐரோப்பாவில் விடுமுறைக்கு போறீங்க..அங்கே இருந்து இவருக்கு மணிக்கு ஒரு முறை SMS டெக்ஸ்ட் அனுப்புனம்ன்னு அவசியமா ?"

"புரியல, சுந்தரி..!!"

"அரை மணி நேரத்திற்கு ஒருமுறை டெக்ஸ்ட் அனுப்பினிங்களே.அதை சொன்னேன்!"

தண்டபாணி நடுவில் புகுந்து..

"சுந்தரி.. உள்ளே போய் வாத்தியாருக்கு டீ ஏதாவது எடுத்துன்னு வா..."

என்று சொல்ல.. சுந்தரி உள்ளே போக... நானோ..

"தண்டம் ... நான் உனக்கு எப்ப "SMS - டெக்ஸ்ட்" அனுப்புனேன்.. உன் தொல்லையே வேண்டாம்னு தானே 3 வாரம் ஐரோப்பா போனேன்.. இங்கே என்னடானா ...SMS  - டெக்ஸ்ட் .. லொட்டு லொசுக்குன்னு .. என்ன நடக்குது இங்கே..?"

"வாத்தியாரே..!!அந்த விஷயத்த பத்தி அப்புறம் பேசலாம்.. நீ சுந்தரி சொல்றதுக்கெல்லாம் சும்மா தலைய மட்டும் ஆட்டு.. அது போதும்.."

என்னை வண்டி தள்ள வைச்சிட்டிடே தண்டம்....

டீ எடுத்து கொண்டு வந்த சுந்தரி...

"போன சனி கிழமை .. "லாஸ் அன்ஜெல்ஸ்" போய் உங்க வண்டிக்கு எதோ கண்ணாடி மாத்தனும்ன்னு காலையில் போனார்... அப்புறம் சாயங்காலம் தான் வந்தார்.."

நானோ தயங்கி கொண்டே..

"ஆமா சுந்தரி... என்ன பண்றது.. அந்த கடைக்காரன் உடனே வந்தா கண்ணாடியை மாத்தி கொடுக்குறேன்னு சொன்னான்.. அதுதான் தண்டபாணி உதவி தேவை பட்டது .."

"அப்புறம் ரெண்டு நாளுக்கு ஒருமுறை தினமும் உங்க வீட்டத் தோட்டத்திற்கு  தண்ணீர் பாய்ச்ச போய்டுவார். அதுக்கு ஏன் அண்ணா தினமும் " டெக்ஸ்ட் " பண்ணிங்க.. ஒரே முறை பண்ணி இருந்தா போதும் இல்ல..."

"இல்ல,,சுந்தரி .. பாணி மறந்துட்டாருன்னா.. செடி காஞ்சிடும் இல்ல ... அதுதான்.."

"அப்புறம் ஒரு நாள் இரவு .. எதோ உங்க பக்கத்து வீட்டுக்கார் ஏதோ அவசரமா கூப்பிட்டார்ன்னு, இவரை போய் பார்க்க சொல்லி ஒரு SMS  அனுப்பினிங்க இல்ல ..  அன்னிக்கு இரவு 10 மணி போய்ட்டு காலையில் தான் வந்தார்.."

(தயங்கி கொண்டே... பொறாமையோடு... ) "ஆமா சுந்தரி.. எங்க வீடு திருடன் அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டதாம்... அதுதான் .. அங்கே போய் போலிஸ் வரவரைக்கும் தண்டம் காத்துன்னு   இருக்க வேண்டியாதாச்சி.."

"என்னமோ போங்க அண்ணா.. இருந்தாலும் "சுவிஸ் நாட்டில்" இருக்கும் போது எங்களை எல்லாம் காலாய்த்து ஒரு போட்டோ அனுப்பினிங்களே  .. அது சூப்பர்..."

"எந்த போட்டோ..?"

"அது தான் அண்ணே,, அந்த "ஆத்தோரமா ..""

"ஒ , அதுவா.. சும்மா தமாசுக்கு ..."

"அது சரி அண்ணே..இவரிடம் நேர பேசும் போது மட்டும் தண்டம் .. தண்டபானின்னு கூப்பிட்ரிங்க .. ஆனா SMS  ல் மட்டும் .. மிஸ்டர் தண்டபானின்னு எழுதுறிங்க .. அது ஏன்..?"

"சும்மா மரியாதைக்கு தான்.."

"சரி, அதை விடுங்க.. ..   . நீங்க இல்லாத போது இவரை நிறைய வேலை வாங்கிடீங்கோ.. அடுத்த முறை இவர் ஊருக்கு போகும் போது.. இவரும் உங்களிடம் இருந்து நிறைய எதிர் பார்ப்பார்..(என்று தன் மனதில் வந்த ஆசையை சுந்தரி, கணவன் பெயரை வைத்து சொல்லி முடித்தார் )"

என்று சொல்லி கொண்டே சுந்தரி அந்த இடத்தை விட்டு கிளம்பினார்கள் .

"என்ன தண்டம்.. நான் உனக்கு ஒரு SMS கூட அனுப்பலையே.. என் பெயரை சொல்லி வீட்டிலே நீ தங்கல போல.. இது எப்படி..?"

"விடு வாத்தியாரே..!!"

"பாணி... இது தானே வேண்டாம்.. விஷயத்த சொல்லு.. நான் எழுதின டெக்ஸ்ட் எல்லாம் அவங்க படிச்ச மாதிரி சொல்றாங்க.."

"அவங்க படிச்சதினால் தான் சொல்றாங்க.."

"நான் தான் SMS அனுப்பலையே.. அனுப்பாத SMSசை எப்படி படிச்சாங்க.."

"உனக்கு பதிலா அதையெல்லாம் நானே அனுப்பினேன்.."

"அனுப்புன சரி.. என் போன் என் கிட்டதானே இருந்தது.. அதுல இருந்து எப்படி அனுப்புன.?"


"என்ன வாத்தியாரே .. புரியாத மாதிரி நடிக்கிற ?"

"டேய்.. உண்மையாகவே புரியலே.. விளக்கமா சொல்லு.."

"வாத்தியாரே.. என்னிடம் ஒரு "ஸ்பேர்  - எக்ஸ்ட்ரா "அலை பேசி இருக்கு"

"இருக்கட்டும், அதுக்கு என்ன  இப்ப ?"

"பதறாத வாத்தியாரே.. பொறுமை .. இந்த ஸ்பேர் அலை பேசி நம்பரை .. "விசு வாத்தியார் "ன்னு  பேரை போட்டு,உன் புகை படத்தையும் போட்டு அடுத்த போன்ல சேவ் பண்ணிட்டேன்.."

"அப்புறம்..!!!?"

"அந்த போன்ல இருந்து எந்த SMS அனுப்பினாலும்..உன் போட்டோவோட " மெசேஜ் ப்ரம் விசு வாத்தியார்" ன்னு வரும்.. எனக்கு எப்ப எப்ப வெளியே போகணுமோ.. அப்ப அப்ப உன்னிடம் இருந்து ஒரு SMS வரும். நானும் ஜாலியா கிளம்பிடுவேன்.."

"டேய்.. நடுவில் நான் சுவிஸ் நாட்டில் ஆத்தோரம் இருந்த போட்டோ..?"

 "நீ தான் முகநூலில் சில படங்கள் போட்டியே.. அதுல இருந்து எடுத்து அனுப்பினேன்.."

"அட பாவி... எப்படி தண்டம்.. இப்படியெல்லாம் யோசிக்க முடியுது...?"

"ல்லாம் அவன் செயல்..."

"அட பாவி.. போன மூணு வாரம் என்னை தள்ள வச்சி உன் வண்டிய ஒட்டிகினியே.. நல்லா இரு.. நல்லா இரு.."

பின் குறிப்பு :

அன்று இரவு..

"தண்டம்..?"

"சொல்லு வாத்தியாரே.."

"எனக்கு அவசரமா ஒரு உதவி, தேவை படுது.."

"மூணு வாரமா என் வயித்துல  பால வார்த்த.. உனக்கா இல்லைன்னு சொல்ல போறேன்.. என்ன வேணும் சொல்லு.."

"அந்த "எக்ஸ்ட்ரா" அலை பேசி ஒரு ரெண்டு வாரம் கடனா தர முடியுமா ?"

"இப்ப முடியாது வாத்தியாரே.. வேணும்னா அடுத்த மாசம் வாங்கிக்கோ.."

"இப்ப ஏன் முடியாது..?"

"நம்ம "பிள்ளைவாள்" நேத்து தான் குடும்பத்தோடு இந்தியா போய் இருக்கான்.. அடிக்கடி SMS பண்ணுவான்.. அது சரி.. உனக்கு ஏன் திடீர்னு இந்த போன் தேவை படுது..?"

"இப்ப தான் எனக்கும் "பிள்ளைவாள்" ஊருக்கு போன விஷயம் தெரிஞ்சது.. அதுதான்.."

"புள்ளி வைக்க கூடாதே.. நீ ரோடே போட்டுருவியே ... வாத்தியாரே.."

"டேய் அது .. புள்ளி இல்ல... கோடு.."

 "கோடு போட கூடாதே ... நீ கோலம் போட்டுரிவியே .."

"தண்டம் அது புள்ளி.."

"இப்படின்னா .. அப்படி .. அப்படின்னா இப்படி.. புள்ளியும் கோடும் தான் இப்ப ரொம்ப முக்கியம்...அடுத்த மாசம் நான் ஊருக்கு போறேன் இல்ல, அப்ப உனக்கு அந்த போன் தரேன். அதுவரைக்கும் குடும்பத்த ஒழுங்கா கவனி.. உடம்பை கெடுத்துக்காத, வாத்தியாரே!"

வெள்ளி, 2 அக்டோபர், 2020

பாட்டு பாட வா!

கொஞ்சம் கிட்டார் கொஞ்சம் கீபோர்டு  கொஞ்சம் ட்ரம்ஸ் கொஞ்சம் ராகம் மாறாமல் நம்மகிட்ட இருக்கு என்ற விஷயம் கொஞ்சம் கொஞ்சமா கொஞ்ச பேருக்கு தெரியவர நம்மளையும் கொஞ்சம் பேர் கொஞ்சும் படி ஒரு கொஞ்சம் நல்ல நேரமா வாழ்க்கை போய் கொண்டு  இருந்த நேரத்துல.


அம்மா "இங்கே நீ படிச்சி கிழிச்சது போதும் மதராசுக்கு போய் படி"ன்னு சொல்லி அனுப்ப அங்கே போனா அம்புட்டு ஒன்று விட்டதுங்களும் இங்கிலீசில் மட்டும் பேச, நமக்கும் இங்கிலீஸ் வரும், ஆனா இவனுங்க லேலவே வேற மாதிரி இருக்கேன்னு நினைக்கையில்,

வியாழன், 1 அக்டோபர், 2020

"விழியில் என் விழியில்"

 "வாத்தியாரே..."

ஓடோடி வந்தான் ஏழாம் அறிவு பெற்ற  என் நண்பன் குரு!

"சொல்லு!!"

"ராம் லக்ஷ்மணன் படம் பாத்தியா!!?"

2020 ல் 1981ன் இளையராஜாவோடு!

"குரு,!!! அது நான் +2 பர்ஸ்ட்  இயர் படிக்கும் போது வந்துச்சி"

"+2 பர்ஸ்ட் இயர்!!! ?  வாத்தியாரே, அதை +1 ன்னு சொல்லுவாங்க"

"முட்டா பசங்க, +1ன்னு ஒன்னு கிடையாது, + 2 பர்ஸ்ட் இயர் , + 2 செகண்ட் இயர்"

"ரொம்ப முக்கியம், விஷயத்துக்கு வா, ராம் லக்ஷ்மணன் பாத்தியா!!?"

"குரு, நான் தேவர் பிலிம்ஸ் படம் பாக்குறது இல்ல, குரு!"

"ஏன்!!?"

புதன், 30 செப்டம்பர், 2020

ஹலோ மிஸ், ஹலோ மிஸ்! .. நடையா இது நடையா!

MGR - சிவாஜி - கமல்ஹாசன் - கண்ணதாசன்!

சென்ற பதிவில் குரு படத்தில் இளையராஜா இசையமைத்து வந்த பாடல்கள்  கல்லூரி நாட்களை எப்படி எல்லாம் ஆட்டி அசைத்தது என்று சற்றே சுட்டி காட்டி  இருந்தேன்.


இந்த பாடலின் ஆரம்பம் தான் விரும்பும் - காதலிக்கும்  ஒரு பெண் எங்கோ சென்று இருக்க காதலன் கிண்டலாக பாடும் பாட்டு போல் அமைந்த காட்சி..

பாடலின் இசை என்னமோ சூப்பர் மெட்டாக இருந்தாலும் பாடல் வரிகள் என்னமோ ஆராம்ப்பு பசங்களுக்கு தமிழ் வாத்தியார் வைத்த போட்டியில் பங்கேற்ற படைப்புகள் போல் இருக்கும்.

என்னடா இது? இவ்வளவு அழகான மெட்டு, இதுக்கு எப்படியெல்லாம் எழுதி இருக்கலாம் என்று நினைக்கையில், இந்த பாடலை யார் எழுதினார்கள் என்று தேடுகையில்..

"கண்ணதாசன் "

அதிர்ந்தே விட்டேன். 

என்னடா இது ?

திங்கள், 28 செப்டம்பர், 2020

பரீட்சையினாலும் விடமாட்டேன்..

80 களின் ஆரம்பத்தில்..

ஹிந்தியில் எந்த படம் வந்து ஹிட் ஆனாலும் அதை K R பாலாஜியின் புண்ணியத்தில் தமிழில் ரஜினி அல்லது கமல்ஹாசனை வைத்து பார்த்துவிடுவோம்.


இப்படி அடித்து பிடித்து ஹிந்தி படத்து காப்பி ரைட்டை வாங்கும் பாலாஜியை முந்தி கொண்டு மலையாள இயக்குனர் IV சசி எதோ ஒரு தயாரிப்பாளரை வைத்து ஹிந்தியில் தர்மேந்திரா நாயகனாக நடித்து வந்த Jugnu படத்தை குரு என்ற டைட்டிலோடு கமல் ஹாசனை வைத்து எடுத்தார். நாயகி ஸ்ரீதேவி.

படம் என்னமோ ஹிந்தியில் போடு போடு என்று போடடாலும் தமிழில் அவ்வாறான வெற்றியை பெறவில்லை.

இசை இளையராஜா..

ஆடுங்கள் பாடுங்கள்..

பறந்தாலும் விடமாட்டேன்

பேரை சொல்லவா..

எந்தன் கண்ணில் ..

இப்படி பட்ட சூப்பர் ஹிட் பாடல்களும் மற்றும், 

தயாரிப்பாளர் சொன்ன பணத்தை தரவில்லையே என்னமோ 

மாமனுக்கு பரமக்குடி

நான் வணங்குகிறேன் 

என்று 

"இது இளையராஜாவா கம்போஸ் பண்ணாரு!!!?"

 என்று கேட்கும்  படியான இரண்டு பாடல்களும் நிறைந்த படம்.

சரி .. தலைப்பிற்கு வருவோம்.

B .Com  இறுதி ஆண்டு.

எப்படியும் அரியர்ஸ் எதுவும் இல்லாமல் பாஸ் பண்ணவேண்டும் என்ற ஒரு நிலைமை. இறுதி செமெஸ்டரில் " Income Law - Practicals"என்ற ஒரு பாடம்.  இந்த பாடம் மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தாலும் ஒழுங்காக கவனித்து படித்தால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறலாம். 

ஒழுங்காக படிப்பதற்கு நாம் எங்கே போவோம்? அதனால்.. என்னால் முடிந்தவரை படித்து விட்டு, இனிமேலும் முடியவில்லை என்று கடைசி தஞ்சமாக பிரைவேட் டுயூஷன் எடுக்க ஆபத்வாந்தவான் "எழில்" வாத்தியாரிடம் செல்ல..

"என்ன விசு, இன்னும் ரெண்டு மாசம் தானே இருக்கு ? ஆறு மாச சிலபஸை எப்படி கவர் பண்ண போறோம்"?

"சாரி, எப்டியாவது ஹெல்ப் பண்ணுங்க, எழில்! நான் பாஸ் பண்ணியே ஆகணும், இது வாழ்க்கை பிரச்னை"

"உனக்குன்னு தனியா எடுக்க முடியாதே, விசு! இன்னும் ரெண்டு மூணு பேர் பேர் இருந்தா!!?"

"பிரச்சனையே இல்ல"

வகுப்பில்..

"யாருக்காவது income Tax - Practicals பாடத்தில் உதவி தேவையா?"

ஏற குறைய அனைத்து நட்புகளும்..

"அந்த பாடத்தில் தேறுவது கஷ்டம்ன்னு தெரிஞ்சி அதை அரியர்சில் வைச்சிட்டோம், அதை நிதானமா அடுத்த வருஷம் பாத்துக்கலாம்"

"எழில் இரெண்டே மாதத்தில் முழு சிலபஸ் எடுக்குறேன்னு சொல்லி இருக்காரு. வாரத்துக்கு அஞ்சி க்ளாஸ், எனிஒன் இன்டெரெஸ்டட்?"

ஆறு பேர் அடித்து பிடித்து ஒத்துக்கொள்ள.. ஏப்ரல் மாதம் நடுவில் வர இருக்கும் இறுதி தேர்விற்க்கான புத்தகத்தை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில்  வாங்கினோம்.

"டே, எப்படியாவது பாஸ் ஆகிடு, பைல் ஆனா என் மூஞ்சிலே முழிக்காதேன்னு"

என்ற அசரீரோ ஒலிக்க..

சும்மா சொல்ல கூடாது. எழிலின் உதவியால் வருமான வரி நன்றாகத்தான் போனது. வாரம் ஐந்து நாட்கள் காலை ஐந்தில் இருந்து ஏழு வரை. அடுத்த இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை.

இன்னும் பத்து நாட்களில் பரீட்சை.

எழில்," இந்த சனி கிழமை காலை பத்து டு ஒரு மணி எல்லாரும் இங்கே வந்துடுங்க. ஒரு பைனல் ரிவியூ பண்ணலாம். பரீட்சையில் எப்படி  கேப்பாங்க, A B C செக்ஸனில்  என்ன என்ன கேள்வி வரும், எப்படி எப்படி பதில் எழுதணும்னு பார்க்கலாம்.  இத மிஸ் பண்ணிடாதீங்க! இரண்டு மாசம் படிச்சது வேஸ்ட்  ஆகிடும்"

என்று சொல்ல..

அனைவரும் தலையாட்டிவிட்டு விடை பெற, வெள்ளி மாலை வந்தது..

எனக்கும் ஒரு வருடம் முன்னால் B  Com  முடித்து CA படித்து கொண்டு இருக்கும் நண்பன் குரு,  காலிங் பெல்லை அடிக்க ..

"வாத்தியாரே.. !!!"

(நல்ல கேள்வி, உனக்கும் முன்னால B .Com  முடிச்சவன் உன்னை எதுக்கு வாத்தியாரென்னு கூப்பிட்றான் என்று நீங்கள் கேட்பது, அதை குருவிடம் தான் கேட்கவேண்டும்)

"நாளை காலை பத்தில் இருந்து ஒரு மணி வரை எந்த பிளானும் வைச்சிக்காத.. "

"என் வாழ்க்கையில் தான் உனக்கு என்ன அக்கறை குரு!!!"

"இருக்காதா பின்ன, இளையராஜாவை எனக்கு அறிமுகடுத்தியதே நீ தானே.. அதுக்கு நன்றி கடன்"

"புரியல!"

"நாளைக்கு காலையில் பத்து மணிக்கு, குரு"

"சுத்தமா புரியல, குரு"

"வாத்தியாரே, காலை பத்து மணிக்கு குரு"

"ஓ.. எழிலை நீ குருன்னு கூப்புடுவியா  குரு ?

"இப்ப எனக்கு புரியல!!! "

"பத்து மணிக்கு குரு குரு ன்னு என்ன சொல்ல வர குரு?":

"இப்ப தான் ஆபிசில் இருந்து வரேன், வாத்யாரே"

"வா, தப்பே இல்ல !!"

"எங்க ஆபிசில் பக்கத்துல என்ன இருக்கு"

"சொல்லு"

"ராஜா தியேட்டர்"

"அதுக்கு என்ன இப்ப!!!?"

"வாத்தியாரே, நாளைக்கு ஒரு நாள் மட்டும் காலை காட்சி.. IV சசி இயக்கத்தில்  கமல் ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில்,  படத்து... பேரை சொல்லவா? அது நியாயமாகுமா ?"

"குரு!!!! "

"அதே தான், பத்து மணிக்கு ஆரம்பிச்சிடும்.. நான் ஒரு ஒன்பதரைக்கெல்லாம்  இங்கே வந்துடுறேன், பகல்காட்சியினாலும் விடமாட்டோம்" பாடினான்.

"ஓகே, குரு.. "

"ஓகே வாத்தியாரே.."

நினைவு வந்தது..

"குரு, நாசமா போச்சி..."

"ஆடுங்கள் பாடுங்கள்ன்னு இருக்குற நேரத்தில், இது என்ன நாசமா போச்சி?:

"நாளைக்கு காலை எழில்ட்ட பத்துமணிக்கு பைனல் ரிவிசன்".

"எதுக்கு!!!?"

"Income Tax - Practicals"

"ரொம்ப அவசியம்! அதை வேற ஒரு நாள் பாத்துக்கலாம்"

"ஐயோ, முடியாது குரு.. "

"வாத்தியாரே.. ஆறுமாசத்துக்கு ஒரு முறை பரீட்சை வரும், ஆனா இந்த பகல் காட்சி குறிஞ்சி பூ போல, பனிரெண்டு வருசத்துக்கு ஒரு முறை தான் வரும், வண்டியில் ஏறு, நேரா போய் எழில்ட்ட பேசிடலாம்"

வண்டியை கிளப்பி எழில் இல்லம் செல்ல ..

"எழில், நாளைக்கு கிளாசை ஞாயிறு திங்கள் போல வைச்சிக்கலாமா "

"இல்ல விசு, நாளைக்கு மதியம் மூணு போல திருவள்ளுவர் பஸ்ஸில் திருப்பதி போக போறோம், வர ஒரு வாரமாகும்.  குடும்பத்தோடு திருப்பதி போறோம்".

"இல்ல, அவசரமா ஒரு விஷயம், காலையில் கண்டிப்பா போகணும்.."

"உனக்கு என்ன பிரச்சனை? அம்மா எல்லாம் OK தானே.. "

"இல்ல, அது வந்து, காலை பத்து மணிக்கு குரு.."

"புரியல.. என்ன குரு.. ?"

குரு, "நீயே சொல்லு"

எழில் "குரு, நீ இவனுக்கு எடுத்து சொல்லு, போன வருஷம் நீ கூட இந்த ரிவிசன் எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிச்சினு என்கிட்டே மணிக்கணக்கில் சொன்ன தானே, இவனுக்கு சொல்லு"

குரு,"இல்ல எழில், ராஜா  தியேட்டரில், நாளைக்கு ஒரு நாளுக்கு மட்டும் காலை காட்சி   IV சசி இயக்கத்தில்  கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில்..

"குரு!!!"

"அதே தான்"

என்னை விட எழில் அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டு..

"இப்ப என்ன பண்றது விசு, ஒரே ஒரு நாள் காலை காட்சியா, நல்லா தெரியுமா?"

குரு, "நாளை ஒரு நாள் மட்டும்ன்னு போஸ்டர் போட்டு இருக்கு..

"இப்ப என்ன பண்றது.." 

என்று மூவரும் மூளையை பிசக்க .. எழில் ஒரு பிரமாத பிளான் சொல்ல.. 

அடுத்த நாள் காலை ஒன்பதே முக்காலிற்கு எழிலின் இல்லத்தின் எதிரே என்னை தவிர மற்ற நட்புகள் இருக்க, அங்கே ஒரு நோட்டிஸ்..

'எல்லாரும் , பத்துமணிக்கு ராஜா தியேட்டருக்கு வந்து அங்கே காலை காட்சிக்கு ஒரு டிக்கட் வாங்கி உள்ளே வந்துடுங்க. விசுவும் நானும் அங்கே இருப்போம். மத்த விஷயங்களை அங்கே பேசிக்கலாம்"

எழிலும் இளையராஜா வெறியர் என்று அன்று தான் அறிந்தேன்.

பத்து மணிக்கு, ராஜா தியேட்டரில் டிக்கட் வாங்கி நானும் எழில் மற்றும் குரு அங்கே இருந்த கான்டீன் பெஞ்சில் அமர, மற்ற மாணவர்களும் வந்து சேர..

எழில், "இன்னைக்கு இங்க தான் டுயூஷன்!" 

என்று சொல்லி அங்கே இருந்த பெஞ்சில் அனைவரும் அமர..

" குரு, நீ உள்ள போ, பாட்டு வரும் போது மட்டும் வந்து எங்களை கூப்பிடு"

எழில் ஆணையிட குரு அடிபணிய, பைனல் ரிவிசன் தீர்க்க சுமங்களிப்பவ என்று முடிந்தது.



வெள்ளி, 25 செப்டம்பர், 2020

SPB - உண்மையான அஞ்சலி என்னவென்றால்...

மறைந்த SPG அவர்களின் ஆன்ம சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். அவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கும் நட்புகளுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.


இந்த நேரத்தில் பாடகர் SPB அவர்களுக்கு அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்த விரும்புவோர் தயவு செய்து அன்னாரின் பாடலை பற்றி பேசுங்கள். உங்களில் சிலர் அவரின் பாடலை பாடி பதிவு செய்து பகிர்வது மிகவும் கொடுமையாக உள்ளது. அது மற்றுமின்றி அது SPB யின் மறைவை மறைத்து விட்டு நம்மை வேறு ஒரு உணர்விற்கு தள்ளிவிடுகின்றது. 


 நன்றி.

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

கொட்டோ கொட்டுனு கொட்டும் போது..(NFL)

இன்னாடா, விசுவை ஆளையே காணோம்னு கேட்டுன்னு (அப்படி யாரும் இருந்ததா தெரியல, இருந்தாலும் சும்மா ஒரு பில்ட் அப் இருக்கணும் தானே, அதான் ) இருக்கும் நட்புகளுக்கு..

சென்ற பதிவில் எழுதியது மாதிரி இங்கே NFL சீசன் துவங்கியாச்சி. NFL என்றழைக்கப்படும் National Football League இங்கே அட்டகாசமாக கொண்டாடப்படும், அந்த கொண்டாட்டத்தில் அடியேனும் மகிழ்ந்து கொண்டு இருப்பதால் , நேரம் அதிலேயே செலவிடப்படும்.

எங்கேயும் எப்போதும் RAMS !

இந்த போட்டியில் மொத்தம் முப்பத்தி இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு நகரத்தின் பெயரோடு சேர்த்து தங்களின் அணியின் பெயரையும் வைத்து கொள்வார்கள்.

புதன், 16 செப்டம்பர், 2020

கொரோனாவிற்கு முன் Torontoவில்...

வாழ்க்கை தான் எப்படி மாறிவிட்டது?  சென்ற வருடம் இதே மாதத்தில், கனடாவில் டொரொன்டோவில் ஒரு திருமணத்திற்கு சென்றேன்.  டொரொன்டோவில் அடியேனின் அக்காவும் குடும்பத்தோடு வாழ்கிறார்கள் தானே. அதனால் திருமணம் முடிந்ததும் அவர்களோடு இரண்டு நாள் இருந்து விட்டு வரலாம் என்று திட்டம்.

கிளம்ப  இரண்டே நாட்கள் இருக்கையில் 

"கம்பெனியின் தலை, வெள்ளி காலையில் ஒரு அவசர மீட்டிங் இருக்கு "   ஊரில் தானே இருக்க!?"

"ஐயோ.. டொரொன்டோ போக வேண்டி இருக்கே "

திங்கள், 14 செப்டம்பர், 2020

Daughter சொல்லை தட்டாதே...

சென்ற வாரம் பதிவில் எழுதியதை போல், Football சீசன் ஆரம்பித்து விட்டது.  இந்தியாவில் கிரிக்கட் போல் அமெரிக்காவில் Football  is a religion. இந்தியாவிலாவது கிரிக்கெட் மட்டும் தான் பிரபலமான விளையாட்டு. இங்கே basketball, baseball, Ice Hockey  என்று மற்ற விளையாட்டுகளும் பிரபலமாக இருந்தாலும் Football, Fottball தான். 

கடந்த ஆறு மாதங்களாக காய்ந்து போய் வீட்டில் விட்டத்தை பார்த்து கொண்டு இருந்த என்னை போன்றோருக்கு இந்த வாரம் அறுசுவை என்று தான் சொல்லவேண்டும்.

Ready for Game

வியாழன் அன்று Football சீசன் ஆரம்பிக்க, வெள்ளி மற்றும் சனி US OPEN Tennis , அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டம். அதுமட்டும் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சார்ந்த NBA Los Angels Lakers மற்றும் Los Angels Clippers அணிகளும் பிளோரிடாவில் சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளில் ஒன்று தான் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் என்றும் கோப்பையை வெல்லும் என்றும் எதிர் பார்க்க படுகின்றது.

இது இப்படி போய் கொண்டு இருக்கையில்.. பழம் நழுவி பாலில் விழுவதை போல்,, இந்த வியாழன் முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு US OPEN  GOLF துவங்க இருக்கின்றது.

திருவிளையாடல் தருமி போல்  " எனக்கில்லை, எனக்கில்லை" என்று ஒப்பாரி வைத்து கொண்டு இருந்த எனக்கு திகட்ட திகட்ட பரிமாட படுகின்றது.

எங்கேயோ ஒரு குரல்.. 

வியாழன், 10 செப்டம்பர், 2020

NFL - காத்திருந்து காத்திருந்து! (The Wait is Over )

அப்பாடா.. .2020 - 21 உதயமாகிறது. 

இன்னாது? 2020 உதயமாகுதா? இன்னா சொல்லுற என்று கேட்போர்களுக்கு !

இன்று .. அதாவது செப்டம்பர் பத்தாம் தேதியான இன்று National Football League என்று அழைக்கப்படும் அமெரிக்க Football  ஆட்டம் ஆரம்பிக்கின்றது. முதல் ஆட்டமான இன்று நடப்பு சூப்பர் பௌல் சாம்பியன் கான்சாஸ் சிட்டி Chiefs அணிக்கும் ஹூஸ்டன் டெக்சன் அணிக்கும் இன்று துவங்க இருக்கின்றது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

ஐம்பதிலும் வீட்டுக்கு வீடு வாசப்படி !

நேத்து ஞாயிறும் அதுவுமா, மதியம் காலிங் பெல் அடிக்க..

"தண்டம், கொரோனா நேரத்துல இங்க என்ன பண்ற, தான் பெற்ற இன்பம் வையகத்துன்னு எதாச்சம் இடக்கு முடக்கா பண்ணிடாத தண்டம்"


"வாத்தியாரே ... கொரோனா எனக்கும் உனக்கும்? நாம ரெண்டு பெரும் தான் கூவம் பக்கத்துலே கருவாடையே கொளம்பு கிண்டி   கொட்டிக்கினவங்க, நம்மை பாத்து கொரோனா தான் பயப்படும்"

அதுவும் சரி தான்.. என்ன விஷயம்"

"நான் வந்த விஷயத்தை விடு.. நீ செத்த வாத்தியாரே.."

"என்னடா சொல்ற"?

"காலையில் இருந்து வீட்டை விட்டு வெளிய வரலை போல இருக்கு!!?"

"இல்ல, கோயில் கூட இப்ப எல்லாம் ஆன் லைன் தானே.,. அதனால வீட்டுக்கு உள்ளேயே தான் இருந்தேன் , என்ன விஷயம்"

"வெளிய வந்து பாரு"

வந்தேன் .. பார்த்தேன்.. 

தண்டம், " பக்கத்து வீடு  வெள்ளைகார மச்சான் தன் அம்மணிக்கு ஐம்பதாவது பிறந்த நாளை எப்படி ஊரறிய கொண்டாடுறான் பாரு..."

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

கடலை நோக்கி போனோரே..

ஞாயிரு  மாலை வேளையில் சற்றே இளைப்பாறி கொண்டு இருந்த நேரத்தில் சும்மா  தானே இருக்கோம், கடற்கரை வரை போகலாமே என்று நினைத்து அம்மணியும் அடியேனும் செல்ல.. 

அங்கே கிடைத்த காட்சிகள் எங்களை மலைத்திட செய்தன.

நீங்களும் பாருங்களேன்.



சனி, 29 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 5 (ஓயாத அலைகள் )

முந்தைய ஏமாற்றத்தை படிக்க இங்கே சொடுக்கவும் 

 ஸ்பீக்கரில்.. 

"எல்லாரும் அசம்ப்ளிக்கு வாங்க, நம்ம ஸ்கூல் - ஸ்டுடென்ட் - சினிமா...  " 

கேட்டவுடன், அம்மா நினைப்பு என்னை அறியாமலே வந்தது..

""விசு, பத்தாவது போல + 2  விலும் மார்க்கில் கோட்டை விட்டுடாத. சினிமா சினிமான்னு இருக்காத, படிப்பில் கவனம் செலுத்து"

சே.. என்னடா மகன் நான்! அவங்க சொல்லிட்டு போய் ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள, மாட்டிகிட்டேனே என்று நினைக்கையில்..


மனசாட்சி..

"விசு, அப்ப கூட தப்பு பண்ணிட்டேன்னு வருந்தாம, மாட்டிக்குனோமேன்னு பீல் ஆகற பாரு.. ரொம்ப தப்பு"

ஸ்கூல்- ஸ்டுடென்ட் -சினிமா.. 

"ஏன், எழில், நாம ரெண்டு பேர் மட்டும் தானே தப்பு பண்ணோம்.அதுக்கு ஏன் ஸ்கூல் ஸ்டுடென்ட் சினிமான்னு என்னமோ சொல்லி எல்லாரையும் வர சொல்லுறாங்க..?"

"எல்லாருக்கும் எதிரில் வைச்சி பனிஷ்மென்ட் போல இருக்கு, எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா.."

"அடிப்பாரா? "

"அடிச்சா பரவாயில்லையே.. கோச்சிக்குவார்"

"சரி, என் தப்பு தான், வா போகலாம் "

அருகில் இருந்த லாரன்ஸிடம்,

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்! - 4 (ஸ்கூல் நேரத்தில் சினிமாவா!!?)

முந்தைய ஏமாற்றத்தை படிக்க இங்கே சொடுக்கவும் 

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்! - 3 (பாக்யராஜின் அறிவுரை)

இரண்டு மணி நேரம்...


இரண்டு மணி நேரம்...



இரண்டு மணி நேரம்..

காலை காட்சி பாமா ருக்மணி 10  க்கு ஆரம்பிக்கும்.

இப்ப பத்தாக போது. அடிச்சி பிடிச்சி ஓடுனா நியூஸ் ரீல் முடிஞ்சி படம் தொடங்கறதுக்குள்ள போயிடலாம்.

அடிச்சி பிடிச்சி  கிளம்பினோம்.  

காலை காட்சி ஆரம்பித்ததோ இல்லையோ.. நான் ஏமாறும் படலம் ஆரம்பித்தது.

"எழில், காசு எவ்வளவு இருக்கு!!?"

"ரெண்டு ரூவா சில்லறை"

"என்கிட்டே ஒரு மூணு தேறும், வா நைசா போய் பாமா  ருக்மணி பாத்துட்டு வந்து இந்த பார்ம்ஸ் வாங்கின்னுபோலாம் "

கிளம்பினோம். பள்ளி சீருடை அணிந்து இருக்கின்றோம் என்பதை மறந்தும்  கூட.

தியேர்ட்டர் வாசல் எதிரில்..

"என்ன கதவு பூட்டி இருக்கு..!!!? "

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்! - 3 (பாக்யராஜின் அறிவுரை)

முந்தைய ஏமாற்றத்தை படிக்க இங்கே சொடுக்கவும் 


மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 2 (Doctor- Pilot and பாமா ருக்மணி)

நாட்கள் வாரங்களாக..

அதுவரை கமர்கட்டு, நாவற்பழம், குச்சி ஐஸ் என்ற  நொறுக்கு தீனிகள், டீ, சமோசா மற்றும் கோன் ஐஸிற்கு மாறின.

பள்ளி துவங்கி வாரத்திற்கும் மேலாகிவிட்டதே. இனம் இனத்தோடு சேரும் என்பது போல்..


கவாஸ்கர் க்ரூப்

கபில் தேவ் க்ரூப்

ரஜினி க்ரூப்

கமல் க்ரூப்

மேலே இருக்கும் அனைவரும்  இருக்கும் இளையராஜா  க்ரூப்

நன்றாக படிப்போர் க்ரூப்

பணக்காரர் க்ரூப்

பேக் பெஞ்ச் க்ரூப் 

என்று பல க்ரூப்கள் தலையெடுக்க..

எனக்கு கிடைத்தான் ஒரு அருமையான நண்பன் "எழில்"

அவனும் பத்தாவது வரை வேறு ஏதோ பள்ளியில் படித்தவன். என்னை போலவே பத்தாம் வகுப்பு தேர்வில் எக்கசக்க மதிப்பெண் எடுத்து கெக்கபெக்க என்று முழித்ததால் அவன் பெற்றோர் இவனை +2 வில் நல்ல பள்ளியில்  சேர்க்கவேண்டும் என்று St.Gabriels பள்ளியில் சேர்த்தார்கள்.

புதன், 26 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 2 (Doctor- Pilot and பாமா ருக்மணி)

முந்தைய ஏமாற்றத்தை படிக்க இங்கே சொடுக்கவும் .

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 1 (என் வானிலே ஒரே வெண்ணிலா)

என்ன இது சினிமா - ரஜினி - இளையராஜா என்று நன்றாக ஆரம்பித்த மெட்றாஸ் மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தையே தர போகின்றது என்பதை இரண்டாம் நாளிலே புரிந்து கொண்டேன்..

மெட்றாஸ் எனக்கு தந்த இந்த ஏமாற்றம் என் வாழ்க்கையையே புரட்டி போட்டு மாற்றி விட்டது.

பத்தாவது வரை ஒவ்வொரு வகுப்பிலும் இன்ஸ்பெக்சனுக்கு ஆபிசர்கள் வருகையில் ஒரே ஒரு கேள்வி தான் அனைவரிடம் கேட்கப்படும். அதுவும் மேஜர் சுந்தராஜன் பாணியில்..

"பெரிசானாவுடன் நீ என்னவா வர போற, What do you want to be when you grow big?"

இந்த கேள்விக்கு வருடா வருடம், மொத்த வகுப்பும் "டாக்டர், டாக்டர்" என்று பதில் சொல்லும். அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏழாவதோ அல்லது எட்டாவதிலோ இந்த இன்ஸ்பெக்சன் நடக்கையில் சன்னல் வழியே பார்க்க  ஆகாயத்தில் ஒரு விமானம் தெரிய, ஒரு சேஞ்சிற்க்காக சிட்டுவேஷன் கருதி  "Pilot" என்று மாற்றி கொண்டேன். மற்ற படி "டாக்டர்" தான்,

சரி, மெட்றாஸ் என்ன ஏமாற்றியதா?

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 1 (என் வானிலே ஒரே வெண்ணிலா)

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்.  

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!

கரிவடைக்கு பதிலாக வடைகரியினால் வந்த  ஏமாற்றத்தை நினைத்து கொண்டே மீண்டும் டாக்சியில் ஏற..


மீண்டும் கண்கள் சினிமா போஸ்ட்டரை மேய துவங்கின. எத்தனையோ நடிகர்கள் போஸ்டர்கள் இருந்தாலும் கண்கள் என்னமோ ரஜினியை மட்டுமே தேடின.

வெற்றிகரமான 150  நாளை நோக்கி "பில்லா"புதிதாக ஓட்ட பட்டு இருக்கும் "அன்புக்கு நான் அடிமை"

அன்றும் இன்றும் என்றும் என் வானிலே ஒரே வெண்ணிலா என்று கூறும்  விரைவில் " ஜானி"

என் வாழ்வின்  பொற்காலமான 15 - 23 வயதுகளை ரஜினி இளையராஜா கொள்ளை அடிக்க போகின்றார்கள் என்று அறியாமலே கொள்ளை போனேன்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!

அதற்கு முன் பல முறை சென்று இருந்தாலும் மெட்ராஸ் என்றவுடன் நினைவிற்கு வருவது பதினான்காம் வயதில் +2 வகுப்பிற்கு சென்ற பயணம் தான்.

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பெரம்பூரை தாண்டியவுடன் தலைக்கு  மேலே உள்ள பைகளை கீழ் இறக்கி கதவருகில் காத்திருக்க  பேசின் பிரிட்ஜ்ன் அருகே இரண்டு பெரிய வாளிகளை போன்ற புகை கக்கிகள் கண்ணுக்கு  தெரிய அடுத்த சில நிமிடங்களில் சென்ட்ரல் நிலையம்.

போர்ட்டர் ஒருவரை வைத்து வெளியே வந்து டாக்சி ஒன்றை பிடித்து அத்தை   வீட்டை நோக்கி செல்ல சாலையின்  இருபுறமும் 70MM அளவிற்கான சினிமா போஸ்டர்கள். 

எங்கு பார்த்தாலும் பில்லா ரஜினி!

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

சுண்டலும் கொழுக்கட்டையும் நம்பிக்கையும்.

 சனிகிழமை காலை அதுவுமாய், அம்மணிகள் மூவரும் பணிக்கு செல்ல அடியேன் மட்டும் இல்லத்தில்!


சும்மா தானே இருப்பீங்க, இதையெல்லாம் செய்யுங்கன்னு மூவரும் ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்து செல்ல, லிஸ்டில் இருக்கும் ஒவ்வொன்றாக செய்து முடிக்கையில் கடைசியில் எனக்கு பிடிக்காத நான் வெறுக்கும் ஒன்று.

"காஸ்ட்கோ" என்ற கடைக்கு சென்று , இதை எல்லாம் வாங்கி வாருங்கள் என்று ஒரு அட்டவணை.

புதன், 19 ஆகஸ்ட், 2020

பாடகர் SPB க்கு தமிழக அரசு அனைத்து உதவிகளும் செய்யும்.

பதிவை துவங்கும் முன்.... First thing first.. 


 பாடகர் SPB பூரண உடல்நலம் பெற்று இல்லம் திரும்பவேண்டும் என்று வேண்டி கொண்டு ... 

 நேற்று ஒரு செய்தி படித்தேன். 

"பாடகர் SPB யின் மருத்தவ மற்றும் அனைத்து உதவிகளையும் தமிழக அரசு எடுத்து கொள்ளும்"

என்ன ஒரு அறிவுகெட்ட தனமான செயல். 

SPB ஒரு கோட்டீஸ்வரன். அவரிடம் பணத்திற்கும் மற்றும் சமூக அந்தஸ்திற்கும் ஏதாவது குறைச்சல் இருக்குமா? அவரை பரிமார்த்துக்கொள்ளும் திறன் அவரிடம் உள்ளது. 

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

ராசியில்லா ராணி - ஆறாம்ப்பூ டீச்சர்!

"அந்த ஆறாம்ப்பூ  ராணி டீச்சரை ஏன் எல்லாம் ராசியில்லா ராணின்னு சொல்றாங்க"?


"நீ ஸ்கூலுக்கு புதுசா? "

"ஆமாம்"

"அதான் உனக்கு தெரியல!, பாவம் அவங்க! கொஞ்ச வருசத்துக்கு முன்னால கல்யாணாமாச்சாம். அப்புறம் ஒரே வருசத்துல ஒரு பையன் பாப்பா.. அப்பாவும் பாப்பாவும் ஒரு நாள் சைக்கிளில்  போகும் போது லாரியில் அடிபட்டு செத்துட்டாங்களாம்!"

"அதுக்கு இவங்க எப்படி ராசியில்லா ராணி ஆனாங்க?"

"என்னமோ தெரியல.. ஜாதகம் அது இதுன்னு சொல்லுவாங்க, காலையில் இவங்க எதிரில் வந்தா கூட நாளே நல்லா இருக்காதுன்னு சொல்லுவாங்க"

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

ஆல்ப்ஸ் மலையில் தோசை மாவு!

முதல் முதலாக விமானத்தில் ஐரோப்பியாவை கடக்கபோகும் நாள் வந்த போது, ஒரு முறைக்கு மூன்று முறை பிரிட்டிஷ் ஏர்வேஸ் அலுவலகம் சென்று 

"எனக்கு ஜன்னல் சீட் தான் வேண்டும்!!"

என்று கேட்டு அதை உறுதி படுத்தி கொண்டு அந்நாள் வர விமானத்தில் ஏறினேன். என் ராசி அந்த முழு பயணமும் பகல் நேரத்தில். எதிரில் இருந்த பெரிய டீவியில் நாங்கள் தற்போது எங்கே பறக்கின்றோம் என்று  காட்டி கொண்டு  இருக்க.. கீழே ஆல்ப்ஸ் மலை!

அம்மாவின் நினைவு வந்தது..


அம்மா  மாற்றுத்திகனாருக்கான பல பள்ளிகளை திறந்து அதை நடத்தி நிர்வாகித்து வருபவர்கள். பணி நிமித்தம் ஐரோப்பா நாடுகளுக்கு, சென்று வருவார்கள். அப்படி ஒருமுறை திரும்பி வந்த அவர்கள், பள்ளி விடுதிக்கான  சமையலறையில் ஒரு பெரிய அண்டாவில் இருந்த தோசை மாவு நிரம்பி வழிவதை பார்த்து...

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

தல தல தான்...

மார்ச் மாதம் துவக்கத்தில் எங்கள் கம்பெனியின் தலைமை அதிகாரி அனைவரையும் அழைத்து..

"எல்லாரும் அவங்க அவங்க கம்ப்யூட்டர்,பிரிண்டர், மேசை, சேர், லொட்டு, லொசுக்கு அம்புட்டையும் எடுத்துன்னு வூட்டுக்கு போங்க. நாங்க திரும்பவும் சொல்ற வரைக்கும் வூட்டுல இருந்து தான் வேலை செய்யணும்"ன்னு சொல்ல..

அலுவலகத்தில் உள்ள அம்மணிகள் சந்தோசமாகவும் ஆண்மகன்கள் சோகமாகவும் கிளம்பினோம்.

அன்றில் இருந்து இன்று வரை நிலைமை மாறவில்லை.

புதன், 12 ஆகஸ்ட், 2020

என் புருஷன் தான்...

வெளிநாட்டில் வசித்து வருவதால் இந்தியாவில் குடும்பத்திலும் மற்றும் நட்ப்புகள் மத்தியில் நடைபெறும் விசேஷங்களுக்கும் துக்கங்களுக்கும் போக முடியாதது பெரிய வருத்தமே.

திருமணம் - பிள்ளை வரவு போன்ற நற்காரியங்களை தொலை பேசியில் மகிழ்ச்சியாக கொண்டாடினாலும், மரணம் போன்ற துக்கமான காரியங்களை தொலை பேசியில் பேசி ஆறுதல் தர முடியாத கையாலாகாத நிலைமையை நினைத்து அடிக்கடி நொந்து கொள்வேன்.

கிட்ட தட்ட முப்பது வருடங்கள் இப்படி போனாலும் எனக்கு நானே ஒரு சட்டம் எழுதி வைத்து கொண்டுள்ளேன்.

எப்போது இந்தியா சென்றாலும் முதல் வேலையாக சமீபத்தில் இறந்தோர் கல்லறைக்கு சென்று ஒரு மலர் வளையம் வைத்து விட்டு தான் மற்ற வேலை பார்ப்பேன். 

அதில் தான் என்ன ஒரு திருப்தி.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

ஜின்ஜினக்காம் ஜின்ஜினக்காம் ஜின்னுக்குத்தான்...!

 14 வயது இருக்கும்.

ஐரோப்பா பயணத்தை   முடித்து திரும்பி வந்த அன்னை அடியேனுக்கு எடுத்த வந்த பரிசு.

"அங்கே ஆபிசில் இருக்குற ஒரு ஜெர்மனி ஆளிடம் உன் வயசை சொல்லி வாங்கி வர சொன்னேன், இந்தா"

தொட்டு பார்த்தேன். இது என்ன காட்டன் டெரிகாட்டன் பாலிசியஸ்டர் போல இல்லாமல் ரொம்ப தடியா. வெளியே ஒரு கலர் உள்ள வெளுத்து இருக்கே.. என்று நினைக்கையில், அம்மா, 

"பிடிச்சு இருக்கா?"

ஏமாற்றத்தை மறைத்துவிட்டு 

"ஆமா "

என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த மில்க் சாக்லெட்டை தாக்க ஆரம்பித்தேன்.அன்றில் இருந்து இன்று வரை மில்க் சாக்கலேட்டுக்கு அடிமை, அது வேற கதை. 

பரிசை  எங்கே வைத்தேன் என்று கூட மறந்துவிட்டேன். ஏனோ பிடிக்கவில்லை. சில மாதங்கள் கழித்து பெங்களூர் செல்ல அங்கே ஒரு பிறந்தநாள் விழாவிற்கு  வந்து இருந்த அனைத்து இளசுகளும் அதையே அணிந்து இருந்தார்கள். பார்க்கவும் நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதன் மேல் ஓர் ஈர்ப்பு வரவில்லை.

மாதங்கள் கழிந்தது. சகலை ஒருவன்,  இந்த வார சன் இதழில் "கிரீஸ்" என்ற ஆங்கில படத்தின் போஸ்டர். 

ஆஹா...

ஓஹோ..

அருமை..

அட்டகாசம்.

என்று சொல்ல..மேலே செல்லும் முன்...

அந்த காலத்தில் "தி சன் "  என்ற ஆங்கில பத்திரிக்கை  வாங்கும் பழக்கம் இருந்தது. அதன் நடுபக்கத்தில்  மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகர் , கிரிக்கட் வீரர் , ஆங்கில பாடகர் , சினிமா போஸ்டர் போன்று ஏதாவது இருக்கும். அந்த போஸ்டருக்காகவே இந்த இதழை வாங்குவோம். விலை ஒன்னரை ருபாய் (70களில்).

ஓடி சென்று வாங்கி வந்தேன். அருமையான போஸ்டர். இன்னாதான் சொல்லு வெள்ளைகாரன் வெள்ளைக்காரன் தான் . வாழ தெரிஞ்சவன். என்னமா அனுபவிச்சு வாழறான் என்று நினைக்கையில், அந்த போஸ்டரில் "அது" தென் பட்டது.


அம்மா வாங்கி வந்த அந்த "ஜீன்ஸ்". 

அட பாவத்த, இம்புட்டு அழகா இருக்கே. என் கண்ணே பட்டுடும் போல இருக்கேனு, நினைத்து கொண்டே.. 

அணிந்தேன்..

அணிந்தேன் என்று சொல்வதை விட அது என்னை அணிந்தது என்றது தான் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு காலாய் உள்ளே விட்டு இடுப்பிற்கு மேல் ஏற்றி விட்டு பட்டனை  போட்டு விட்டு வெண்கல ஜிப்பை மேலே இழுத்து விட்டு கண்ணாடியில் என்னை நானே பார்த்தேன்..

"விசு.. இனி உன் வாழ்வில்  இதை விட உன்னை யாரும் அதிகம் தொட போறது இல்லேனு  ஒரு அசரீரி"

பள்ளிக்கூடத்தில் சீருடை வெள்ளை - வெள்ளை ... இன்னாடா இது ? கைக்கு எட்டியது காலுக்கு எட்டவில்லையே என்று மாலையிலும் மற்றும் வார இறுதியிலும் அணிந்து அணிந்து கருநீலத்தின் இருந்த ஜீன்ஸ் சாயம் போய்   சாம்பல் நிறத்திற்கு வந்து இருந்தது.

பெங்களூரில் இருந்து விடுமுறைக்கு வந்த சகலை..

"விசு, செம்ம ஜீன்ஸ்.. "Levis or Wrangler" என்று  கேட்க, அன்று தான் இவை இரண்டும் செம ஜீன்ஸ் வகைகள் என்று அறிந்து கொண்டேன். ஊருக்கு திரும்பி போகுமுன் அவன்.. காலில் விழாத குறையாக.. 

"என்னோட புது Levis  இல்லாட்டி Wranglerரில் ஒன்னை எடுத்துக்கோ. இதை எனக்கு தா"

என்று சொல்ல ... 

இவன் என்ன சாயம் போன ஜீன்சுக்கு புதுசு தரேன்னு சொல்றான், இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் இருக்கும் போல இருக்கேன்னு கூகிளை தட்டினேன்.

சாயம் போன ஜீன்ஸ் (Faded Jeans) வகையறாவின் பெருமையை அன்று தான் அறிந்து கொண்டேன்.

நிற்க!!உங்களில் பலர்...!!

என்னமா அளந்து விடுற விசு ? ஒரு அளவு வேணாமா!!?  அந்த காலத்தில் கூகிள் எங்கே இருந்ததுன்னு நாக்கை புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி பின்னூட்டத்தில் கேட்கலாம்னு  துடிக்கிறீங்க..

சும்மா ஒரு ப்ளோவில் சொன்னேன். 

"சாயம் போனதுக்கு எதுக்குடா புதுசு தாரேன்னு சொல்ற" என்று சகலையிடம் நான் கேட்டதற்கு அவன் தான் அதன் மகிமையை விளக்கினான்.

"இவ்வவளவு தெரிஞ்ச பிறகும் எப்படி தருவேன்..?!! "

"ப்ளீஸ்.. வேணும்னா.. ரெண்டையும் தாரேன். ப்ளீஸ்.. " கெஞ்சினான்.

"கொஞ்ச நாள் போட்டுட்டு அப்புறமா தாரேன்.. "

அந்த கொஞ்ச நாள் அடுத்த  வருடம் முழுக்க  என்று எங்கள் இருவருக்குமே தெரியாது.

நம்ம ராசி பிரகாரம் அடுத்த ஆண்டு வேறொரு பள்ளிக்கு மாற்ற பட.. அங்கே சீருடை சாம்பல் நிற பேண்ட்  -வெள்ளை சட்டை .

சாயம் போன என் ஜீன்ஸிற்கும் அவர்கள் சொன்ன சாம்பல் நிறத்திற்கும் ஆறு வித்தியாசம் கூட இல்லை. நம்பினால் நம்புங்கள் இல்லாவிடில் பரவாயில்லை. ஒரு முழு  ஆண்டை அந்த ஒரே ஒரு ஜீன்ஸில் சமாளித்தேன். 

மாதங்கள் கழிந்தன. 

அம்மாவும் உடன் பிறந்தோரும் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதால், கால் நிறைய ஜீன்ஸ். நம்ம வேற கடைக்குட்டி சிங்கமாச்சே.. கேட்டது எல்லாம் கிடைக்கும் காலம். ஏறக்குறைய அனைத்து நிறங்களில் வந்து இருந்தாலும்  நமக்கு பிடித்தது என்னமோ நீலம் தான்.  நான் மட்டும் போட்டு ரசிக்காமல் ஜீன்ஸ் அணியும் தோழர் தோழிகளையும் ரசித்தது உண்டு. 

கல்லூரி நாட்கள்! 

அவனா... !!?அந்த ப்ளூ கலர் பேண்ட்டு போட்டுன்னு இருப்பான்.. அவன்தானே.. 

அவனே தான்.

அடுத்து வேலை.

நல்லதோர் பேண்ட், சூட் கோட் பூட் டைஎன்று தான் அலுவலகம் செல்ல வேண்டும் .

பெங்களூரிலும் சரி, பாம்பேயிலும் சரி, வளைகுடாவில் சரி.. இந்த கருப்பு கோட் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் மட்டும் டை என்பது உடன்பிறப்பாகிவிட்டது. 

வேலைகள், வேளைகள்,  நட்புகள், பகைகள்,  பழக்கங்கள் அனைத்தும்  மாறி மாறி வந்த போதும்.. ஜீன்ஸ் மட்டும் கூடவே நின்றது.

திருமணமான புதிதில் . இது என்ன சாக்கு மூட்டை போல இருக்கு என்று சொன்ன அம்மணியிடம் கூட இப்போது அரை டசன் ஜீன்ஸ் இருக்கும். நமக்கு பிடித்தது தானே, அவர்களுக்கும் பிடிக்க வைத்து விட்டேன். பிள்ளைகளும் சரி ஜீன்ஸ் மேல் அதே காதல் தான்.

பிள்ளைகள் ஜீன்ஸில் ஒரே பிரச்சனை . சாயம் போனது மட்டும் அல்லாமல் அங்கே இங்கே கிழித்து கொண்டு தான் அணிகிறார்கள். புதியதாக வாங்கி தரட்டும்மா என்றேன்.. 

"வேணாம்.. இப்படி ஜீன்ஸ் போடுறது தான் இப்ப பேஷன்"

என்று சொல்லி விட்டார்கள்.  

பணியினிமித்தம் அமெரிக்கா வந்த புதிதில் முதல் நாள் அலுவலகத்திற்கு விதியே என்று மீண்டும் கோட் பூட் சூட் டை என்று செல்ல.. அங்கே..

"இப்படி தான் ஆபிசுக்கு டிரஸ் பண்ணுவியா?"

மனதில்.. ஏண்டா.. நானே விதியேன்னு இப்படி இருக்கேன். இது கூட பத்தலையா...

"எஸ்.. ஏன்?!!"

"இல்ல, இங்கே கலிபோர்னியாவில் நாங்க எல்லாரும் கஷுவலா டிரஸ் பண்ணுவோம். உனக்கு இப்படி பிடிச்சி இருந்தா அப்படியே இரு.. எங்களுக்கு டெனிம் ( Denim  ஜீன்ஸின் மறுபெயர்), T ஷர்ட் ஹவாய் ஷார்ட் இருந்தா போதும்"

"என் காலுல்ல  பாலை வார்த்த! ரொம்ப நன்றி" 

இது நடந்து பதினைந்து வருடங்கள் ஆயிற்று. இன்னும் வேலையையும் மாற்றவில்லை ஜீன்ஸையும் மாற்றவில்லை.

ஜீன்ஸ் மேல் என் இம்புட்டு அன்பு?

நல்ல கேள்வி. பல பதில்கள். ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு காலத்திற்கு பொருந்தும்.

ஸ்டைல். 

வசதி (Comfortable)

Long Lasting

Long term Investment

துவைக்க வேண்டிய அவசியம் இல்லை

அப்படியே துவைத்தாலும்.

துவைப்பது சுலபம். 

இஸ்திரி தேவை இல்லை.

மேலே சட்டை டீ ஷர்ட் கோட் ஜிப்பா எதுவேண்டுமானாலும் அணியலாம்.

கோடை, குளிர்  , மாலை, வெயில் எல்லாத்துக்கும் ஒத்து போகும் !

சாப்பிட்டு அப்படியே கைய துடைச்சிக்கலாம். 

நிறைய பாக்கெட் 

சில இடங்களில் சிறப்பு மரியாதை.

இன்னும் பல.

சில நாட்களுக்கு முன் , பிள்ளைகள் ஒரு விஷேஷத்திற்கு அழைக்க.. நானும் அவர்கள் பாணியில் கிழிஞ்ச ஜீன்ஸ்   அணிந்து கொண்டு செல்ல.. காரில் இருந்து இறங்கும் போதே என்னை பார்த்த இளையவள் ஓடி வந்தாள்.

"ஏன், பழைய  கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டுன்னு வந்தீங்க?!!"

"ஹலோ, புதுசு .. .போன வீக்எண்டு தான் இந்த பார்ட்டிக்கு போடலாம்ன்னு வாங்குனேன்."

"என்கிட்டே சொல்றது இல்லையா? "

"நீங்க தானே சொன்னீங்க.. இந்த மாதிரி கிழிஞ்ச ஜீன்ஸ் தான் பேஷன்ன்னு , அதுதான்."

"ஐயோ, அது பேஷன் தான்,, ஆனா எங்களுக்கு, உங்களுக்கு இல்ல!!"

"ஏன்?"

நாங்க போட்டா அது புதுசுன்னு எல்லாருக்கும் தெரியும்?"

"இதுவும் புதுசு தானே.. வாங்கி  ரெண்டு நாள் கூட ஆகல.. "

"நீங்க போட்டா.. பாரு.. கஞ்சன்.. கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டுன்னு வந்து இருக்கான். புதுசு வாங்குறது தானே.. அவ்வளவு என்ன கஞ்சம்ன்னு சொல்லுவாங்க"

"எனக்கு மட்டும் ஏன் அப்படி..!!?"

"உங்க ரெப்புட்டேஷன் அப்படி "

பின் குறிப்பு: 

உண்மையாவே நான் போட்டு இருந்த ஜீன்ஸ் வயசாகி அடிபட்டு கிழிஞ்சி போனது தான் என்பதை அம்மணிகள் மூவரும் கண்டு பிடிக்காதவரை மகிழ்ச்சி. 

சனி, 8 ஆகஸ்ட், 2020

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா?

"பொண்ணு வயசு ஆகினே போது! ஏதாவது ஒரு நல்ல வரன் வந்தா சட்டு புட்டுன்னு முடிங்க.."

"கோயில் மாடு மாதிரி சுத்தினு இருக்கான், ஒரு கால்கட்டை போடுங்க.. "

இப்படி பெற்றோர்களை உற்றார் உறவினர் "டார்ச்சர்" செய்ய, நேராக திருமண தரகர்..


ஆயிரம் பொய்யாவது சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்ற லாஜிக்கில் ஜாதகத்தை எடுத்துனு வாங்கோன்னு.. 

சொல்லி.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

நொங்கு வண்டியிலே....

 இடம் :எருக்கஞ்சேரி, தரங்கம்பாடிக்கு அருகில்

வருடம் :1977  போல்

வயது :13  போல் 

படங்கள் எடுத்த தேதி : ஆகஸ்ட் 8  , 2020 ,

 படங்கள் எடுத்த இடம் ;கலிபோர்னியா, அமெரிக்கா 

இன்னொரு கோடை  விடுமுறை வர, இம்முறை தரங்கம்பாடி அருகில் உள்ள எருக்கஞ்சேரி என்ற கிராமத்தில் வாழும் தாத்தா வீட்டு பண்ணைக்கு பயணம்.

எங்கே எங்கே இருந்தோ  கிளம்பி, ரிக்ஷா, ஆட்டோ. பஸ் பிடித்து விழுப்புரம் சந்திப்பை வந்து சேர அங்கிருந்து மாயவரத்திற்கு ரயில். மாயவரம் அடைந்து அங்கு இருந்து ஒரு பஸ் பிடித்து எருக்கஞ்சேரி வர, பஸ்ஸை விட்டு இறங்கும் போதே, அங்கே நொங்கு விற்று கொண்டு இருந்தவர்...

"தாத்தா வீட்டுக்கு வந்தீயா..? நீ வருவேன்னு சொன்னாரு, "

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கலிபோர்னியா காட்டு தீயின் நடுவில் ஒரு ஏலியன் பிணம்!

வருடாவருடம் கலிபோர்னியாவில் இடையூறு இல்லாமல் வரும் 
கடுமையான காட்டு தீ! ஒரு வாரத்திற்கும் மேல் தொடர்ந்து பரவி வர ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் கொழுந்திட்டு எரிந்தன.

தீயை அணைக்க அணைத்து முயற்சிகளும் எடுக்க பட்டன. தீயணைப்பு வாகனங்கள் துவங்கி விமானத்தில் இருந்து பலவித தீயணைப்பு மருந்துகளும் தூவ பட்டன. அது மட்டும் இல்லாமல் ஹெலிகாப்ட்டர் மூலமாக அருகில் உள்ள பசிபிக் கடலில் இருந்து பெரிய பெரிய வாளிகளில் கடல் நீர் நிரப்பி அதுவும் அங்கே அந்த தீயை அணைக்க வானில்  இருந்து கொட்டப்பட்டன.

கடும் போராட்டத்திற்கு பின்பு இந்த தீ அனையஅதில் ஏற்பட்ட விபரீத விளைவுகளையும் நட்டத்தையும் கணக்கிட ஒரு குழு காட்டிற்குள் நுழைந்தது.

என்னே ஒரு அழிவு..பல்லாயிரக்கணக்கான மரங்கள் கருகி கிடந்தன. அதில் வாழுந்து வந்த பறவைகள் தான் எத்தனை? அவை எங்கே சென்றிருக்கும், நினைக்கவே மனம் பதறி இருந்த வேளையில் அவர்களை அதிர வைத்தது ஒரு காட்சி.

நடு காட்டில் ஒரு கருகிய மிக மிக உயரமான  மரத்தின் மேல் கருகிய கறுத்த நிறத்தில் ஏறக்குறைய மனித உடல் அமைப்பில் ஒரு உருவம் தொங்கி கொண்டு இருந்தது.

புதன், 5 ஆகஸ்ட், 2020

வீணா போனா சைனா மைனா

இடம் :பெங்களுர்
காலம் : 1989  - 1991 போல்
வயது : 22 - 24 போல்.

ஒவ்வொரு ஞாயிறும் காலை கோயில் முடிந்து அங்கே இருந்து  நேராக மதிய உணவை ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலில் முடித்து விட்டு அதன் பின் எம் ஜி ரோட் - பிரிகேட் ரோட் அருகே உள்ள எதாவது ஒரு தியேட்டரில் ஒரு ஆங்கில படம்.

இப்படி போய்  கொண்டு இருந்த நாட்கள்.

இவ்வாறான நாட்களில் என்றாவது ஒரு நாள் ஜாக்கி சான் நடித்த சைனீஸ் படம் வெளிவரும் போது அன்று மட்டும்   சங்கரிலா என்ற சைனீஸ் உணவகத்தில்  உணவு.

ஏன் அப்படி?

சைனீஸ் படத்தை சைனீஸ் உணவு சாப்பிட்டு விட்டு பார்த்தால் இன்னும்  கூடுதலாக ரசிக்கலாம் எ..

Just Kidding..

வெள்ளி, 31 ஜூலை, 2020

அரபு மல்லி ஆட ...அபிநயங்கள் கூட..

வீட்டின் எதிரில் உள்ள ரோசா செடியில் பூக்கள் பூத்து பூத்து  குலுங்கினாலும்   ஏதோ பூச்சி தாக்கியதால் இலைகள் சற்று பாதிக்க பட்டு இருந்ததால் அதற்கு  மருந்து வாங்க கடைக்கு சென்றேன்.

இந்த வித விதமான ரோஜாக்கள் வெவ்வேறு  நிறத்தில் போது குலுங்குவதை  பார்க்கையில் தான் மனதில் நம்மை அறியாமலே ஒரு மகிழ்ச்சி. 


வாரத்திற்கு இருமுறை இந்த பூக்களில் சிலவற்றை பறித்து  அலங்கரித்து இல்லத்தின் நடுவில் வைத்து அழகு பார்ப்பதே அழகு தான்.

வியாழன், 30 ஜூலை, 2020

"பொரிகடலை"யோர கவிதைகள்

வளரும் காலத்தில் பள்ளி ஆண்டு முடிந்து கோடை ஆரம்பிக்க, விடுமுறைக்காக கிராமம் செல்லும் வழக்கம். முதல் இரண்டு நாட்கள் தோழிகள் தோழர்கள் நட்புகள் உறவுகள் என்று நேரம் போவதே தெரியாது. 

மூன்றாம் நாளில் இருந்து கொடுமை தான். கோடை வெயிலை சொல்லவும் வேண்டுமா? 

அருகில் உள்ள பனை மரத்தில் நொங்கு இறக்கினால் அதை வைத்து இரண்டு நாட்கள் ஓட்டலாம்.

புதன், 29 ஜூலை, 2020

இக்கறிக்கு அக்கறி பச்சா !

 80 களின் பெங்களூர் நாட்கள். திங்கள் காலை துவங்கி சனி மதியம் வரை வேலை. சனி மதியம் ஒரு மணிக்கு சனியன் விட்டது ஒன்னரை நாளுக்கு என்று, அந்த நொடிக்காகவே வாழ்ந்த ஒரு தருணம்.

ஒரு மணிக்கு வீட்டுக்கு சென்று டெரிகாட்டன் பேண்ட் மற்றும் ஷர்ட்டை கழட்டி எறிந்துவிட்டு, 

அழகானா
 அருமையான 
ஆச்சரியமான 
அம்சமான 
அட்டகாசமான
 அற்புதமான 
மற்றும் அழுக்கான ஜீன்ஸையும்

அதற்கென்றே வடிவமைக்க பட்ட T ஷர்ட் ஒன்றையும் அணிந்து கொண்டு கவாஸாகி பஜாஜை எட்டி  உதைத்தால் தானாக பிரிகேட் ரோடில் உள்ள "இந்தியானா பர்கர்ஸ்" உணவகத்திற்கு சென்று நிற்கும்.

இம்பீரியலின் சிக்கன் கபாப்,
எம்பையரின் சில்லி சிக்கன்
டாஜின் பிரியாணி
பானூஸின் ரோல்ஸ்...


இவை எல்லாம் அருமை தான். இருந்தாலும் அதற்கு அதற்கென்று ஒரு  கால நேரம் உள்ளதல்லவா .. சனி மதியம் இந்தியானா பர்கர்ஸ்.

இரண்டு மணி போல் உள்ளே நுழைய, நட்ப்புகள் சில ஏற்கனவே அமர்ந்து இருக்கும், மற்றும் சில நமக்கும் பிறகு வரும். இங்கே மெனுவில் மொத்தமே ஐந்து அல்ல ஆறு ஐட்டம் தான்.  என்னமோ வெவ்வேறு பெயர்கள் அந்த மெனுவில் இருந்தாலும் அவர்களுக்கு செய்ய தெரிந்த ஒரே விஷயம் பர்கர்ஸ் தான். ஆனாலும் சும்மா பில்டப்புக்காக வேற வேற பெயர்கள் வித்தியாசம் வித்தியாசமா வைச்சி இருப்பாங்க. 

"மெது மெது" என்று அப்போது தான் பேக்கரியில் இருந்து வந்த பன்னை இரண்டாக வெட்டி சட்டுவதில்கொஞ்சம் பட்டர் போட்டு, கூடவே க்ரில்ட் வெங்காயம், நேர்த்தியாக வெட்ட பட்ட தக்காளி நடுவில்  ரஸ்ஸல் மார்க்கெட்டில் இருந்து வந்த "கொத்து மாட்டு கறியில்" தட்டி செய்யப்பட்ட பர்கர்ஸ்..


அந்த கறியை அவர்கள் சட்டுவதில் திருப்பி திருப்பி போடும் போதே, நாக்கில் எச்சில்.

இதன் அருகிலேயே நாகார்ஜுன் போன்ற அசைவ உணவகங்கள் உண்டு. அங்கே பதினைந்து ரூபாய்க்கு மட்டன் சிக்கன் பிரியாணி கிடைக்கும். ஆனால் நமக்கு ருசி முக்கியமல்லவா. அதனால் இந்த பர்கர்ஸ்  அந்த மட்டன் சிக்கன்  பிரியாணியை விட விலை அதிகமாய் இருந்தாலும் நாங்கள் இங்கே தான் இருப்போம்.

இதற்கு தொட்டுக்கொள்ள எந்த நிமிடத்திலும் கெட்டுவிடும் என்று நிறத்தில் ஒரு சாஸ்.. மற்றும் வினிகரில் போட்டு எடுத்த ஒரு வெள்ளரி பிஞ்சு. என்ன ஒரு ருசி.. அட அட அட.. இப்ப யோசித்தாலும் நாக்கு ஊறுது.

இங்கே இன்னொரு விஷயம்.

தமிழகத்தின் இருந்த வந்த நம்ம பங்காளிகளை ஒரு முறை இங்கே அழைத்து செல்ல.. 

"என்ன மாம்ஸ், பெங்களூரில் பெஸ்ட் லன்ச் வாங்கி தரேன்னு சொன்னீயே ... எங்கே கூப்பிட்ன்னு போக போற ?" 

"அக்கடபண்ணி சூடு"

அங்கே சென்று ஆளுக்கொரு பர்க்கர்ஸ், கூடவே ஒரு "தம்ப்ஸ் அப் " ஆர்டர் செய்ய.,

பர்கரை ...

"மாம்ஸ், கரி பன் , சூப்பர்"

"கரி பன்.. ஐ, பேரே சூப்பரா இருக்கு!""

"என்ன மாம், ஒரு கடி கடிச்சா ஐட்டம்சுத்தமான  நெய்யில் செய்யபட்ட கேசரி போல பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரி  தானா உள்ள போகுது, ஆட்டுக்குட்டி கறியா"

"டேய், இது  பீப்!!"

"என்னாது பீப்பா?"

எதோ ஒரு பாக்யராஜ் படத்தில் ஒருவர் "இட்லியா" என்று அலறுவாரே.. அப்படி அலறினான். .

"ஏண்டா சாப்பிடமாட்டியா?"

"நீ ஒன்னு.. நல்லா சாப்பிடுவேன், இருந்தாலும் என் கண்ணை என்னால நம்பவே முடியல?"

"ஏன்!?"

"இன்னா மாம்ஸ்..?பீப் ஹோட்டலை ஊருக்கு நடுவுல வச்சி வரவன் எல்லாரும் பெருமையா நுழைஞ்சி ஒருத்தனுக்கொருதன் ஆட்டம் பாட்டம்ன்னு?"

"இது என்ன பெரிய விஷயமா ?"

அழுதே விட்டான் பங்காளி..

"மாம்ஸ், எங்க ஊரில் எல்லாம் பீப் ஹோட்டலுக்கு நாற்காலி கூட கிடையாது. நின்னுக்குனு தான் என்று அவன் சொல்லும் போது தான், ஆமா இல்ல, என்று நம் தமிழகத்தின் அனுபவம் நினைவிற்கு வந்தது.

"இருந்தாலும் மாம்ஸ், நீ இப்படி எங்களுக்கு சீப்பா பீப் பர்க்கர்ஸ்  வாங்கி கொடுத்துட்ட பாரு. நீ ரொம்ப கொஞ்சம்!"

"அட பாவத்த, டே.. நீங்க எல்லாம் என் கசின்ஸ் அதனால தான் இங்கே செலவே நிறைய ஆனாலும் பரவாயில்லைன்னு கூட்டினு வந்தேன். சீப்பா வேணும்னா பக்கத்துல நாகர்ஜூனாவில் மட்டன் சிக்கன் பிரியாணி வாங்கி கொடுத்து இருப்பேன்"

"என்னா மாம்ஸ் சொல்ற..? இது மட்டன் சிக்கனோட காஸ்ட்லியா?  ... எப்படி, எதுக்கு ஏன்.."

"அப்புறம் சொல்றேன்.."

"மாம்ஸ், ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டியே.. இனிமேல் எப்ப இப்படி சேரில் உக்காந்து ரிலாக்ஸா பீப் சாப்பிடுவேன்னு தெரியாது.. இன்னொரு "கரி பன்" சொல்லேன் "

சொன்னேன்.

சரி, இது என்ன திடீர்னு "கரி பன் " பத்தி பதிவு?

ரொம்ப நாள் கழிச்சி ஆபிஸ் பக்கம் வர, மதிய பசி.. ஏதாவது சாப்பிடலாம்னு வெளியே போனா .. எதிரில் வந்தது எல்லாம் "பீப் பர்கர்ஸ்". இந்த கடையில் இருக்கும் பர்கர்ஸ் எல்லாம் நல்லா இருக்கும்னு தான், ஆனாலும்..

எங்க பெங்களூரில் கிடைக்கும் இந்தியானா பர்கர்ஸ் போல வருமா?

பின் குறிப்பு:

பெங்களூர் நகரில் இருப்பவர் யாராவது இந்த பதிவை வாசிக்க நேர்ந்தால்..

பிரிகேட் ரோடின் இறுதியில் உள்ள ரவுண்டு அபௌட்டில் இருந்த "இந்தியானா பர்கர்ஸ் " இன்னும் உள்ளதா? 



சொல்லவும்.

செவ்வாய், 28 ஜூலை, 2020

என் பணம் பணம் என் பணம் என் பணம் உன் பணம்..

பல மாதங்களுக்கு பின்னால் அலுவலக பணி நிமித்தம் வங்கி ஒன்றுக்கு செல்ல நேர்ந்தது.

முன்பெல்லாம் பார்க்கிங்கில் ரெண்டு முறை  சுற்றி இடத்திற்காக அலைவேன். கொரோனாவினால் காலியாக இருந்தது. வங்கியின் எதிரிலே நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, கண்ணாடியின் மறுபக்கத்தில் இருந்து என்னை கண்ட ஒரு வங்கி பணியாளர், என்னை நோக்கி..

"மாஸ்க் மாஸ்க்" என்று முகத்தில் சைகை காட்டினார். 

ஓ... 

சுதாரித்து வண்டியில் இருந்த மாஸ்க்கை அணிகையில்., போன வருடம் அக்டோபர்  மாதம் ஹாலோவீன் நேரத்தில் இதே வங்கிக்கு வந்த போது  அங்கே ஒரு தற்காலிக நோட்டிஸ்.

"யாரும் முகமூடி அணிந்து உள்ளே வர வேண்டாம் "

காலம் தான் எப்படி மாறி விட்டது என்று நினைத்து கொண்டே டெல்லரிடம் செல்ல....

"எப்படி இருக்கீங்க..?"

என்று அந்த அம்மணி விசாரிக்க 

"இருக்கேன்?"

"குழந்தைகள் எப்படி இருக்காங்க?!"

"குழந்தைகளா?, மூத்தவ 20  இளையவ 18 "

ஞாயிறு, 26 ஜூலை, 2020

வாழை மீன்... ஐ க்நொவ் வாட் ஐ மீன்..

அம்மணி வேலையில் இருக்க மூத்தவள் தன் வழி தனி வழி என்று இருக்க சனிக்கிழமை 11 மணி போல் இளையவள்...

"மதியம் என்ன சாப்பாடு?!!!"

"ஒன்னு சொல்றேன் கோச்சிக்க மாட்டியே..?"

"கோச்சிக்க சான்ஸ் இருக்கு தானே, பின்ன எதுக்கு அதை சொல்லணும், மதியம் என்ன சாப்பாடு!!!?"

"சரி, கோச்சிக்காட்டியும் பராவாயில்லை, சொல்றேன்".

"சொல்லுங்க, கூடவே மதியம் என்ன சமையல்னும் சொல்லுங்க..."

"இந்தியாவில் மட்டும் நாம் இருந்து இருந்தோம்னா?"

"இருந்தோம்னா ?!!!"

சனி, 25 ஜூலை, 2020

பெண்களின் ஆட்டத்தில் பண வாசனை உள்ளதா என்றோ ஆராய்ச்சி!

போயே போச்சி, போயிந்தி. இட்ஸ் கான்..

என்னதான் சொல்ல வரேன்னா? 

ஒன்னு ஒன்னா  சொல்றேன். வெயிட் எ நிமிட் பார் பைவ் நிமிட்ஸ்.

கொரோனா வந்ததுன்னு உலகம் முழுக்க நடக்குற அம்புட்டு ஸ்போர்ட்ஸையும் காலவரையின்றி தள்ளி வைச்சிட்டாங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.


இதுல ரொம்ப விசனமான காரியம் இந்த வருஷம் ஜப்பானில் நடக்க இருந்த ஒலிம்பிக்ஸ். ஒலிம்பிக்சில் பங்கேற்கும் வீரர்களுக்கு பொதுவா பரிசு தொகைன்னு பெருசா எதுவும் கிடைக்காட்டிலும் அதில் பங்கேற்ற பெருமையை சொல்லி மாளாது.

அதுக்கு தேர்வு பெறுவதற்காக செஞ்ச தியாகங்கள், பயிற்சிகள், உழைப்புகள் அனைத்தும் நிறைய பேருக்கு வீணாபோச்சி. அடுத்து ஒலிம்பிக்ஸ் வர நாலு வருசமாகும். அதுக்குள்ள என்ன என்ன நடக்குமோ.

சரி, தலைப்பில் அது என்ன பெண்கள்.. ஆட்டம் பண வாசனை?

வெள்ளி, 24 ஜூலை, 2020

ட்ரைவ் இன் பட்டமளிப்பு விழா !

இளையவளுக்கு இன்று பள்ளி இறுதியாண்டில் நடக்கும் பட்டமளிப்பு விழா! பொதுவாகவே இந்த விழா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் 900 மாணவர்களும் அவர்களின் சொந்தம் பந்தம் என்று மொத்தம் 4000 ஆட்கள் வர திரு விழா போல் இருக்கும். 

ஆனால் இந்த வருடம் நிலைமையே வேறு. கொரோனாவின் கொடுமையால் சமூக விலகல் என்று சொல்லி, இந்த விழாவை தள்ளி தள்ளி வைத்து கடைசியில் இனிமேலும் தள்ளி வைக்க முடியாது என்று முடிவு செய்து இன்று வைத்தார்கள்.

புதிதாக, இதுவரை செய்யாத முயற்சி.

மாலை நான்கு மணி துவங்கி இரவு எட்டு வரை மாணவர்களின் குடும்ப பெயர்  வரிசை படி அவர் தம் வாகனத்தில் வர, பள்ளி வளாகத்தில் ஒரு மேடை அமைத்து அங்கே குடும்பம் முழுக்க வாகனத்தில் இருக்க, பிள்ளைகளின் பெயரை மட்டும் அவர்கள் சப்தம் போட்டு அழைக்க, மாணவர் மட்டும் வாகனத்தை விட்டு இறங்கி, பட்டத்தை பெற்று கொண்டு, ஒரு இருபது அடி நடக்க, பெற்றோர்கள் மற்றும் டீச்சர்கள் ஆர்ப்பரிக்க, மற்ற வாகனங்கள் ஹார்ன் சப்தம் போட்டு ஆர்ப்பரிக்க பட்டமளிப்பு விழா.
 

திங்கள், 20 ஜூலை, 2020

ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!

"என்னங்க?"

காலையில் எழுந்தவுடன் அம்மணி.. 

"நேத்து மளிகை கடைக்கு போய் மளிகை சாமான் வாங்க சொன்னேனே. இன்னும் வாங்கலையா!?"

"இல்ல, இன்னைக்கு வாங்குறேன்!"

"மறந்துடாதீங்க, இப்ப எல்லாம் கொஞ்சம் மறதி அதிகம் தான் உங்களுக்கு!"

அதை கேட்டு இளையவள் அலறினாள்...

"அடுத்த வருஷம் எங்கேயோ கார் ரேஸ் கூட்டின்னு போறேன்னு சொன்னீங்களே, விமான டிக்கட் வாங்கிட்டிங்களா ?"

"இல்ல இந்த வாரம் வாங்குறேன் "

ஞாயிறு, 19 ஜூலை, 2020

சொல்லாத கதையுமுண்டு ....

இன்றுவரை கணக்கு போட்டால் ஏறக்குறைய 750 பதிவுகளை எழுதி இருப்பேன். இந்த பதிவுகளில் 90 % க்கும் மேல் என் வாழ்வின் நடந்த நடக்கின்ற இன்னும் நடக்கும் என்று நான் யூகிக்கின்ற பதிவுகள்.

சிறு வயது ஆரம்ப பள்ளி கதைகள்.. சொந்த கதை சோகக்கதை போல் இருந்தாலும் ஒவ்வொரு பதிவிலும் நான் வாழ்க்கையில் கற்று கொண்ட ஒரு பாடமே.

உயர் நிலை பள்ளி கதைகள் சற்று சோகத்தை தவிர்த்து கொஞ்சம் அடாவடி தனத்தை காட்டி இருக்கும்.

கல்லூரி நாட்கள் பதிவுக்கு இங்கே அதிக இருக்காது. கல்லூரி நாட்களில் நான் படிப்பில் தானே கவனம் செலுத்தினோம். அதனால் இங்கே சொல்லும் படி எதுவம் இல்லை.

அடுத்து வேலைக்கு சேர்ந்த 

பெங்களுர் நாட்கள்... அட பாவத்த என்று நினைக்க சொல்லும்.

தொடர்ந்து பாம்பே நாட்கள்.. இவனுக்குன்னு வந்து  வாய்க்குது பாரு என்று சொல்ல தூண்டும்

சனி, 18 ஜூலை, 2020

தென்னையை வைச்சா கண்ணீரு!!!

சனியும் அதுவுமாய் அம்மணிகள் மூவரும் வெளிய செல்ல, மதியசமையலை நான் செய்கிறேன் என்று சொல்லி, என்ன சமைக்கலாம் என்று மனதிலே பல  எண்ணங்களை ஒட்டி கடைசியில்,  "தேங்காய் மீன் குழம்பு" என்று முடிவு செய்து சமையலை ஆரம்பித்தேன்.

கருவேப்பிலை பிடுங்க தோட்டம் செல்ல கோடை வெயில் முகத்தில் சுளீர் என்று அடிக்க அடித்து பிடித்து வீட்டில் நுழைந்தேன். 

எதிரில் தேங்காய் மீன்.

"வெயில் - தேங்காய் - மீன்"

பல வருடங்களுக்கு முன் பயணித்தேன்.


வளரும் காலத்தில் பள்ளி ஆண்டு முடிந்து கோடை ஆரம்பிக்க, விடுமுறைக்காக கிராமம் செல்லும் வழக்கம். அந்நாட்களில் எங்கள் கோடை விடுமுறையை கழிக்க நாங்கள் வருடா வருடம் செய்யும் ஒரு காரியம் "அடுத்துள்ள தென்னை தோப்பில் இளநீர் திருட்டு"

இந்த இளநீர் திருட்டில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. பல வருடங்களுக்கு பின் அந்த தோப்பின் காவலரிடம் சென்று..

"அண்ணே, தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க , சின்ன  வயசுல  உங்க தோப்பில் நிறைய முறை தேங்காய் திருடி இருக்கேன். ஒரு தேங்காய்க்கு ஒரு 4 ஆனாலும் கிட்டத்தட்ட 50 காய் திருடிருப்பேன். இந்தாங்க இருநூறு  ருபாய்"

 என்று கொடுக்க., அவரோ..

"மொத்தம் 64காய் எடுத்து இருப்ப!!? நீ ஒவ்வொரு முறை மரம் ஏறும் போதும் நானும் என் வீட்டுக்காரியும் சன்னல் வழியா பார்த்து சிரிப்போம். நீ காயை பறிச்சி போட அதை மத்தவங்க மறைஞ்சி மறைஞ்சி எடுத்துன்னு ஓட எங்களுக்கு ரொம்ப தமாஷா இருக்கும்"

பூந்தோட்ட கணக்குபிள்ளை !

ஈரமான ரோஜாவே...

பூவே செம்பூவே...

பூவரசம் பூ பூத்தாச்சு ...

பனி விழும் மலர்வனம்...

போக போக புரியும், இந்த பூவின் வாசம் தெரியும்..

அது என்னமோ தெரியல என்னோ தெரியல, பூ என்றாலே மனம் ஒரு நிமிடம்  "தகிட தகிட" என்று அலைகின்றது.

இல்லத்தின் எதிரில் ஒரு ரோஜா பூ தோட்டம் அமைத்து அந்த செடிகளும் பூத்து  குலுங்க, வாரம் மூன்று முறை இல்லத்தில்  விதவிதமான பூங்கொத்துக்களை வைத்து அழகு பார்க்கின்றேன்.

சனி கிழமை காலையில், கண்ணாடி பாத்திரத்தை (flower vase ) மற்றும் கத்திரிக்கோல் எடுத்து கொண்டு இன்றைக்கான பூங்கொத்தை  தயாரிக்கையில் தான் எத்தனை உரையாடல்கள்.

பொதுவாகவே என் இல்லத்தின் அருகில் வசிப்பவர்கள் காலையில் தம் தம் நாய்களை அவைகளின் காலை கடனை கழிக்க நடைக்கு அழைத்து செல்வார்கள். இவர்கள் தவிர வார இறுதி சைக்கிள் ஓட்டுபவர்கள்.  அதற்கும் மேலாக தினந்தோறும் நடை பயிற்சிக்கு செல்பவர்கள் என்று சனி கிழமை காலை இல்லத்தின் எதிரில் அநேகரை சந்திக்கும் வாய்ப்பு அதிகம்.இப்படி இருக்கையில் இந்த சனி பூங்கொத்திற்காக ஒரு கையில் ரோஜாவோடு மற்றொரு கையில்  கத்திரியோடு நின்று கொண்டிருக்கைலையில் நடந்த சில உரையாடல்கள்..

"குட் மார்னிங்" எதிரில் வந்த அடுத்த வீடு பங்காளி 

"குட் மார்னிங்" 

"என்ன தப்பு பண்ண? பூங்கொத்தை வைத்து சமாளிக்கிற!!!?"

இருவரும் சிரித்தோம்..

அடுத்து வந்த அம்மணி ....

"யாருக்கு பிறந்தநாள்?"

வெள்ளி, 17 ஜூலை, 2020

அன்றொரு ஒரு நாள் இதே நிலவில் ...

காலையில் அலாரம் அடித்தவுடன்.. அடிச்சி பிடிச்சி எழுந்து போய்.. அன்பான அதட்டலோடு பிள்ளைகளை  எழுப்ப...

அவர்களோ..

"அஞ்சு நிமிசம்"

ன்னு கெஞ்ச..

அம்மணி சமையலறை போய் .. காபியோ டீயோ போட...

நாமும் ஓடி போய் எல்லாருடைய மத்திய உணவை கட்டி அவங்க வாங்க பையில் போட்டுட்டு..கையில் கிடைத்த இட்லி தோசையை.. .அவசரமா முழுங்கிட்டு..

வீட்டில் இருக்கும் அம்மாவிற்கு காலை உணவு மத்திய உணவை தயார் செய்து மேசையில் வைத்து விட்டு...

அம்மணி ஒரு புறம்.. மூத்தவள் ஒரு புறம்.. அடியேன் ஒரு புறம் இளையவளோடு கிளம்பும்  போது...

அலை பேசி..

"இன்னைக்கு அவ பள்ளிக்கூட மீட்டிங் .. நீங்க போறீங்களா..?"

"அடுத்த வாரம் மூத்தவளை கூட்டினு வேற ஊருக்கு ஒரு விளையாட்டு போட்டி.. டிக்கட் வாங்கிட்டிங்களா?"

"உங்க அம்மாவுக்கு மாத மருத்துவ சோதனை.. டாக்டரிடம் கூட்டினு போகணும்"

இளையவள பள்ளியில் விட்டுட்டு நம்ம அலுவலகம் போகும் போது, அலை பேசி அலற..

மூத்தவள்..

"டாடி.."

"சொல்லு.."

ஒரு ஆணி(யி)ன் மனது இன்னொரு....!!

இரண்டு நாட்களுக்கு முன்பு " இல்லத்தரசிகளுக்கு ஒரு சலாம்" என்று ஒரு பதிவிட்டேன். அதில், இந்த கொரோனா காலத்தில் அடியேனின் இல்லத்தில் உள்ள மூண்டு மகாராசிகளும் வேலைக்கு தம் தம் நிறுவனத்திற்கு சென்று விடுவதும் நான் மட்டும் இல்லத்திலேயே 24 மணிநேரமும் இருப்பதை பற்றியும் எழுதி இருந்தேன்.

குறிப்பாக, இந்நாள் வரை .. 

வீட்டில் இருக்கும் அம்மணிகள், கணவன் மற்றும் பிள்ளைகள் வெளியே சென்றவுடன் புத்தகம் படிப்பது மற்றும் டிவி பார்ப்பது என்று   இருப்பார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் சுக்கு நூறாகியது. 

இல்லத்தில் தான் எத்தனை வேலை? எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று எழுதி...

மற்றும், 

இவர்கள் மூவருக்கும் நான் பகல் நேரத்தில் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு  என் அலுவலக வேலையையும் செய்துவருகிறேன் என்பதையும் விளக்கினேன்.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...