Saturday, September 30, 2017

கெளதம் மேனன்.. நீ ஆம்பிளை I mean You are a Fine Gentleman!

சில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான்  எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. அதே வேகத்தில் நல்ல காரியங்களை பார்க்கும் போது பாராட்ட தவறி விடுகின்றேன்.

அதற்காக தான் இந்த பதிவு.. இதை பல மாதங்களுக்கு (சில வருடங்களுக்கு? ) முன் எழுதி இருக்க வேண்டும். "Shame on me" எழுத தவறி விட்டேன். Then again, its better to be late than never.


பல மாதங்களுக்கு முன் ஒரு திரைப்பட நிகழ்ச்சி. அதில் இயக்குனர் கெளதம் மேனன் , பாடலாசிரியர் தாமரை இன்னும் அநேகர் மேடையில் அமர்ந்து இருந்தனர்.அப்போது பாடலாசிரியர் தாமரை பேச வந்த போது .. ஒரு பத்திரிக்கையாளர் என்ற பெயரில் அங்கே வந்த "புறம்போக்கு" (இன்னும் கேவலமாக சொல்லவேண்டும் என்று தான் மனதில் வருகின்றது) அவர்களை படத்தை பற்றியும் பாடலை பற்றியும் கேட்காமல்...

அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு பிரச்னையை பற்றி கேள்வி கேட்க,  அங்கிருந்த அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. சபை நாகரீகம் அனைத்தையும் மறந்து இவர் தொடர்ந்து முட்டாள்தனமாக கேள்விகளை தொடர...

அந்த மேடையில் அமர்ந்து இருந்த கெளதம் மேனன் உடனே மைக் அருகே வந்து அந்த புறம்போக்கிடம் பேச ஆரம்பித்தார்.

இவர் செய்த இந்த செயல் மிகவும் பாராட்டத்தக்கது. திரை துறையில் பணியாற்றும் சகபணியாளர் என்பதை விடுங்கள்.. போது மேடையில் ஒரு பெண்மணிக்கு இவ்வாறாக ஏதாவது நடக்கையில் ..One  gotta be a man and take charge.

மேனன் அவர்கள் அந்த மேடையிலும் அந்த நிலையிலும் சற்றும் கோவம் கொள்ளாமல் மிகவும் நிதானமாக அந்த புறம்போக்கியிடம் தன் கருத்தை எடுத்து சொல்லி அங்கே மீண்டு ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தினார்.

அங்கே அவர் நடந்து கொண்ட விதம் மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம்.

நான் தமிழன்.. எனக்கு தெரியாத கலாச்சாரமா என்று தமிழ் போர்வையில் மறைந்து கொண்டு திரிவதை விட...

அங்கே எனக்கு என்ன செய்வதே என்று தெரியவில்லை என்று ஒரு "ஒப்புக்கு சப்பான்" காரணத்தை சொல்வதை விட....

கேட்டவர் ஒரு பத்திரிக்கையாளர்.. அடுத்த நாள் தேவையில்லாமல் தன்னை பற்றியும் படத்தை பற்றியும் தவறாக எழுதுவானே என்று சற்றும் நினைக்காமல் ..

ஒரு கேவலமான மனிதன் ஒரு பெண்ணை தன் எதிரில் இழிவு படுத்துகிறான்.. And thats not freaking right...I've gotta intervene என்று எழுந்து சென்றாரே.. You are the Man.. Gautam.. Hats off!

உண்மையாகவே மனம் திறந்து சொல்கிறேன். கெளதம் வீட்டில் வாழும் அவரை சார்ந்த பெண்கள் அனைவரும் பாக்கியசாலிகள்.. ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள். அடுத்த வீட்டு பெண்ணையே ஓடி சென்று மதிக்கும் இவர் தன்னை சார்ந்தவர்களை ஒன்றும் அணுக அனுமதிக்க மாட்டார்.

சினிமா உலகத்தினரே கற்று கொள்ளுங்கள் இவரிடமிருந்து.

பின் குறிப்பு :

அந்த காணொளியை முதலில் இணைக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் அது அந்த புறம்போக்கு பத்ரிக்கையாளருக்கு விளமபரமாகிவிடும் என்று தவிர்க்கிறேன்.  

7 comments:

 1. பத்திரிகையாளர்களுக்கு தேவை பரபரப்பு. இடம் பொருள் ஏவல் பார்க்காமல் கேள்வி கேட்பார்கள். இதற்கு இளையராஜா போன்றவர்கள்தான் லாயக்கு. அறிவு இருக்கா என்று கேட்டிருப்பார்

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் பொறுமையா அந்த சூழ்நிலையை சமாளிச்சாரே.. பாராட்டியே ஆக வேண்டும்.

   Delete
 2. பத்திரிகையாளர்கள் என்றாலே சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்ற எண்ணம் குல்தீப் நய்யார் ... .........போபார்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்த சித்ரா சுப்பிரமணியம் .....குஜராத் படுகொலைகளை அம்பலப்படுத்திய தெஹல்கா போன்ற விஷயங்கள் நினைவுக்கு வரும் ....இங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் பிரஸ் என்று ஒரு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் போவார்கள் ....ஹெல்மெட் அணியாமல் போய் காவல் துறையிடம் சிக்கிக்கொண்டால் பயமுறுத்துவார்கள்
  கொடைக்கானலில் சிலமாதங்களுக்கு முன் ஒரு கட்டுமான ஒப்பந்தக்காரரிடம் விதிகளை மீறி அவர் கட்டிடம் கட்டுவதை அம்பலப்படுத்தாமல் இருக்க லஞ்சம் கேட்க ......அவரும் தருவதாக ஒப்புக்கொண்டு ஒரு தனியிடத்துக்கு வரவழைத்து அடித்து ,உதைத்து காமிரா மற்றும் செல்போனை பிடுங்கிக்கொண்டு அனுப்பினார் !இப்போதைய பத்திரிகையாளர்களின் லட்சணம் இதுதான்!

  ReplyDelete
 3. விசு கௌதம் மேனன் எங்கள் குடியிருப்பின் தொட்டடுத்துதான் இருக்கிறார். கைக்கெட்டும் தூரத்தில். தினமும் பார்வையில். மிக மிகத் தன்னடக்கம் மிக்கவர். ரொம்ப ஜென்டில்மேன். எங்களுக்குத் தெரிந்தவரை..அதாவது neighbour என்ற முறையில்....நல்ல மனிதர். சர்வ சாதாரணமாக அவரைப் பார்க்கலாம்.

  இந்த நிகழ்வு பற்றி எல்லாம் இப்போதுதான் அறிகிறேன் விசு....அதே போல இந்த டி ஆர் நிகழ்வு கூட பதிவுகள் வழியாத்தான் அறிந்தோம்...

  நிஜமாகவே பாராட்டப்பட வேண்டியவர் கௌதம் மேனன்...

  கீதா

  ReplyDelete
 4. யாருக்கோ என்னமோ சொல்லுறமாதிரி தெரியுதே அன்பரே

  ReplyDelete

 5. ஒரு வேளை கெளதம் மேனன் தமிழனாக இல்லாததால்தான் இப்படி தைரியமாக எழுந்து பதில் கொடுத்தாரோ என்னவோ ..இந்த விஷயத்தில் கெளதம் மேனனை பாராட்டிதான் ஆகவேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. அவரு ஒரு உண்மையான ஆம்பிள மதுர.. A fine Gentleman .. அதனால தான் பக்கத்துல ஒரு தவறு நடக்கும் போது அடிச்சி பிடிச்சி எழுந்து வந்தார்.

   இந்தஅப்பனும் மகனும் தமிழன்டா. தமிழன்டா சொல்லி நம்ம மானத்தை கப்பலில் ஏத்துறாங்க..

   Delete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...