ஞாயிறு, 31 மே, 2020

விண்வெளி பயணம் ஒரு மறக்க முடியாத Space !

கடந்த இரண்டு 24 மணி நேரத்தில் கிட்ட தட்ட 12 மணி நேரம் போல் தொலைக்காட்சியின் எதிரிலேயே அமர்ந்திருந்தேன் என்று தான் சொல்லவேண்டும்.
Rakesh Sharma

எந்த சேனலை திருப்பினாலும் ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிலோய்ட் க்கு நடந்த அநீதிக்காக நியாயம் கேட்டு நடக்கும் போராட்டமாகவே இருந்தது. இந்த போராட்டத்தினை பலர் வன்முறையில் ஈடுபட, மீண்டும் ஒரு தவறு நிகழ்கின்றதே என்று மனது கனத்தது.

ஆனால் நான் தொலைக்காட்சியின் எதிரில் அமர்ந்தது வேறு ஒரு காரியத்திற்காக. SPACE X என்ற தனியார் நிறுவனமும் NASA வும் சேர்ந்து விண்கலத்திற்கு வீரர்களை அனுப்பும் நிகழ்ச்சி.

சென்ற புதன் அன்று மதியம் 12 :30 க்கு புறப்பட வேண்டிய விண்கலம் புறப்பட ஏழு நிமிடம் இருக்கும் நேரத்தில் தட்பவெப்ப நிலை சரியில்லாத காரணத்தினால் சனிக்கிழமைக்கு தள்ளி வைக்க பட்டது.

நேற்று அனைத்தும் சரியாக முடியாக மதியம் இரு வீரர்களுடன் விண்கலம் கிளம்ப, மனதோ 1984 ஏப்ரல் மாதத்திற்கு சென்றது.

விண்வெளிக்கு அமெரிக்காவும் ரஷியாவும்  போட்டி போட்டுகொண்டு வீரர்களை அனுப்பி கொண்டார் இருந்த அந்த நாட்களில் இந்தியாவை சார்ந்த ராகேஷ் சர்மா என்பவர் ரஷ்ய விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு சென்ற நாள் தான் அது.

அந்த காலத்தில் இந்த மாதிரி ஒரு செய்தி கிடைத்தால் போதும். செய்திக்கு தாள், வார இதழ் மாத இதழ் என்று தேடி பிடித்து அலசி ஆராய்ந்து எடுத்து விடுவோம்.

அப்படி படிக்கையில் ராகேஷ் ஷர்மா என்ற இந்திய விமான படையை சார்ந்த இவர் பல போட்டிகளுக்கு பின்னர் தகுதி செய்ய பட்டார் என்று தெரிய வந்தது.

அவர் விண்கலம் செல்ல, நாடே அவரை பாராட்ட, அந்நாள் பிரதமர் இந்திரா காந்தி அவரோடு அவர் விண்வெளியில் இருக்கையிலே உரையாட, ஒரே கொண்டாட்டம் தான்.

இருந்தாலும் மனதில் ஒரு விசனம். இந்த நாடே ராகேஷ் சர்மாவை கொண்டாடி கொண்டு இருக்கையில் என் மனமோ ரவீஷ் மல்ஹோத்ரா என்ற இன்னொருவரை நினைத்து மிகவும் வருந்தியது.

Ravish Malhotra with Rakesh Sharma
நமக்கு எப்பவுமே வெற்றி பெற்றவர்களை பாராட்டுவதோடு சோர்ந்து இருப்பவர்களை நினைத்து ஆறுதல் செய்யும் புத்தி தானே. அதனால் அன்று  ரவீஷ் மல்ஹோற்றா என்பத்வருக்காக ஒரு பிரார்த்தனை செய்தேன்.

யார் அந்த ரவீஷ் மல்ஹோத்ரா.. ? இது என்ன அந்த காலமா? நூலகத்திற்கு சென்று செய்திதாள் , வார இதழ் மாத இதழில் தேட..

கூகிளில் தட்டுங்கள். நீங்களும் அவருக்காக ஒரு முறை.. அட சே.. இவருக்கு இப்படி ஆயிடிச்சேன்னு சொல்லுவீங்க!

சனி, 30 மே, 2020

______ன் நிறம் கருப்பு!

_________ன் என்ற கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்.

சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில்  என் அலுவலகத்தை சார்ந்த சிலரோடு சவுத் கேரலினா மாநிலத்தில் அமைந்துள்ள சார்லஸ்டன் என்ற  ஊருக்கு செல்ல நேரிட்டது.

பார்க்க மிகவும் அழகாக பவ்யமாக இருக்கும் இந்த  நகரம் ஒரு காலத்தில் கறுப்பினதோருக்கான நரகமாக இருந்தது என்பதை சில நிமிடங்களில் அறிந்து கொண்டேன்.

இந்த நகரில் வாழும் தெரிந்த ஒருவர், இந்த இந்த இடத்தை பாருங்கள் என்று சொல்லி தர, நாங்கள் சென்ற முதல் இடம் ஒரு ம்யூஸியம். ம்யூஸியம் என்று சொல்வதை விட இதை "மனித நேயம் சித்திரவதை பட்ட இடம் " என்ற சொல்லலாம். உள்ளே செல்ல டிக்கட் வாங்கி கொண்டு நுழைய முயல்கையில், அந்த நுழைவாயில் இருந்த ஆப்ரிக்க அமெரிக்க பெண் என்னை பார்த்து, எதற்கும் கையில் டிஸ்ஸு எடுத்து கொள்ளுங்கள் என்று ஒரு பாக்கெட்டை தர, ஒன்றும் புரியாமல் வாங்கி கொண்டு நுழைந்தேன்.

செவ்வாய், 26 மே, 2020

அன்புள்ள மகளுக்கு, வருடம் 2025 என்று நினைக்கின்றேன்

"டாடா...!!!!!!?"

சிறிது எதிர்பார்ப்போடு அறையில் நுழைந்தாள் இளையவள். அவளை பார்க்கவே மனது சற்று விசனமாகிறது.

இங்கே அமெரிக்காவில் ஒவ்வொரு பள்ளிக்கூட பிள்ளையும் பள்ளிக்கூட நாட்கள் முழுவதும் காத்து கொண்டு இருப்பது அவர்களின் இறுதியாண்டில் நடைபெறும் " Gradutation  Day "! இந்த நாளுக்காக அவர்கள் காத்து கொண்டுஇருப்பதை போலவே இந்நாளும் பொதுவாக மிக சிறப்பாக நடக்கும்.

என் மகளின் பள்ளியில் இவ்வருடம் கிட்டட்டத்தட்ட 900 பிள்ளைகள் தங்கள் உயர்நிலை பள்ளியின் இறுதியாண்டை முடித்து கொண்டு கல்லூரி செல்ல தயாராகி இருக்கின்றார்கள்.

கொரோனாவினால் இந்தவருடம் நடக்க இருந்த விழாக்கள் ஏற்பாடுகள் கொண்டாட்டங்கள் என்று அனைத்தும் ஏறக்குறைய ரத்தான  நிலையில்  பிள்ளைகள் அனைவரும் மிகவும் சோகமாக காண்கிறார்கள்.

"டாடா"

"சொல்லு மகள் "

வெள்ளி, 22 மே, 2020

கார்த்தி டயல் செய்யாமலே இருந்து இருக்கலாம்!


நேற்று நண்பர் ஒருவர்,

"விசு, நீ கண்டிப்பாக பாக்கணும். கவுதம் மேனன் ஒரு குறும்படம் எடுத்து இருக்கார் "

"டே .. நான் இது வரை கவுதம் மேனன் எடுத்த முழு படம் எதையுமே பார்த்தது இல்ல.. குறும்படத்தை எங்க பாக்குறது?"

"அட பாவத்த, விண்ணை தாண்டி வருவாயா, படத்தை நீ பாக்கல?"

"நோ, ஏதாவது மிஸ் பண்ணிட்டேனா?"

"செமம படம் விசு .. அட்டகாசமான லவ் ஸ்டோரி"

"லவ் ஸ்டோரி? ஆளை விடு..வர வர காதல் கசக்குது"

"நீ இன்னும் 80-90 லேயே இருக்க விசு. வெளிய வா "

"அதுவே நல்லா சுகமா இருக்கு, அங்கேயே இருந்துடுறேன்.. அங்கே இல்லாத லவ் ஸ்டோரியா?"

"சரி, நீ இந்த குறும்படத்தை பாத்தே ஆகணும். விண்ணை தாண்டி வருவாயின் தொடர்ச்சி!"

பிள்ளையை பெத்தா சேமிப்பு !

அமெரிக்க மக்களுக்கு சேமிப்பு  என்றாலே என்னவென்று தெரியாது என்ற பொதுவான ஒரு கருத்து நிலவி வருகின்றது. இன்னும் சொல்லப்போனால் இந்தியர்கள் நிறைய சேமிப்பவர்கள் அவர்களிடம் இருந்து அமெரிக்கர்கள் கற்று கொள்ள வேண்டும் என்றும் நிறைய இடத்தில படித்து இருக்கின்றேன்.

2008 உலக அளவில் வந்த பொருளாதார வீழ்ச்சி அநேக உலக நாடுகளை பாதித்தாலும் இந்தியா பாதிக்காமல் இருந்ததற்கு காரணமே இந்தியர்களின் சேமிப்பு பழக்கம் தான் என்றும் ஒரு பேச்சு.

இது அனைத்துமே உண்மை தான்.

சேமிப்பு :
ஒருவன் எதற்காக சேமிக்க வேண்டும்? ஆங்கிலத்தில் "for a rainy day " என்பார்கள். நாளை என்ன நடக்கும் என்று யார்க்கும் தெரியாது அல்லவா. அந்த தெரியாத சவாலை சமாளிக்க சேமிப்பு.

இந்த சமாளிப்பு மற்றும் தேவை அனைவர்க்கும் தானே, பின்னர் ஏன் இந்தியர்கள் சேமிப்பில் கெட்டி மற்றும் அமெரிக்கர்கள் மருந்துக்கும் சேமிப்பது இல்லை?

தொட்டில் பழக்கம் தான்.

வியாழன், 21 மே, 2020

விவசாயி நல்ல விவசாயி.. மனைவி என்னும் முதலாளி ..

"அட பாவத்த.. இந்த அநியாயத்தை என்னத்த சொல்றது..!!!?"

கேட்டு கொண்டே இல்லத்தில் அம்மணியின் நுழைய..எதுவா இருக்கும் என்ற எண்ணம் தலை தூக்க..

எதை சொல்ற? எதுவா இருந்தாலும் அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.. நிதானம், ப்ளீஸ்.."

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்.. !! இந்த மிஸ்டர்  தண்டபாணி  பண்ண  காரியத்தை கேள்வி பட்டீங்களா?!!?¨

செத்தாண்டா தண்டபாணி! ஆர்வம் தாங்காமல்..

"சொல்லு .. சொல்லு.. தண்டம் நல்ல மனசுக்காரன் தான்.. இருந்தாலும் சில நேரத்தில் தவறுவான், எப்படி மாட்டிக்கிட்டான்.. சொல்லு?"

"அது என்ன ? என்னா பண்ணாருன்னு கேக்குறதுக்கு பதிலா எப்படி மாட்டிக்கிட்டாறுனு? அடுத்தவன் தவறில் பாடம் கத்துக்குறிங்களோ ?"

"சே.. சே.. ஒரு பிளோவில் வந்துடுச்சி.என்ன பண்ணான் தண்டம்?"

புதன், 20 மே, 2020

நான் ரொம்ப நல்லவன், அவன்தான் பிச்சைக்காரன்!

இன்று காலை சுப்பையா வீரப்பன் என்ற பதிவரின் " அன்றாட காய்ச்சிக்கூட்டம்  யார் தெரியுமா" என்ற ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. பதிவின் முடிவில் "பகிர்வு"என்று எழுதி இருந்தார்.  அந்த பதிவில் இப்படி ஒரு கருத்து.

//இங்கேயாவது (இந்தியாவில்?) மனிதாபிமானம் இருக்கு, தேடி கொண்டு போய் சாப்பாடு கொடுக்குறாங்க. அங்க (அமெரிக்காவில்) அவனவன் பொழப்பே நாறிட்டு கிடக்கு. பீரோ நிறைய சரக்கு பாட்டில் தான் அடுக்கி வைச்சி இருப்பான். பெரும்பாலும் ரெடிமேட் புட் தான்சுட்டு போட்டாலும் சமைக்க வராது. அங்க எவனும் அன்னதானம் பண்ணமாட்டான்..
இன்னைக்கு உலகத்திலே காஸ்டிலியான பிச்சைக்காரன் அமெரிக்காக்காரன் தான்.//

மேலே உள்ள வார்த்தைகளில் தான் என்ன ஒரு காழ்ப்புணர்ச்சி. வாழ்வின் முதல் பாதியை இந்தியாவிலும் இரண்டாவது பாதியை அமெரிக்காவிலும் கழித்ததால் இவ்விரு நாட்டின் நன்மை தீமைகளையும் மக்களின் குணத்தையும் அறிந்தவன் நான்.

//இங்கே நிறைய பேர் தேடி போய் சாப்பாடு கொடுப்பாங்க அங்கே அவனவன் புழப்பே நாறிட்டு இருக்கு//

செவ்வாய், 19 மே, 2020

எங்க அப்பா அம்மா காணாம போய்ட்டாங்க..

 எங்கள் இல்லத்தின் அருகே ஒரு பெரிய பூங்கா அமைந்துள்ளது.  அதை கலிபோர்னியா மாநிலத்தை சார்ந்ததால் ஸ்டேட் பார்க் என்பார்கள்.  பல வித நடை பாதைகள் ஏரிகள் மலைகள் விளையாட்டு திடல்கள் அனைத்தும் இதில் அடங்கும். எங்கள் இல்லத்தில் இருந்து 5  நிமிடத்தில் நடந்தே அடைந்து விடலாம்.

                                                         Laguna Niguel Regional Park 


ராசாத்திக்கள், அம்மணி மற்றும் அடியேன் இங்கே முடிந்தவரை மாலை நடைக்கு செல்வோம். சில நேரங்களில் இங்கே உள்ள பூங்காவில் மீன் பிடிக்க அனுமதி பெற்று அங்கே மீன் பிடிப்பின். மற்றும் சில நேரங்களில்  இதில் அமைந்துள்ள ஏரியில் படகினை வாடகைக்கு எடுத்து உல்லாச பயணம் செய்வோம்.

திங்கள், 18 மே, 2020

புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமும்.

கொரோனாவின் பயங்கர தாக்குதலால் உலகமே திக்குமுக்காடி கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவின் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை மற்றவர்களை விட மிகவும் கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.

திடீரென்று பிரதமர் ஊரடங்கை அறிவிக்க ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சென்னையில் தவித்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களிடம் விசாரிக்கையில் ...நேற்று இரவு காதுக்கு எட்டியது!


பிரதமர் ஊரடங்கு என்று சொல்லும் போது ஓரிரு நாட்கள் தான் இருக்கும் என்று நினைத்தோம். கையில் இருந்த பணத்தை வைத்து சமாளித்தோம். பின்னர் அதுவே வாரமாகி பின்னர் மாதங்களாகிய நிலையில் ஒருவேளை உணவுக்கே வழி  இல்லாமல் இருந்தோம்.

சனி, 16 மே, 2020

பிஜேபி யின் ஆசிர்வாதம் ஆச்சாரி மற்றும் வலதுசாரி ஸ்ரீராம் சேஷாத்திரி மற்றும் சிலர் கவனத்திற்கு.

மேலே படிக்கும் முன் இணைப்பில் உள்ள காணொளியை ஒரு முறை பாருங்கள். ப்ளீஸ்!


                                             குஜராத்தில் தவிக்கும் தமிழர்கள்! 



திரு ஆச்சாரி அவர்களே..

நேற்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தாம் ... புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எல்லாம் வழியெங்கிலும் சுட சுட சாப்பாடு வழங்கப்பட்டது உள்ளது என்றீர்கள்.


திரு சேஷாத்திரி அவர்களே


இன்று ஒரு விவாதத்தில் பட்டினியால் யாராவது இருந்தார்களா?  புள்ளிவிவரம் தர இயலுமா என்று சவால்விடீர்கள். (இந்த காணொளியை பார்த்து விட்டு இவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்களே என்று புலம்பாதீர்கள். இந்த வாழ்க்கைக்கு மேல் சாவதே மேல்.)

பிரதமர் மோடி அவர்களே..

தங்களின் குஜராத் மாடல் சந்தி  சிரிக்கிறது. மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் வந்து மாயாஜால வார்த்தைகளை அள்ளி  விடுவதை விட்டு விட்டு ஒரு குடும்பத்தையாவது காப்பாற்றுங்கள்.

எஸ் வீ சேகர் அவர்களே..

பதிமூணு பாக்கெட் பால் . என் பணம், நான் நான் வாங்கினேன். நீங்க யாரு கேக்குறதுக்கு ?  உங்க பணம் தான் நீங்க வாங்கினீங்க தான்.  அந்த பணம் இல்லாமல் பலர் பச்சிளங்குழந்தைகளை கையில் வைத்து கொண்டு படும் பாடுகளை  கொச்சை படுத்தாதீர்கள்.

பாலாஜி உன்னை பாக்காத நெஞ்சு !

பாலாஜியை யாராவது பார்த்தீங்களா?  ரெண்டு நாளா ஆளே காணோமே ?

என்று எங்கள் மார்க்கெட்டிங் ப்ரோபஸ்ஸர் அருளப்பன் கேட்கையிலே, வகுப்பில் இருந்த  அனைவரின் பார்வையும் அடியேன் பக்கம் திரும்ப..

"அட பாவத்த, இவனுங்க  எந்த தியேட்டரில் ரெண்டு  நாளா மார்னிங் ஷோ மேட்னி பர்ஸ்ட் ஷோ செகண்ட் ஷோவ்ன்னு தொடர்ந்து பார்த்துன்னு இருக்காங்களோ.. அதுக்கு அம்புட்டு பேர் பார்வையும் என் மேல ஏன் விழுது என்று யோசிக்கையில்..

பின் வரிசையில் அமர்ந்து இருந்த "அமைதிக்கு பெயர் தான் ஷாந்தி" அந்த அமைதியை கலைத்து , பாலாஜி டவுன்ஷிப் தான் .. என்று என்னை பார்க்க..

அருளப்பன்...

"ஆமா இல்ல.. !, விசு பாலாஜி எங்க?!" 

"எந்த பாலாஜி சார்?அய்யரா!! செட்டியா!?"

என்று நான் பதில் கேள்வி கேக்க..

அருளப்பன் முகத்தில் கடுகு வெடித்தது.


"எத்தனை முறை உங்களுக்கு சொல்லி இருக்கேன். இந்த ஜாதி மதம் நிறம் இனம்ன்னு என் வகுப்பில் பேச  கூடாதுன்னு.. செ சாரி விசு!"

வெள்ளி, 8 மே, 2020

உன் ராசிபலன், என் ராசிபலன், என் ராசி உன் ராசி!

வாத்தியாரே!!!"


அலை பேசி அலற அடித்து பிடித்து எடுக்க எதிரில் அலறினான் அருமை நண்பன் தண்டபாணி. 

 "ரிலாக்ஸ் தண்டம், இம்புட்டு என்ன அவசரம்? கொரோனான்னு சொல்லிட்டு அம்புட்டு பேரும் வீட்டில தான இருக்கோம்" 


"இந்த கொள்ளில போற கொரோனாவை.. நான் என்னத்த சொல்வேன் வாத்தியாரே?"

"கஷ்டம் தான் தண்டம், என்ன ஆச்சி'?


2040 பத்தாம் வகுப்பு பொது தேர்தல் கேள்வி. கொரோனா பேரழிவை விளக்குக !

2040 ல் ஒரு மாணவ-மாணவியின் பதில். இது கற்பனையாகவே இருக்கவேண்டும், இந்த பதிலுக்கு 0 மதிப்பெண் கிடைத்தால் நமக்கு மகிழ்ச்சி. இதே பதிலுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைத்தால், அய்யகோ!



2019 ம் இறுதியில் சைனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் ஒரு பரிசோதனை நிலையத்தில் மனிதனால் உருகுவாக்க பட்டது தான் இந்த கொரோனா வைரஸ் என்று மேற்கத்திய நாடுகள் குற்றம் சாடுகையில் சீன நாட்டு தலைமையோ அந்த வைரஸ் வொவ்வால், பாம்பு  மற்றும் வேறு சில விலங்குகளினால் உருவானது என்ற விளக்கம் தந்தது.

இந்த வைரஸின் தாக்கத்தை சற்றும் புரிந்து கொள்ளாத WHO என்ற சுகாதார இயக்கம்,  யாரையும் எச்சரிக்காத நிலையில் 2020 ன் ஆரம்பத்தில் சைனாவில் இருந்து வெளிநாடு சென்ற பயணிகள்  இந்த வைரஸை  மற்ற நாடுகளுக்கு எடுத்து செல்ல இந்த வைரஸ் உலகத்திற்கே ஆபத்தை (பண்டமிக்) உருவாக்கியது.

ஆரம்பத்தில் சீனா, அடுத்து இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை படு பாதாளத்திற்கு தள்ளிய இந்த வைரஸ் சில மாதங்கள் கழித்து  அன்றைய வல்லரசான அமெரிக்காவை தாக்கியது.

வியாழன், 7 மே, 2020

பொண்டாட்டிக்கு பயந்தவர் இல்ல, "துணைவியாரின் மகிழாளர்!"

"சித்தப்பூ..."

சிரித்து கொண்டே பேச்சை ஆரம்பித்தான் அருமை நண்பன் சாரதி !

"சொல்லு சாரதி, என்ன ரொம்ப நாள் கழிச்சி போன் பண்ற? வூட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?! உங்க ஊரில கொஞ்சம் பரவாயில்லைன்னு கேள்விபட்டன். அம்மணி வேற மருத்துவர், எல்லாம் ஓகே தான?! "

"எல்லாம் ஓகே  தான், இருந்தாலும் ஒரு சின்ன பிரச்சனை, அம்மணி தான் எனக்கே சொன்னாங்க"

"என்ன பிரச்சனை!!?"

"இப்ப எல்லாம் நீ நம்ம பிரெண்ட்ஷிப் பத்தி பதிவே போடுறதில்லையாம், எப்ப பாரு தண்டம் தண்டம்னு  இருக்கியாம் "

"அதுவும் சரிதான். நம்ம தான் இப்ப கொஞ்ச நாளா  மீட் பண்றது இல்லையே சாரதி! கன்டென்ட் வேணுமே!"

ஏரி மேல போற கொரோனா!

அலை பேசி அலற !!!

"வாத்தியாரே, விஷயத்தை கேள்விபட்டியா?"

"கேள்விப்பட்டேன் பாணி, ரொம்ப தப்பு பண்ணுறாங்க"

"இன்னாது பாணியா? நீ தண்டபாணின்னு கூப்பிட்டா உன் பக்கத்துல  யாரோ இருக்காங்கோன்னு அர்த்தம், தண்டம்ன்னு கூப்பிட்டா நார்மலா இருக்கேன்னு அர்த்தம், பாணின்னு கூப்பிட்டா எதோ பிரச்சனைன்னு  ரொம்ப பீலிங்கில் இருக்கேன்னு  அர்த்தம்,அப்படி என்ன சோகமா கேள்வி பட்ட?"

"அத்தை விடு, நீ சொல்ல வந்ததை சொல்லு"

"அமெரிக்கா வாழ் தமிழ் மக்களிடம் ஒரு கணக்கெடுப்பு எடுத்தாங்களாம், அதோட முடிவை கேள்வி பட்டியா"?

"இல்லை, சொல்லு"

புதன், 6 மே, 2020

தலைமையும் "தறுதலை"மையும்!

இந்த கொடூரமான கொரோனா காலத்தில் ஆளும் கட்சி  அதிமுக வின் அமைச்சர்கள் மற்றும் பேச்சாளர்களை பார்த்தாலே கொரோனாவின் அறிகுறி எல்லாம் நமக்கு வந்துவிடும் போல் இருக்கின்றது!

ஊரடங்கு -  சமூக விலகல் -  விழித்திரு தனித்திரு -  என்று கிட்ட தட்ட இரண்டு மாதம் இருக்கையிலே,  இந்த கொரோனாவின் தாக்கம் மற்றும் பரவல் குறையாத நேரத்தில் அரசாங்கம் மதுக்கடைகளை திறக்க போகிறார்களாம்!

இதை கேட்டவுடனேயே மனது பதறியது। அட பாவத்த! நம்ம ஊரில் தான் மக்கள்தொகை பிரச்சனை எப்பவுமே இருக்கே। காய்கறிக்கே  அவ்வளவு கூட்டம் இருக்குமே! இந்த மாதிரி மது கடைய தற்போது திறக்க நேர்ந்தால்!

நான் இங்கே சொல்ல வருவது பூரண மதுவிலக்கு அல்ல! மதுக்கடைகளை இன்னும் சில வாரங்கள் பூட்டி வைப்பதே!

செவ்வாய், 5 மே, 2020

ஒரு கோப்பையிலே என் குடி கெடுக்கும் ! (My take on மது விலக்கு )

நேற்று ஒரு பதிவு எழுத அதற்கான பின்னூட்டங்களில் அனானிமஸ் ஒருவர் " விசு மதுவிலக்கை பற்றி உன்னுடைய கருத்து" என்னவென்று ஒரு கேள்வி கேட்டார்!

ஆள் என்னதான் அனானியா இருந்தாலும் கேள்வி அன்னோன்னியமான கேள்வி தானே। இவருக்கு எப்படி பதில் சொல்வது என்று நினைத்து

மது!!! அது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு। அதனை உடனே அறவே ஒழிக்க வேண்டும் என்று ஆரம்பித்தால் அம்சமாக இருக்கும் என்று ஒரு திட்டம் போட்டு அமருகையில் உள்ளிருந்து ஒரு  அசரீரி!


விசு இந்த கேள்விக்கு நீ என்னமோ "ஒழுங்கு முத்துன கிழங்கு தோல் "போல நாடகம் போடாத! உண்மையை சொல்லு।

 அதை எப்படி  சொல்லுவேன் !!?

திங்கள், 4 மே, 2020

கொரோனா விலாஸ் ...

கொரோனா வந்தாலும் வந்தது அதுல இந்த மத பற்று நாடு பற்றுன்னு இருக்கவங்க மற்றும் ஆன்டி இந்தியன்ஸ்  இவங்க அளப்பறையை தாங்க மிடில.

இவனுங்க கொடுக்குற இம்சைக்கு கொரோனாவே பரவாயில்லைன்னு நிலைமைக்கு  தள்ளப்பட்டு இருக்கேன்.

முதலில்..

யாரும் கட்டிபிடிக்காதிங்க..  ஒரு செய்தி  வந்தவுடன்..

"அட அட அட.. நம்ம பாரத கலாச்சாரம் பாரு. இன்னைக்கு தான் பாரத கலாச்சாரத்தை உலகமே தெரிஞ்சி இருக்குனு சங்கு ஊதி ஒரு கும்பல் பெருமை" இந்த பெருமையோடு நிக்காம..

கைகுலுக்காதிங்க.. கைகூப்பி வணக்கம் சொல்லுங்கோ.. அட அட அட பாரத  கலாச்சாரம் பாருங்கோன்னு சொன்னவுடன்..

ஜப்பான் காரன்.. கை குலுக்காம்மா மூஞ்சை பாத்து வணக்கம்ன்னு சொன்னா  கிருமி நேரா உன் மூக்குக்குல தான் போகும். அதுக்கு தான் எங்க கலாச்சாரத்தில் கைகூப்பி "சயனோரானு" சொல்லும் போகுதே முகத்தை கவுத்துக்கிட்டு நிலத்தை பார்த்து சொல்வோம். எங்க கலாச்சாரம் தான் பெஸ்ட்.

வெள்ளி, 1 மே, 2020

இன்னாது!!! தாமஸ் வாத்தியார் இந்துவா!!!?

நேற்று "சண்முகம் சார் கிறிஸ்டியனா" என்று ஒரு பெரு பதிவை வெளியிட்டு இருந்தேன். அதை படித்த நல்லவரோ நல்லவர் டி என் முரளிதரன்

 "அடுத்த வாரம் போனீங்களா? சுண்டல் கிடைத்ததா?" என்ற ஒரு கேள்வியை  பின்னூட்டத்தில் விட்டு சென்றார்கள். ரொம்ப நல்லவராயிற்றே. பதில் சொல்லலாம் என்று அங்கு செல்ல, பதிலுக்கு பதிலாக இன்னொரு பதிவையே போட்டு விடலாம் என்று நினைத்ததின் பலன் இந்த பதிவு.

அடுத்த வாரம்...அந்த நாளும் வர, காலை எழுந்தவுடனே, ஹாக்கி கேப்டன் அணி தலைவன் முருகா ...

"விசு, போன வாரம் மழையாலே கான்செல்  ஆன போட்டியை இன்னைக்கு சாயங்காலம் ஆடணும். நேரத்துக்கு வந்துடு"

அவன் மழை என்று சொன்னது தான்.. இந்த மாதிரி மழை நாட்களில் அந்த பச்சை மிளகாய் போட்ட சுண்டல் தான் என்ன ஒரு சுவை என்று நினைத்து கொண்டே..

"முருகா...நான் சாயங்காலம் கொஞ்சம் பிசி"

"ஐயோ.. ஆள் பத்தாது விசு.. வந்துடு.."

சண்முகம் சார் க்ரிஸ்டியனா?



பள்ளிக்கூடம்!

என்ன ஒரு புனிதமான இடம்.

LMC in early 1900's
ஒவ்வொரு மனிதனையும் அவனுக்காக நாளைய நாளை செதுக்கும் இடம் அல்லவா இந்த பள்ளி கூடங்கள்.

இங்கே கற்றவை தான் எத்தனை?

சில நாட்களில் இளையவள் ..

"நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலை.. ரொம்ப போர்"

என்று சொல்கையில்..

"அட பாவத்த... பள்ளிக்கூடம் ரொம்ப போரா?, எங்க காலத்தில் எல்லாம் பள்ளிக்கூடம் தான் ரொம்ப ஜாலி"

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...