எங்கள் இல்லத்தின் அருகே ஒரு பெரிய பூங்கா அமைந்துள்ளது. அதை கலிபோர்னியா மாநிலத்தை சார்ந்ததால் ஸ்டேட் பார்க் என்பார்கள். பல வித நடை பாதைகள் ஏரிகள் மலைகள் விளையாட்டு திடல்கள் அனைத்தும் இதில் அடங்கும். எங்கள் இல்லத்தில் இருந்து 5 நிமிடத்தில் நடந்தே அடைந்து விடலாம்.
Laguna Niguel Regional Park
ராசாத்திக்கள், அம்மணி மற்றும் அடியேன் இங்கே முடிந்தவரை மாலை நடைக்கு செல்வோம். சில நேரங்களில் இங்கே உள்ள பூங்காவில் மீன் பிடிக்க அனுமதி பெற்று அங்கே மீன் பிடிப்பின். மற்றும் சில நேரங்களில் இதில் அமைந்துள்ள ஏரியில் படகினை வாடகைக்கு எடுத்து உல்லாச பயணம் செய்வோம்.
இங்கே பலவித பறவைகள் வசிக்கின்றன. அதில் மிகவும் பெரிய பறவை கனடா கூஸ் (Canada Goose) என்ற வாத்து வகை பறவை.
சில நாட்களுக்கு முன்பு நான் இந்த பூங்காவில் நடக்கையில் ஒரு கனடா கூஸ் தன் குடும்பத்தோடு எதிரில் வந்தது. அப்பா அம்மா என்று அனைவரும் என்னை கடந்து செல்கையில் ஒரு கனடா கூஸ் குஞ்சு ஒன்று வழி தவறிவிட்டது. பெற்றோரை உடன் பிறந்தோரை காணாமல் அலறிய குஞ்சை கண்ட தாய் என்ன செய்வது என்று அறியாமல் ஒரு கண்ணால் அதை தேடி கொண்டே மற்ற கண்ணால் மற்ற குஞ்சுகளை பார்த்து கொண்டே மிகவும் நிதானமற்று காணப்பட்டது.
தனியாக நின்ற குஞ்சு சில நொடிகளில் தான் வந்த வழியே திருப்ப செல்ல அங்கே மூன்று கனடா கூஸ் நின்று கொண்டு இருந்தது. அவைகளிடம் இந்த குஞ்சு முறையிட அந்த மூன்றும் தம் தம் குரலில் ஆபாய சத்தங்களை எழுப்பி தாய் மற்றும் அதன் குடும்பத்தை தேட, தாயும் மறு சப்தம் தர அந்த குஞ்சை தன் குடும்பத்திடம் வழி நடத்தினர்.
பெற்றோரை கண்ட குஞ்சு மகிழ்ந்து ஓட அதனை கண்ட உடன் பிறந்தோர் ஓடி வந்து அதை தழுவி சத்தம் போட்டு மகிழ.. இதை அனைத்தையும் காணொளியில் எடுக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு தான் அரிது.
இதோ.. நீங்களும் கண்டு களியுங்கள்.
இது நடந்து இரண்டு வாரம் ஆயிற்று. நேற்று இந்த பூங்காவில் மீண்டும் நடக்கையில் இந்த குடும்பத்தை மீண்டும் காண நேரிட்டது. குஞ்சுகளெல்லாம் சற்று வளர்ந்து இருந்தன. இம்முறை என்னை கண்ட அந்த தாய்..
"அட பாவத்த! இவனா.. ? இவன் எதிரில் வந்தா நல்லதே இல்லையே என்று குஞ்சுகளை பார்க்க"
நானோ.... அது என் ராசி நீ எதுக்கும் ஜாக்கிரதையாக இருந்துகோனு சொல்லிட்டு அங்கே இருந்து கிளம்பினேன், மீண்டும் ஒரு காணொளியை எடுத்து விட்டு.
அதை இங்கே பாருங்கள்.
ஐயோ! இவனா? , என்ன நடக்க போதோ!

எங்க அப்பா அம்மா காணாம போய்ட்டாங்க..
இது நடந்து இரண்டு வாரம் ஆயிற்று. நேற்று இந்த பூங்காவில் மீண்டும் நடக்கையில் இந்த குடும்பத்தை மீண்டும் காண நேரிட்டது. குஞ்சுகளெல்லாம் சற்று வளர்ந்து இருந்தன. இம்முறை என்னை கண்ட அந்த தாய்..
"அட பாவத்த! இவனா.. ? இவன் எதிரில் வந்தா நல்லதே இல்லையே என்று குஞ்சுகளை பார்க்க"
நானோ.... அது என் ராசி நீ எதுக்கும் ஜாக்கிரதையாக இருந்துகோனு சொல்லிட்டு அங்கே இருந்து கிளம்பினேன், மீண்டும் ஒரு காணொளியை எடுத்து விட்டு.
அதை இங்கே பாருங்கள்.
நிகழ்வு, மனதைப் பெரிதும் நெகிழ வைத்தது.
பதிலளிநீக்குவழி தவறித் தவித்த குஞ்சு தன் பெற்றோருடன் சென்று சேரும்வரை கவனித்துப் படம்பிடித்துப் பதிவு செய்த உங்களின் இளகிய மனம் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்கது.
அடுத்த காணொலிக்கு, ‘ஐயோ இவனா, என்ன நடக்கப் போகுதோ’ என்று தலைப்பிட்டது உங்களின் நகைச்சுவை உணர்வுக்கு நல்ல எடுத்துக்காட்டு.
மகிழ்ச்சி. நன்றி விசு.
காணொளி சிறப்பு... உங்களுக்கு எனக்கு கிடைத்த வாய்ப்பு அரிது தான்...
பதிலளிநீக்கு/எங்கள் இல்லத்தின் அருகே ஒரு பெரிய பூங்கா அமைந்துள்ளது. அதை கலிபோர்னியா மாநிலத்தை சார்ந்ததால் ஸ்டேட் பார்க் என்பார்கள்//
பதிலளிநீக்குஉண்மையை சொல்லுங்க அது நீங்க வாங்க போட்டு இருக்கும் இடம்தானே?
தாய் தவிட்டு பிச்சைக்கு அலைஞ்சிச்சாம், புள்ள தொங்க தொங்க தங்கத்துள்ள கேட்டுச்சாம்.
நீக்குநல்லா சொன்னா போ, மதுர..
ஆசை இருக்கு தாசில் பண்ண.. ஆனா அமைஞ்சது என்னமோ!
///பெற்றோரை கண்ட குஞ்சு மகிழ்ந்து ஓட அதனை கண்ட உடன் பிறந்தோர் ஓடி வந்து அதை தழுவி சத்தம் போட்டு மகிழ.. இதை அனைத்தையும் காணொளியில் எடுக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு தான் அரிது///
பதிலளிநீக்குவிலங்ககுகள் ப்றவைகள் எப்படியோ சேர்த்துவிடுகின்றன ஆனால் மனிதர்கள் ?
மிக மிக மிக மிக ரசித்த பதிவு விசு. உங்க பதிவை வாசித்து சுபம் நு தெரிஞ்ச பிறகும் கூட படம் பார்க்கறப்ப தவிப்பு குட்டி அம்மாவைச் சேரணும்னு...
பதிலளிநீக்குஅதை அழகா வீடியோ எடுத்துப் போட்டு எங்களுக்கும் காட்டிட்டீங்க விகு. வீடியோவையும் ரொம்ப ரசித்தேன்.
கீதா
நீங்கள் நடைப்பயிற்சி செய்யும் இடம் மிக அழகாக இருக்கிறது. பதிவை ரசித்து எழுதியிருக்கிறீர்கள். அதை அப்படியே படம் பிடித்தும் காட்டியிருக்கிறீர்கள். இரண்டாவது காணொளியின் தலைப்பு உங்கள் நகைச்சுவை.
பதிலளிநீக்குவிசுவிடமிருந்து வித்தியாசமான பதிவு
துளசிதரன்
க்ளைமேக்ஸ் செம!! அம்மா அந்த உதவிய வாத்துக்கு அங்கு நின்று நன்றி சொல்லிட்டுப் போகுது போல...அது எவ்வளவு அழகா உதவுது!!! வாவ். ரொம்ப ரொம்ப ரசித்தேன். இரண்டாவது காணொளியும் அப்படியே...செம..
பதிலளிநீக்குகீதா