வியாழன், 21 மே, 2020

விவசாயி நல்ல விவசாயி.. மனைவி என்னும் முதலாளி ..

"அட பாவத்த.. இந்த அநியாயத்தை என்னத்த சொல்றது..!!!?"

கேட்டு கொண்டே இல்லத்தில் அம்மணியின் நுழைய..எதுவா இருக்கும் என்ற எண்ணம் தலை தூக்க..

எதை சொல்ற? எதுவா இருந்தாலும் அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.. நிதானம், ப்ளீஸ்.."

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்.. !! இந்த மிஸ்டர்  தண்டபாணி  பண்ண  காரியத்தை கேள்வி பட்டீங்களா?!!?¨

செத்தாண்டா தண்டபாணி! ஆர்வம் தாங்காமல்..

"சொல்லு .. சொல்லு.. தண்டம் நல்ல மனசுக்காரன் தான்.. இருந்தாலும் சில நேரத்தில் தவறுவான், எப்படி மாட்டிக்கிட்டான்.. சொல்லு?"

"அது என்ன ? என்னா பண்ணாருன்னு கேக்குறதுக்கு பதிலா எப்படி மாட்டிக்கிட்டாறுனு? அடுத்தவன் தவறில் பாடம் கத்துக்குறிங்களோ ?"

"சே.. சே.. ஒரு பிளோவில் வந்துடுச்சி.என்ன பண்ணான் தண்டம்?"



"சுந்தரி போன் பண்ணாங்க. கொரோனான்னு சொல்லிட்டு வீட்டுல தான் சும்மா இருக்கேன்.. இந்த மாசம் நானே சமைக்கிறேன்னு மிஸ்டர் தண்டபாணி சொன்னாராம்"

"சுமாரா சமைப்பானே.. இதுக்கெல்லாம் இம்புட்டு பெரிய தப்பு  பண்ண மாதிரி"

"ஐயோ, அது இல்லீங்க.. ஒரு  மாசமா... காய் கறின்னுசூப்பர் மார்க்கெட்டில் வாங்கி இருக்காராம். வாரத்துக்கு கிட்ட தட்ட ஐம்பது டாலர் செலவாம்... "

"காய் கறிய சூப்பர் மார்க்கெட்டில் வாங்காம? "

"என்னங்க சொல்றீங்க..இங்கேயும் அப்படி தான் நடக்குதா.. விண்ட்டரில் மட்டும் தானே வெளிய வாங்குவோம்.. இப்ப தான் வெயில் வந்துடுச்சே.."

"புரியல...!!!"

"அட பாவத்த.. ஒரு மாசமா நானும் பில்லை கவனிக்கல.. நீங்களும் கடையில தானா?

அட பாவி மவன் தண்டம்.. நண்டு புத்தி டா உனக்கு..நீ விழும் போது அம்புட்டு பேரையும் கூடவே இழுத்துன்னு போயிடுவ...

"இல்ல.., இந்த வருஷம்.. பெப் மார்ச் போல தான கொரோனா வந்தது. அதனால தோட்டத்துல எதுவும்.."

"போடலையா!!?"

"ஹ்ம்.."

"ஒரு மாசம் ஒர்க் பிரேம் ஹோம், தானே.. என்ன பண்றீங்க"?

"ஒர்க் பிரேம் ஹோம் தான் பண்றேன்.."

சீக்கிரம் வாங்க .. ஏப்ரல் முடிய போது, இப்ப போட்டா அடலீஸ்ட் ஜூலை டு அக்டோபர் வரைக்குமாவது கொஞ்சம் கிடைக்கும்."

"ரொம்ப டயர்ட்.. அடுத்த வீக்கெண்ட்"

"அடுத்த வீக்கெண்டுக்கு இன்னும் தோட்டத்துல இன்னும்  நிறைய வேலை  செய்ய வேண்டி இருக்கும்.. நீங்க தோட்டத்துல போய் ஆரம்பியுங்க... நான் பக்கத்துல போய் விதை மண் எரு வாங்கின்னு வரேன்."

கிளம்பினார்கள்..

தோட்டத்திற்கு போனால் .. நிஜமாகவே கொரோனா வந்தது போல் தான் இருந்தது.. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அனைத்தையும் சுத்தம் செய்கையில்,  இருந்து திரும்பிய அம்மணி..

"நீங்க மட்டுமா செஞ்சீங்க, இவளுக எங்க!!?"

"அவளுங்களுக்கு விவசாயம் என்ன தெரியும்?

"அட பாவத்த , எனக்கு எப்படி தோட்டத்துவேலை தெரியும்னு நினைச்சீங்க ?, எல்லாம் எங்க அப்பா அந்த  காலத்தில் நிதானமா. பொறுமையா  பொறுப்பா பெருமையா, சிறப்பா, மகிழ்ச்சியா சந்தோசமா சொல்லி கொடுத்தது தான்"

"மகிழ்ச்சி சந்தோசம் ரெண்டும் ஒன்னும் தான். "

"நான் சொல்ல வந்ததது எவ்வளவு பெரிய விஷயம்? எங்க அப்பாவை பத்தி ஒரு நல்லது சொல்ல கூடாதே.. உடனே அதுல  தப்பு கண்டு புடியுங்க, போங்க.. ப்ளீஸ்.. அவளுங்கள வர சொல்லுங்க.."

இருவரையும் அழைத்து வர..

"நொவ் வாட்" ?

என்று இளையராஜா பாட்டில் இடைவெளியில் கோரஸ் பாடும்  பெண்களை போல வந்தார்கள்.

"உங்க அப்பாவுக்கு கொஞ்சம் உதவி செய்யுங்க"

"அவருக்கு தனியா ஒரு வேலை செய்ய முடியாதே..? லேசி மேன்!"

"அவரு சோம்பேறி தான்.. கொஞ்சம் நீங்க உதவி செய்யுங்க"

"ஹலோ.. கிளம்பிட்டீங்களா? இவளுங்க உதவி இல்லாட்டியும் உபத்திரவம் தான் எனக்கு, நீங்க கிளம்புங்க நான் பாத்துக்குறேன்.."

அவர்கள் கிளம்ப தயாராக...

"ஒருத்தி வந்து ஒவ்வொரு விதையா போடு..இன்னொருத்தி எல்லா செடிக்கும்  பேரை லேபிளில் எழுதி கொடு.."

"லெபெல் எதுக்கு?" இலைய பார்த்தே என்ன செடின்னு நான் சொல்வேன்"

"நல்ல சொன்னீங்க... போன வருஷம் வேர்க்கடலைக்கு என்ன நடந்ததுன்னு மறந்தாச்சா?

(அத எப்படி மறப்பேன்.. அந்த "

"தோட்டத்துல பாத்தி கட்டி.." கதையை படிக்க இங்கே சொடுக்கவும்)


மூத்தவள் விதையை போட இளையவள் பெயரை எழுத.. மூச்சு வாங்க மூச்சு வாங்க அனைத்தையும் குடும்பமாக செய்து முடித்தோம்.

வெண்டை, கத்திரி, பாவக்காய், கொத்தமல்லி, பச்சை  பட்டாணி, இஞ்சி, பூண்டு, மிளகாய், வெள்ளரி என்று பல விதைகளை பவ்யமாக போட்டாச்சு. இந்த வருடம் நல்ல விளைச்சல் இருக்கணும்னு!

எல்லாம் விதைத்து முடிந்து மிகவும் களைப்பாக அமர்ந்த இருக்கையில், இளையவள் அருகில் வந்து...

"இந்த காய் எல்லாம் எப்ப வரும்.... எப்ப சமைக்கலாம் "

அஞ்சு ஆறு வாரமாகும்"

"ஹ்ம்.. அதுல இருக்குறதுலே எனக்கு ரொம்ப பிடிச்சது என்னனு சொல்லுங்க."

"வெண்டை!!!!?"

"நோ"

"கத்திரி.."

"நோ.."

"நீயே சொல்லிடேன்.."

"அந்த ஸ்ரீலங்கன் கிரீன்ஸ்"

ஸ்ரீலங்கன் கிரீன்ஸ் ... அப்படினா?

"நீங்களே போய் பாருங்களேன்"

"அடித்து பிடித்து ஓடி சென்று பார்த்தால் .. ஸ்ரீலங்கன் கிரீன்ஸ் என்று ஒரு தொட்டியில் எழுதி இருந்தது."

அதில் என்ன வளருகிறது என்று உன்னித்து பார்க்கையில், நம்ம ஊர் பொன்னாங்கன்னி கீரை. வீட்டில் வந்து அம்மணியிடம்..

"என்ன இது, பொன்னங்காணியில் ஸ்ரீலங்கன் கிரீன்ஸ்ன்னு எழுதி வைச்சி இருக்க?"

"அது பொன்னாங்காணின்னு தான் சொன்னேன்... அவளுக்கு எழுத தெரியல"

"பொன்னாங்கண்ணி எப்படி ஸ்ரீலங்கன் கிரீன்ஸ் ஆச்சி"

"போன முறை செஞ்சது சொன்னேன்.. ஓ அதுவா அது  ரொம்ப டேஸ்ட்டா இருந்ததுன்னு சொல்லிட்டு ஸ்ரீலங்கா கிரீன்ஸ்ன்னு அவளே எழுதிட்டா !"

இதோ எங்கள் தோட்டம்..



வாழை 
மா 



புதினா 


மாதுளை 

திராட்சை  

 மிளகாய் 

பொன்னாங்காணி  
பீன்ஸ் 




குண்டு மிளகாய் 

வெண்டை 

கொத்தமல்லி 
கொய்யா
எலுமிச்சை
பூந்தோட்டம்



Last but not least....ஸ்ரீலங்கன் கிரீன்ஸ்


10 கருத்துகள்:

  1. தோட்டம் அழகு. வழை குலை தள்ளி இருக்கே!
    மாவும் வைத்து விட்டீர்களா? அப்படியே பலாவும் வைத்து இருக்கலாம்.

    //இந்த வருடம் நல்ல விளைச்சல் இருக்கணும்னு!//

    நல்ல விளைச்சல் வர வாழ்த்துக்கள்.


    தோட்டம் அமைத்த வரலாறு அருமை.

    பதிலளிநீக்கு
  2. //மாவும் வைத்து விட்டீர்களா? //

    படித்தவுடன் மீண்டும் மாவிளக்கு நினைவிற்கு வந்து விட்டது. பலா மிகவும் பெரிய மரம். அதற்கு எங்கள் ஊர் முனிசிபாலிட்டி அனுமதி தர மாட்டார்கள்.

    கொய்யா மற்றும் எலுமிச்சை படத்தையும் சேர்த்து விட்டேன்.

    படித்தவுடன் மீண்டும் மாவிளக்கு நினைவிற்கு வந்து விட்டது. பலா மிகவும் பெரிய மரம். அதற்கு எங்கள் ஊர் முனிசிபாலிட்டி அனுமதி தர மாட்டார்கள்.

    கொய்யா மற்றும் எலுமிச்சை படத்தையும் சேர்த்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா அங்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. மாமரத்தை விட பெரிசா என்ன பலா? காய்தான் பெரிசா காய்க்கும். உயரம் கம்மியா இருக்கறது வெரைட்டியும் இருக்கே விசு. படர்ந்த் வளரும் மரம். வெரைட்டி பார்த்து வாங்கி முடிஞ்சா வைங்க..

      கீதா

      நீக்கு
    2. முக்கனிகளும் இருக்குமே வீட்டில அதான் கோமதிக்கா சொன்னது போல சொன்னது.

      கீதா

      நீக்கு

  3. தோட்ட வேலை செய்யும் போது கொஞ்சம் ஜாக்கிரதை நீங்க பூமிக்கடியில் புதைச்சு வைச்சிருப்பதை நால் பேர் பாத்திடப் போறாங்க

    பதிலளிநீக்கு
  4. தோட்டம் ரொம்ப அழகாக இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாமே இருக்கிறது போல!

    மாமரம் வாழை எல்லாமே நன்றாக இருக்கிறது.

    விளைச்சல் நன்றாக வர வாழ்த்துகள் விசு

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  5. சிறீலங்கன் கிறீன்ஸ் ! எங்கள் நாட்டு பெயர் சூட்டியதில் மகிழ்ச்சி.
    தோட்டம் அழகு . பலன் கொடுக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊட்டுக்காரமா யாழ்ப்பாணத்து பெட்டை தானே.. அதனால் தான்.

      நீக்கு
  6. அழகான தோட்டம். இதே போன்று காய்கறிகளையும் கனிவகைகளையும் வளர்க்க வேண்டும் என்ற ஆவலை கிளப்பிவிட்டீர்கள். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...