தண்டம்...
வாத்தியாரே.. என்ன இது.. மதியம் ரெண்டு மணிக்கு போன்? இன்னும் தூங்க போகல..?
இங்கே இப்ப ராத்திரி ஒன்னரை ஆவுது...
என்ன அவசரம் சொல்லு..
எப்ப தண்டம் திரும்ப வர?
ஒரு வருஷ ப்ராஜெக்ட் வாத்தியாரே.. கிளம்பும் போதே சொன்னேன் இல்ல.. நவம்பரில் வருவேன். இது அம்புட்டு அவசரமா?
இல்லை.
ஓ... ஒரு வேளை என் வலை தள பதிவு ரசிகர்கள் என்னை மிஸ் பண்றங்களா?
நீ எப்ப பதிவு எழுதுன?
நான் எதுக்கு எழுதணும்.. நான் எழுதவேண்டியது எல்லாத்தையும் தான் நீ எழுதிரியே.. சரி விஷயத்தை சொல்லு.
நேத்து ஒரு விபரீதம் நடந்துடிச்சி தண்டம்.
அம்மணி பிறந்த நாளை திரும்பவும் மறந்துட்டியா? இந்த முறை மன்னிப்பே கிடையாது..
அது இல்ல..
கல்யாண நாளா? அதுக்கு அம்புட்டு டேமேஜ் இருக்காது.. நான் மட்டுமா மறந்தேன் .. நீ கூட தான் என்னை விஷ் பண்ணலேன்னு .. அப்படியே திருப்பி போடு..
அதுவும் இல்லை..
பின்ன என்ன..
ஊருல இருந்து வேர்க்கடலை விதைக்குறதுக்கு வாங்கினு வந்து இருக்காங்க.. அதை நான் மிளகாய் தூள் போட்டு வறுத்து ஈவினிங் டிபன் போல சாப்பிட்டேன்.
கொஞ்சம் நேரம் கழித்து அம்மணி போன்..
என்னா என்னமோ காரணமா சாப்பிடறமாதிரி உஸ் உஸ்ன்னு சத்தம்.
வேர்க்கடலையில் கொஞ்சம் மிளகாய் தூள் அதிகம் போட்டுட்டேன். ஈவினிங் டிப்பன்.
ஏங்க.. அது நான் விதைக்க வாங்கினு வந்த கடலை.. அதையா எடுத்தீங்க..?
சே சே.. இது நான் வேலையில் இருந்து வரும் போது வாங்கினு வந்தேன்.
அதை தொடாதிங்க.. அந்த மாதிரி விதை கிடைக்காது. கொடி வேர்க்கடலை.
இப்ப என்ன பண்றது தண்டம்?
அட பாவி.. பேசாம மீதி இருக்குறத நல்லா கழுவி காய வச்சி அதே டப்பாவில் போட்டுடு.
எல்லாம் காலி..
இப்ப என்ன பண்ண போற ?
நீ வரும் போது ஒரு அரை கிலோ வாங்கினு வரியா?
வரேன்.. ஆனா அது வரை எப்படி சமாளிப்ப? இது தானே சம்மர்.. இப்ப தானே விதையை போடுவாங்க...
ரொம்ப பயமா இருக்கு தண்டம்.
இப்படி பண்ணு...
எப்படி?
நேரா கடைக்கு போய் அரை கிலோ வாங்கினு வந்து அதே டப்பாவில் போட்டுட்டு.
தண்டம். இந்த ஊர் வேர்க்கடலை மூணு மடங்கு பெருசாச்சே..
அம்மணி வேற ஏதாவது விதை வாங்கினு வந்து இருக்காங்களா பாரு?
ஒரு நிமிஷம் இரு.. தண்டம்...
இருக்கு தண்டம்..
அதுல ஏதாவது ஒன்னை எடுத்து அவங்க வரதுக்கு முன்னால நீயே விதைச்சிடு..
செடி வந்தா மாட்டிக்குவோமே..
என்ன வாத்தியாரே.. மாட்டிக்குவோமேன்னு சொல்லி மெதுவா என்னையும் இழுக்குற..இது உன் பிரச்சனை .. நான் உதவி தான் செய்யுறேன்.
சரி.. மாட்டிக்குவனே..
பதறாத..
சொல்லு..
செடி வித்தியாசமா வந்தா .. இது ஹை பிரீட் கடலை .. இப்படி தான் இருக்கும்னு சமாளி..
அறுவடை நேரத்தில். தெரிஞ்சிடுமே..
நீ ரொம்ப பயந்துட்டு இருக்க..அறுவடை நேரம்.. அஞ்சி மாசத்தில் தான் நான் அங்கே இருப்பேனே.. நான் கடலையை வாங்கினு வரேன்.. அம்மணியையும் சுந்தரியையும் என்னைக்காவது அன்பா புடவை கடைக்கு அனுப்பி வைச்சிட்டு நம்ம அறுவடை செஞ்சோம்னு ஊருல இருந்து வந்த கடலையை கொடுத்துதலாம்.
வேணாம் தண்டம்.. பயமா இருக்கு. நான் உண்மையை சொல்லிட போறேன்.
வேணாம் வாத்தியாரே.. இது விஷ பரீட்சை. நீ தைரியமா இரு..
சீக்கிரம் வந்து சேர் தண்டம்.. நீ இல்லாமல் கை கால் விளங்க மாட்டுது.
நவம்பர்.. சரி போனை வை.. யாருக்கு கடலை போடுறீங்கன்னு இங்கே சுந்தரி கத்துறா.
என்னங்க.. ?
சொல்லு..
என்ன பின்னால தோட்டத்துல களை பிடுங்கி.. இம்புட்டு நல்லா இருக்கு.
ஒன்னும் இல்ல.. நேத்து வேலையில் இருந்து சீக்கிரம் வந்துட்டேனா? அதுதான்....நானே நீ கொண்டு வந்த கடலையை பயிரிட்டேன்.
நிஜமா? ரொம்ப தேங்க்ஸ்..
இருக்கட்டும்..
சரி.. இது சம்மர்.. இப்ப தர்பூசணி வைச்சா நல்லா வரும்.. இருங்க அந்த விதையை எடுத்துன்னு வரேன்.
சென்றவள் .. ஒரே நிமிடத்தில்..
ஏங்க.. இங்கே இருந்த தர்பூசணி விதை எங்கே? எங்கேயாவது மாத்தி வைச்சிடீங்களா?
இல்லையே.. நான் வேர்க்கடலை மட்டும் தான் எடுத்தேன்..
ஐயோ.. இங்கே தானே வச்சி இருந்தேன்...
பின் குறிப்பு :
தண்டம்..
சொல்லு.. எல்லாம் சக்ஸஸ் தானே..
சர்க்கஸ்..
என்ன சொல்ற?
நீ நவம்பர் மாசம் வரும் போது.. கொஞ்சம் தர்பூசணி விதையும் எடுத்துனு வா.
வாத்தியாரே..

ஆஹா.. சமாளித்த விதம் சூப்பர்
பதிலளிநீக்குஆறு மாதம் போகட்டும்
அதற்குள் என்ன என்னவோ
நடந்துவிட வாய்ப்புள்ளதே
வேர்க்கடலையைச் சாப்பிடக்கூடாது
அது விஷம் எனும் பிரச்சாரம் கூட
உச்சம் அடையலாம்
யார் கண்டது
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்களுடன்...
விஷ பரீட்சை என்பது சகஜமாச்சே... ஹா... ஹா...
பதிலளிநீக்குஹா... ஹா... இப்படி எதையாவது செய்து மாட்டிக்கறதே பொழப்பா போச்சு!
பதிலளிநீக்குசிரிப்போ சிரிப்பு.ஒவ்வொரு வார்த்தையிலும் நகைச்சுவை சூப்பர்
பதிலளிநீக்கு