செவ்வாய், 30 செப்டம்பர், 2014

பாஸ்போர்ட் - போஸ்ட் ஆபிஸ்- பேங்க் வேலை எல்லாம் முடிந்தது.

ஏங்க...

சொல்லு மா...

எங்க மாமா வந்து இருக்காரு இல்ல, அவர் இன்னும் மூணு நாளில் ஊருக்கு கிளம்புறாரு, அவரை இன்றைக்கு கொஞ்சம் பக்கத்தில் உள்ள மால் (கடை) கூட்டி கொண்டு போய் வேண்டியத வாங்கி கொடுங்க.

அய்யய்யோ, இன்றைக்கா? கொஞ்சம் வேலை இருக்கே...

என்று நான் சொன்னதும், மாமா பேச ஆரம்பித்தார்.

பரவாயில்லை விசு, வேற நாள் பார்த்துகொள்ளலாம்.

இல்லங்க... இன்றைக்கே முடித்து விடுங்கள். அது சரி, அப்படி என்ன வேலை?

சிரிப்பு வருது, வெறுப்பு வருது...சிரிக்க சிரிக்க வெறுப்பு வருது...

ஜெயலலிதா அவர்கள் நல்லவரா கெட்டவரா என்று சொல்ல நான் இதை எழுதவில்லை. ஆனால், இந்த மொத்த வழக்கு நடந்த விதத்தை பற்றி தான் நான் எழுத வந்துள்ளேன்.

திங்கள், 29 செப்டம்பர், 2014

தலைக்கு அவ்வளவுனா... உடம்புக்கு?

என்னங்க....சீக்கிரம் கிளம்புங்க...

என்னடா இது.. ஞாயிறு  மதியமும் அதுவுமா....என்று யோசித்து கொண்டே...

எங்கமா போற?

போற இல்லை...போறோம்..

சரி எங்க போறோம்?

ஆப்பிள் - பேரி காய் வாங்க...

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஓடி விளையாடு பாப்பா...

வாத்தியாரே... எங்கே ஆளே காணோம்.

இங்கேதான் தண்டம், எப்படி இருக்க?

நல்லா இருக்கேன் வாத்தியாரே,  வீட்டில ஆத்துக்காரி... புள்ள குட்டிங்க பேஷா இருக்காளா?

வியாழன், 25 செப்டம்பர், 2014

தென்னைய வைச்சா இளநீரு.. பிள்ளைய பெத்தா......


பல வருடங்களுக்கு முன்  தகப்பனின் தொழிலை பிள்ளைகள் செய்து வருவார்கள் அது ஒரு வழக்கம் ஆக இருந்தது. இந்த பழக்கம் மற்ற தொழில்களில் இருந்து குறைந்து வரும் இந்த காலத்தில் சில துறையில் இந்த வழக்கம்  அதிகரித்து கொண்டு வருகின்றது.   இதில் சினிமா ஒன்று. தகப்பனிடம் பணம் இருந்தால் பிள்ளை ஹீரோ. தகப்பனிடம் பவர் இருந்தால் பிள்ளை டைரக்டர். தகப்பனிடம் திறமை இருந்தால் பிள்ளை கவியரசர். தகப்பனிடம் இசை அறிவு இருந்தால் பிள்ளை இசை அமைப்பாளர். இந்த வழக்கம் சினிமா தொழிலில் அதிகம். அதுவும் நம் தமிழ் சினிமாவில் இன்னும் அதிகம்.


செவ்வாய், 23 செப்டம்பர், 2014

செவ்வாயில் மங்கள்யான், புலிவாயில் மனிதன்...


இன்றைக்கான செய்தி..."செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான்..."


அடுத்த செய்தி .... புலி வாயில் மனிதன்...

திங்கள், 22 செப்டம்பர், 2014

சமூக பணிகளில் ஈடுபட விரும்புகிறேன்;சச்சின் (கேக்குறவன் கேனையா இருந்தா...)


என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம்னு தினமலர் வலை தளத்திற்கு போனா, தலைப்பு செய்தி... இது  தான்..

"சமூக பணிகளில் ஈடுபட விரும்புகிறேன்;சச்சின் தெண்டுல்கர்"


கேக்குறவன் கேனையனா இருந்தா, "மிக்ஸில மீன் வருத்தேன்னு சொல்வாங்க".

ஐயா.. டெண்டுல்கர் ஐயா... சமூக பணி என்பது... மட்டை எடுத்து ஓங்கி அடிச்சிட்டு... அதுக்கு அப்புறம் விளம்பரத்தில் சிரிச்சிட்டு நிற்பது அல்ல. சமூக பணி என்பது, ஒரு உணர்ச்சி. அது தானா வரணும்.

நீங்கள் பெரிய கிரிகெட் வீரன் தான். அதற்க்கு மறுப்பே இல்லை. ஆனால், மனசாட்சிக்கு விரோதமா செயல் படுவதில் நீங்களும் ஒரு சராசரி மனிதன்.. ஏன், சராசரி  மனிதனுக்கும் கீழே தான்.

இவருடைய ரசிகர்கள் என்னை வெறுப்பதற்கு முன்.. என் வாதங்களை எடுத்து வைக்கின்றேன்.

கிரிக்கெட் ஆட்டத்தில் சூதாட்டம் என்பது அருமை வீரர் சச்சின் அவர்களின் நாட்களில் ஓங்கி இருந்தது. இவர் ஆடிய பல ஆட்டங்கள் இந்த சூதாட்டகாரகளால் நிர்ணயிக்க பட்டது. சச்சின் அவர்கள் இந்த சூதாட்டகாரர்களோடு சேர்ந்து ஆட்டத்தின் புனிதத்தை கெடுத்தார் என்று நான் எப்போதும் கூற மாட்டேன். இவர் சூதாட்டத்தில் பங்கேற்றார் என்று இதுவரை எந்த குற்ற சாட்டும் வந்தது இல்லை.

என் வாதமே.. வேறு.

இப்படி சூதாட்டம் தலை விரித்து ஆடுகையில், இவர் அதை பற்றி எதுவுமே கூறவில்லை. பல்லாயிர கணக்கான ரசிகர் ஏமாந்து கொண்டு இருக்கையில், இவருக்கு தேவை எல்லாம் அடுத்த சதம்... விளம்பரம் .. அதில் எத்தனை சதவீதம். இப்படி சதம் மற்றும் சதவீதம் பற்றியே கவலை படும் இவர் எப்படி சமூக பணியில் ஈடுபடுவார்?


சரி, ஒரு மனிதன் குற்றம் செய்யாவிட்டாலும், அந்த அநியாயத்தை பார்த்து அமைதியாய் இருந்தால் அதுவும் குற்றம் தானே. இவ்வளவு வருடங்களாய் இந்த அநியாயத்தை பற்றி எதுவும் பேசாத இவர், எப்படி சமூக பணியில் ஈடுபடுவார்?

சரி, இவருக்கு ஒரு வாய்ப்பு தான் கொடுத்து பார்ப்போமே... என்று கூறுபவர்களுக்கு..

இரண்டு வருடங்களுக்கு முன் இவருக்கு ராஜா சபா சீட் வழங்க பட்டது. அந்த பதவி ஏற்ப்பு விழாவிற்கு சென்றதோடு சரி. அதற்க்கு பிறகு அந்த பக்கம் தலை சாய்த்து வைத்து கூட படுக்கவில்லை.இது ஒரு விஷயமா என்று கேட்பவர்கள்.. இதை படிக்கவும். இந்த அநியாயத்தை படித்த பின்னும் நான் சொல்வது தவறு என்றால், பின்னோட்டம் இடவும், நான் அதற்கு பதில் தருவேன்.

கை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு...கிரிக்கெட் ஆட்டம் நம் நாட்டை சுத்தமாக அழித்துவிடும். இந்த ஆட்டமே... நாம் ஓர் காலத்தில் அடிமைகளாக இருந்தோம் என்பதற்கான கேவல அடையாளம். அது மட்டும் இல்லாமால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் நாம் தமிழன் என்று கூறினால், நமக்கு கிடைப்பது ...அவதூறும், அவமானமும், பேராசைகாரகள் என்ற பெயரும் தான்... ( நன்றி திரு ஸ்ரீனிவாசன் மற்றும் அவர் மருமகன் மெய்யப்பன்).

இந்த விளையாட்டில் சம்பாதித்ததை காக்க வேண்டும் என்று சச்சின் இப்படி ஏதாவது சமூக பணி.. லொட்டு.. லொசுக்கு என்பார். இவர் 'எச்சில் கையில் காகம் விரட்டாதவர். இவராவது... சமூக பணியாவது.

Ferrari என்ற சொகுசு வாகனத்தை வரி இல்லாமல் இறக்குமதி செய்து... அதை லாபத்திற்கு விற்று பணத்தை ஏப்பம் விட்ட இவர் சமூக பணி செய்ய போகிறாரா.

போய்,  கவாஸ்கர் - சாஸ்த்ரி அவர்களோடு  சேர்ந்து ஜால்ரா போடுங்க... நல்ல வருமானம்.

சமூக பணி எல்லாம் நமக்கு எதற்கு?

www.visuawesome.com

நீதி உயர்ந்த மதிகல்வி!


ஒவ்வொரு வருடமும் பள்ளி கூடம் ஆரம்பிக்கும் வாரத்தில் பள்ளிக்கு திரும்பும் நாள் (Back to School Day) என்று ஒன்று வைக்கப்படும். இந்நாளில் - இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் - மாணவிகள் உள்ளே அனுமதிக்க படமாட்டார்கள். இது பெற்றோர்களுக்கும் மட்டும்.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

என் சமையல் அறையில்...அப்பா.. நீங்கள் ஏன் தணிக்கையாளர் வேலைக்கு படித்தீர்கள். உங்களுக்கு கணக்கு என்றால் ரொம்ப பிடிக்குமா?

கேட்டாளே என் மூத்த ராசாத்தி. ஒரு கேள்வி.

அவளிடம் சொல்ல முடியுமா? 10ம் வகுப்பில் அப்பா எடுத்த மதிப்பெண்ணிற்கு அறிவியல் மற்றும் கணக்கு படிக்க வக்கு இல்லை, அதனால் தான் கணிகவியல் எடுத்து படித்தேன் என்று. அதனால் யாரையும் பாதிக்காத ஒரு சின்ன பொய் ஒன்றை அவிழ்த்து விட்டேன்.

வியாழன், 18 செப்டம்பர், 2014

ஜெர்மனியின் செந்தேன் மலரே...

கடந்த இரண்டு வாரங்களாக ஐரோப்பாவில் 17 இந்தியர்கள் ஒவ்வொரு நாடாக சுற்றுலா ஆட்டம் - பாட்டம் கொண்டு இருகின்றார்கள் என்று ஒரு செய்தி. என்ன இது, யார் இவர்கள், ஒரு வேளை கல்லூரி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் பணத்தில் சென்று இருக்கலாம் என்று நினைத்தேன்.

(9)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)


சீனு... Mr. Srinivasan,  தலைமை ஆசிரியரை பார்க்கவேண்டும் என்று அங்கே அந்த பள்ளியில் இருந்த வாட்ச்மனை சந்துரு கேட்க்க,

 அவர் இப்ப இங்க வேலை செய்யவில்லையே, அவருக்கு பதிலாக வேறொருவரை நியமித்து இருக்கின்றார்கள் என்றான்.

நான் அவருடைய நண்பன், அவரை எங்க பார்க்க முடியும்?

நீங்க உள்ள போய் ஆபிசில் கேளுங்க, அவர்கள் சொல்லுவார்கள்.
உள்ளே ஆபிசில்...

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

அண்டை நாட்டில் அசிங்க பட்டான் ஆட்டோக்கார அரசியல்வாதி

பாகிஸ்தானில் விமானத்தில் ஒரு அட்டகாசமான புரட்சி.

வலைதளைதில் நுழைந்து செய்திகளை படித்து கொண்டு இருக்கையில், தீடீரென்று ஒரு செய்தி எதிரில்  வந்தது.

பாகிஸ்தானில் கோபம் அடைந்த விமான பயணிகள் முந்தைய மந்திரி மற்றும் தற்போதைய MLA  ஒருவரையும் தாமதமாக வந்த காரணத்தினால் திட்டி வெளியே துரத்தினார்கள்".

கனொலியை காண இங்கே சொடுக்கவும் 

அடே டே, நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் நமக்கும் எதில் வித்தியாசம் இருகின்றதோ இல்லையோ, இந்த இரு நாடுகளின் அரசியல்வாதிகளின் அராஜகத்தில் ஒற்றுமை உண்டே, ஓர் விமான பயணிகள் இதை எப்படி சாதித்தார்கள் என்று அறிய அவர்கள் கொடுத்த இணைப்பை  தட்டினேன், அங்கே நடந்தது.

ஓர் விமானத்தில் 200 பயணிகளுக்கும் மேல் அமர்ந்து உள்ளனர். அந்த விமானத்து அதிகாரிகள் விமானம் புறப்பட இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று அறிவித்து உள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு, தொழில் நுட்ப காரணத்தினால் (technical reasons) என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட்டனர்.

200 பயணிகளில் ஒருவர் எப்படியோ, இது தொழில் நுட்ப காரணத்தினால் அல்ல, ஓரிரு அரசியல் வாதிகளின் செல்வாக்கினால் என்று அறிந்து அதை மற்றவர்களுக்கு சொல்ல பிரச்சனை ஆரம்பித்தது. ஏற்கனவே நொந்து போய் அமர்ந்து இருந்த பிரயாணிகள், இது பொய் என்று அறிந்ததும் கொதித்து விட்டனர்.  தாமதமாக உள்ளே நுழைந்த இருவரையும் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். பார்க்கவே மகிழ்ச்சியாய் இருந்தது. இது பாகிஸ்தானில் மட்டும் அல்லாமல் இந்திய அரசியல்வாதிகளுக்கும்  மற்ற செல்வாக்கு உள்ளவ்ரகளுக்கும் நல்ல பாடம் ஆகும்.

இந்த இணைப்பை பார்க்கையில்... நான் கேட்ட சில விவாதங்கள்.... நமக்கும் நம் அண்டை நாட்டிற்க்கும் என்னே ஒரு ஒற்றுமை என்று என்னை வியக்க வைத்தது.

கேட்டவைகளில் சில.. ( தமிழாக்கத்தோடு)

 மந்திரி ரெஹ்மான் மாலிக் அவர்களுக்காக தானே காத்து கொண்டு இருக்கின்றீர்கள்? அவர் உள்ளே வந்தால் அனுமதிக்க மாட்டோம்.

காப்டனிடம் உடனே கதவை மூட சொல்லுங்கள்.

மந்திரி வரட்டும்.. அவரை அனைத்து பிரயாணிகளிடம் மன்னிப்பு கேட்க்க செய்வோம்.

இன்னும் எத்தனை நாள் தான் இந்த நாட்டில் இந்த அட்டூழியத்தை பொருத்து கொள்ள முடியும்..

இப்படி பேசி கொண்டு இருக்கையில்..முதல் ஆசாமி உள்ளே நுழைகிறார். அவர் முகத்தை பார்த்தவுடன், அடே டே, பாகிஸ்தானிலும் சரவணபவ உள்ளதா? என்று என்னை நானே கேட்டு கொண்டேன். ஏன் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. அவர் முகத்தில் சரவணபவாவில் "புல் மீல்ஸ்" சாப்பிட ஒரு திருப்தி தெரிந்தது. இப்போது மற்ற பிரயாணிகள் இவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர்.

தங்கள் பெயர்...

நான் வெளியே அமர்ந்து கொண்டு இருந்தேன்.

அது இருக்கட்டும், தங்கள் பெயர்...

நான் வெளியே அமர்ந்து கொடுந்து இருந்தேன்,

அது இருக்கட்டும், 200 பேருக்கும் மேலே இங்கே உள்ளே இருக்கும் போது நீ ஏன் - எங்கே வெளியே அமர்ந்து இருந்தாய்? நாங்கள் உன்னை வெளியே பார்க்கவில்லையே..

எனக்கும் அடுத்து கடைசி பிரயாணி வருவார், நான் வெளியே அமர்ந்து இருந்தேன்,

சரி, உள்ளே அமர்ந்துள்ள பிரயாணிகளுக்கு மன்னிப்பு சொல்.

நான் வெளியே அமர்ந்து தானே இருந்தேன்

நீங்கள் அரசியல்வாதியா? வெளியே எங்கே அமர்ந்து இருந்தீர்கள், எங்களில் ஒருவரும் உங்களை பார்க்கவில்லையே, எப்படி?

நான் வெளியே தான் இருந்தேன், கடைசி பிரயாணி வருவார் என்று காத்து இருந்தேன்.

எங்கள் அனைவரையும் என்ன முட்டாள் என்று நினைகின்றாயா? வெளியே இருந்தேன் என்று பொய் சொல்கிறாய். நீ அரசியவாதி தானே? உன் பெயர் என்ன?

இவர்கள் இப்படி கேட்டு கொண்டு இருக்கும் போது, அந்த நபர் இவர்களையும் மீறி தன் இருக்கையை அடைந்து விட்டார்.

 இங்கே மறுபடியும் சத்தம்.

இந்த விமான கதவு உடனே மூட பட வேண்டும். மந்திரி ரெஹ்மான் மாலிக் உள்ளே வரகூடாது. காப்டனிடம் சொல்லுங்கள்.

இப்படி ஒரு உத்தரவு விட்டு விட்டு.. உள்ளே சென்ற ஆசாமியை தேடி கொண்டு போனார்கள் சில பிரயாணிகள்.

எங்கே ரெஹ்மான் மாலிக்கின் ஆள்..எங்கே... (அவரை கண்ட வுடன்),

விமானத்தில் இருந்து வெளியேறு... உடனே வெளியேறு..

உனக்கு வெட்கம், மானம் எதுவுமில்லையா, வெளியே போ .
வெட்கம் மானம் ரோசம் இல்லை, நீ எல்லாம் ஒரு.. வெளியே போ..  விமானத்தை விட்டு வெளியே போ..இவர் ஒரு VIP . என்ன வெட்க்க கேடு.. உன் பெயர் என்ன..

டாக்டர் ரமேஷ்..

உடனே வெளியே போ, உன் பையை எடுத்து கொண்டு வெளியே போ..

டாகடர் அவர்களே... நீங்கள் ஒரு MLA, இந்த மாதிரி காரியம் செய்வதற்கு நீங்கள் தலை குனிய வேண்டும். வெளியே போங்கள்.

இவ்வாறாக பேசி, இந்த ஆசாமியை ஒருவழியாக அனுப்பிவைத்தார்கள். இவர் வெளியே சென்றதும், ஒரே கைத்தட்டல், ஆரவாரம், வெற்றி களிப்பு
பிறகு..

அடுத்தவர் வரட்டும், வறுத்து எடுக்கலாம். கவலையே படாதீர்கள்... மந்திரி ரெஹ்மான் மாலிக் அவர்களுக்கும் இதே நிலை தான். 68 வருடம் நாம் பொறுமையாக இருந்தோம், இப்படியே போனால் இன்னும் 68 வருடம் இதே நிலை தான் ..

இதோ வருகிறார்... வந்து விட்டார் என்று ஒரு பிரயாணி சொல்ல...ரெஹ்மான் மாலிக் விமானத்தில் நுழைய முற்பட...

மாலிக் அவர்களே.. திரும்பி போகவும்.

கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் திரும்பி போகவும், உள்ளே நுழையாதே...

இவ்வளவு சத்தத்தை எதிர்பார்க்காத அவர், கிட்ட தட்ட ஓடவே ஆரம்பித்து விட்டார். பின்னர் சற்று நிதானித்து மீண்டும் நுழைய முற்பட..

மாலிக் அவர்களே, நீங்கள் மந்திரியா இருந்தால் என்ன? முதலில் மனிதானாக இருக்க கற்று கொள்ளுங்கள். நரகத்திற்கு போ, முட்டாள் நாயே...

இதை பதிவு செய்து காட்டுங்கள்.. ரெஹ்மான் மாலிக் அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கபட்டார், என்பது எல்லாருக்கும் தெரியட்டும்.


பின் குறிப்பு:
மனதில் சந்தோசம், புரட்சி என்பது ஓர் உணர்ச்சி. ஒவ்வொரு மனிதனுக்கும் அது தானாக வரவேண்டும். பாகிஸ்தானில் நடந்த இந்த நிகழ்ச்சி நம் நாட்டில் நடக்கும்மா? இல்லை, நாம் தொடர்ந்து அவர்களை சாஸ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி கொண்டே இருப்போமா?

ஜெய் ஹிந்த்.


www.visuawesome.com

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

(8)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)ரயில் பயணம் தொடர்ந்தது.

லக்ஷ்மியின் அப்பா படித்தவர், நல்ல உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். எந்த ஒரு காரியத்தையும் நல்லதா, கெட்டதா என்று சிந்தித்து செயல் படுபவர். அவர் நினைவுகளோ அந்த ரயிலை விட வேகமாக ஓடி கொண்டு இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாடகை வண்டியில் தானும் தன்  மனைவியும் லக்ஷ்மியை தேடி ஊட்டிக்கு சென்றது. அங்கே அவளை கண்ட போது, அவள் அந்த வைத்தியர் கொடுத்த மருந்தில் மயக்கத்தில் இருந்தாள். என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த மருத்துவரையும் மற்றவர்களையும் கண்டபடி திட்டி விட்டார்.


சனி, 13 செப்டம்பர், 2014

கடலை நோக்கி போனாரே..

அலறி அடித்தது அலாரம். என்னடா சனியும் அதுவுமா அலராம என்று நினைத்து கொண்டே இருக்கையில் மனைவி அதை நிறுத்தி விட்டு,...
ஏங்க... சீக்கிரம் எழுங்க... லேட்டா போனா நல்லது கிடைக்காது.
என்ன சொல்லுற...

(7)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)

வயதான காலத்தில் அப்பாவிற்கு நம்மால் என்ன ஓர் டென்சன். அன்று மட்டும்... "வான் எங்கும் தங்க விண்மீன்கள்" என்று ஆடி பாடி கொண்டு இருந்த அன்று மட்டும், அந்த விபத்து நடந்து இராவிட்டால்...இராவிட்டால்,

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

(6)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)

போனை வைத்து விட்டு பாக்கியின் அப்பா அவள் அம்மாவிடம்...

நான் உடனே ஊட்டி போக வேண்டும்..

ஊட்டியா ஏன்...?

பாக்கியோட வைத்தியர் என்னை அவசரமா பார்க்கவேண்டும் என்று சொல்கின்றார்.

வியாழன், 11 செப்டம்பர், 2014

(5)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)


ஏங்க, மாப்பிள்ளை வீட்டார் வந்து ரெண்டு நாள் ஆச்சே, ஏதாவது செய்தி வந்ததா?

இல்லையே, இன்னும் கொஞ்சம் பொறுமையா இருப்போம்.

இல்லங்க, நீங்க எதுக்கும் அந்த ப்ரோகேரை கூப்பிட்டு கேளுங்களேன்.

புரோக்கர் எதுக்கு, மாப்பிள்ளை வீட்டு நம்பர் எனக்கு தெரியும், அவர்களையே நேர கேட்கலாம்.

ஹலோ, சந்துரு வீடுங்களா?

ஆமா, நீங்க யாரு?

நான் பாக்கி.. அதுதான் பாக்கிய லட்சுமி அப்பா பேசுறேன். சந்துரு இருக்காரா?

வணக்கம், நான் சந்துரு அப்பா தான் பேசுறேன். சந்துரு அவசரமா ஊட்டிக்கு போய் இருக்கான். ரெண்டு நாளில் வந்து விடுவான். வந்தவுடன் போன் பண்ண சொல்லுறேன்.

பாக்கி விஷயமா ஏதாவது முடிவு சொன்னாரா?

இல்லைங்க, உங்கே வீட்டில் இருந்து வந்த சில மணி நேரத்தில் அவசரமா கிளம்பி போய் விட்டான், அதனால் எதுவும் பேச முடியவில்லை.

ஓகே,. தேங்க்ஸ். அப்புறம் பார்ர்கலாம்.

பாக்கியின் அப்பாவிற்கு, வயிற்றில் புளி கரைய ஆரம்பித்தது. பெண்ணை பார்த்தவுடன், நேராக அவசரமாக  ஊட்டி சென்றாரா? ஏன்? ஒருவேளை, "பாக்கி" சுகவீன பட்டு ஊட்டியில் இருந்தது இவருக்கு தெரிந்து இருக்குமோ? என்னவாய் இருக்கும்!

அப்பா, அந்த மாப்பிளைய எனக்கு கொஞ்சம் கூட புடிக்கவில்லை. வேணும்னா அம்மாவிற்கு கட்டி வைச்சிடலாம், என்ன சொல்றிங்க?

வேண்டாமா, என் கஷ்டம் என்னோடோ போகட்டும், அந்த பையன் என்ன தப்பு பண்ணான், பாவம்!

எனக்கு என்னமோ தெரியில அப்பா, என்னை அறியாமலே, யாரோ ஒருவரை ரொம்ப விரும்புற மாதிரி ஒரு உணர்ச்சி.

அது எல்லாம் ஒன்றும் இல்ல பாக்கி.

அப்பா, மீண்டும் ஒரு முறை இந்த படத்தை பார்த்து சொல்லுங்க, இவரை நீங்க எங்கேயாவது பார்த்து இருக்கின்றீர்களா?இல்ல பாக்கி,  ஏன் கேட்கின்றாய்?

சும்மா தான் அப்பா..

அவள் சென்ற பிறகு,

ஹலோ, நான் பாக்கி அப்பா பேசுறேன். வைத்தியரா?

நான் வைத்தியர் தான் பேசுறேன். நீங்க அனுப்பின படம் கிடைத்தது, அதை பத்தி பேசவேண்டும் என்று நானே நினைத்தேன், நீங்கே அழைத்தீர்கள்.

அதில் உள்ளவர் யாருன்னு தெரியுமா, உங்களுக்கு.

ஐயா, அவர் பெயர் ஸ்ரீநிவாசன், இங்கே ஒரு பள்ளிகூடத்தில் ஆசிரியரா வேலை செய்து கொண்டு வந்தார், இப்ப அவர் நிலைமை சரியில்லை.

என்ன சொல்லுறீங்க, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க!

நீங்க கொஞ்சம் அவசரமா ஊட்டிக்கு வர முடியுமா? நீங்க மட்டும் வந்தால் போதும், லட்சுமி வர வேண்டாம்.

இங்கே இப்படி பேச்சு தொடர்கையில், சந்துரு ஊட்டி சென்று அடைந்தான். மதராசில் "வெயிலோடு உறவாடி"க்கொண்டு இருந்தவன், இங்கே அதிகாலையில் ரயில் நிலையத்தில் இறங்கியதும் குளிரில் நடுங்கியே விட்டான்.

இந்த குளிரில் எப்படி வீட்டில் "ஹீட்டர்" இல்லாமல் வாழமுடியும் என்று நினைத்து பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தவனுக்கு தன் நண்பன் சீனு, ஏறி கரையில் அமைந்துள்ள  ஒரு விறகு கடையின் வாசலில் "சுப்ரமணியை" கட்டிபிடித்து கொண்டு தூங்கி கொண்டு இருப்பது தெரியவில்லை.

தொடரும்...அடுத்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்


www.visuawesome.com

"பிரிவோம் - சந்திப்போம்" நேரமோ?

நட்புக்களே...

உங்களில் அநேகருக்கு என்னை தெரிய வாய்ப்பு இல்லை. ஜூலை 10ம் தேதி முதல் நான் எழுதி வரும் இடுகைகளை தமிழ் மணத்தில் பதிவு செய்து வருகிறேன்.

தமிழ் மணத்தின் மூலம் உங்களில் நிறையவரின் அறிமுகத்தையும் நட்ப்பையும் பெற்றேன். அதற்கு தமிழ் மணத்திற்கு நன்றி.

ஆனால், கடந்த சில நாட்களாக தமிழ் மணத்தின் உள்ளே சென்றால், மணக்கவில்லை, துர் நாற்றம் தான். எங்கே பார்த்தாலும் சில தேவையில்லாத தலைப்புக்கள்- பதிவுகள்-படங்கள். எனக்கு தெரிந்த சிலர் இங்கே வர முகம் சுளிப்பதை அறிந்தேன்.

என்னை காண இங்கு வந்து இவைகளை கண்டு நொந்தவர்களை, தயவு பண்ணி மன்னிக்க  வேண்டுகிறேன்.இந்த இடத்தில என் பதிவு தேவையா என்ற கேள்வி எனக்குள் எழுந்து உள்ளது.

தமிழ் மணத்தின் அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகொள். தயவு செய்து கொஞ்சம் கண்காணியுங்கள். இல்லாவிடில், இது ஒரு "மஞ்சள் வலைதளம் போல் ஆகிவிடும்.

எனக்கு நானே நேரம் குறித்து கொண்டேன். இங்கே என்னை காணாவிடில், www.visuawesome.com வரவும். அங்கே உங்களுக்குகாக என் வார்த்தைகள் காத்து இருக்கும்.

நன்றி.


9-11. நெஞ்சு பொறுக்குதிலையே..


செப் 11 கடந்த சில வருடங்களாக மறக்க முடியாத நாள் சிலருக்கு. அதற்க்கு தகுந்த காரணம் உண்டு. அமெரிக்காவில் நடந்த தாக்குதலில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிர்  இழந்தனர். இது நடந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும்.  ஆனால் நான் சொல்ல வரும் செப் 11, 1921ல் நடந்தது. என் அருமை பாரதியார் இறைவனடி சேர்ந்த நாள் இது.

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

(4)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும்

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)தண்டவாளத்தில் "தடக் தடக்" என்று ரயில் புரண்டு ஓட.., சந்துருவின் மனதும் ஓட  துவங்கியது.

சீனு, என்ன ஒரு நல்ல மனிதன், சிறந்த நண்பன், அவனின் நல்ல குணங்களை பற்றி பேச வேண்டும் என்றால் நாள் முழுவதும் பற்றாது..அப்படி ஓர் குணம். அவனை முதலில் சந்தித்த நாள் இன்னும் நன்றாக நினைவிற்கு வருகிறது..

(3)மூன்றாம் பிறை - தொடர் கதை

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும்

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

பாக்கி, உங்க அம்மா உன்னிடம் எதோ பேச வேண்டுமாம்.... கொஞ்சம் சமையல் அரை வரைக்கும் வா...என்று அழைத்த தன் அப்பாவின் குரலை கேட்ட லக்ஷ்மிக்கு ஒரே ஆச்சரியம். எது வேண்டும் என்றாலும் என்னிடம் நேராக ஓடி வந்து சொல்லும் என் அப்பா, இன்று அம்மா, உன்னை அழைக்கின்றாள் என்று சொல்கிறாரே.. என்னவாய் இருக்கும்?

(2)மூன்றாம் பிறை - தொடர் கதை


மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

"காதல் கொண்டேன், கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சந்நிதி"

இந்த பாடலின் வரிகள் லக்ஷ்மியின் நினைவில் இருந்து பிரிய மறுத்தன. யார் இதை பாடுவது. ஏன் எனக்கு மட்டும் கேட்கின்றது என்று பரிதவித்தாள். தான் வரைந்த அந்த படத்தில் உள்ள முகத்தை பார்த்தால், தனக்குளே ஒரு சொல்ல முடியாத துயரம் கலந்த சந்தோசம்.

திங்கள், 8 செப்டம்பர், 2014

(1) மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

லக்ஷ்மி மீண்டும் சென்னைக்கு வந்து... தம் பெற்றோர்களுடன் சேர்ந்து தன் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றாள். கடந்த ஒரு வருடத்தில் என்ன ஆனதே என்று அவளுக்கு தெரியவில்லை. அவளின் அப்பா அவளிடம், நீ விபத்திற்கு உள்ளாகி, சுய நினைவை இழந்தாய், அதனால் உனக்கு சிகிச்சை அளிக்க உன்னை ஊட்டிக்கு அனுப்பி வைத்தோம் என்றொரு பொய் சொன்னார்.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

பள்ளிக்கூடம் போகாமலே...

பள்ளி கூடம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஒரு வாரம் முடிவதற்குள் ஒரு வருடம் முடிந்தது போல் ஒரு உணர்வு. இன்று ஞாயிறு, மதியம் 1 மணி போல். நாளைக்கு பள்ளியில் அறிவியல், மற்றும் ஆங்கில தேர்வு. என்ன செய்வேன் இப்போது. அது மட்டும் இல்லாமல் கணக்கு வீட்டு வேலை இன்னும் முடிக்கவில்லை. எங்கே ஆரம்பிக்க போகிறேன் என்றே தெரியவில்லை.


வியாழன், 4 செப்டம்பர், 2014

ரஞ்சித் சின்ஹா- சிபிஐ தலைவர்! ஒரு வெட்க கேடு.

ரஞ்சித் சின்ஹா- சிபிஐ தலைவர்! ஒரு வெட்க கேடு.

" If  you cant prevent rape, enjoy it". "கற்பழிப்பு கண்டிப்பாக நடக்கும் தருவாயில் அதை ருசித்து அனுபவிப்பதே மேல்" என்ற ஒரு கூற்றை சில மாதங்களுக்கு முன் கூறினவர். சிபிஐ தலைமை என்பது இந்தியாவின் நம்பர் 1  போலீஸ் அதிகாரி.

(I dont own this picture)

இவர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இதை கூறுகையில் ஒரு சராசரி மனிதனின் இரத்தம் கொதித்தது. இவ்வளவு கேவலமாக யோசிக்க கூடிய இந்த மனிதர் நம் நாட்டின் முதன்மை காவல் அதிகாரியா? என்று நினைக்கையிலே நம் நாட்டின் காவல் துறை எவ்வளவு கீழ்த்தரமாக நடக்கும் என்பதை அறிந்து கொள்ளாலாம்
.
சரி, இது நடந்து இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டதே, இதை ஏன் இப்போது எழுதிகிறேனா? இந்த  அருமையான அதிகாரியின் பெயர் மீண்டும் தொலை காட்சியில் அடி பட்டு கொண்டு இருகின்றது.

கடந்த சில மாதங்களாக கோல்கேட், 2 G  மற்றும் 4 G  போன்ற ஊழல் நடத்திய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இரவு நேரங்களில் இவரின் இல்லத்தில் சென்று இவரை சந்தித்து வந்து இருக்கின்றார்கள். இவர்கள் சந்திப்பு ஒன்றும் நம் நாட்டின் நாணயத்தை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது சொன்னால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை.இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால், காங்கிரசும் சரி, பிஜேபி யும் சரி, இவரை இந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று சொல்ல முன் வரவில்லை.


இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை.

பெண்கள் கற்பழிப்பை கிண்டல் அடித்த இவர் எதையும் செய்ய தயங்க மாட்டார். இவரை காக்க, இவர் வாயை மூட அரசாங்கம் எதுவும் செய்ய தயார். பாவம் இந்தியா... பரிதாபம் இந்தியர்கள்.


ஜெய் ஹிந்த்.

http://www.visuawesome.com/

புதன், 3 செப்டம்பர், 2014

ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்!

என்ன கணேஷ்? ஆள் ரொம்ப டென்சனா இருக்க, என்ன விஷயம்?

ஒன்னும் இல்ல விசு

மாப்பு, +2ல இருந்து ரெண்டு பெரும் ஒன்னா படிக்கிறோம். இப்ப B.com கடைசி வருஷம், அதுவும் இன்னும் 3 வாரத்தில் முடிய போது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்? என்ன காதல் பிரச்சனையா?

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

துப்பாக்கி கையில் எடுத்து....

என்னங்க, கொஞ்சம் வங்கி வரைக்கும் போயிட்டு வரமுடியுமா?

வங்கியா. எதுக்கு, எல்லாத்தையும் தான் ஆன் லைனில் செய்யலாமே, இதுக்கு எதுக்கு அங்கே போக வேண்டும்.

அய்யோ, அது அங்கே, இது பெங்களூர். கொஞ்சம் போய் அந்த பாஸ் புக்கில் எல்லா என்ட்ரியும் போட்டுட்டு கொஞ்சம் ரூபாயும் எடுத்துட்டு வாங்க.

சரி, வரேன்.

நேராக பெங்களூர் மாஸ்க் ரோட்டில் உள்ள வங்கியில் நுழைந்த எனக்கு "மலரும் நினைவுகள்"! பல வருடங்களுக்கு முன் அருகே இருந்த கல்லூரியில் வேலை கிடைக்க, முதல் சம்பளமே எல்லா பிடிப்பும் போக 1800 ருபாய். முதல் சம்பளம் வாங்கிய பின் ஆரம்பித்த வங்கி கணக்கு. இன்னும் ஓடி கொண்டு இருக்கிறது.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...