பல வருடங்களுக்கு முன் தகப்பனின் தொழிலை பிள்ளைகள் செய்து வருவார்கள் அது ஒரு வழக்கம் ஆக இருந்தது. இந்த பழக்கம் மற்ற தொழில்களில் இருந்து குறைந்து வரும் இந்த காலத்தில் சில துறையில் இந்த வழக்கம் அதிகரித்து கொண்டு வருகின்றது. இதில் சினிமா ஒன்று. தகப்பனிடம் பணம் இருந்தால் பிள்ளை ஹீரோ. தகப்பனிடம் பவர் இருந்தால் பிள்ளை டைரக்டர். தகப்பனிடம் திறமை இருந்தால் பிள்ளை கவியரசர். தகப்பனிடம் இசை அறிவு இருந்தால் பிள்ளை இசை அமைப்பாளர். இந்த வழக்கம் சினிமா தொழிலில் அதிகம். அதுவும் நம் தமிழ் சினிமாவில் இன்னும் அதிகம்.
பிரபுவில் துவங்கி சிம்பு வரை, பல ஹீரோக்கள் , இவர்கள் வேறு ஒரு குடும்பப த்தில் பிறந்து இருந்தால் நடிப்பு துறையில் வந்து வெற்றி இருக்க முடியாது.
இந்த "பரம்பரை தொழில் " வழக்கம் கடினமாக உழைக்கும்- படிக்கும் துறைகளில் இருக்காது.
நான் இங்கும் சொல்லும் கருத்துக்கு விதி விலக்கு உண்டு, ஆனாலும் பெரும்பான்மையோர், தன் தகப்பன் படித்த படிப்பை படிக்க வில்லை. ஏன் என்றால் இதற்க்கு கடின உழைப்பு அவசியம்.
விளையாட்டு துறையில் இந்த "பரம்பரை தொழில் " பழக்கம் இன்னும் குறைவு. விளையாட்டு துறையில் முன்னேற கடின உழைப்பு தேவை. விளையாட்டு துறையில் தகப்பனை மிஞ்சிய இந்திய வீரர்கள் ... ஒரு கை விரல் விட்டு எண்ணி விடலாம்.
எப்பவாது ஒரு முறை கிரிக்கெட் விளையாட்டில் முன்றைய வீரரின் மகன் ஆடுகின்றார் என்று செய்த வரும், என்னவென்று விசாரித்து பார்த்தால், இந்த பையனுடைய அப்பா தேர்வு குழுவில் சேர்க்க பட்டு இருப்பார், உடனே மகனை தேர்வு செய்து இருப்பார். (உதாரணம்.. கவாஸ்கர் -ஸ்ரீகாந்த்- சிவ்லால் யாதவ்- ரோஜெர் பின்னி இவர்களின் பிள்ளைகள்)
உதாரணத்திற்க்கு வருவோம். "சைப் அலி கான்" இவரின் அப்பா "பட்டோடி" ஓர் சிறந்த கிரிகட் வீரர். இந்திய அணியின் கேப்டன் ஆக இருந்தவர். தாய் "நர்கிஸ்" சினிமா நடிகை. நல்ல வசதியான குடும்பம். இந்த விளையாட்டு துறை - சினிமா துறையில் மகன் எதை தேர்ந்தெடுத்தார். சினிமாவை தான். ஏன். 20 வயது வரை செய்யாத அட்டகாசம் இல்லை. 21 வயதில் அம்மாவின் பெயரும் அப்பாவின் பணமும் கை கொடுக்க.... இவர் சினிமா ஹீரோ.
இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்த "பரம்பரை தொழில் " அரசியலில் ஆணி வேர் விட்டு ஆழமாக சென்று விட்டது. இந்த சிறந்த அரசியல்வாதிகள் சிலரை பார்ப்போமே.
குடும்ப அரசிய என்றவுடன் நினைவிற்கு வருவதே... காந்தி - குடும்பம்.
இந்தியாவிற்காக அனைத்தையும் துறந்த தியாகிகள். இவர்கள் இருவரும் இந்த குடும்பத்தில் மணந்து - பிறந்து இராவிடில் என்ன செய்து
கொண்டு இருப்பார்கள்?
அடுத்து...
காங்கரஸ் கட்சியை குடும்ப கட்சி என்று சொல்லும் பிஜேபியின் மூத்த தலைவர்.. ராஜ் நாத் சிங் தன் அருமை செல்ல பிள்ளையுடன். இந்த பிள்ளை என்ன என்ன தியாகம் செய்து இருப்பார்?
அடுத்து .. மாதவராவ் சிந்தியாவின் செல்ல குட்டி... வெல்ல கட்டி.. என்னே ஒரு தியாகி.
அடுத்து, சந்யாசி உமாபாரதியின் அக்கா பையன்... இவரை போல நல்லார் , ஊரில் யாரும் இல்லார்.
இவர்களை தொடர்ந்து.. லலிதா குமாரமங்கலம்.. இந்த அம்மா பேசுறத பார்த்தால், தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்துடுவோம் என்ற பாணியில் இருக்கும்.
அடுத்து.. சச்சின் பைலட், இந்த "பரம்பரை தொழில்" கூட்டத்தில் என்னை பொறுத்தவரை (இது ஒரு யூகம் தான், என் யூகம் தவறாக இருக்கலாம்) இவர் கொஞ்சம் பரவாயில்லை. இவரை மட்டும் அடுத்த தலைவர் என்று அறிவித்தால் காங்கரஸ் 2019ல் 100 சீட்ஸ் கிட்ட பெற வாய்ப்புண்டு.
அடுத்து .. ரெண்டு ராசாதிக்கள்..
பவாரின் மகள் சுப்ரியா..(மேலே) பிரமோத் மகாஜனின் மகள் (கீழே )
அடுத்து ..
பெங்களூர்.. ஆசாமிகள்... இவர்களை ஏழை விவசாயிகள். இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை.. உண்மையை தவிர வேறு இல்லை.
அடுத்து வரும் குடும்பம்
... அடேங்கப்பா.. கஷ்டப்பட்டு உழைத்த காசை எல்லாம் மக்களுக்காக தயங்காமல் வாரி வழங்கும் பாரி வள்ளலின் பரம்பரை.. இவர்களை பற்றி சொல்ல செந்தமிழில் வார்த்தை இல்லை...
தொடர்ந்து .. பெற்றால் தான் பிள்ளையா...
இவர்கள் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் அடுத்த தலை முறைக்கு ஆட்கள் உண்டு.
தோற்போம் என்று தெரிந்தும் கூட நம்ம P. சிதம்பரம் அவர் மகனை, பின்னாளில் உதவும் என்று சேர்த்து விட்டார்.
விடுதலை போராட்ட வீரர்கள்... மாராத்திய (அ)சிங்கங்கள்...
பல்ராம் தாக்கரே - பிள்ளையும், பேர பிள்ளையும்..
இன்னும் எத்தனையோ பேர் உண்டு. சமீப காலத்தில் இன்னொரு விஷயமும் நடக்கின்றது. நான் இந்த கட்சியிலே இருக்கேன். நீ அங்கே போ. நான் இங்கே ஆட்டைய போடுறேன்.. நீ அங்கே போடு.. இவன் ஜெயிச்சாலும் சரி அவன் ஜெயிச்சாலும் சரி... நம்ம குடும்பத்தை ஒரு பய ஒன்னும் பண்ண முடியாது..
என்ன... வாசகர்களே... இங்கே நான் எடுத்துக்காட்டிய எந்த ஓர் நபர் ஆவது வேற தொழிலில் பிழைத்து இருக்க முடியுமா? சொல்லுங்களேன்.
பின் குறிப்பு:
இன்னும் 1000 கணக்கில் இருக்கின்றார்கள் என்று எனக்கு தெரியும். இதற்க்கு மேலே சொல்ல நேரம் இல்லை. முடிந்தால் நீங்கள் சொல்லுங்கள்.
(மேலே உள்ள படங்கள் அனைத்தும் கூகிள் தளத்தில் திரட்டியவை, என்னுடையவை அல்ல.)
www.visuawesome.com
பதிலளிநீக்குஎன்ன செய்ய நாமும் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் வாரிசசுகளுக்கும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்துவிடுகின்றோமே... அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை , நாம் தான் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்..அப்புறம் ரோகன் கவாஸ்கருடன் ஒப்பிடும் போது ஸ்டுவர்ட் பின்னி நல்ல பிளேயர் தான். அதுவும் 30 வயசில் தான் டீமில் இடம் கிடைத்தது. எனவே அப்பாவால் அவர் டீமுக்கு வந்தார் என்று சொல்ல முடியாது. அதே போல அனிருத் பநீ காந்த் இன்னும் டீமுக்கு வரவில்லை....
சும்மா புட்டு புட்டு வெச்சிட்டீங்கண்ணே! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு