வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஓடி விளையாடு பாப்பா...

வாத்தியாரே... எங்கே ஆளே காணோம்.

இங்கேதான் தண்டம், எப்படி இருக்க?

நல்லா இருக்கேன் வாத்தியாரே,  வீட்டில ஆத்துக்காரி... புள்ள குட்டிங்க பேஷா இருக்காளா?



அவா பேஷா இருந்தா தானே தண்டம் உன் போன் அட்டெண்ட் பண்ணுவேன். இல்லாவிடில் அவர்களை தானே பார்த்து கொண்டு இருப்பேன்.

சோக்கா சொன்னே வாத்தியாரே...

சரி என்ன விஷயம் தண்டம்...

ஒன்னும் இல்ல வாத்தியாரே..

சரி அப்புறம் பாக்கலாம்..

வாத்தியரே.. என்ன அவசரம்... ஒரு விஷயம் இருக்கு.

சொல்லு..

எனக்கு இங்க Angels Games  க்கு ரெண்டு டிக்கெட் கிடைத்து இருக்கு,

அட பாவி... எப்படி பாணி, அவனவன் பாக்கெட் முழுக்க டாலர் வைச்சிக்கினு கிடைக்குமா கிடைக்கும்மானு அலையிறான்..உனக்கு எப்படி..

எப்படின்னு எல்லாம் உனக்கு எதுக்கு வாத்தியாரே... வரியா? இல்லையா?

என்ன கேள்வி தண்டம், கண்டிப்பா வரேன். வேற யாருக்கும் கொடுத்து விடாதே..

நீதான் முதல் வாத்தியாரே... நீ  இல்லாட்டி தான் மத்தவங்க...


ரொம்ப நன்றி, தண்டம். எத்தனை மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கிறது?

 3 மணி போல வாத்தியாரே. நம்ப ஒரு 2;30க்கு வீட்டை விட்டா போதும்..

என்னாது... 3 மணிக்கா? தண்டம்... நான் இது மாலை 6க்கு பின்னாலே என்று யோசித்தேன்... நீ கிளம்பு, நான் 3 மணிக்கு கொஞ்சம் பிசி.

வாத்தியாரே, Angels Game  அதுவும் Play off , உனக்கு இந்த ஆட்டம்னா எவ்வளவு பிடிக்கும், இதுக்கு வராமல் என்ன பிசி வாத்தியாரே?

தண்டம், என் மூத்த மகள், இன்றைக்கு அவள் பள்ளி கூட அணியோட ஒரு கோல்ப் (Golf) போட்டியில் மோதுறா? அதனால தான். என்னாலே வர முடியாது.

வாத்தியாரே.. நான் எவ்வளவு பெரிய டிக்கெட், அதுவும்  VIP  டிக்கெட் இருக்குதுன்னு சொல்றேன், நீ என்னமோ பள்ளிகூட போட்டிக்கு போறன்னு சொல்றியே... தமாஸ் பண்ணாதே வாத்தியரே, கிளம்பு, நேரம் ஆகிவிட்டது.

இல்ல, தண்டம், உன் பொண்ணு கொஞ்சம் சின்ன பிள்ளை, இன்னும் ஒரு 4 வருஷத்தில் இந்த நிலைமை உனக்கும் வரும், அப்ப நீயும் அது தான் சொல்லுவ. எவ்வளவு பெரிய ஆட்டமாக இருந்தாலும், அது நம்ம பெத்த பிள்ளை ஆட்டதிற்கு இணை ஆகாது..தண்டம்.

புரியிது, வாத்தியாரே... "ஆல் தி பெஸ்ட் டு யுவர் டாட்டர்'. சனி கிழமை பாக்கலாம்.

சரி தண்டம், "என்சாய் மாடி.".

போனை வைத்து விட்டு நேரத்தை பார்க்கையில்...மீண்டும் ரிங்கியது..

அப்பா... எங்க..?

இங்க தான் ஆபிசில்.. ஐயோ... உங்கள 1;30 வர சொன்னேன்னே...

சாரி மகள், 5 நிமிடத்தில் இருப்பேன்.

வரும் வழியில் எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொண்டு வாங்க, வெளியே போய் சாப்பிட நேரம் இருக்காது.

சரி, ஏன் இவ்வளவு அவசர படர, ஆட்டம் 3 மணிக்கு தானே.

ஐயோ அப்பா, ஆட்டம் 3 மணி ஆனாலும், நாங்க ப்ராக்டிஸ் பண்ண ரெண்டு மணிக்கு எல்லாம் அங்கே இருக்கனும்.

ஓடி போய் வண்டியை எடுத்து, போகும் வழியில் சாப்பாடும் வாங்கி கொண்டு, மகளையும் வண்டியில் ஏற்றி கொண்டு  நேராக கோல்ப் மைதானத்திற்கு வண்டியை விட்டேன். வண்டியிலே உணவை முடித்து கொண்டு, தன் காலனியை மாற்றி கொண்டாள்,.

உள்ள நுழையும் போது என்ன ஒரு அழகான  மைதானம் என்று வியந்தேன்.





உள்ளே நுழைகையில் 

அங்கே சென்று அடைந்தவுடன், சக ஆட்டகார தோழிகளை பார்த்து, ஓகே டாடி. "விஷ் மீ லக்"

ஆல் தி பெஸ்ட், மகள்.. ப்லே குட்.

அது "ப்லே குட்" இல்ல டாடி, "ப்லே வெல்"
.
ஓகே, ப்லே வேல்... மறைந்தாள்.

மூன்று பள்ளிக்கூடம் ஆடும் ஆட்டம். முதல் பள்ளி என் மகளின் பள்ளி (கருப்பு உடை)

இரண்டாம் அணி அருகில் உள்ள மற்றொரு பள்ளி.. இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கட் போல ஒரு போட்டி. இதில் வெற்றி தோல்வி ஓர் மான பிரச்சனை (நீல நிறம்)

மூன்றாவது அணி 200 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வந்த அணி (மஞ்சள் நிறம்).

அடுத்த நான்கு மணி நேரம் ஒரே போராட்டம்.. மூன்று அணிகளும் ஆடி முடித்து வந்து தங்கள் எண்ணிக்கையை சரி பார்த்து கொண்டு இருக்கையில், அங்கே இருந்த பயிற்சியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரே திகில். எல்லா எண்ணிகையும் சரிபார்த்து கடைசியில் என் மகளின் பள்ளி வெற்றி என்று அறிவித்தவுடன், பயிற்சியாளர் இவர்களிடம், அமைதியாக தாழ்மையுடன் சேர்ந்து மற்ற அணிகளிடம் கை குலுக்கி விட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

மனதில் இருந்த சந்தோசத்தை வெளியே காட்டாமல் இவர்கள் அனைவரும் மற்ற அணியினரை ' well played"  என்று சொல்லி கை குலுக்குகையில், எதிர் அணியின் கண்களில் சற்று ஈரம் தெரிந்தது. 




வரும் வழியில், 

என்ன மகள் இது, ஒரு பள்ளிகூட ஆட்டதிற்கு யாராவது அழுவார்களா? 

டாடி, இது ஒரு மான பிரச்சனை. இன்னும் ஒரு வருடத்திற்கு "We own them"

வீட்டில் வந்து அமர்ந்தேன்,

வாத்தியாரே, தண்டம் பேசுறேன்.

சொல்லு தண்டம்.. ஆட்டம் எப்படி போச்சி.

பிள்ளையிடம் போனை கொடு வாத்தியாரே...

ஏன் தண்டம்?
.
வாழ்த்து சொல்லலாம்னு தான். அருமையான வெற்றி ஆச்சே.

டேய், உனக்கு எப்படி தெரியும்?

பள்ளிகூட விளையாட்டு விவரங்களை தான் உடனடியா இணைய தளத்தில் போடுறாங்களே வாத்தியாரே, அங்க ஸ்டேடியத்தில் இருந்தாலும், அடிக்கடி செக் பண்ணேன்.

தேங்க்ஸ் தண்டம்.

பின் குறிப்பு;
என்னதான், யாருதான் ஆடினாலும், பாடினாலும், அது நம்ம பெத்த பிள்ளைக்கு இணை ஆகுமா? மற்றது எல்லாம் காக்கலாம், தவறே இல்லை, ஆனால் நம் பிள்ளைகள்... காக்கவே கூடாது, அதுவும் நமக்காக. நாம் எப்போதும் அவர்கள் கூடவே...


www.visuawesome.com

9 கருத்துகள்:

  1. செம டச்சிங் அண்ணா!! பாப்பாவுக்கு என் வாழ்த்து சொல்லுங்கள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி மைதிலி. தங்கள் வாழ்த்துக்களை கண்டிப்பாக சொல்கிறேன். நீங்கள் சொன்ன மாதிரி... டச்சிங் தான். யார் என்ன ஆடினாலும், அது நம்ம வீட்டு பிள்ளைகளின் ஆட்டதிற்கு இணையாகுமா?

      நீக்கு
  2. என்னதான், யாருதான் ஆடினாலும், பாடினாலும், அது நம்ம பெத்த பிள்ளைக்கு இணை ஆகுமா? மற்றது எல்லாம் காக்கலாம், தவறே இல்லை, ஆனால் நம் பிள்ளைகள்... காக்கவே கூடாது, அதுவும் நமக்காக. நாம் எப்போதும் அவர்கள் கூடவே...

    ஸூப்பர் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி, பிள்ளைகளை விட்டு கொடுக்க முடியுமா?

      நீக்கு
  3. ம் அப்படியே கண்முன் பார்ப்பதைப் போன்று சொல்லிவிட்டீர்கள், வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கும் உங்களுக்கு இவ்வளவு சந்தோசம்னா, பார்த்த எனக்கு? அருகைக்கு நன்றி ஜெயசீலன்

      நீக்கு
  4. ஆல் தி பெஸ்ட், மகள்.. ப்லே குட்.
    அது "ப்லே குட்" இல்ல டாடி, "ப்லே வெல்"///
    hahaha

    என்னதான், யாருதான் ஆடினாலும், பாடினாலும், அது நம்ம பெத்த பிள்ளைக்கு இணை ஆகுமா? மற்றது எல்லாம் காக்கலாம், தவறே இல்லை, ஆனால் நம் பிள்ளைகள்... காக்கவே கூடாது, அதுவும் நமக்காக. நாம் எப்போதும் அவர்கள் கூடவே...///

    super sir. pottiil ungal makal jeychal. pasathil oru appaava ninga jeychitinga. antha 2 varikal pothum.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் மகளுக்கு வாழ்த்துக்கள்
    அருமையான பதிவு
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...