செவ்வாய், 23 செப்டம்பர், 2014

செவ்வாயில் மங்கள்யான், புலிவாயில் மனிதன்...


இன்றைக்கான செய்தி..."செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான்..."


அடுத்த செய்தி .... புலி வாயில் மனிதன்...



இன்றைக்கான செய்தி…”செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான்…”
அடுத்த செய்தி …. புலி வாயில் மனிதன்…
முதல் செய்தி நல்ல செய்தி தான். பல வல்லரசு நாடுகள் செய்ய முடியாத காரியத்தை நம் பாரத தேசம் செய்து  உள்ளது என்பதை படிக்கும் போது  மனதில் ஒரு சந்தோசம்.  சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் விண்ணில் செலுத்தபட்ட மங்கள்யான், 460 மில்லியன் மைல்கள் கடந்து சென்று  செவ்வாயில் இறங்க போக போகிறது என்பதை கேட்டவுடன் ஒரு சிறிய பெருமை.  நம்மூரை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கும் மற்றும் அதை சேர்ந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் . மற்றும் இந்த காரியத்தை சாதித்த அனைவருக்கும் நன்றி.
இந்த காரியத்தை படிக்கும் போதே… திருஷ்டி சுற்றி போட்டது போல் இன்னொரு செய்தி.. டெல்லியில் மிருக கண்காட்சி சாலையில் ஒரு 20 வயது ஆள் புலி இருக்கும் இடத்தில விழுந்து, புலியால் கடித்து கொல்லபட்டார்.  இவர் ஏன் அங்கே சென்றார், எப்படி அதில் விழுந்தார் என்பதுஎல்லாம் விவாதிக்க பட வேண்டிய விஷயம். ஆனால், இதில் வருத்த பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர் இந்த இடத்தில விழுந்த பின் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் அந்த புலி இவரை தொடவே இல்லை. இந்த 15 நிமிடத்தில் இங்கே இருக்கும் அதிகாரிகள் இந்த புலியை மயக்கமருந்து அல்ல வேறு எந்த முறையிலாவது தடுக்க முயன்று இருக்கலாம். அந்த மாதிரியான ஒரு காரியமும் நடக்க வில்லை. 15 நிமிடங்கள்… 15 நிமிடங்கள், மரண பயத்தில் ஒரு மனிதன், என்ன ஒரு காட்சி.
இந்த அறிவியல் சார்ந்த விஷயங்களை சற்று தள்ளி வைப்போம். சாதாரண மனிதனின் வாழ்க்கையை சீரமைக்க முயற்சி செய்வோம்.
தனி மனிதனுக்கு உணவில்லையேல்… பரவாயில்லை… உயிரே இல்லையேல்… என்ன செய்வது…
www.visuawesome.com




9 கருத்துகள்:

  1. வணக்கம்

    நல்ல தகவலை பகிர்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. சிவாஜி ஸ்டைல் தான்.. அழுது கொண்டே சிரிப்போம்!

      www.visuawesome.com

      நீக்கு
  3. நீங்கள் சொல்லியிருப்பது கூட அவ்வப்போது நடக்கும் தனி மனித பிரச்சனை...ஆனால் ஒரு சமுதாயமே அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தினப் பிரச்சனையை யார் காதில் சொல்ல?.... அவர்களுக்காக யார் தான் பேசுவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் வரவேண்டும் எழில். ஏமாற்றத்தையே கண்ட நமக்கு ஒரு மாற்றம் வரவேண்டும். வருவோம் என்று நம்புவோம். நான் கூறியது கூட தனி மனித பிரச்சனை என்று எண்ணவேண்டாம். மும்பை நகரில் தீவிரவாதிகள் AK47 வைத்து கொண்டு கொலைவெறியோடு அலையும் பொது, நம்மூர் போலிஸ் லத்தியை வைத்து கொண்டு மரணபயத்தோடு ஓடியது இன்னும் நினைவில் இருக்கிறது. மனிதனின் உயிர்க்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

      நீக்கு
  4. மங்கல்யான் வெற்றி உண்மையிலேயே ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சார்,

    பதிலளிநீக்கு
  5. புலி வாயில் சிக்கிய மனிதன் செய்தி பகீர் என்றது! மங்கல்யான் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் நண்பரே வீடியோவை பார்த்த நமக்கே மனது பதைத்ததே அந்த மனிதனின் அந்த நிமிடங்கள் எப்படி இருந்திருக்கும் தங்களது கேள்வி நியாயமானதே...

    பதிலளிநீக்கு
  7. மங்கல்யான் வெற்றி இந்தியத் திருநாட்டிற்கே கிடைத்த பெருமை ஐயா
    விஞ்ஞானிகளை எவ்வளவு போற்றினாலும் தகும்
    பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நாம் எவ்வளவு அல்ட்சியமாக இருக்கிறோம் என்பதற்கு ஓர் உதாரணம் புலியிடம் சிக்கிய மனிதன்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...