வியாழன், 11 செப்டம்பர், 2014

(5)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)


ஏங்க, மாப்பிள்ளை வீட்டார் வந்து ரெண்டு நாள் ஆச்சே, ஏதாவது செய்தி வந்ததா?

இல்லையே, இன்னும் கொஞ்சம் பொறுமையா இருப்போம்.

இல்லங்க, நீங்க எதுக்கும் அந்த ப்ரோகேரை கூப்பிட்டு கேளுங்களேன்.

புரோக்கர் எதுக்கு, மாப்பிள்ளை வீட்டு நம்பர் எனக்கு தெரியும், அவர்களையே நேர கேட்கலாம்.

ஹலோ, சந்துரு வீடுங்களா?

ஆமா, நீங்க யாரு?

நான் பாக்கி.. அதுதான் பாக்கிய லட்சுமி அப்பா பேசுறேன். சந்துரு இருக்காரா?

வணக்கம், நான் சந்துரு அப்பா தான் பேசுறேன். சந்துரு அவசரமா ஊட்டிக்கு போய் இருக்கான். ரெண்டு நாளில் வந்து விடுவான். வந்தவுடன் போன் பண்ண சொல்லுறேன்.

பாக்கி விஷயமா ஏதாவது முடிவு சொன்னாரா?

இல்லைங்க, உங்கே வீட்டில் இருந்து வந்த சில மணி நேரத்தில் அவசரமா கிளம்பி போய் விட்டான், அதனால் எதுவும் பேச முடியவில்லை.

ஓகே,. தேங்க்ஸ். அப்புறம் பார்ர்கலாம்.

பாக்கியின் அப்பாவிற்கு, வயிற்றில் புளி கரைய ஆரம்பித்தது. பெண்ணை பார்த்தவுடன், நேராக அவசரமாக  ஊட்டி சென்றாரா? ஏன்? ஒருவேளை, "பாக்கி" சுகவீன பட்டு ஊட்டியில் இருந்தது இவருக்கு தெரிந்து இருக்குமோ? என்னவாய் இருக்கும்!

அப்பா, அந்த மாப்பிளைய எனக்கு கொஞ்சம் கூட புடிக்கவில்லை. வேணும்னா அம்மாவிற்கு கட்டி வைச்சிடலாம், என்ன சொல்றிங்க?

வேண்டாமா, என் கஷ்டம் என்னோடோ போகட்டும், அந்த பையன் என்ன தப்பு பண்ணான், பாவம்!

எனக்கு என்னமோ தெரியில அப்பா, என்னை அறியாமலே, யாரோ ஒருவரை ரொம்ப விரும்புற மாதிரி ஒரு உணர்ச்சி.

அது எல்லாம் ஒன்றும் இல்ல பாக்கி.

அப்பா, மீண்டும் ஒரு முறை இந்த படத்தை பார்த்து சொல்லுங்க, இவரை நீங்க எங்கேயாவது பார்த்து இருக்கின்றீர்களா?



இல்ல பாக்கி,  ஏன் கேட்கின்றாய்?

சும்மா தான் அப்பா..

அவள் சென்ற பிறகு,

ஹலோ, நான் பாக்கி அப்பா பேசுறேன். வைத்தியரா?

நான் வைத்தியர் தான் பேசுறேன். நீங்க அனுப்பின படம் கிடைத்தது, அதை பத்தி பேசவேண்டும் என்று நானே நினைத்தேன், நீங்கே அழைத்தீர்கள்.

அதில் உள்ளவர் யாருன்னு தெரியுமா, உங்களுக்கு.

ஐயா, அவர் பெயர் ஸ்ரீநிவாசன், இங்கே ஒரு பள்ளிகூடத்தில் ஆசிரியரா வேலை செய்து கொண்டு வந்தார், இப்ப அவர் நிலைமை சரியில்லை.

என்ன சொல்லுறீங்க, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க!

நீங்க கொஞ்சம் அவசரமா ஊட்டிக்கு வர முடியுமா? நீங்க மட்டும் வந்தால் போதும், லட்சுமி வர வேண்டாம்.

இங்கே இப்படி பேச்சு தொடர்கையில், சந்துரு ஊட்டி சென்று அடைந்தான். மதராசில் "வெயிலோடு உறவாடி"க்கொண்டு இருந்தவன், இங்கே அதிகாலையில் ரயில் நிலையத்தில் இறங்கியதும் குளிரில் நடுங்கியே விட்டான்.

இந்த குளிரில் எப்படி வீட்டில் "ஹீட்டர்" இல்லாமல் வாழமுடியும் என்று நினைத்து பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தவனுக்கு தன் நண்பன் சீனு, ஏறி கரையில் அமைந்துள்ள  ஒரு விறகு கடையின் வாசலில் "சுப்ரமணியை" கட்டிபிடித்து கொண்டு தூங்கி கொண்டு இருப்பது தெரியவில்லை.

தொடரும்...அடுத்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்


www.visuawesome.com

5 கருத்துகள்:

  1. வெயிட்டிங்க் பார் கமல் சார் ஓப்பனிங்க் , செம்யா போது.. தொடருங்க.. sir..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெயசீலன். உம்மை போன்றோரின் உற்சாக வார்த்தைகள் என்னை எழுத தூண்டுகின்றன. சீனு, சீக்கிரம் வருவான்.நானும் காத்து கொண்டு தான் இருக்கின்றேன்.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...