திங்கள், 22 செப்டம்பர், 2014

சமூக பணிகளில் ஈடுபட விரும்புகிறேன்;சச்சின் (கேக்குறவன் கேனையா இருந்தா...)


என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம்னு தினமலர் வலை தளத்திற்கு போனா, தலைப்பு செய்தி... இது  தான்..

"சமூக பணிகளில் ஈடுபட விரும்புகிறேன்;சச்சின் தெண்டுல்கர்"


கேக்குறவன் கேனையனா இருந்தா, "மிக்ஸில மீன் வருத்தேன்னு சொல்வாங்க".

ஐயா.. டெண்டுல்கர் ஐயா... சமூக பணி என்பது... மட்டை எடுத்து ஓங்கி அடிச்சிட்டு... அதுக்கு அப்புறம் விளம்பரத்தில் சிரிச்சிட்டு நிற்பது அல்ல. சமூக பணி என்பது, ஒரு உணர்ச்சி. அது தானா வரணும்.

நீங்கள் பெரிய கிரிகெட் வீரன் தான். அதற்க்கு மறுப்பே இல்லை. ஆனால், மனசாட்சிக்கு விரோதமா செயல் படுவதில் நீங்களும் ஒரு சராசரி மனிதன்.. ஏன், சராசரி  மனிதனுக்கும் கீழே தான்.

இவருடைய ரசிகர்கள் என்னை வெறுப்பதற்கு முன்.. என் வாதங்களை எடுத்து வைக்கின்றேன்.

கிரிக்கெட் ஆட்டத்தில் சூதாட்டம் என்பது அருமை வீரர் சச்சின் அவர்களின் நாட்களில் ஓங்கி இருந்தது. இவர் ஆடிய பல ஆட்டங்கள் இந்த சூதாட்டகாரகளால் நிர்ணயிக்க பட்டது. சச்சின் அவர்கள் இந்த சூதாட்டகாரர்களோடு சேர்ந்து ஆட்டத்தின் புனிதத்தை கெடுத்தார் என்று நான் எப்போதும் கூற மாட்டேன். இவர் சூதாட்டத்தில் பங்கேற்றார் என்று இதுவரை எந்த குற்ற சாட்டும் வந்தது இல்லை.

என் வாதமே.. வேறு.

இப்படி சூதாட்டம் தலை விரித்து ஆடுகையில், இவர் அதை பற்றி எதுவுமே கூறவில்லை. பல்லாயிர கணக்கான ரசிகர் ஏமாந்து கொண்டு இருக்கையில், இவருக்கு தேவை எல்லாம் அடுத்த சதம்... விளம்பரம் .. அதில் எத்தனை சதவீதம். இப்படி சதம் மற்றும் சதவீதம் பற்றியே கவலை படும் இவர் எப்படி சமூக பணியில் ஈடுபடுவார்?


சரி, ஒரு மனிதன் குற்றம் செய்யாவிட்டாலும், அந்த அநியாயத்தை பார்த்து அமைதியாய் இருந்தால் அதுவும் குற்றம் தானே. இவ்வளவு வருடங்களாய் இந்த அநியாயத்தை பற்றி எதுவும் பேசாத இவர், எப்படி சமூக பணியில் ஈடுபடுவார்?

சரி, இவருக்கு ஒரு வாய்ப்பு தான் கொடுத்து பார்ப்போமே... என்று கூறுபவர்களுக்கு..

இரண்டு வருடங்களுக்கு முன் இவருக்கு ராஜா சபா சீட் வழங்க பட்டது. அந்த பதவி ஏற்ப்பு விழாவிற்கு சென்றதோடு சரி. அதற்க்கு பிறகு அந்த பக்கம் தலை சாய்த்து வைத்து கூட படுக்கவில்லை.இது ஒரு விஷயமா என்று கேட்பவர்கள்.. இதை படிக்கவும். இந்த அநியாயத்தை படித்த பின்னும் நான் சொல்வது தவறு என்றால், பின்னோட்டம் இடவும், நான் அதற்கு பதில் தருவேன்.

கை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு...



கிரிக்கெட் ஆட்டம் நம் நாட்டை சுத்தமாக அழித்துவிடும். இந்த ஆட்டமே... நாம் ஓர் காலத்தில் அடிமைகளாக இருந்தோம் என்பதற்கான கேவல அடையாளம். அது மட்டும் இல்லாமால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் நாம் தமிழன் என்று கூறினால், நமக்கு கிடைப்பது ...அவதூறும், அவமானமும், பேராசைகாரகள் என்ற பெயரும் தான்... ( நன்றி திரு ஸ்ரீனிவாசன் மற்றும் அவர் மருமகன் மெய்யப்பன்).

இந்த விளையாட்டில் சம்பாதித்ததை காக்க வேண்டும் என்று சச்சின் இப்படி ஏதாவது சமூக பணி.. லொட்டு.. லொசுக்கு என்பார். இவர் 'எச்சில் கையில் காகம் விரட்டாதவர். இவராவது... சமூக பணியாவது.

Ferrari என்ற சொகுசு வாகனத்தை வரி இல்லாமல் இறக்குமதி செய்து... அதை லாபத்திற்கு விற்று பணத்தை ஏப்பம் விட்ட இவர் சமூக பணி செய்ய போகிறாரா.

போய்,  கவாஸ்கர் - சாஸ்த்ரி அவர்களோடு  சேர்ந்து ஜால்ரா போடுங்க... நல்ல வருமானம்.

சமூக பணி எல்லாம் நமக்கு எதற்கு?

www.visuawesome.com

14 கருத்துகள்:

  1. மும்பை சொகுசு பங்களாவ விட்டுட்டீங்களே....சமூகப் பணி செய்வதற்கு தடை ஏதும் இருக்கப் போவதில்லை, ஆனால் அதை பப்ளிக்குட்டி செய்து தான் செய்யவேண்டும் என்றால் அதற்கு செய்யாமலே இருந்துவிடலாம்.. முதலில் உங்கள் தொகுதியை தேர்ந்தெடுத்து தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழியுங்கள்...அப்புறம் உங்கள் காசில் சேவை செய்யலாம்,அரசுப் பணமே தூங்குகிறது இன்னும் கஜானாவில்....நல்ல பதிவு...சார்..

    பதிலளிநீக்கு
  2. ///கேக்குறவன் கேனையனா இருந்தா, "மிக்ஸில மீன் வருத்தேன்னு சொல்வாங்க".///

    மீன் என்றால் உங்களுக்கு உயிரா???

    பதிலளிநீக்கு
  3. மனைவி யாழ்பாணத்து தமிழச்சி... மதுரை... விட்டால் மீன் தான்... எங்க ஊரு பக்கம் வந்தா சொல்லுங்க... மதுரையில் இருக்க எல்லா மீனும் இங்கே கிடைக்குது...

    பதிலளிநீக்கு
  4. correcta soneenga gee intha alu oru vilampara piriyar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்த சொல்லுறது..... ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருப்பான்.

      நீக்கு
  5. சமூக பணிகளில் ஈடுபட விரும்புகிறேன்;சச்சின்/// ellam vilampara paduthithaan seyvaro...

    ungalin vaatham sachin ku mattum illai. ippadi arikkai vittu seyum entha pirapalangkalukkum porunthum.
    சமூக பணி என்பது, ஒரு உணர்ச்சி. அது தானா வரணும்./

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி மகேஷ்....நீங்க சொன்ன மாதிரி, இந்த வாதம் இவங்க எல்லாருக்குமே பொருந்தும் தான் போல இருக்கு.

      நீக்கு
  6. கேழ்வரகுல நெய்வடியும் என்று சொன்னா கேட்கிறவன் மடையனா இருப்பான் என்பதும் பழமொழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி ஐயா... இந்த "கேழ்வரகுல நெய்வடியும்" பழமொழிய தான் மறந்து விட்டேன். அதற்க்கு பதிலா தான் மீன் மொழிய எழுதினேன். நினைவூடியதிர்க்கு நன்றி.

      நீக்கு
  7. இன்னும் பீல்டுல இருக்கறேன்னு காட்டிக்க இப்படி அடிக்கடி ஏதாவது அடிச்சு விடுவாரு இவரு! குற்றம் செய்யாவிட்டாலும் பார்த்துக் கொண்டிருப்பது தவறுதான்! அருமையான பதிவு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதனால் எல்லாருக்கும் தெரிவித்து கொள்ள படுவது என்னவென்றால்.... நம் சச்சின் டெண்ட்டுல்கர் சமூக பணியில் ஈடுபடபோகிறார்..... எல்லாரும் ஒரு முறை ஜோரா கை தட்டுங்கள்...வருகைக்கு நன்றி தளிர்...

      நீக்கு
  8. பாராளுமன்றத்தின் பக்கமே செல்லாத ராஜ்யசபா உறுப்பினர்
    சமூக சேசை ஆற்றப் போகிறாரா வேடிக்கைதான்
    நமது இளைஞர்கள் எதைப் பற்றியும் கவலைப் படாமல், இவர் போன்றோரின் விசிறிகளாக இருக்கிறார்கள் அல்லவா, அதனால் இவர் பேசத்தான் செய்வார்

    பதிலளிநீக்கு
  9. "இல்லிங்கய்யா... சும்மா ஒரு விளம்பரம்......"

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...