Sunday, February 28, 2016

"முத்து" என்றால் என்னை பொறுத்தவரை "ரஜினி" அல்ல!

சினிமா என்று ஒன்றை நான் பார்க்க ஆரம்பித்ததில் இருந்தே அதில் உள்ள நகைசுவை நடிகர்களின் ரசிகன் ஆகியவன் நான். சிறு வயதில் MGR அவர்களின் படங்களை ரசித்த நான், கதாநாயகானாகிய MGR  அவர்களை எவ்வளவு ரசித்தேனோ அதே அளவு அவர் படத்தில் அங்கு இங்கு வரும் நடிகர் நாகேஷ் அவர்களையும் ரசித்து வந்தவன்.

Monday, February 22, 2016

சும்மா பொதுவா காலாய்க்கலாம், வாங்க!

சில நாட்களாகவே பதிவு எழுதும் அளவிற்கான நேரம் இல்லை. அதனால் நம்மால் முடிந்த அளவிற்கு யாரையாவது கலாய்க்கலாம் என்று தான் இந்த மாதிரி ஒரு கார்ட்டன் போட்டு ஆரம்பித்தேன்.

நிறைய நண்பர்கள், தேர்தல் வரை இப்படியே இருங்கன்னு சொன்ன அன்புகட்டளைக்கு கீழ் படிந்து கலாய்ப்பு தொடர்கின்றது.


Thursday, February 18, 2016

நமக்கு புதைகுழி வெட்டும் சனியன்கள்....
சரி,

இன்று செய்தித்தாளை படிக்கலாம் என்று போனால், முகத்தில் அடித்தார் போல் ஒரு புகைப்படம். அதில் சில கரை வேட்டி அடிமைகள், மக்களை பார்த்து உங்களை கொலை செய்யவும் நாங்கள் தயங்கமாடோம். உங்களால் எங்களை என்னை செய்ய முடியும் என்று கேட்பது போல் ஒரு பெரிய தோரணம் வைத்து அதில் அவர்கள் நால்வரின் ஆளுயுர புகைபடம் வேறு போட்டு சிரித்து கொண்ட படி நிற்கின்ற

Wednesday, February 17, 2016

எண்ணுக்கு உயிர் அழகு ...

அகிலத்தின்  பொழுதுபோக்கின்   தலைநகரம்,  உலகின் எந்த ஊரில் திரைப்படத்தை சார்ந்த பணிகள் நடக்கும் இடத்தை பாலிவுட் , கோலிவுட் ,
டாலிவுட் என்று பெயரை மாற்ற வைத்த ஹாலிவுட் நகரத்திற்கு இன்று ஒரு முக்கிய நாள்.

இது எப்படி சாத்தியமாகும் என்று அனைவரையும் வியக்கவைக்கும் திரை துறையை சார்ந்த ஜம்பாவான்களை திரும்பி பார்க்கவைக்கும் நாள் அல்லவா இது?

Thursday, February 4, 2016

இப்ப என்ன சொல்ல வரீங்க?


இன்றைக்கான கலாய்ப்பில்   அதிகம் இடம் பெறுவது நம் அரசியல்வாதிகளே. 


நமக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஒவ்வொரு தேர்தலிலும் தி மு க மற்றும் அ தி மு க வுடன் கை கோர்த்து கொண்டு ஓட்டுக்காக கையேந்தி வந்த இவர் சொல்கிறார்....என்னத்த சொல்வேன்...


Wednesday, February 3, 2016

நேற்றைய கலாய்ப்புகள்.. "அண்ணாவில் இருந்து கேயில்" வரை !அறிஞர் அண்ணாவின் மேல் எனக்கு அதிக மரியாதையை இருந்தது. படித்தவர். சிந்தனையாளர், நல்ல  தேர்ந்த ஆட்சியாளர்.  இந்த வாரம் அவரின் நினைவு நாளை அனுசரித்தோம். 

இவர் தமிழகத்திற்கு  எவ்வளவு நல்லது செய்து இருந்தாலும் நடித்து கொண்டு இருந்த சினிமா காரகளை வழிய வழிய அழைத்து வந்து அரசியலில் சேர்த்தது அவரின் சுயநலமே. 


இவர் போட்டு வைத்த பிள்ளையார்  சுழி, தமிழகம் இந்த சினிமா  
காரர்களுக்கு அடிமையாகிவிட்டது.

ஒரு படம் ஹிட் என்றால் அடுத்த முதல்வர். கொஞ்சம் மார்கட் ஏறிவிட்டால் அரசியல் பேச்சாளர். வேறு எந்த இனத்திலும் இல்லாத ஒரு கேவலமான "ஹீரோ வொர்ஷிப்".

எனக்கு என்னமோ அண்ணா செய்த இந்த தவறு ஒரு மன்னிக்க  முடியாத தவறு.  

அடுத்து :

அந்த கல்லூரிக்கு யார் அனுமதி கொடுத்தா?
நாங்க இல்ல.. அவங்க ஆட்சியில்...

பெட்ரோல் விலைய ஏன் அம்பானியும்  அடானியும் நிர்ணயிக்கணும்.
நாங்க போட்ட கொள்கை இல்லை. அவங்க போட்ட கொள்கை.

இப்படி எதுக்கு எடுத்தாலும் நாங்க இல்ல அவங்க.. நாங்க இல்ல அவங்க.. டேய் அப்ப்ரண்டிச்களா... இந்த மாதிரி முட்டாள்தனமான கொள்கையை போட்டதுனால தான் அவங்கள துரத்தி அடித்து உங்களை உக்காராவைச்சோம். இன்னும் எதனை நாள் தான் நாங்க இல்ல அவங்கன்னு சொல்லுவீங்க.


இதையும் கேளுங்க ...

அடுத்து .. இதனை என்ன சொல்றது? இவ்வளவு கேவலமா நடத்திய பின்னும் இப்படி ஒரு விசுவாசமா?


மற்றும்

இத்தனை நாளா நம்மை ஆண்டவங்க பண்ண வேலையை பாத்திங்களா?
ஊழலால்  குற்றம் எங்க மேலே இல்லன்னு பெருமையா சொல்ல கூடிய நிலைமை.

என்னமோ போங்க.கடைசியா ..

ஊழல் புகார் இல்ல, சந்தோசம். ஆனால் இந்த பெரிச்சாளிகள் ஆதிக்கம்.. நாட்டு நலனுக்கா?

Tuesday, February 2, 2016

அவர்கள் உண்மைகள் " மதுரை தமிழனுக்கு ஒரு சவால் !

கழுதை கெட்டால் குட்டி சுவர் கதைகேர்ப்ப நேற்று மாலைகணினியில் அமர்ந்தேன். முகநூலை தட்டியவுடன் ..Deej Durai  (அதுதாங்க மதுரை தமிழன் ) அவருடைய பக்கத்தில், RJ  விசுAwesome  போலவே ஒரு கார்ட்டூன் இருந்தது. கார்ட்டூன் கூடவே "நச்ச் " என்ற கலாய்ப்புகள் வேறு.

அடே அடே .. இது சூப்பரா இருக்கே என்று படித்து கொண்டே போகையில் இறுதியில் ஒரு டிஸ்க்கி .

Monday, February 1, 2016

இரயில் பயணங்களில் ...

ஞாயிறு மதியம் போல் சமையலறையில் அம்மணிக்கு உதவி செய்து கொண்டு இருக்கையில்...

என்னங்க.. இது என்னா தெரியுதா?

சுரைக்காய்.

பெரிய சமையல் காரன்னு பேசின்னு இருக்கிங்களே .. இதை எப்படி
செய்யனும்னு தெரியுமா?

சுரைக்காய்.. எனக்கு... ஹ ஹா ஹா என்று ரஜினி பாணியில் சிரிக்க..

தெரியுமா .. தெரியாதா?

தெரியும்.

இந்தியாவில் எப்படி சமைப்பீங்க..

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...