அறிஞர் அண்ணாவின் மேல் எனக்கு அதிக மரியாதையை இருந்தது. படித்தவர். சிந்தனையாளர், நல்ல தேர்ந்த ஆட்சியாளர். இந்த வாரம் அவரின் நினைவு நாளை அனுசரித்தோம்.
இவர் தமிழகத்திற்கு எவ்வளவு நல்லது செய்து இருந்தாலும் நடித்து கொண்டு இருந்த சினிமா காரகளை வழிய வழிய அழைத்து வந்து அரசியலில் சேர்த்தது அவரின் சுயநலமே.
இவர் போட்டு வைத்த பிள்ளையார் சுழி, தமிழகம் இந்த சினிமா
காரர்களுக்கு அடிமையாகிவிட்டது.
ஒரு படம் ஹிட் என்றால் அடுத்த முதல்வர். கொஞ்சம் மார்கட் ஏறிவிட்டால் அரசியல் பேச்சாளர். வேறு எந்த இனத்திலும் இல்லாத ஒரு கேவலமான "ஹீரோ வொர்ஷிப்".
எனக்கு என்னமோ அண்ணா செய்த இந்த தவறு ஒரு மன்னிக்க முடியாத தவறு.
அடுத்து :
அந்த கல்லூரிக்கு யார் அனுமதி கொடுத்தா?
நாங்க இல்ல.. அவங்க ஆட்சியில்...
பெட்ரோல் விலைய ஏன் அம்பானியும் அடானியும் நிர்ணயிக்கணும்.
நாங்க போட்ட கொள்கை இல்லை. அவங்க போட்ட கொள்கை.
இப்படி எதுக்கு எடுத்தாலும் நாங்க இல்ல அவங்க.. நாங்க இல்ல அவங்க.. டேய் அப்ப்ரண்டிச்களா... இந்த மாதிரி முட்டாள்தனமான கொள்கையை போட்டதுனால தான் அவங்கள துரத்தி அடித்து உங்களை உக்காராவைச்சோம். இன்னும் எதனை நாள் தான் நாங்க இல்ல அவங்கன்னு சொல்லுவீங்க.
இதையும் கேளுங்க ...
அடுத்து .. இதனை என்ன சொல்றது? இவ்வளவு கேவலமா நடத்திய பின்னும் இப்படி ஒரு விசுவாசமா?
இத்தனை நாளா நம்மை ஆண்டவங்க பண்ண வேலையை பாத்திங்களா?
ஊழலால் குற்றம் எங்க மேலே இல்லன்னு பெருமையா சொல்ல கூடிய நிலைமை.
என்னமோ போங்க.
கடைசியா ..
ஊழல் புகார் இல்ல, சந்தோசம். ஆனால் இந்த பெரிச்சாளிகள் ஆதிக்கம்.. நாட்டு நலனுக்கா?
நல்லாத்தான் இருக்கு எல்லாமே.
பதிலளிநீக்குஹஹஹ செம..
பதிலளிநீக்கு