Thursday, March 31, 2016

April 1 : கொடியிலே மல்லியபூ .....அடி ராசாத்தி

ஏப்ரல் 1 என்றவுடனே எனக்கு நினைவில் வரும் நிகழ்ச்சி. பெங்களூரில் வேலை பார்த்துகொண்டு இருந்த நாட்கள். ஒரு நாள் மாலை வேலை. நான் உண்டு என் வேலை உண்டு என்று இன் அறையில் அமர்ந்து இருந்தேன். அப்போது என் தாயாரும் என் மூத்த சகோதரியும் நாங்கள் வெளியே கடைக்கு செல்கிறோம் "வயசு பையன் தனியா இருக்க, கதவை பூட்டி கொள்"என்றார்கள்.


அவர்களை அனுப்பிவிட்டு கதவை பூட்டி கொண்டு இளையராஜாவிடம் தஞ்சம் புகுந்தேன்.  இரண்டு நிமிடத்தில் வீட்டு அழைப்பு மணி அலறியது. கதவை திறந்து வெளியே பார்த்தால் ஒரு 13-14 வயது பெண், தலையில் மல்லிகை பூ கூடையோடு. நான் எதுவும் சொல்ல ஆரம்பிக்கும் முன் அவளே ஆரம்பித்தாள். இப்ப போனாங்களே அந்த அம்மாவும் அவங்க பொண்ணும், உன்னை 4 முழம் வாங்கி வீட்டிலே கைக்குட்டை ஈரமாக்கி அதிலே சுத்தி வைக்க சொன்னாங்க. முழம் 2 ருபீஸ் என்று சொல்லி என்னிடம் 8 ருபீஸ் வாங்கி கொண்டாள். மீண்டும் ஒருமுறை மறக்காமல் ஈர துணில சுத்தி வை என்று சொல்லிவிட்டு போனாள்.

Wednesday, March 30, 2016

பயணங்கள் முடிவதில்லை... ஆமாங்கோ...

டாடி.. சீக்கிரம் தூங்க போங்க.. நாளை காலை 4 மணிக்கு எழுனு ..

நாலு மணிக்கு நீ தானே எழுனும், அதுக்கு நான் ஏன் சீக்கிரம் தூங்க போகணும்?

என்று கேட்க பதிலோ அம்மணியிடம் இருந்து வந்தது.

யாராவது ஏதாவது சொன்னா அவங்க சொல்ல வந்தத ..

நான் முடிச்சிவைக்கிறேனா?

அதே தான்.. உங்களுக்கு கொஞ்சம்..

பொறுமை தேவையா?

ஏங்க.. நான் சொல்ல வந்ததே..

வேறயா?


ஐயோ... எனக்குன்னு வந்து...

வாச்சி இருக்கா?

என்று என் அம்மணி பேசி கொண்டே இருக்கையில்...

ஓய் டாடி.. ஒய் டூ யு கம்ப்ளீட் அதர் பீபெல்ஸ்...

செண்டன்ஸா..

கொஞ்சம் .. ஒரு நிமிஷம் அமைதியா...

இருக்கேன் .. சொல்லு..

நாளை காலையில் நாலு மணிக்கு எழுனும்.. சீக்கிரம் தூங்க போங்க..

சொல்லுறத நான் சொல்லிபுட்டேன்னா ....

வளரும் கவிதையில் அடியேனின் நேர்காணல்....

வணக்கம்....

மதிப்பிற்குரிய சக பதிவாளர், நாம் அனைவரும் நன்கு அறிந்த கவிஞர் முத்து நிலவன் அவர்கள் தன்னுடைய வலைபக்கத்தில் மற்ற பதிவர்களை நேர்காணல் கொண்டு பதிவு செய்கின்றார்.

அந்த தொடரில் இம்முறை அடியேன் வந்துள்ளேன். என் நேர்காணலை காண இங்கே சொடுக்கவும்....இணைய தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் நேர்காணல் (3) நகைச்சுவையில் கலக்கும் விசு.

அடியேனை அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி ஐயா. 

Tuesday, March 29, 2016

பெண்களின் கூந்தலில் .....

டாடி..அஞ்சு மணி அடிச்சாசி.. எங்கே ஆளே  காணோம் ..

என்று இளையவள் அலை பேசியில்  அதட்ட அருகில் நேரத்தை பார்த்தேன் 5:00:34.

ஒரு ஆணின் வாழ்க்கை தான் எவ்வளவு சோகமானது. பிறந்ததில் இருந்து பாட்டி- அம்மாவின் அதிகாரம், வளருகையில் அக்கா-தங்கச்சி அதிகாரம், வளர்ந்தபின் காதலி-மனைவியின் அதிகாரம், அது முடிந்தவுடன் பெத்த மகளின் அதிகாரம், இதிலேயும் சில நல்ல ராசிகாரர்களுக்கு ...அம்மா -மனைவி-மகள் என்ற மூவரின் அதிகாரமும் ஒன்றாய் வரும், நம்ம அந்த ராசி தானே என்று நொந்து கொண்டே...

இப்ப தான ராசாத்தி அஞ்சு ஆச்சி, வரேன்..

சீக்கிரம் கிளம்புங்க டாடி..வந்தவுடன் என்னை வெளியே கூட்டினு போகணும்.

எங்க?

பீயுட்டி  பார்லர் .

ஒன்னும் இல்ல .. செவ்வாய் தோஷம் .Monday, March 28, 2016

எழுத படிக்க கொத்தில்லா!

இந்த வாரம் வலைசரத்தில் சகோதரி க்ரேஸ் அவர்கள் என்னை அறிமுகபடுத்தி இருந்தார்கள். அவர்களுக்கு முதற்கண் வணக்கம். நான் எழுதிய சில பதிவுகளை குறிப்பிட்டு எழுதிய இருந்த அவர்கள்.. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு என்ற பதிவையும் அங்கே சுட்டி  காட்டி இருந்தார்கள்.
மேலே போகும் முன் அந்த பதிவை படித்து விட்டு வந்தால் இந்த பதிவிற்கான அர்த்தம் தெரியும். அந்த பதிவில் 15வயதாகிய என் மூத்த ராசாத்தி, தான் கார் ஓட்டத் தயாராகிவிட்டேன் என்று பேச ஆரம்பித்ததை பற்றி எழுதி இருந்தேன்.
அது மட்டும் இல்லாமல் இங்கே 15 வயது பிள்ளைகளுக்கு லைசென்ஸ் எப்படி வாங்குவது என்றும் எழுதி இருந்தேன். அந்த பேச்சை முடிக்கையில்  “டாடி, நீங்கள் எப்படி லைசென்ஸ் வாங்கினீர்கள்” என்று கேட்ட கேள்விக்கு .. இந்தியாவில் வாங்கியதாயிற்றே, அதை எப்படி வாங்கினேன் என்று சொல்ல முடியுமா ? என்று முடித்தேன்.

அன்றும் சரி , இன்றும் சரி , அதை எப்படி வாங்கினாய் என்று நிறைய கேள்வி வந்துள்ளது.
அந்த கதையை இதோ சொல்கிறேன். 21 வயதானவுடன் முதல் சம்பளம் வாங்கி ஒரே மாதத்தில் முதல் வேலையாக வீட்டில் மிகவும் தொந்தரவு பண்ணி KB 100 (KAWASAKI பஜாஜ்) என்ற வாகனத்தை வாங்கி விட்டேன்.  வண்டி வாங்கி நாலு மாதம் கழித்து தான்  ஊரில்இருந்து வந்த போலிஸ்கார மாமா , வண்டி இருக்கட்டும் ,எங்கே லைசென்ஸ் காட்டு என்றார் .
லைசென்ஸ் .. அது எதுக்கு ?
படவா ராஸ்கல், லைசென்ஸ் இல்லாமலா வண்டி ஓட்டுற ? முதலில் போய்  லைசென்ஸ் வாங்கி வா என்று சொல்லி வண்டியின் சாவியை எடுத்து கொண்டார் .

Sunday, March 27, 2016

கலாய்க்க போவது யாரு ? ஏப்ரல் 2016 போட்டி.

வணக்கம் பதிவர்களே...சென்ற மாதம் அடியேன் ஆரம்பித்து வைத்த "கலாய்க்க போவது யார் ?என்ற போட்டியின் முடிவு அனைவரும் அறிந்ததே.  அடியேன் ஒரு கார்டூன் போட்டு அதில் வாசகர்களை ஒரு வசனத்தை எழுத அழைத்து இருந்தேன். அநேகர் பங்கேற்ற இந்த போட்டியில் நண்பர் மலர்வண்ணன் அளித்த கார்ட்டூன் வெற்றி பெற்றது.

இந்த போட்டியை நான் ஆரம்பிக்கும் போது என் மனதில் வந்த ஒரே எண்ணம்     "பதிவர்களாக இருக்கும் நமக்கு இந்த பதிவுகளினால் வரும் ஒரே வருமானம் ஒரு மகிழ்ச்சி தான்". இந்த மகிழ்ச்சியை நாம் எப்படி நம் குடும்பத்தோடு பகிர்ந்து  கொள்ள போகிறோம்.

அதனால் தான் இந்த போட்டியை உருவாக்கி வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவகத்தில் இருந்து 2,500 ருபாய்க்கு  கிப்ட் கார்ட் கொடுத்து அதை அவர்கள் தம் குடும்பத்தோடு சேர்ந்து மகிழும் படி அமைத்தேன்.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற மலர்வண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றார். அவர் அதை எப்படி கொண்டாடினார் என்பதை ஒரு பதிவாக வெளியிட்டுள்ளார் .அதை படிக்க இங்கே சொடுக்கவும்.


சரி, இந்த போட்டியை மாதம் ஒரு முறை வைக்கலாம் என்று முடிவு பண்ணியுள்ளேன். அடுத்த போட்டிக்கான கார்ட்டூன் இது தான்.

மயங்கி விழுற அளவுக்கு அப்படி என்ன செய்தியை ரேடியோவில் கேட்டார் ?


அப்படி அவர் கேட்ட செய்தி என்னவாய் இருக்கும்? 

உங்கள் காலாய்ப்பை பின்னூட்டத்தில் தாருங்கள்...போட்டிக்கு வரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 

போட்டியை பற்றி சில விதிமுறைகள்.

மொத்த பரிசு தொகை ருபாய் 2,500. 

  • உணவகத்தின் "கிப்ட் கார்டாக" மட்டுமே வழங்கப்படும். பணமாக அளிக்க படமாட்டாது.
  • ஏற்கனவே வென்றவர்களும் பங்கேற்கலாம்.
  • ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
  • ஏப்ரல் மாதத்தின் போட்டி இன்று (மார்ச் 27) துவங்குகின்றது.
  • முடிவுகள் ஏப்ரல் 9ம் தேதி வெளிவரும்.
நண்பர்கள் சிலரின் யோசனையால் போட்டியின் நாட்கள் மாற்ற பட்டுள்ளது. 
மார்ச் 27ம் தேதி ஆரம்பித்த இந்த போட்டி ஏப்ரல் 8ம் தேதி முடிவடையும். இவ்வாறு செய்வதின் மூலம் போட்டியின் முடிவிற்காக பங்கேற்பவர்கள் ஆவலோடு இருக்கும் போதே அறிவிக்க படும் வாய்ப்பு. இந்த யோசனை சரியாக பட்டதால் போட்டியின் முடிவு ஏப்ரல் 9ம் தேதி மாலை 7 மணி (இந்திய நேரப்படி) அறிவிக்கப்படும்.

தங்கள் புரிதலுக்கு நன்றி. 

பின் குறிப்பு :

இது ஒரு சராசரி மனிதனால் இன்னொரு சராசரி குடும்பத்திற்காக நடத்தபடும் சராசரி போட்டி. வரும் பின்னூட்டங்களில் எனக்கு பிடித்ததை தேர்வு செய்கிறேன்.

தங்களில் யாரவது இந்த முறையில் வெற்றியை தீர்மானம் செய்வதை விட, வேறு மாதிரியாக வெற்றியை தீர்மானித்தால்  நலமாக இருக்கும் என்று நினைத்தால், எனக்கு தெரிவியுங்கள்.

மற்றும்.. ஒரே ஒரு பரிசிற்கு பதிலாக முதல் மூன்று பரிசு தரலாமே என்ற ஒரு எண்ணமும் சில நாட்களுக்கு முன் வைக்கப்பட்டது. அதை பற்றி உங்களின் கருத்தையும் கூறுங்கள்.


கடந்த போட்டியில் மலர் வண்ணன் அவர்களின் வெற்றி பெற்ற கார்ட்டூன், இதோ...


Thursday, March 24, 2016

ஹூஸ்டன் ... வி ஹேவ் எ ப்ராப்ளம் ....

படிப்பு.. படிப்பு.. என்று இல்லாமல் ராசாத்திக்கள் அனைத்து துறையையும் அறிய வேண்டும் என்று நினைப்பவன் அடியேன். என்னதான் பள்ளி படிப்பு முக்கியமாய் இருந்தாலும் ..ராசாத்திக்கள் இருவரும் தினந்தோறும் பியானோ அல்லது கிட்டார் வாசித்து சில நிமிடங்கள் கழிக்க வேண்டும் என்பது ஒரு கட்டளை. இசை மட்டும் இல்லாமல் வாரத்தில் குறைந்த பட்சம் 4 நாளாவாது வெளியே சென்று "கோல்ப்" ஆட வேண்டும். இவர்கள் படிக்கும் பள்ளியில் கோல்ப் அணியில் சேருவது  குதிரை கொம்பு.

இருந்தாலும் வருட கணக்கில் செலவு செய்த நேரத்தினாலும் சரியான பயிற்ச்சியினாலும் அடியேனின் மூத்த ராசாத்தி தான் இந்த வருடம் பள்ளியின் கோல்ப் அணியின்  கேப்டன். இளையவள் அடுத்த வருடம் தான் உயர்நிலை பள்ளி போகின்றாள். எப்படியும் முதல் வருடத்திலேயே அணியில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற பிடிவாதம். இப்படி படிப்பு-பியானோ-விளையாட்டு என்று காலம் போய் கொண்டு இருகின்றது.

சரி, தலைப்பிற்கும்  இதற்கும் என்ன சம்பந்தம்? பொறுமை.

இவர்கள் இருவரும் பயிலும் பியானோ வகுப்பிற்கு வருடா வருடம் தேர்வு உள்ளது. மொத்தம் 9 வருடம் அதை முடித்த  பின் ஒரு அட்வான்ஸ்ட் தேர்வு. மூத்தவள் 9வது தேர்விற்கும் இளையவள் 7வது தேர்விற்கும் செல்லும் நேரம்.

தேர்வு சாலையை அடைந்தவுடன், அங்கு இருந்த பியானோ ஆசிரியை .. அடியேனை பார்த்து...

வேர் ஆர் யு ப்ரம்?

என்று கேட்க.. அடியேனோ.. இந்தியா என்று சொல்ல.. அதற்கு பதிலாக அவர்கள்.. .நீ பார்க்க இந்தியனை போல் தான் இருகின்றாய் .. ஆனால் பிள்ளைகள் இருவரும் இலங்கை போல் இருகின்றார்கள் என்று சொல்ல..

நானோ பேய் அறைந்தவன் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக) மற்றொரு நாள் சொல்கிறேன்) போல் ஆனேன்.

Monday, March 21, 2016

என்னை விட கேடு கேட்டவன் எவனும் இல்ல...

கடந்த ஒரு மாதமாக விஜய் மல்லையா என்னும் சனியை பற்றிய செய்திகள் நிறைய வந்தது. இந்த மல்லையா என்பவர் மிக பெரிய புத்திசாலி என்றும் வியாபார தந்திரகாரர் என்றும் 80கல் இருந்தே ஒரு  செயற்கையான செய்தி பரப்பப்பட்டு வந்தது.

மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர், அது என்னவோ உண்மை தான். இன்னும் சொல்ல போனால் அது மட்டும் தான் உண்மை. அதை தவிர இவரின் புத்திசாலித்தனம் அனைத்தும் ... புரளியே..

சோமபானம் தாயரிக்கும் ஒரு நிறுவனம். இந்தியாவில் சோமபானம் தயாரித்து எவனாவது நஷ்டத்தை அடைய இயலுமா? அது போல் இவரின் சோமபானம் அதிக அளவில் லாபத்தை பெற்று வந்தது. சோமபான லாபத்திற்கு குடிக்காரகள் இருந்தால் போதும். புத்திசாலித்தனம் தேவை இல்லை.

இந்த ஒரு நிறுவனத்தை தவிர மற்ற அனைத்திலும் இவர் பெற்றது பெரிய நஷ்டமே. இந்த நஷ்டத்தை அடையும் அனைத்து   நிறுவனத்திற்கும் தான் வங்கிகள் போட்டி போட்டு கொண்டு கடன் தந்தன.

Sunday, March 20, 2016

சம் மோர் குழம்பு ப்ளீஸ் ....

டிங் .. டாங்...

ஞாயிறும் அதுவுமா மதிய உணவு நல்லா ஏதாவது அம்மணி செஞ்சு இருப்பாங்கன்னு யோசித்து மேசையில் அமர அங்கே நேத்து ராத்திரி  மீந்த  ஐட்டம் மட்டும் இருக்க நொந்து கொண்டே உண்டு விட்டு..

அத்திப்பூத்தது போல் ஒரு பூனை தூக்கம் போடலாம் என்று நினைத்து கண்ணை மூடும் வேளையில்.. அழைப்பு மணி...

அடியேன் இல்லத்தில் தான் மூன்று சந்ததியை சேர்ந்த நான்கு தாய்குலம் இருக்கின்றதே.. யாராவது கதவை திறப்பார்கள் என்ற நப்பாசையில் தூங்க முயல...

மணி மீண்டும் அடித்தது...

யாராவது போய் யாருன்னு பாருங்களேன்...ப்ளீஸ்.

"பி தி மேன் ஆப் தி ஹவுஸ்", இளையவள் அவள் அறையில் இருந்தே அதட்டினாள்.

Thursday, March 17, 2016

ஸ்கூல் பர்ஸ்ட்! எல்லா பாடத்திலேயும் பர்ஸ்ட்!

வா தண்டம் ... என்ன வாயெல்லாம் பல்லு ...?
ஒன்னும் இல்ல வாத்தியாரே..
பாணி... விஷயத்த சொல்லு ...விஷயம் ரொம்ப நல்ல விஷயம் போல இருக்கே.. சொல்லு..
unnamedஎன் தங்கச்சி பையன் SSLC யில் 492 மார்க் எடுத்து இருக்கான்.. அந்த சந்தோசம் தான்.
அடேங்கப்பா.. 492 ... மாநிலத்தில் முதலா?
அட நீ ஒன்னு... நம்ம பிள்ளை அண்ணன் பையன் கூட 496 எடுத்து இருக்கான் அவன் முதல் 100 இடத்திலகூட இல்ல..
அட பாவி... நம்ம நாட்களில் எல்லாம் 490-498 போல ஒரு அஞ்சு பேர் எடுப்பாங்க .. அவங்க தான் மாநிலத்தில் முதல் இப்ப அப்படி இல்லையா..
இல்லை விசு.. இப்ப எல்லாம் சில பேர் 500-500 எடுக்குறாங்க.. இந்த வருஷம் மட்டும் மாநிலத்தில் முதலாவதாக 41 பேர் வந்து இருக்காங்க ..
சரி, நம்ம பசங்க எதோ நல்லா இருந்தா சரி தான்.
இப்படி பேசி கொண்டு இருக்கும் போது ... பேச்சு பல வருடங்களுக்கு முன்னால் நடந்த எங்கள் SSLC பரீட்சை மற்றும் மார்க்கிற்கு சென்றது...
தண்டம் தான் இந்த பேச்சை ஆரம்பித்தான்...
பிள்ளை ... நீ எவ்வளவு எடுத்த...?
386 ...
400க்கா ?
இல்ல .. 500க்கு தான் ..

Wednesday, March 16, 2016

என்ன சுகம்.. இது என்ன சுகம்...

என்ன டாடி, கொஞ்சநா நாளாகவே தண்டபாணி மாமாவிடம் இருந்து போன் வரல, அவரும் வீட்டுக்கே வரல.. சண்டையா?

கேட்டு கொண்டே வந்தாள், இளைய ராசாத்தி.

ஆமாம் மகள். ரொம்ப நாள் ஆச்சி இல்ல. ஹோப் எவரிதிங் இஸ் ஆல்ரைட் வித் ஹிம்.

என்று சொல்லிவிட்டு, அலைபேசியில் அருமை நண்பனை அழைத்தேன்.

ஹலோ!

தண்டம்.. எங்க ஆளே காணோம்.

வாத்தியாரே, கொஞ்சம் பிசி அப்புறம் கூப்பிட்டா ?

Sunday, March 13, 2016

“கெட்டிமேளம்-கெட்டிமேளம்,எங்கடா தாலி”
எது காதல்?
நான்காவது படிக்கையிலே நாள் பார்த்து என் எதிர்  வீட்டிற்கு  குடி வந்தாள், பெற்றோருடன் ஒரு சிறுமி.  அடுத்த நாள், என் பள்ளியில், என் வகுப்பில் என் அருகில் அவள் அமர (அவள் பெயரின் முதல் எழுத்தும் என்னை போலவே ,எங்கள் வகுப்பில் பெயர் வரிசையில் தான் அமரவைப்பார்கள், வள்ளுவனுக்கு வாசுகி போல, எனக்கும் ஒன்று. அவள் அப்பாவிற்கு நன்றி கூறினேன்), கண்டவுடன் கண்டுகொண்டேன் கன உலகில் சென்று விட்டேன்,காசு கொடுத்து வாங்கிய கமர்கட்டும் கசப்பாகியது.
இது காதலா?
எட்டாவது படிக்கையில் இதே சிறுமி பாவாடை சட்டையை எறிந்துவிட்டு, அரை தாவணியில் நின்ற பொது, மெய்மறந்து, அந்நாள் வரை இப்பெண்ணை விட அதிக மதிப்பெண் பெற்ற நான்,அவளிடமே சென்று கணக்கு பாடத்தில் சந்தேகம் என்று சந்தடி சாக்கில் சில வினாடிகள் திருடினேனே …
அது காதலா?

+2 படிக்கையிலே வேறொரு பள்ளியில் இருந்து எங்கள் வகுப்பிற்கு வந்த “பாத்திமா” அவள் அழகை “பார்த்தியாம்மா” என்று அவனன் அலைகையில் எனக்கு தெரிந்தது எல்லாம் என் முதல் எழுத்து சொந்தகாரியான இந்த எதிர் வீடு கம்மல் தான்.முதல் முதலாக முழு கால்சட்டை அணிந்த போது, டைலரிடம் ட்ரையல் பார்கையில் வெயிட் எ நிமிட் பார் 5 நிமிட்ஸ் என்று கூறி, எதிரில் வந்தவர்களையும் கண்டு கொள்ளாமல் எதிர் வீடிற்கு ஓடி சென்று முழு கால் சட்டையுடன் நின்று கொண்டு, பொருளாதாரம் புத்தகம் இரவல் கிடைக்குமா என்று நொந்து நின்றேனே.

Wednesday, March 9, 2016

சொன்னது நீ தானா.. சொல் .. சொல்.. சொல்..

கலாய்க்க போவது யாரு .. போட்டி முடிவு!

சென்ற வாரம் நாம் நடத்திய இந்த கார்ட்டூன் வசன போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.இதற்காக மொத்தம் 45 பின்னோட்டங்கள் வந்து இருந்தது. நாற்காலியை பார்த்ததும் அனைவரும் அதை ஒரு முதல்வரின் இருக்கை  என்றே குறிப்பிட்டு எழுதி இருந்தார்கள்.


அனைத்தையும் ரசித்தேன்.

Sunday, March 6, 2016

ஆதாமின் இழப்பிற்கு காரணம் சர்ப்பமே.. சம்சாரமே .. பட்டிமன்றம்

மனிதனாக பிறந்த அனைவரும் ... அவர் கிறிஸ்துவராக  இருந்தாலும் சரி, இஸ்லாமியராக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி, வேறு எந்த ஒரு மதத்தினை சார்ந்தவராக இருந்தாலும் சரி, ஏன், நாத்திகராக இருந்தாலும் சரி, அறிந்த ஒரு நிகழ்ச்சி,

ஆதாம் - ஏவாள் - சர்ப்பம் - மற்றும்  ஏதேன் தோட்டம்.

சாத்தானானவன்  சர்ப்பத்தின் உருவில் வந்து ஏவாளை ஏமாற்றி அதை தொடர்ந்து ஆதாமும் ஏமாந்து அவர்கள் தோட்டத்தை  இழந்த நிகழ்ச்சி இது.

ஆண்டவனின் அருளால், ஆண்டவன்  சாயலிலே உருவாக்க பட்ட முதல் மனிதன் ஆதாம் அன்று கண்ட இழப்பு இன்றுவரை நம்மை பாதிக்கின்றது.

Thursday, March 3, 2016

கலாய்க்க போவது யாரு? உலகளாவிய மாபெரும் கார்ட்டூன் வசன போட்டி!

சில நாட்களாகவே நான் பதிவுகள் எழுதுவதை சற்று நிறுத்தி விட்டு கார்ட்டூன் கலாய்த்தலில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த கார்ட்டூன் முகநூலுக்கு ஏற்றவாறு உள்ளதால் அதில் போட்டு விட்டு அதையே அந்த நாள் இறுதியில் பதிவாக மாற்றி வருகிறேன்.


இந்த கார்ட்டூன் பொதுவாக அரசியலை நையாண்டி செய்வது போல் அமைந்தாலும் அன்றைக்கான செய்தித்தாள்களில் வரும் செய்தியை கொண்டு எழுதுகிறேன்.

தலைப்பிற்கு வருகிறேன்.

கீழே உள்ள கார்ட்டூன் படத்திற்கு நகைச்சுவையாக நையாண்டி தனமாக ஒரு விமரிசனம் வேண்டும். அதை பின்னூட்டத்தில் போடுங்கள்.எனக்கு பிடித்த வசனத்திற்கு பரிசாக ஒரு கிப்ட் கார்ட் வழங்கப்படும். கிப்ட் கார்டின் மதிப்பு 2,500 ரூபாய். இதில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் இருந்தால் இந்த கிப்ட் கார்ட் சென்னையில் அமைந்துள்ள ஒரு சிறந்த உணவகத்தில் இருந்து வரும். வேறு இடங்களில் இருந்து வந்தால் அந்த ஊரில் தாம் விரும்பும் உணவகத்தில் இருந்து வரும்.

இதை வெளிநாட்டில் வாழும் என் இனிய தமிழர்கள் யாராவது வென்றால்... அவர்கள் வாழும் நாட்டில் உள்ள ஒரு சிறந்த உணவகத்தில் இருந்து கிப்ட் கார்டு. (தயவு செய்து இந்திய வாழ் மக்கள் வெற்றி பெறுங்கள், வெளிநாட்டு ஆள் வெற்றி பெற்றால் எனக்கு செலவு அதிகமாயிடும். )

வெற்றி பெற்றவர் தம் குடும்பத்தோடு தாம் எழுதிய வசனத்தை கொண்டாடவே இந்த ஏற்பாடு.


இதோ இந்த போட்டிக்கான கார்ட்டூன்...
யார் வேண்டுமானால் எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். வெற்றி பெற்ற பின்னூட்டத்தை அடுத்த புதன் அறிவிப்பேன். அதுவரை எழுதுங்கள்.

மறந்து விடாதீர்கள். நகைச்சுவை முக்கியம்.

ஸ்டார்ட்...

பின் குறிப்பு : அது சரி.. தலைப்பில் மாபெரும், உலகளவு அது இதுன்னு பில்ட் அப் கொஞ்சம் ஓவரா போகுதேன்னு நீங்க நினைப்பது சரிதான். எல்லாம் ஒரு கவர்ச்சி தான்.

மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு ...


கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...