Friday, October 31, 2014

ஏன் பிறந்தாய் மகனே...

டேய் சேகரு...

சொல்லு முத்து

உன்னை பார்த்தா பரிதாபமாக இருக்குடா?

என்ன சொல்ல வர?

உனக்கு 8 வயசு இருக்கும் போது உங்க அம்மா இறந்துட்டாங்க. அவங்கதான் உன்னை என்னா நல்லா வைச்சிருந்தாங்க.. அவங்க போன பின்ன இந்த 4 வருஷத்தில் உனக்கு என்ன கஷ்டம். உன்ன பார்க்கையில் மனசுக்கு ரொம்ப விசனம்.. எப்படி இருந்த நீ...

Thursday, October 30, 2014

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்....டாடி..நாளைக்கு என்னுடைய போட்டி எங்கே...

கேட்டு கொண்டே வந்தாள் என் இரண்டாவது மகள். அவள்  7 வயதில் இருந்தே கோல்ப் (Golf) ஆடுபவள்.  வாரத்திற்கு 4 நாட்கள் பயிற்ச்சிக்கு - இதற்க்கான வகுப்பிற்கும் சென்று வார இறுதியில் பல போட்டியில் பங்கேற்பவள். 

சிறு வயதில் இருந்தே  வெளியே ஆடும் விளையாட்டிற்கு அடிமை  (addicted to outdoor sports). எனக்கும் விளையாட்டு மிகவும் பிடித்த காரியம். சிறிய வயதில் நிறைய ஆட்டம், இப்போது பிள்ளைகள் ஆடுவதை ரசித்து பார்ப்பேன்.
என் கண்ணின் மணி 

Monday, October 27, 2014

"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து", சுட்டு வைத்த தோசை!

விசு, சூப்பர் விசு, இப்ப தான் மணிரத்தினத்தின் "ரோஜா' படம் பார்த்தேன். இந்தியாவில் கிட்ட தட்ட ஒரு வருஷத்துக்கு மேல ரிலிஸ் ஆனாலும், இப்ப தான் இங்கே வீடியோ கிடைத்தது. இந்த வீடியோ கசட் இன்னும் 24 மணி நேரம் நம்மிடம் தான் இருக்கும். இன்று இரவு இன்னொரு முறை பார்க்கலாம், என்ன சொல்லுற?

வெங்கட்,,, மாப்பு. இன்றைக்கு நான் கொஞ்சம்  பிசி. மாணவர்களின் தேர்வுதாள்களை (நானும் ஒரு காலத்தில் வாத்தியாக இருந்தவன் தான், பாவம் என்னிடம் படித்த மாணவ - மாணவியர்) , இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம்.

Sunday, October 26, 2014

இரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டாது.

ஞாயிறும் அதுவுமா ஒரு காபியை பேஷா போட்டுண்டு செய்திதாளை  சொடுக்கினால், கண்ணுக்கு எதிரில் வந்த முதல் செய்தி...

" இரண்டாது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டாது."

என்னாடா இது, ஆரம்பமே சரியில்லை என்று நொந்து கொண்டு செய்தித்தாளை மூடிவிட்டு இதை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். எதற்காக இந்த சட்டம், இதினால் என்ன இலாபம், யாருக்கு...?

பாரதி இன்று இருந்தால் ...

பள்ளி - கல்லூரி நாட்களில் வார இறுதி போது நேரம் கிடைத்தால் அருகில் கோயில்பிள்ளையின் இல்லத்திற்கு சென்று அங்கே கிடைக்கும் சில சில்லறை சேகரித்து அருகில் உள்ள டி கடைக்கு சென்று நாட்டு நடப்புகளை விசாரிப்போம் - விவாதிப்போம்.

Saturday, October 25, 2014

பெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக!சென்ற வாரம் நான் எழுதிய " அதை காண வானவிலும் அங்கே வந்தது" உங்களில் அநேகர் ரசித்து படித்து பின்னூட்டம் அளித்து இருந்தீர்கள். அந்த உற்சாகத்தினால் எனக்கு பிடித்த மற்ற சில  ஆங்கில பாடல்களை மொழிபெயர்ப்பு செய்து அந்த பாடலின் இணைப்பையும் (காணொளி) தருகின்றேன்.

இம்முறை நான் தரும் என்னை கவர்ந்த பாடல் "Shaggy" என்பவரின் "Strength of a Woman". ஒரு பெண்ணை , பெண் இனத்தை தான் என்ன அழகாக புகழ்ந்து ஒரு அருமையான ராகத்தையும் போட்டு தானே பாடி, கூட வாத்தியம் வாசிக்கும் இசை கலைஞ்சர்களை கூட பெண்களாகவே வைத்து... கீழ் உள்ள மொழியாக்கத்தை படித்து விட்டு நீங்களே இந்த பாடலை கேட்டு பாருங்களேன்.

Thursday, October 23, 2014

"இது நம்ம ஆளின் வேதம் புதிது"...அமெரிக்காவில்

அருமையான நாள். விடுமுறை வேறு! சூரியனவன் காலை 5 க்கு வெளியே வர, இன்று நாம் ஏன் கடல் கரைக்கு செல்ல கூடாது என்ற ஒரு கேள்வி. நாங்கள் வாழும் இடம் தான் "நெய்தல்" ஆயிற்றே. வீட்டை விட்டு வெளியே வந்து பத்து நிமிடத்தில் பசிபிக் பெருங்கடல். சரி, இந்த மாதிரி இடத்திற்கு செல்லும் போது நண்பர்களோடு சேர்ந்து போனால் நன்றாக இருக்குமே என்று நண்பர்களில் சிலரையும் அழைத்து செல்லலாம் என்று தொலை பேசியை எடுத்தேன்.

Wednesday, October 22, 2014

நான் சிரிச்சா தீபாவளி!

முதுகலை முதலாம் ஆண்டு, தீபாவளி நாட்கள். அந்த காலத்தில் எல்லாம் வெறும் விழா காலத்தில் தானே புத்தாடை. எங்கள் வகுப்பில் வெவ்வேறு மதத்தை சேர்ந்த மாணவர்களும் சரி, ஏன் திராவிட இயக்கத்தை சேர்ந்த நாத்திகர்களும் (மன்னிக்கவும் நண்பர்களே, அன்றும் சரி இன்றும் சரி, கடவுள் இல்லை என்று நீங்கள் சொல்லும் ஒரே காரணத்திற்க்காக உங்களை பகுத்தறிவாளன் என்று என்னால் அழைக்க இயலாது. பகுத்தறிவு என்பது அதற்கும் மேற்ப்பட்டது. பேராசிரியர் தருமி ஒரு பகுத்தறிவாளன் தான், ஆனால் அவரை நான் இப்படி அழைக்க காரணமே அவரின் பகிர்ந்த-பழுத்த-பயின்ற அறிவு தான், அடிக்க வராதேயும், தருமி அவர்களே, தங்களிடம் பேசி வெற்றி பெரும் திறமையும் -முறையும் யாம் அறியோம் சரி, எதோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ வந்து விட்டேன்.  தலைப்பின் கதைக்கு போவோம்.) ஒருவரின் ஒருவர் சந்தொஷதிலேயும், சோகத்திலேயும் பங்கேற்போம்.

MS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்!


நெஞ்சில் ஒரு ஆலயம்  என்ற திரைப்படம் ஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் மூவரும் இணைந்து வழங்கிய படம். எனக்கே 7 கழுதை வயசு ஆக போகுது, இந்த படம் நான் பிறப்பதற்கும் நான்கு வருடங்கள் முன்னதாக  வந்து உள்ளது.

இரண்டு நாயகர்கள் ஒரு நாயகி. படத்தின் கதை - திரை கதை அமைப்பு பாடல்கள் இசை எல்லாம் நன்றாக அமைய இது ஒரு காவியம் ஆகிவிட்டது.

Tuesday, October 21, 2014

முத்து குளிக்க வாரீகளா?

சில நாட்களுக்கு முன் எழுதிய "அதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது"! என்ற பதிவின் பின்னோட்டத்தில் "காரிகன்' ( இவர் பதிவை இங்கே படிக்கலாம்) என்ற நண்பரின் எழுத்துக்கள் இருந்தது. என்னுடைய பதிவை பற்றி எழுதிய  இவர் அத்தோடு சேர்த்து த க்கு பிடித்த ஒரு பாடலை பற்று குறிப்பிட்டு இருந்தார். நமக்கு தான் "ஆர்வ கோளாறு  ஏராளமே, தாராளமே ", உடனே நண்பரின் பதிவு தளத்திற்கு சென்றேன்.

Sunday, October 19, 2014

அதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது!


சிறு வயதில் இருந்தே ஆங்கில பாடல்களை மிகவும் விரும்பி கேட்பவன் நான். 1000 கணக்கான ஆங்கில பாடல்களை ரசித்து கேட்டு இருந்தாலும் அதில் ஒரு சில பாடல்கள் மனதில் நின்று விடும்.  இவ்வைகையான பாடல்களில் ஒன்று தான்

Saturday, October 18, 2014

மல்யுத்த வீராங்கனையை மணந்தேன்! ( I married a Female Wrestler...)


வாலிப நாட்களில் பங்களூரில் குப்பை கொட்டி (கொட்டிய நாளா அல்ல குப்பையை பொறுக்கிய நாளா தெரியவில்லை) கொட்டி கொண்டு இருந்த நாட்கள். விட்டால் ஆடல்-பாடல் தான்.

நான் ஏற்னனவே கூறியதை போல் இலங்கை பாப்பிசையை (தமிழ்  பாடல்களை கேட்க இங்கே சொடுக்குங்கள்)  தமிழ் நாட்டில் பாடி கொண்டு இருந்த நான், அதை வைத்து கொண்டு பெங்களூரில் சமாளிக்க முடியவில்லை. இங்கே, இதே ராகத்தில் - வேகத்தில் ஆங்கில பாடல்கள் பாடி கொண்டு இருந்தார்கள்.

நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,.. வாழ்ந்தே தீருவோம்!

நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,.. வாழ்ந்தே தீருவோம்!

இந்த பாடலில் வருவது போல் சிவாஜி-முத்துராமன்-கோபாலகிருஷ்ணன் பாணியில் மும்பை நகரில் நான்,அருமை நண்பன் டொமினிக், என் ஒன்று விட்ட சகோ ரமேஷ், வாழ்ந்து கொண்டு இருந்த காலத்தில் நடந்த சில காரியங்கள்...அருமை நண்பன் டொமினிக் எங்களை விட்டு போய் வருடங்கள் 4 ஆனாலும் , அவன் நினைவுகளும், அவனோடு செய்த அந்த நாட்களின் அட்டகாசங்களும், நெஞ்சில் என்றும் நிற்கின்றன. You have gone too soon, Bro. RIP, Doms...


யாம் அறிந்ததிலே இவனை (டொமினிக்)போல் கலாய்ப்பவர் எவரும் இல்லை.


இது ஓர் மீள் பதிவு, என் நண்பன் டொமினிக்கின், நகைச்சுச்வை உணர்விற்கு சமர்ப்பணம்.


நிற வெறி, இன வெறி, சரி! இது என்ன உண வெறி?


மும்பை நகர வாழ்க்கை, நாட்கள் நொடிகள் போல ஓடும் நாட்கள் அவை. "மட்டுங்கா" என்னும் தமிழர் வாழ் பகுதியில் நான் நண்பன் டொமினிக் மற்றும் ரமேஷ் ஒரு சிறு அறையில் வாழ்ந்து வந்தோம். நீங்கள் எல்லாம் அறிந்தது போல் நான் ஒரு கணக்கு பிள்ளை, ரமேஷ் ஒரு தொழிலதிபர், டொமினிக் ஒரு வங்கி அதிகாரி. கஷ்டமோ நஷ்டமோ ஒருவருக்கு ஒருவர்  தான் எல்லாமே. பெற்றோர் மற்றோர் எல்லாம் தமிழ்நாட்டில், என்றாவது ஒரு நாள் கடிதம் வரும். தொலை பேசி மிகவும் அபூர்வம். தினமும் காலை எழுந்து கிளம்பி மூன்று பெறும் அருகில் உள்ள ஏதாவது ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்து கொண்டு வேலைக்கு கிளம்புவோம். அதோடு, வேலை முடித்து மாலை 6 மணி போல் சந்திப்போம். இவ்வாறாக நாட்கள் போய் கொண்டு இருக்கையில், திடீர் என்று ஒரு நாள் நண்பன் டொமினிக் ஒரு கடிதம் எடுத்து வந்தான். அதில் உனக்கு திருமணம் செய்ய போகிறோம், உடனடியாக  ஒரு குறிப்பிட்ட விலாசத்தில் சென்று அந்த பெண்ணை பார்த்து வரும்படி எழுதி இருந்தது.  உடனடியாக, நான், ரமேஷ், டோமொனிக் "அமர் அக்பர் அந்தோனி" போல பெண் பார்க்க புனே கிளம்பினோம். இரவு முழுதும் ரயில் பயணம் செய்து காலை ஒரு 7 மணி போல் புனே சென்று அடைந்தோம்.

Thursday, October 16, 2014

19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....


வெள்ளி மாலையும் அதுவுமா அம்மணி ...

சீக்கிரம் வெளிக்கிடுங்க .... 

வெள்ளிக்கிடுவதையெல்லாமா .. .வெளிப்படையா சொல்லுவாங்க..இது கொஞ்சம் டூ மச்...

உங்க காதுல ...மச்சாள் வீட்டுக்கு விருந்துக்கு போகணும் .... நல்ல முஸ்டபாதியா இருக்கும்... விசர் கதை கதைக்காம வெளிக்கிடுங்க...

அடே.. அடே .. நம் அம்மணியின் உள்ளது உறவினர்களோடு விருந்து  என்றால்.. .ஆட்டமும் பாட்டும் தானே... 

அங்கே வந்து பகுடியா கதைக்கிறேன்னு எதையும் சொதப்பி வைக்காதிங்க... 

அங்கே வந்து எங்கே கதைக்கிறது.. பாடுறதுக்கே நேரம் இருக்காதேன்னு நினைக்கையில்... அதை வைத்து புது பதிவு எழுத நேரம் இல்லாத காரணத்தினால் ... மனமோ.. வார இறுதி தானே.. பழைய பதிவு ஒன்னு அவுத்து விடுன்னு சொல்ல...

இதோ.... 


Wednesday, October 15, 2014

என்னதான் சொல்லு! அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி தான்.

விஷ் குட் மார்னிங்

குட் மார்னிங் மிகுவேல், ஹொவ் ஆர் திங்க்ஸ்?.

விஷ், உங்க காரை ஷோ ரூம் டெலிவரி பண்ணி விட்டது. நீங்க மெயின் ஆபிஸ் வந்து எடுத்து கொள்ள முடியுமா?

சரி மிகுவேல். இப்ப நான் ஒட்டி கொண்டி இருக்கின்ற வாடகை காரை என்ன செய்வது?

Tuesday, October 14, 2014

நடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்) !

"தேவர் மகன்" படம் என்று நினைக்கின்றேன். அதில் நடிகர் வடிவேல் ஒரு சில காட்சிகளில் வருவார். அந்த படத்தில் சிவாஜி - கமல் அவர்களின் அற்புத நடிப்பை பார்த்து மற்ற எல்லாவற்றையும் மறந்து ஆகி விட்டது. அதை தொடர்ந்து ராஜ் கிரண் படத்தில் வடிவேலை பார்த்ததாக நினைவு. கௌண்டரும் - செந்திலும் ஒரு ரவுண்டு போய் கொண்டு இருந்த காலம்.

தமிழ் திரை பட உலகம் இன்னொரு நகைச்சுவை நடிகருக்காக காத்து கொண்டு இருந்த காலம். இந்நேரத்தில் நடிகர் விவேக் அவர்கள் பகுத்தறிவு பேசி " சின்ன கலைவாணர்" என்று பெயர் எடுத்து புகழ்ச்சியின் உச்சியில் நின்றார்.  விவேக் அவர்களின் நகைச்சுவை பட்டனந்தில் நன்றாக போனாலும் B & C சென்டரில் சரியாக போகவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நேரத்தில் தான் தமிழ் திரை உலகம் வடிவேலுவின் நகைச்சுவைக்கு அடிமை ஆகிற்று.

Sunday, October 12, 2014

ஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...

ரிங் ரிங் ...தொலைபேசி ரிங்கியது...

சனிகிழமை மாலையும் அதுவுமாய்... யாராய் இருக்கும் என்று நினைத்து  கொண்டே எடுத்தால்...

வாத்தியாரே.. தண்டம் பேசுறேன்...

தண்டபாணி... நான் உன்ன தண்டம்னூ கூப்பிட்டாலே, கோவித்து கொள்வாயே, இப்ப எல்லாம் நீயே உன்னை தண்டம்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டியே.. எப்படி இந்த மாற்றம்?.

வாத்தியாரே... கல்யாணம் ஆன ஒவ்வொரு ஆணும் ஒரு வருஷத்திற்குள்
"தான் ஒரு தண்டம்" என்பதை புரிந்து கொள்கிறான், இதில் நீ கூப்பிட்டா என்ன? இல்ல நான் கூப்பிட்டா என்ன?

பேஷா சொன்ன பாணி? வீட்டிலே ஆத்துக்காரி -பிள்ளைகுட்டிகள் சுகமா?

அவங்க சுகமா இருந்தா தானே வாத்தியரே, நான் உனக்கு போன் போட  முடியும். உங்க வீட்டிலேயும் எல்லாரும் நல்லா இருக்காங்கன்னு நினைக்கும் போதே சந்தோசம்.

பாணி, நீ இன்னும் என்னை வீட்டிலே எப்படி இருக்காங்கனே கேட்கவில்லையே, அப்புறம் எப்படி இங்க நல்லா இருக்காங்கன்னு  நீயே முடிவு பண்ண?

வாத்தியாரே, அங்கே நல்லா இருந்தாதானே நீ என் போனையே எடுப்ப, இல்லாட்டி "வாய்ஸ் மெசேஜ்" தானே.

சரி, கூப்பிட்ட விஷயம் சொல்லு பாணி,

ஒன்னும் இல்ல வாத்தியாரே,

சரி அப்புறம் பார்க்கலாம்.

வாத்தியாரே, ஒரு நிமிஷம் இரு, என்னமோ காலில் சுடு தண்ணி ஊத்தின  மாதிரி ஓடுறியே, ஒரு விஷயம் சொல்லணும்.

சொல்லு, பாணி.

வாத்தியாரே, போனவாரம் "ஆப்பிள்-பேரிக்காய் பிடுங்க", பக்கத்தில் எங்கேயோ குடும்பம் நண்பர்களோடு போனீயாமே?..

ஆமா தண்டம்.. சூப்பரா இருந்தது. சாரி, தீடிரென்று பிளான் பண்ணதால் உன்னையும் சுந்தரியையும் அழைக்க முடியவில்லை.

நீ கூப்பிட்டு இருந்தாலும் நான் வந்து இருக்க மாட்டேன் வாத்தியாரே, நமக்கு அவ்வளவு பொறுமை இல்லை.

தண்டம் நானும் அப்படி தான் யோசித்தேன், ஆனா அங்கே போய் அந்த பழத்தை பறிச்சு சாப்பிட்டு பார்த்தவுடன் தான், அடே டே, இவ்வளவு ருசியா இருக்கே... இம்புட்டு நாள் இதை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று. சரி,தண்டம், அதை பத்தி நீ ஏன் கேக்குற?

வாத்தியாரே, நீ சந்தோசமா போன, ருசித்து சாப்பிட்ட, அதோட விட
வேண்டியது தானே, இந்த விஷயத்தை ஏன் உன் பதிவில்  (Blog) போட்ட?
(அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்)  

பாணி, "நான் பெற்ற இன்பம்"... என்ற லாஜிக் தான், நீயும் படிச்சியா? நல்லா இருந்ததா?

வாத்தியாரே, நான் படிச்சானோ இல்லையோ, இங்கே சுந்தரி படிச்சிட்டா, படிச்ச உடனே .. "வேதாளம் முரங்கை மரத்தில் ஏறிடிச்சு", உடனே தானும் போக வேண்டும் என்று அடம் பிடிக்கிறா?

சாரி தண்டம், ஆனாலும் போய் பாரு தண்டம். அந்த இடம் -பழம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,

வாத்தியாரே... அந்த வகை பழம் எல்லாம் இங்கே பக்கத்திலேயே கிடைக்குது.அதுக்கு ஏன் 100 கிலோ மீட்டர் மேலே வண்டிய ஒட்டிக்கொண்டு..

பாணி, இங்கே பக்கத்தில் கிடைத்தாலும்  அந்த மாதிரி ப்ரெஷ் இல்ல!

என்ன வாத்தியாரே, விசயம் தெரியாமல் பேசுற... இங்கே உங்க வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டரில் ஒவ்வொரு ஞாயிறும் "உழவர் சந்தை" இருக்கே, அங்கே இந்த மாதிரி பழம் எல்லாம் இருக்கும், இங்கே போய் வாங்குறத விட்டு விட்டு, அவ்வளவு தூரம் போக சொல்லுறியே.. இப்ப உன் பேச்சை கேட்டு விட்டு, இங்கே என் வீட்டில் இவ கொடுமை தாங்கல.

என்ன பாணி, ஆச்சிரியமா இருக்கே, இங்கேயும் "உழவர் சந்தையா"?  நாளைக்கு காலையில் முதல் வேலையா அங்க போய்  நல்ல ப்ரெஷ் பழம்- காய் கறிகள் வாங்கி மனைவியை அசத்த போறேன்.

ஆல் தி பெஸ்ட் .. வாத்தியாரே. எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா.

என்ன?, சுந்தரிக்கு போன் போட்டு அந்த நல்ல ப்ரெஷ் பழம் சீசன் முடிந்து விட்டது, இதோடு அடுத்த வருஷம் தான்னு சொல்லணும், அவ்வளவு தானே..

என்ன வாத்தியாரே, என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிட்ட?..எப்படி கண்டு பிடிச்ச?.

இது எல்லாம் நானும் பண்ண வேலை தானே தண்டம். நாளைக்கு அந்த சந்தைக்கு போறேன், நீயும் வரியா?.
.
இல்ல வாத்தியரே, இந்த உழவர் சந்தை ஊருக்கு ஊர் இருக்கு, இங்க எங்க வீட்டிற்க்கும் பக்கத்தில் கூட இருக்கு, நான் அங்கே போவேன்.
சரி, அப்புறம் பார்க்கலாம்.

அடுத்த நாள் ஞாயிறு காலையில், உழவர் சந்தையில் நான், ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி... ஆச்சரியப்பட்டேன். இதோ பாருங்கள் சில புகைப்படங்களை..


 ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டின் பார்க்கில் பகுதியில் இந்த சந்தையை அமைத்து இருந்தார்கள்.


 காலையில் முளைத்த  காளான்கள்

 பூங்கொத்துக்கள்

தமிழனுக்கு   பிடித்த "எழந்த பழம்.. எழந்த பழம்"
சுரைக்காய் 


 சக்கரை வெள்ளி (வள்ளி அல்ல) கிழங்கு
மக்காசோளம் மற்றும் காலி ப்ளவர்

 பீர்க்கங்காய் (இதை இறால் போட்டு எப்படி சமைப்பது என்பதை மற்றொரு நாள் எழுதுகின்றேன்)
கத்திரிக்காய் மற்றும் பல...


 கீரை வகைகள். பழவகைகள்

வேறு சில பழவகைகள்

சிறிய சிறிய பூசணிகாய்களால் செய்ய பட்ட பூங்கொத்துக்கள்!


எனக்கு தேவையான சிலவற்றை வாங்கி கொண்டு வீட்டிற்கு  வந்து அவைகளை மேசையின் மேல் அடுக்கி வைத்து விட்டு, வெளியே சென்று இருந்த மனைவி மற்றும் ராசாதிக்களுக்காக காத்து கொண்டு இருந்தேன்.

அவர்கள் வந்தவுடன்..

இது எல்லாம் எங்கே இருந்து வந்தது?

இங்கேதான் பக்கத்தில்... உழவர் சந்தையில் இருந்து, இவ்வளவு அருகில் இருந்து உள்ளது, இத்தனை நாள் நமக்கு தெரியவில்லை பார்.

இப்படி நான் சொன்னவுடன் மனைவி ஒரு புன்முறுவல் விட்டார்கள். இந்த புன்னகையின் அர்த்தம் "கிண்டல்" ஆயிற்றே... என்னவாய் இருக்கும் என்று நினைத்து கொண்டே, மதிய உணவு என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தோம்.

பின் குறிப்பு;

ஏன் சிரித்தார்கள் என்று மனம் குழம்பி போனதால், என் இளைய ராசாத்தியிடம்:

காலையில் அப்பா அந்த பழம் - காய் வகையறாக்களை வாங்கி வந்து மேசையில் பார்த்தவுடன் அம்மா ஏன்சிரித்தார்கள் ".

டாடி.. இந்த கடை பற்றி உங்களுக்கு இன்று தான் தெரிந்து இருகின்றது. அம்மா பல வருடங்களாக ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் நாம் மூவரும் எழும் முன்பே இங்கே சென்று இந்த வகையறாக்களை வாங்கி வந்து கொண்டு இருகின்றார்கள்...

என்று போட்டாளே ஒரு போடு...


www.visuawesome.com

Friday, October 10, 2014

No wonder they call him the "Boss"

"Bruce Springsteen", the name spells music. What an incredible artist and what a brilliant Band. I still remember the day when I heard this name for the first time. 

It was a Pre-grammy show and the song was "Dancing in the Dark" (By the way, who would have  thought that the teenager who danced with Bruce would end up as one of the biggest stars of modern day TV Show "Friends", Yes, I am talking about Courtney Cox)'. Springsteen had the music, the rhythm and above all the audience. His  Rugged-Bass voice was mesmerizing. The first time I heard it, I know for sure that this man's going to be on the center stage for a long time to come. And I was right.

நெஞ்சு (வலி) பொறுக்குதில்லையே....இந்த...!


உடல் நலத்தை கருதி அம்மையாருக்கே ஜாமீன் கொடுக்க விண்ணப்பம்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம், என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். அம்மையாராக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, ஒருவருக்கு உடல் நிலை சரி இல்லாவிடில் அது நாம் எல்லோரும் விசன பட வேண்டிய காரியம் தான்.

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். சிறைசாலையில்  உள்ள அம்மையாருக்கு உடல் நிலை காரணமாக ஜாமீன் தர வேண்டும் என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி.

24 மணி நேரமும் ஒரு வேலையும் இல்லாமல் சிறையில் சும்மா இருக்கும் போதே  , உடல் நலம் குறைவாக இருக்கின்றார்களே, இவர்கள் இத்தனை நாட்களாய் எப்படி ஆட்சியை நடத்தினார்கள்.

உடல் நலம் குன்றிய ஒரு நபரால் எப்படி நல்ல முடிவுகள் எடுத்து நாட்டையும் அதன் மக்களையும் நல வழியில் கொண்டு செல்ல முடியும்.?

அப்படியே இவர்கள் வெளியே வந்தாலும், இவர்களால் தனக்கு என்று ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொள்வதே சிரமம், இதில் நாட்டு மக்களின் நலனை எப்படி இவர்களால் கவனிக்க இயலும்?

என்னை பொறுத்தவரை, அரசியல் வாதிகளுக்கு ஒரு வயது வரம்புவிதி  வைக்கவேண்டும். ஒரு சாதாரண நிறுவனத்திலோ அல்ல ஒரு அரசு பதவியிலோ இர்ப்பவர்களுக்கு ஏன் ஓய்வு கொடுத்து வீடிற்கு அனுப்புகின்றோம். ஒரு வயது தாண்டியவுடன் அவர்களால் சரியாக வேலை செய்ய முடியாது என்று தானே.பின் அரசியவாதிகளுக்கு மட்டும் ஏன் இந்த சட்டம் இல்லை.

ஒரு வேளை, அரசியல்வாதிகள் என்ன வேலை செய்து கிழிக்கின்றார்கள்? என்பதால் இருக்குமோ?

இங்கே இன்னொரு காரியம். சிறையில் அடைத்தவுடனே  நம்மூர் அரசியல்வாதிகளுக்கு உடனே வருவது "நெஞ்சு வலி". இந்த "நெஞ்சு வலி" வந்த அரசியல்வாதிகள் மீண்டும் எந்த தேர்தலிலும் நிற்க கூடாது என்று ஒரு சட்டம் வந்தால் இப்படி வரும் தற்காலிக "நெஞ்சு வலிகள்" போயே போச்சு என்று பறந்து விடும்.

நம் நாடு முன்னேற நிறைய மாற்றங்கள் வேண்டும். அதில் ஒன்று இந்த வயது பிரச்சனை. சில முன்னேறிய நாடுகளிலும் இந்த வயதிற்கான உச்சவரம்பு இல்லை. ஆனால் இந்த நாடுகளில், அந்த அரசியல்வாதிகள் தங்கள் உடல் நலம் காரணமாகவும்- வயது காராணமாகவும் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று சொல்லும் செய்திகள் அடிக்கடி வருவது உண்டு.

இந்த மாதிரி செய்திகளை நான் இதுவரை இந்தியாவில் கேட்டது இல்லை.
அப்படியே வயதாகி வேறு வலி இல்லாமல் இவ்வுலகை விட்டு பிரிய வரும் நேரத்தில் தம் பிள்ளைகளை நமக்கு பரிசாக அளித்து விட்டு போகின்றார்கள். பிள்ளைகள் பதவிக்கு வந்ததும், மீண்டும் "பழைய குருடி, கதவை திறடி" கதை தான்.

நெஞ்சு பொறுக்குதில்லையே...

பின் குறிப்பு;

எங்கேயோ எப்போதோ படித்ததில் பிடித்தது.

தலைவர்தான் கோர்ட்டு கேஸ் நடக்கும் போதே  3 மணி நேரமா "நெஞ்சு வலி - நெஞ்சு வலின்னு" கத்துனாராமே, அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தால் பிழைத்து இருப்பார் அல்லவா? ஏன் அவரை அழைத்து செல்லவில்லை.

அவர் சத்தம் போட்டது என்னமோ உண்மை தான். ஆனால் வழக்கம் போல் "அக்டிங்" கொடுக்கின்றார் என்று அங்கு இருந்தவர்கள் நினைத்து விட்டார்கள்.

www.visuawesome.com

 

Thursday, October 9, 2014

இவங்க தான் "அம்மா" மற்ற எல்லாரும் "சும்மா"!

கடந்த சில நாட்களாக எங்கே பார்த்தாலும் "அம்மா - அம்மா" என்ற சத்தம். நம் அனைவருக்கும் தெரிந்த தமிழகத்தின் அம்மையாருக்காக எழுந்த சத்தம் இது. இந்த அம்மையார் வருமானத்திற்கும் அதிகமாக  சொத்து சேர்த்த வழக்கில், குற்றம் நிரூபிக்க பட்டு இன்று சிறையில் இருக்கின்றார்.  இந்த தண்டனை இவர் செய்த தவறுக்காக.

சரி, இந்த சிறை தண்டனை மட்டும் அல்லாமால், இவர் உடனடியாக  சட்ட சபை உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து நீக்க பட்டதும் அனைவரும் அறிந்ததே. அதற்கும் மேலே ஒரு படியாக இவர் இன்னும் 10 வருடத்திற்கு தேர்தலில் நிற்க கூடாது என்று  நீதிபதி  ஒரு ஆணை இட்டார்.

பேய் அறைந்த கதை...

ஹாஸ்டலில் ஒரு ஹமானுஷ்யம்

ஆரம்பத்தில் இருந்தே என் பதிவுகளில் "பேய் அறைந்த கதையை, மற்றொரு நாள் கூறுகிறேன் என்று சொல்லி வந்தேன். இன்று என் நண்பன் கோயில்பிள்ளை அவன் பாணியில் "பேய் வந்த கதை"யை சொல்லி இருகின்றான். படித்து ரசியுங்கள்.

Tuesday, October 7, 2014

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அது ஜாமீன்...

இந்திய சட்ட திட்டத்தின் மேல் ஒரு சிறிய நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்துள்ளது. நீதி மன்றத்தில் குற்றவாளி என்ற தீர்ப்பு அதிகாரபூர்வமாக வந்த பின் அடுத்த நடவடிக்கை, அம்மையாரை ஜாமீனில் வெளியே எடுக்கும் கட்டம் ஆரம்பித்தது. லண்டனில்  இருந்து ஓடோடி வந்தார், "பெரியவர் ராம் ஜெத்மலானி". இவர் செய்வது எல்லாம் தொழில் தர்மம். சில மாதங்களுக்கு முன் கனி மொழிக்காக போராடினார். இப்போது அம்மையாருக்காக. சரி, பணத்திற்காக தன தொழிலை செய்கின்றார் என்று விட்டு விடுவோம்.
இந்த தற்காலிக விடுதலையை நிராகரித்த மாண்புமிகு நீதிபதி, இது சாதாரண விஷயம் அல்ல, ஊழல். அதாவது.. "மனித உரிமை மீறல்"  என்று சொல்லி தன் தீர்ப்பை நியாய படுத்தினார்.

"மனித உரிமை மீறல்"  - நன்றாக, சரியாக சொன்னார். பொது மக்களின் பணத்தை திருடும் ஒவ்வொரும் மனித உரிமையை தான் மீறுகின்றார்கள்.
இந்த தீர்ப்பில் எனக்கு பிடித்த மற்றொரு விஷயம் என்னவென்றால், இதைகேள்வி பட்டவுடன், நாளை விசாரணைக்கு வரும் நம் வேறு சில நண்பர்களை, நீதி மன்றம் ..... "அதிருதில்ல" என்று கேட்பது போல் ஒரு உணர்ச்சி.
நீண்ட  நாட்களுக்கு பிறகு இந்தியன் என்பதில் ஒரு சந்தோசம், நீதி மன்றத்தின் மூலம் கிடைத்து இருகின்றது.

இந்த ஜாமீன் விசாரிக்க வந்த நாள் அன்று, தனியார் பள்ளி கூடங்கள் மூட படுகின்றனவாம். பிள்ளைகளுக்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.

டீச்சர் .. டீச்சர்.. ஏன் இன்றைக்கு பள்ளி கூடம் இல்லை..

அது வந்து... 18 வருஷதிற்கு முன்னால் நம் முதல்வர், ஊழல்  செய்து வருமானத்திற்கும் அதிகமா சொத்து சேர்த்ததினால், இன்று நீதி மன்றம் அவர்களை குற்றவாளின்னு சொல்லி கைது செய்து இருக்கு, அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் எல்லாம் போராடவேண்டும். அதுதான்.

அப்ப, பிறரின் பொருளை திருடவது சரியா, டீச்சர்?

சரி, இந்த ஜாமீன் நிராகரிக்க பட்ட பின்.. நம் தொண்டர்கள் கொதித்து எழுந்த காட்சி இருக்கே.. பரிதாபம். சரி, அம்மையார் உங்க தலைவி, பொங்கி எழுங்க, பரவாயில்லை. அதற்காக முட்டாள்தனமான சுவரொட்டி அடிப்பதா?

இதை பாருங்களேன்..

இதை விட முட்டாள் தனம் எங்கேயாவது பார்த்து இருக்கின்றீர்களா? அம்மையாரை விடுதலை செய்யாவிடில் இவர்கள் தமிழகத்தில் வாழும் 1000 கணக்கான கரநாடக மக்களை சிறை பிடிப்பார்களாம். இந்த அறிவு கொழுந்துக்கள்.

அடே முட்டாள்களே, ஏற்கனவே தமிழன் என்றாலே, பொருளாசை-பேராசை- தன்னலம்- சுயநலம்- பதவிஆசை பிடித்தவன் என்று மற்ற மாநிலத்தார் முத்திரை குத்தி விட்டனர். இதில் நம்மை "முட்டாள்கள்" கூட என்று சேர்த்து அழைக்க வைத்து விடாதீர்கள்.

இந்த சுவரொட்டியில் தங்கள் பெயர்களையும் போட்டு வைத்து உள்ளனர். இது நாட்டில் வன்முறையை தூண்டும் காரியம் அல்லவா? எவ்வளவு தைரியம் (அல்லது முட்டாள் தனம்) இருந்தால் இவர்கள் இவ்வாறன கருத்தை வெளியிடுவார்கள். கர்நாடகத்தில் வாழும் தமிழரை பற்றி இவர்கள் சிறிதாவது நினைத்து பார்த்தார்களா?

இந்த ஒரே சுவரொட்டி போதும், டாக்டர். சுப்ரமணிய சுவாமிக்கு. சட்டம் ஒழுங்கு குறைந்து விட்டது என்று சட்டசபையை கலைக்க. நடுவில் பிஜேபி யின் ஆட்சி, அதுவும் முழு மெஜாரிட்டியுடன். சற்று கவனமாக இருக்கவும்.

தொடர்ந்து மேல் கோர்டில் முறையிடுவதாக அம்மையாரின் தரப்பில் சொல்ல பட்டு இருக்கின்றது. அப்படியே அவர்கள் ஜாமின் கிடைத்து வெளியே வந்தாலும், இவர்கள் உள்ளே இருந்த இந்த சில நாட்கள் நம் நாட்டின் ஊழல் அரசியவாதிகளுக்கு ஒரு பயத்தை ஏற்பட்டுதும் என்று தான் நான் நினைக்கின்றேன்.

வந்தே மாதரம்.

www.visuawesome.com

Monday, October 6, 2014

Sunday, October 5, 2014

சமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை.


என்னங்க...

சொல்லும்மா:

இன்றைக்கு நம்ம வீட்டிற்கு ஒரு மூணு நண்பர்கள் குடும்பம்டின்னர்க்கு வருகின்றார்கள் அல்லவா? டின்னர் முடிந்ததவுடன் சாப்பிட இனிப்பு ஏதாவது  வாங்கி வாருங்கள். 

Friday, October 3, 2014

உள்ளே - வெளியே...எங்காத்தா?

என்ன தலைப்பு வித்தியாசமாய் இருக்கின்றதே என்று பார்க்கின்றீர்களா? ஒரு நிமிடம்...தலைபிற்கு செல்லும் முன்...


யார் இந்த "விசுAwesome"!

தாயின் Money கோடி பாரீர்!

66 கோடி ஊழலிற்கு 100 கோடி அபராதமா? என்ன ஒரு அநியாயம் இது என்று அம்மையாருக்கு வேண்டியவர்கள் பேசி கொண்டு இருகின்றார்கள், குறிப்பாக சினிமா ஆட்கள். சினிமா ஆட்களிடம் இருந்து எந்த நல்ல காரியம் வருவது கல்லில் நார் உரிப்பது மற்றும் மணல் கயிறு திரிப்பது  என்று அறிவேன், ஆனால் அதற்காக அவர்கள் இவ்வளவு தரம் தாழ்வது, இவர்களை நம் மக்கள் தொழுது கொண்டு  இருக்கின்றார்களே என்று  நினைக்கையில் ஒரு வருத்தம்.

இப்போது கணக்கிற்கு வருவோம்.

Thursday, October 2, 2014

யேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்

பாடகர்  யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில் வந்த "என் இனிய பொன் நிலாவே" என்ற ஒரே பாடல் போதும். அவ்வளவு இசை ஞானம். அற்புதமான கலைஞர்.

சரி இவ்வளவு அழகாக பாடும் இந்த கலைஞரை மலையாளத்தில் நான் " யேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்! என்று கூற காரணம் என்ன?

மேற்கே போகும் ரயில்...

"நம்பர் 40 பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வில் அரைவ் ஷார்ட்லி ஆன் பிளாட்பாரம் நம்பர்1"

இதை கேட்டவுடன் "தேன் வந்து பாயுது காதினிலே" போன்ற ஒரு இன்பம்.

Wednesday, October 1, 2014

மானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகளும்...

கை குழந்தையை வீட்டில் விட்டு விட்டு கடும் பயிற்சியில் ஈடுபட்டேன். எதற்கு. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கத்தை பெற்று என் நாட்டிற்கு பெருமை சேர்க்க. வருட கணக்கில் நான் செய்த அதனை தியாகங்களும் ஒரே ஒரு நிமிடத்தில் சில விளையாட்டு அதிகாரிகளின் சுயநலத்தினாலும் - தவறான எண்ணத்தினாலும் சுக்கு நூறாகிவிட்டது என்று சரிதா தேவி தேம்பி தேம்பி அழுவதை பார்த்தவுடன் நம் இமையிலும் ஈரம் வந்தது.

நான் ஒரு முட்டாளுங்க....


ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட பின் நம் தமிழ் சினிமாகாரர்கள், ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பேசி கொண்டு வருவது, " நான் ஒரு முட்டாளுங்க" என்று அவர்களை பற்றி அவர்களே பாடி கொண்டு வருவது போல் தெரிகிறது.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...