வியாழன், 16 அக்டோபர், 2014

19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....


வெள்ளி மாலையும் அதுவுமா அம்மணி ...

சீக்கிரம் வெளிக்கிடுங்க .... 

வெள்ளிக்கிடுவதையெல்லாமா .. .வெளிப்படையா சொல்லுவாங்க..இது கொஞ்சம் டூ மச்...

உங்க காதுல ...மச்சாள் வீட்டுக்கு விருந்துக்கு போகணும் .... நல்ல முஸ்டபாதியா இருக்கும்... விசர் கதை கதைக்காம வெளிக்கிடுங்க...

அடே.. அடே .. நம் அம்மணியின் உள்ளது உறவினர்களோடு விருந்து  என்றால்.. .ஆட்டமும் பாட்டும் தானே... 

அங்கே வந்து பகுடியா கதைக்கிறேன்னு எதையும் சொதப்பி வைக்காதிங்க... 

அங்கே வந்து எங்கே கதைக்கிறது.. பாடுறதுக்கே நேரம் இருக்காதேன்னு நினைக்கையில்... அதை வைத்து புது பதிவு எழுத நேரம் இல்லாத காரணத்தினால் ... மனமோ.. வார இறுதி தானே.. பழைய பதிவு ஒன்னு அவுத்து விடுன்னு சொல்ல...

இதோ.... 




என் மனைவி ஒரு சுத்தமான நெய்யினால் செய்ய பட்ட" ஈழ தமிழச்சி" என்று பல இடங்களில் -பதிவுகளில் சொல்லி இருக்கின்றேன்  என் நிறைய நண்பர்கள் இதை கேட்டவுடன், ஏன் விசு,, நம்ம ஊரில் இத்தனை பெண்கள் இருக்கும் போது, கடல் தாண்டி போய் ஏன் பெண் எடுத்தாய் என்று கேட்ப்பார்கள்.



அதற்கு என் ஒரே பதில் , நம்ம ஊரில் என்னை யாருக்கும் பிடிக்க வில்லை, அது மட்டும் அல்லாமால்,என்னை பார்ப்பவர்கள் எல்லாம்  இது எல்லாம் எங்கே உருப்படபோது என்று கூற நானே கேள்வி பட்டு இருக்கின்றேன். அப்படி இருக்கையில் எவன் தருவான் பொண்ணு?

இதை சொன்ன வுடன் வரும் அடுத்த கேள்வி, 'மனைவியை முதலில் எங்கே சந்தித்தாய்? அதற்க்கான பதில், நான் எங்கேயும் சந்திக்கவில்லை, இது வீட்டில் பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த "கண்ணாலம்".

இதை சொன்னவுடனே மூன்றாவது கேள்வி. அது எப்படி விசு? முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை பார்த்த உடனேயே சரி என்று சொல்லிவிட்டாய்?

அதற்க்கான பதில்..

மாப்பு, இந்த விஷயத்தில் தான் நம்ம ரொம்ப தெளிவா இருக்க வேண்டும். பொண்ணு நம்மள வேண்டாம்னு சொல்வதற்கு முன் நாம் ஓகே ன்னு சொல்லிட்டும்னா, நம்ப மேல பரிதாப பட்டாவது , போன போகுதுன்னு அவங்களும் சம்மதம் சொல்லிடுவாங்க.

இப்படி விடுமுறைக்காக இந்தியா சென்று பெண்ணை பார்த்து "ஓகே" சொன்ன 14வது நாளில் தாலி கட்டி ஆரம்பித்தது தான் என் வாழ்க்கை.
மனைவி தான் ஈழம், நமக்கு பிறப்பு- பொழைப்பு எல்லாம் 20 வயது வரை இந்தியா தான்.

 இருந்தாலும், சிறிய வயதில்  இலங்கை பாப்பிசை மீது ஒரு ஈர்ப்பு. பள்ளியிலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி பாடி கொண்டே இருப்பேன். அந்த காலத்தில் சின்ன மாமியே, கள்ளுகடை பக்கம் போகாதே, லண்டன் மாப்ளை , சுராங்கனி என்ற பல இலங்கை பாப்பிசை பாடல்கள் மிகவும் பிரபலமாய் இருந்தன.

 அந்த பாடல்களில் சில வரிகளை மட்டும் மாற்றி கொண்டு என் மனைவியையும் வாழ்க்கையையும் பற்றி பாடி வந்தேன்.
இப்படி நாட்கள் போகையில், மேலே கூறிய அந்த பாடல்களை எழுதி பாடிய அண்ணன் நிதி கனகரத்தினத்தின் நட்ப்பு கிடைத்தது. அவர் எங்களோடு இருக்கையில் அவர் இசையிலே அவர் எழுதிய பாடல்களை என் வார்த்தைகளை போட்டு பாடி அடித்த ஆட்டம் தான் என்ன அருமை.


முதல் பாடல் (பெண் பார்க்க போகும் போது அமைந்தவாறு)


இலங்கை நாடு போய் வந்தேன் மனைவி தேடியே
ஊரெல்லாம் விட்டு வந்தேன் உன்னை நாடியே
உண்மையதான் சொல்லி புட்டேன் மனசு தவிக்குது
உனக்கும் என்னை வேண்டாம் என்றால் நெஞ்சு பதறுது
எந்தன் ஹோஷி, நீ கொஞ்சம் யோசி
என்னை மறுத்தால், போவேன் நான் காசி.

இந்திய நாகரீகம் எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை
காலையின் நாகரீகம் அங்கே மாலையில் மாறுது
'மேக் அப்" போட்ட பொண்ணு ஏமாத்த பாக்குது
 பொண்ணோட அம்மா என்னை மாத்த பாக்குது...
எந்தன் ஹோஷி, நீ கொஞ்சம் யோசி
என்னை மறுத்தால், போவேன் நான் காசி.


இந்த பாடல் பார்த்து கேட்க இங்கே சொடுக்குங்கள்


அடுத்த பாட்டு..இன்றைக்கான நிலைமை.


 ஒ மை டார்லிங் ஹோஷி
என் நிலைய கொஞ்சம் யோசி
கவனமாக பேசி
உன் கணவனை நீ நேசி.

கண்ட படி கணவனையே கத்துற பழக்கம்
கண்ணே, உந்தன் குடும்பத்திற்கு கை வந்த வழக்கம்
கள் என்றாலும் கணவன் என்று சொல்லுவதேனோ?
full  என்றாலும் புருஷன் என்று போக வேண்டுமே.

இந்த பாடல் பார்த்து கேட்க இங்கே சொடுக்குங்கள்.



9 கருத்துகள்:

  1. எப்படியோ மனைவியை ஓட்டும் சாக்கில் நீங்க மகிழ்வாய் இருந்திருக்கீங்க...மற்றவர்களையும் மகிழ்வித்திருக்கீங்க... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா சொன்னீங்க எழில். அந்த நாள் - நான் - என் மனைவி - நண்பர்கள் எல்லாரும் மகிழ்ந்து பாடினோம். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. ஹேய்! சூப்பர்பா....பாட்டு மட்டுமல்ல நீங்கள் பாடியதும்....ரொம்ப நல்லா இருக்குப்பா......ம்ம்ம்ம்சரிதான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்......

    தொடர்கின்றோம் இனி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி துளசி அவர்களே... தங்கள் பாராட்டிற்கும் நன்றி.

      நீக்கு
  3. மிக அருமை !! ம்ம் நீங்க சொன்ன பாடல்கள் அனைத்தும் செம பிரபலம் மெட்ராஸ்ல :)ஓ மாலா ஓ ஷீலா எங்கண்ணா ஒருவர் பாடுவார் நாங்க குட்டி பிள்ளைக அப்போ ஜாலியா இருக்கும் பாட்டுங்களை கேக்க.ஸ்கூல் பஸ்ல எக்ஸ்கர்ஷன் என்றாலே சுராங்கனி தான் ஸ்டார்ட் பண்ணுவோம் நாங்கல்லாம்:)

    வாவ் !!! சூப்பரா பாடியிருக்கீங்க நீங்க சகோ !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை போல என் பாட்டுக்கள். நன்றி. அந்த பாடு.." ஒ ஷீலா ஒ லீலா யு டோன்ட் லுக் அட் மீ" என்று நினைக்கின்றேன். நல்ல மெட்டு. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. சுராங்கனி பாடல் நானும் கேட்டு இருக்கிறேன்! சந்தோஷமாக இருந்த தினங்களையும் பாடல்களையும் நினைவுகூர்ந்தமை சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், வாழ்க்கை அமைவதெல்லாம் மனைவி கொடுத்த வரம். வருகைக்கு நன்றி தளிர்.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...