Tuesday, October 7, 2014

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அது ஜாமீன்...

இந்திய சட்ட திட்டத்தின் மேல் ஒரு சிறிய நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்துள்ளது. நீதி மன்றத்தில் குற்றவாளி என்ற தீர்ப்பு அதிகாரபூர்வமாக வந்த பின் அடுத்த நடவடிக்கை, அம்மையாரை ஜாமீனில் வெளியே எடுக்கும் கட்டம் ஆரம்பித்தது. லண்டனில்  இருந்து ஓடோடி வந்தார், "பெரியவர் ராம் ஜெத்மலானி". இவர் செய்வது எல்லாம் தொழில் தர்மம். சில மாதங்களுக்கு முன் கனி மொழிக்காக போராடினார். இப்போது அம்மையாருக்காக. சரி, பணத்திற்காக தன தொழிலை செய்கின்றார் என்று விட்டு விடுவோம்.
இந்த தற்காலிக விடுதலையை நிராகரித்த மாண்புமிகு நீதிபதி, இது சாதாரண விஷயம் அல்ல, ஊழல். அதாவது.. "மனித உரிமை மீறல்"  என்று சொல்லி தன் தீர்ப்பை நியாய படுத்தினார்.

"மனித உரிமை மீறல்"  - நன்றாக, சரியாக சொன்னார். பொது மக்களின் பணத்தை திருடும் ஒவ்வொரும் மனித உரிமையை தான் மீறுகின்றார்கள்.
இந்த தீர்ப்பில் எனக்கு பிடித்த மற்றொரு விஷயம் என்னவென்றால், இதைகேள்வி பட்டவுடன், நாளை விசாரணைக்கு வரும் நம் வேறு சில நண்பர்களை, நீதி மன்றம் ..... "அதிருதில்ல" என்று கேட்பது போல் ஒரு உணர்ச்சி.
நீண்ட  நாட்களுக்கு பிறகு இந்தியன் என்பதில் ஒரு சந்தோசம், நீதி மன்றத்தின் மூலம் கிடைத்து இருகின்றது.

இந்த ஜாமீன் விசாரிக்க வந்த நாள் அன்று, தனியார் பள்ளி கூடங்கள் மூட படுகின்றனவாம். பிள்ளைகளுக்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.

டீச்சர் .. டீச்சர்.. ஏன் இன்றைக்கு பள்ளி கூடம் இல்லை..

அது வந்து... 18 வருஷதிற்கு முன்னால் நம் முதல்வர், ஊழல்  செய்து வருமானத்திற்கும் அதிகமா சொத்து சேர்த்ததினால், இன்று நீதி மன்றம் அவர்களை குற்றவாளின்னு சொல்லி கைது செய்து இருக்கு, அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் எல்லாம் போராடவேண்டும். அதுதான்.

அப்ப, பிறரின் பொருளை திருடவது சரியா, டீச்சர்?

சரி, இந்த ஜாமீன் நிராகரிக்க பட்ட பின்.. நம் தொண்டர்கள் கொதித்து எழுந்த காட்சி இருக்கே.. பரிதாபம். சரி, அம்மையார் உங்க தலைவி, பொங்கி எழுங்க, பரவாயில்லை. அதற்காக முட்டாள்தனமான சுவரொட்டி அடிப்பதா?

இதை பாருங்களேன்..

இதை விட முட்டாள் தனம் எங்கேயாவது பார்த்து இருக்கின்றீர்களா? அம்மையாரை விடுதலை செய்யாவிடில் இவர்கள் தமிழகத்தில் வாழும் 1000 கணக்கான கரநாடக மக்களை சிறை பிடிப்பார்களாம். இந்த அறிவு கொழுந்துக்கள்.

அடே முட்டாள்களே, ஏற்கனவே தமிழன் என்றாலே, பொருளாசை-பேராசை- தன்னலம்- சுயநலம்- பதவிஆசை பிடித்தவன் என்று மற்ற மாநிலத்தார் முத்திரை குத்தி விட்டனர். இதில் நம்மை "முட்டாள்கள்" கூட என்று சேர்த்து அழைக்க வைத்து விடாதீர்கள்.

இந்த சுவரொட்டியில் தங்கள் பெயர்களையும் போட்டு வைத்து உள்ளனர். இது நாட்டில் வன்முறையை தூண்டும் காரியம் அல்லவா? எவ்வளவு தைரியம் (அல்லது முட்டாள் தனம்) இருந்தால் இவர்கள் இவ்வாறன கருத்தை வெளியிடுவார்கள். கர்நாடகத்தில் வாழும் தமிழரை பற்றி இவர்கள் சிறிதாவது நினைத்து பார்த்தார்களா?

இந்த ஒரே சுவரொட்டி போதும், டாக்டர். சுப்ரமணிய சுவாமிக்கு. சட்டம் ஒழுங்கு குறைந்து விட்டது என்று சட்டசபையை கலைக்க. நடுவில் பிஜேபி யின் ஆட்சி, அதுவும் முழு மெஜாரிட்டியுடன். சற்று கவனமாக இருக்கவும்.

தொடர்ந்து மேல் கோர்டில் முறையிடுவதாக அம்மையாரின் தரப்பில் சொல்ல பட்டு இருக்கின்றது. அப்படியே அவர்கள் ஜாமின் கிடைத்து வெளியே வந்தாலும், இவர்கள் உள்ளே இருந்த இந்த சில நாட்கள் நம் நாட்டின் ஊழல் அரசியவாதிகளுக்கு ஒரு பயத்தை ஏற்பட்டுதும் என்று தான் நான் நினைக்கின்றேன்.

வந்தே மாதரம்.

www.visuawesome.com

19 comments:

 1. kalai muthal nadantha anaithu vishayangakaliyum paarthukonde irunthen sir. jaamin koduthu viddarkal endrathum ennada sappunu mudinjidichunu ninaichitten adutha araimani nerathil neethe pathiyin thirpu vilakam padithathum nanum perumai padden sir. sattangal kadumai aakkinaltaan kutrangal kuraiyum ena nampukiren.

  ReplyDelete
  Replies
  1. "சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்" - ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்.
   ஆனாலும்..
   "திருடனா பார்த்து திருந்தாவிடில் .... "
   என்ற வாக்கும் உள்ளதே..

   வருகைக்கு நன்றி.

   Delete
 2. சூப்பர்! உண்மையிலேயே எதிர்ப்பார்க்காத ஒரு தீர்ப்பு!

  ReplyDelete
  Replies
  1. நீதி இன்னும் உயிரோடு இருக்கின்றது போல் இருக்குது, சுரேஷ். வருகைக்கு நன்றி!

   Delete
 3. அது என்னங்க் வந்தே மாதரம்...? எந்த நாட்டு மொழிங்க..?

  ReplyDelete
  Replies
  1. பாரதி ராஜாவின் வேதம் புதிது என்ற படத்தில் " தேவர் என்பது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?என்று அந்த சிறுவன் கேள்வி கேட்டவுடன், எங்கேயோ இருந்துஒரு கை "Anonymous" ஆக வந்து சத்யராஜை "பளார்" என்று அறையும். அந்த ஒரு அறையை " Anonymous"உருவில் வந்து தந்து விட்டீர்கள். இன்று முதல் மாற்றி கொள்கிறேன். ஆனால் இந்த பதிவில் விட்டு விடுகின்றேன். நம்மை தொடர்ந்து படிப்பவர்களுக்கும், நான் தவறியது தெரிய வேண்டும் அல்லவா?
   வருகைக்கும் - அறைக்கும் நன்றி.

   Delete
 4. நீதிமேல் நம்பிக்கை இருப்பதைத் தான் காட்டுகிறது, நீதிபதியின் தீர்ப்பு...

  ReplyDelete
  Replies
  1. இம்மாதிரி மேலும் பல தீர்ப்புகள் வரும் நாட்களில் வரும் என்று எதிர் பார்ப்போம். வருகைக்கு நன்றி!

   Delete
 5. Vishu: It is absolutely true that the Indian judiciary system has finally come to a stage that people will have some trust in it. The judge's verdict yesterday was human rights violation. perfect and how true it is. Every human being has a right to own and that right is taken away by her and many others. All politicians who are corrupt must be tried under human rights violation . The best thing I like about it is that this is going to send a strong message to others,.

  ReplyDelete
 6. I concur with your thoughts! Hold, lets remember that " It aint over until the Fat Lady sings".....
  BTW, it would have been great to know, where this comment came from... You called me Vishu... Only a handful call me that....

  ReplyDelete
 7. thollaiya thooki thol la potruvainga polaruke.. poster adikurainga parunga poster.. Grow up boys...

  ReplyDelete
  Replies
  1. சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை. என்னத்த சொல்லுவது. வருகைக்கு நன்றி.

   Delete
 8. 18 வருடம் நீதியை ஒரு வட்ட செயலாளர் பந்தல் ஆபீஸ் போல நினைத்து 600 தடவைக்கு மேல் வாய்தா வாங்கி இழுத்தடித்து விட்டு இப்போது என்ன அவசரம்?. நீதியை மிதித்து விட்டு இன்று மட்டும் மதிப்பதாக புளுகுவது எப்படி சரி. லல்லு பிரசாத்திற்கு 10 மாதம் பின்பே ஜாமீன் கிடைத்தது. இவர்களுக்கு மட்டும் உடனடியாக வேண்டும் என்றால் எப்படி ?
  கர்நாடக நீதி மன்றம் சட்டத்தில் இடமில்லை என்று சொல்லி உள்ளது. அப்படி எனில் என்றால் உச்ச நீதி மன்றத்தில் எப்படி உடனடியாக கிடைக்கும் என்று தெரியவில்லை. அங்கு உடனடியாக ஜாமீன் கொடுத்தால் நிச்சயம் லல்லு போன்றோர் மீது சட்டம் அநீதியாக நடந்து கொண்டதாக பொருள் படலாம். இரண்டுமே ஊழல் வழக்குகள். உடல் நலம் , மன நலம்,வயது எல்லாம் இப்போது மட்டும் எப்படி தெரிகிறது? இது எல்லாம் லல்லுவிற்கும் பொருந்துமே. இது என்ன பொது மக்களை பாதிக்கும் வழக்கா,முதலில் எடுத்து விசாரிக்க. 18 ஆண்டு இழுத்து விட்டு ஒரு நாள் கூட வரிசையில் வர பொறுக்க முடியாதா? டில்லியில் பல அரசியல் உண்டு.
  அங்கு நீதி வளைக்க படுமா என்பதை பார்க்க வேண்டும்.

  காவிரி வேண்டாம் அம்மாவை விடு என்று சொல்பவன் , உயிர் நாடியான அதனை நம்பி வாழும் கோடிகணக்கான மக்களை எவ்வளவு கேவலமாக, இளக்காரமாக நினைக்கிறான்.இவனுக்கு எதோ ஆதாயம் கிடைக்கும் என்பதற்கு மக்களை மிதிக்க துணிகிறார்கள். இவர்கள் செய்வது போல் வேறு யாரும் செய்திருந்தால் , நீதியை அவமதிக்கிறார்கள் என்று இவர்கள் சொல்வார்கள்.இவர்கள் தலைவி உள்ளே இருந்தால் அதற்கு பொது மக்கள் எதற்கு அவதி பட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அருமையாக சொன்னீர்கள். இதையே நீங்கள் ஒரு பதிவாக வெளியிட்டு இருக்கலாம். வருகைக்கு நன்றி.

   Delete
  2. If Age & health is a concern let them take rest & not to get involved in the "Social Service" any more.

   Delete
  3. They were never in there for "Social Service" anyway....

   Delete
 9. அடடே...... அம்மா / கட்சி / பணம் / ஊழல் என்பதெல்லாம் கூட மூன்று எழுத்துதான் இல்லையா.....?

  ReplyDelete
 10. ஜெயில், பெயில் கூட மூன்றெழுத்து தான்...மாது.

  ReplyDelete
 11. சட்டம் இன்னும் உயிரோடு இருக்கின்றது என்பதைக்காட்டும் தீர்ப்பு.

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...