செவ்வாய், 14 அக்டோபர், 2014

நடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்) !

"தேவர் மகன்" படம் என்று நினைக்கின்றேன். அதில் நடிகர் வடிவேல் ஒரு சில காட்சிகளில் வருவார். அந்த படத்தில் சிவாஜி - கமல் அவர்களின் அற்புத நடிப்பை பார்த்து மற்ற எல்லாவற்றையும் மறந்து ஆகி விட்டது. அதை தொடர்ந்து ராஜ் கிரண் படத்தில் வடிவேலை பார்த்ததாக நினைவு. கௌண்டரும் - செந்திலும் ஒரு ரவுண்டு போய் கொண்டு இருந்த காலம்.

தமிழ் திரை பட உலகம் இன்னொரு நகைச்சுவை நடிகருக்காக காத்து கொண்டு இருந்த காலம். இந்நேரத்தில் நடிகர் விவேக் அவர்கள் பகுத்தறிவு பேசி " சின்ன கலைவாணர்" என்று பெயர் எடுத்து புகழ்ச்சியின் உச்சியில் நின்றார்.  விவேக் அவர்களின் நகைச்சுவை பட்டனந்தில் நன்றாக போனாலும் B & C சென்டரில் சரியாக போகவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நேரத்தில் தான் தமிழ் திரை உலகம் வடிவேலுவின் நகைச்சுவைக்கு அடிமை ஆகிற்று.


மற்றவர்களை சிரிக்க வைப்பது ஒரு கடினமான காரியம். நாம் மற்றவர்களை சிரிக்க வைக்கும் பொது, ஒருவரின் மனமும் நோக கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கவுண்டர் -செந்தில் காலத்தில் நகைச்சுவை என்பது அடுத்தவரை அசிங்க படுத்தி பேசவதில் தான் இருக்கும். ஒருவரின் உடல் அமைப்பு, நிறம், உயரம், வயது மற்றும் அவருடைய நடை உடை பாவானையை கிண்டல் படுத்தி மற்றவர்களை சிரிக்க வைத்த நேரம்.

இன்னும் சொல்ல போனால், இந்த காலத்தில் " மாற்று திறன்" கொண்டோரையும் கூட இவர்கள் கிண்டல் செய்யும் போதுநான் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்து இருக்கின்றோம்.  அதையும் விட மோசம், ஒரு படத்தில் கவுண்டர், தன மனைவியை அடிக்க முயலும் போது அதை ஒருவர் தடுக்க வருவார், அவரிடம்கவுண்டர்..

"டேய், கல்யாணம் ஆனா புதிதில் அடித்தால், ஏன் புது பொண்டாட்டியை அடிக்கிற என்று கேட்பீர்கள், அப்புறம் அடிச்ச ஏன் புள்ளதாச்சியை  அடிக்கிற என்று கேட்பீர்கள், அதுக்கு அப்புறம் அடிச்சா ஏன் கல்யாணம் முடிந்து இவ்வளவு நாட்கள் கழித்து அடிக்கிற என்று கேட்பீர்கள்? அப்பா நாங்க எப்பதாண்டா அடிப்பது?"

என்று கேட்பதை பார்த்தும் சிரித்தவர்கள் தாம் நாங்கள்.

இந்த வேளையில் தான் வடிவேல் படிப்படியாக தனக்கே உரிய பாணியில் முன்னேற ஆரம்பித்தார். இவர் நகைச்சுவையில் இவர் எப்போதும் தம்மை தாமே கிண்டல் செய்து கொள்வார். சந்ரபாபுவிற்கு பிறகு தமிழ் திரை உலகில் தன்னை தானே ஒரு முட்டாளாக காட்டிகொண்டு மற்றவர்களின் கைதட்டலை பெற்றவர் வடிவேலு தான்.

வடிவேலுவின் பெரும்பாலான படங்களை நான் பார்த்தது இல்லை. அப்படி இருக்கையில் சென்னையில் இருந்து வந்த நண்பர் ஒருவர்,வடிவேலுவின் நகைச்சுவை உனக்கு படித்து இருகின்றதா என்று கேட்க, நான் அதை அதிகமாக பார்த்தது இல்லை என்று சொன்னேன்.

அவர் உடனடியாக " You Tube" ல் சில காட்சிகளை போட்டு காட்ட, அதை பார்த்து வடிவேலுவின் ரசிகன் ஆனேன். குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் ஆட்டம் -பாட்டம் -பேச்சு - நடிப்பு. ஒரு காட்சியிலேயும் இரட்டை அர்த்த வசனங்களோ அல்ல  முகத்தை சுளிக்க வைக்கும் காட்சிகளோ அல்ல மற்றவர்கள் மனது புண்படும் வகையிலோ எந்த ஒரு குற்றமும் இல்லாத காட்சிகள்.
அது மட்டும் இல்லாமல் இவர் நன்றாக பாடவும் - நல முறையில் நடனம் ஆடவும் தெரிந்தவர் என்பதால், பாடல் காட்சிகளிலும் நல்ல பெயர் எடுத்தவர்.

இப்போது தலைப்பிற்கு வருவோம்.

புகழின் உச்சியில் இருந்த இவரை தமிழ் நகைச்சுவை நடிகர்கள் எல்லாருக்கும் பிடிக்கும் "ஏழரை சனி" தானாகவே வந்து பிடித்தது. யார் பண்ண பாவமோ, இவருக்கு யாரோ ஒருவர் திமுகவிற்கு தேர்தல் பிரசாரம் செய் என்று சொல்ல, இவரும் ஒத்து கொள்ள, வந்தது வினை.

திமுக என்பது ஓர் 'Use and throw" கட்சி என்பதை இவருக்கு யாரும் எடுத்து சொல்ல மறந்து விட்டார்கள் போல இருக்கின்றது. அந்த தேர்தல் பிரசாரத்தை வடிவேல் ஒரு சினிமாவை விட கேவலமாக நினைத்து விட்டார். சினிமாவிலேயே எந்த தனி நபரையும் தாக்காதவர் இந்த பிரசாரத்தில் பல "குடிமகன்களை" கண்டப்படி தாக்கினார். இந்த தேர்தல் பிரசாரத்தின் போதே திமுக கண்டிப்பாக படு தோல்வி அடையும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் இவருக்கு தெரியாமல் போய் விட்டதே என்று நான் நினைத்தேன்.

தேர்தல் முடிந்தது. முடிவு வந்தது. வடிவேலுக்கும் முடிவு வந்தது. புகழின் உச்சியில் இருந்த இவரை அனைவரும் ஒதுக்கி வைத்தனர். அது தானே தமிழ் சினிமாவின் சாபக்கேடு. "எக்கட்சி ஆளும் கட்சியோ அக்கட்சி என் கட்சி" என்று வருடக்கணக்கில் வாழும் திரைப்பட உலகம் இவரையும் ஒதுக்கி வைத்தது.
வருடங்கள் பல ஓடின. வருடத்தின் 365 நாட்களும் நடித்து வெளுத்து கொட்டி கொண்டு இருந்த வடிவேல் அவர்கள் இப்போது வேலை எதுவும் இல்லாமல் வீட்டில்.

திமுக வழக்கம் போல் இவரையும்இவரை கழட்டி விட்டது. நண்பர்கள் எல்லோரும் இவரை தீண்டத்தகாதோர் போல பார்த்தனர்.

இருந்தாலும்... இருந்தாலும் ...

வடிவேலு மானஸ்தன் தான். இவ்வளவு கஷ்டம் வந்த நேரத்திலும் தான் எடுத்த முடிவு தவறு என்று அறிந்தும், ஒருபோதும் அதை பற்றி பேசாமல் வாழ்ந்து வந்தார். அதைவிட முக்கியம், வேறு யாராக இருந்தாலும் யார் கை காலில் விழுந்து (?) எனக்கு ஒரு சான்ஸ் என்று மானத்தை விற்று பிழைத்து இருப்பார்கள், ஆனால் வடிவேலுஅவர்கள், தான் நடிக்கவே இல்லை என்றாலும் சரி, மானத்தை விற்க மாட்டேன் என்று வாழ்ந்தார். 

என்னை பொறுத்தவரை வடிவேலுவின் நடிப்பு- சிரிப்பு- நகைச்சுவை- பாட்டுகளை விட இவரின் இந்த மானம் ரோஷம் தான் மிகவும் பிடித்தது.

 
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்  என்பதை நிருபித்து காட்டுபவர் வடிவேல்.


பின் குறிப்பு :

இவரை ஒதுக்கி வைத்தது, தமிழ் திரை உலகத்திற்கு தான் மிகவும் நஷ்டம். இவருக்கு பின் வந்த நடிகர் சந்தானம் அவர்களின் காமடியை பார்த்து சிரிக்க நாம், நமது " காமன் சென்ஸை" வீட்டிலேயே வைத்து விட வேண்டும். 20 வருடங்களுக்கு முன் கவுண்டர் சொன்ன வர்ர்தைகளை (மற்றவர்களின் நடை-உடை-பாவனை கிண்டல் அடித்து) இந்த காலத்திற்கேற்றார் போல் மாற்றி கொண்டு அதை நகைச்சுவை என்று சொல்லி வருகின்றார். சிரிப்பு வரவில்லை, வெறுப்பு தான் வருகின்றது.

www.visuawesome.com

9 கருத்துகள்:

  1. உண்மைசார், அரசியல் அயோக்கியத் தனத்தில் மாட்டிக்கொண்ட இவர் பாவம் ஆனால் இன்றும் இவர் சார்ந்த கட்சி இருக்கிறது.. இப்போது படங்கள் நடித்துவருகிறார்.. பார்ப்போம் வடிவேலுவுக்கும் ஒரு ரீ எண்ட்ரி கிடைக்காத என்ன.????

    அப்புறம் அவர் முதல் படமே ராஜ்கிரண் படம் தான். அவரை அறிமுகப்படுத்தியதும் அவர் தான்..அடையாளம் காணப்பட்டது தேவர்மகனில்..

    பதிலளிநீக்கு
  2. Visu,

    Yesterday he was in Limelight , today he is on Highlight(in VisuAwesome) tomorrow.. just Wait (and see).

    Well-done Visu for shedding some light on Mr.Vadivelu.

    KO

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடம்பாக்கதிர்க்கும் கோட்டைக்கும் நடுவில் ஒரு கூவம் இருக்கு போல ஒரு காட்சி.

      நீக்கு
  3. Hello Visu,

    With regard to Santhanam's, it has, more than Comedy and Common Sense , KAAMA(N) sense .

    KO

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தானம் உடைய நகைச்சுவை காமடி இல்ல ... "காம நெடி", அம்புட்டுதேன்!

      நீக்கு
  4. வைகைப்புயல் இப்போது வலுவிழந்து இருந்தாலும் இன்னும் கரையைக்கடந்து அழியவில்லை .
    மீண்டும் மையம் கொண்டு தாக்கி, சுழன்று ( one more round) வந்து நம்மை மகிழ்விக்கும் .

    பதிலளிநீக்கு
  5. வைகைப்புயலைப் பற்றியது அனைத்தும் சரியே! என்ன ஒரு கலைஞன்! மிக நல்ல ஒரு பதிவு அதுவும் வைகைப்புயலைப் பற்றி! புயல் ஓயாது! அமைதியாக,கமுக்கமாக இருக்கும்....அவ்வளவே! திரும்பவும் புயலாக வரும்...இப்போது மெதுவாக ஆரம்பித்து இருக்கின்றது. அவர் மீண்டும் வர வேண்டும்....ம்ம்ம்சந்தானம் ...... சொல்வதற்கில்லை......

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...