முதுகலை முதலாம் ஆண்டு, தீபாவளி நாட்கள். அந்த காலத்தில் எல்லாம் வெறும் விழா காலத்தில் தானே புத்தாடை. எங்கள் வகுப்பில் வெவ்வேறு மதத்தை சேர்ந்த மாணவர்களும் சரி, ஏன் திராவிட இயக்கத்தை சேர்ந்த நாத்திகர்களும் (மன்னிக்கவும் நண்பர்களே, அன்றும் சரி இன்றும் சரி, கடவுள் இல்லை என்று நீங்கள் சொல்லும் ஒரே காரணத்திற்க்காக உங்களை பகுத்தறிவாளன் என்று என்னால் அழைக்க இயலாது. பகுத்தறிவு என்பது அதற்கும் மேற்ப்பட்டது. பேராசிரியர் தருமி ஒரு பகுத்தறிவாளன் தான், ஆனால் அவரை நான் இப்படி அழைக்க காரணமே அவரின் பகிர்ந்த-பழுத்த-பயின்ற அறிவு தான், அடிக்க வராதேயும், தருமி அவர்களே, தங்களிடம் பேசி வெற்றி பெரும் திறமையும் -முறையும் யாம் அறியோம் சரி, எதோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ வந்து விட்டேன். தலைப்பின் கதைக்கு போவோம்.) ஒருவரின் ஒருவர் சந்தொஷதிலேயும், சோகத்திலேயும் பங்கேற்போம்.
இது முதுகலை முதல் ஆண்டாக இருந்ததால், எங்களில் சிலர் இன்னும் புதுமுகமாகவே இருந்தனர். இந்த மாணவர்கள் -மாணவியர் வேறு கல்லூரிகளில் இளங்கலை படித்து விட்டு வந்தவர்கள். இவர்கள் எங்கள் கல்லூரிக்கு வந்தே சில மாதங்கள் ஆனதால் இன்னமும் எங்களுடன் நிறைய பழகவில்லை. அது மட்டும் அல்லாமல் எங்கள் வகுப்பில் சில மாணவிகள் வேறு. இவர்கள் கதையை சொல்ல வேண்டுமா? எங்கள் ராசியோ என்னவோ தெரியவில்லை அருகில் உள்ள மகளிர் கல்லூரியில் படிப்பில் சிறந்த மாணவிகளே இங்கே முதுகலையில் வந்து சேர்வார்கள்.
இவர்கள் பேராசிரியர் நேற்று நடத்திய பாடத்தை மட்டும் படிக்காமல் நாளை நடத்தும் பாடத்தையும் போன வாரமே படித்து கரைத்து குடித்தவர்கள். நாமோ "ஞான சூனியம்", ஏதோ யார் செய்த புண்ணியமோ இளங்கலையை எப்படியோ முடித்து விட்டு இங்கே வகுப்பில் "நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்து போய் கொண்டு இருக்கின்றோம்" இப்படி இருக்கையில்.. ஒரு நாள்.
எங்களுக்கு வருமான வரி சொல்லி கொடுக்கும் பேராசிரியர் ,அவருக்கும் எனக்கும் இளங்கலை இறுதி ஆண்டில் சின்ன வாய்க்கால் தகராறு (நில தகராறு என்று நினைத்து விடாதீர்கள்.), இது வெறும் வாய் -கால் தகராறு தான் !
வேறு ஒன்றும் இல்லை, போன வருடம் இளங்கலை இறுதி ஆண்டில் ஒரு நாள் தன் வகுப்பை முடித்து கொண்டு அவர் வேகமாக அந்த அறையை விட்டு செல்லும் போது கதவின் அருகில் இருந்த நான் அவர் வருவதை "கவனிக்காமல்" என் காலை நீட்டி விட்டேன். தடுக்கி விழுந்தவர் நேராக சுவற்றின் மீது மோதி அவர் வாய் சற்று சிவப்பு நிறமாக மாறுவதை பார்த்த நானோ, எனக்கே உரிய குழந்தை தனத்தில், "மனதில் ஒன்றும் வைக்காமல்" என்ன சார்? 11 மணிக்கே சாப்பாடு எல்லாம் முடித்து வெத்தலை வேறு போட்டு உள்ளீர்கள் என்று சொல்ல, அனைவரும் சிரிக்க அவர் கோபபட்டு விட்டார்.
பிறகு அவரிடம் தனியாக சென்று, நீங்கள் வருவதை பார்க்கவில்லை அது தெரியாமல் நடந்து விட்டது என்று சொல்லி, அவர் ஆசியையும் பெற்று வந்தேன். ஆனால் நாம் தான் தமிழர்கள் ஆயிற்றே, எவனோ ஒரு "எட்டையபுறத்தான்" அவரிடம் நல்ல பெயர் வாங்க, நான் இந்த காரியங்களை திட்டமிட்டே செய்தேன் என்று "போட்டு கொடுக்க" இந்த வாய்க்கும் காலுக்கும் நடந்த "வாய்க்கால்" சண்டையை நான் மறந்தாலும் அவர் மறக்கவில்லை.
முதுகலை வகுப்பில் முதல் நாள் என்னை பார்த்த (என்னை அந்த வகுப்பில் பார்த்தவுடன் அவர் முகம் உடனடியாக பேய் அறைந்ததை போல் மாறியது, யாரும் கோவித்து கொள்ள வேண்டாம், இந்த பேய் அறைந்த கதையை கூடிய சீக்கிரம் எழுதி விடுகின்றேன்.) அவர் "நீ எப்படி இங்கே" என்று கேட்டது மட்டும் அல்லாமல் "இரும்பு அடிக்கின்ற இடத்தில் ஈக்கு என்ன வேலை" என்று கேட்க அனைவரும் (மாணவிகள் உட்பட) தேம்பி தேம்பி சிரித்தனர் (தேம்பி தேம்பியா என்று நீங்கள் கேட்பது புரிகின்றது, அவர்கள் குலுங்கி குலுங்கி தான் சிரித்தார்கள், நான் மனதில் தேம்பி தேம்பி அழுததால் தான் அப்படி சொன்னேன் )
வாத்தியாரே, நம்ம பழைய பகைய நீங்க புதுப்பித்து விட்டீர்கள், இது மான பிரச்சனை, (முதல் நாள் அன்றே மற்றவர்களின் ஏளனம் என்றால், அடுத்த ரெண்டு வருடம் காலி என்பதை புரிந்து கொண்டு...டமாஜ் கண்ட்ரோலில் இறங்கினேன்).
"இரும்பு அடிக்கிற இடத்தில ஈ இருப்பது" கூட சரி சார், ஆனால், நீங்கே ஏன் "ஈ இருக்கின்ற இடத்தில இரும்பை அடித்து கொண்டு இருந்தீர்கள்" என்று கேட்க அனைவரும் (மாணவர்கள் உட்பட) குலுங்கி குலுங்கி சிரிக்க என் கேரக்டரை (24 மணி நேரம் படம் வந்த நாட்கள் தான் அவை) சற்று அனைவருக்கும் புரியும் படி வைத்தேன். இது நடந்த பின் அவர் என்னை பார்த்த பார்வையே சரி இல்லை.
அன்றில் இருந்து ஒவ்வோர் நாளும், வகுப்பில் நுழைந்தவுடன் ஏடாகூடமாக என்னை ஏதாவது கேள்வி கேட்டு, நான் பதில் தெரியாமல் முழித்து கொண்டு இருக்கும் போதே, அங்கே உள்ள மாணவியர் யாரையாவது எழுப்பி அவர்கள் பதிலை சரியாக சொன்னவுடன், இவர்களை போல் வாழ கற்று கொள் என்று ஒரு அறிவுரை கொடுப்பார்.
இந்த பழக்கம் தினந்தோறும் நடக்க தொடங்கியதால், மாணவிகளிடையே ஒரு போட்டி. தினம் தோறும் ஆளுக்கொரு "டைம் டபிள்" போட்டு எனக்கு தெரியாத பதிலை சொல்லி சிரிப்பார்கள். நானும் அதனை தவறாக எடுத்து கொள்ளவில்லை.
அப்பாடா., இப்போது தீபாவளி கதைக்கு வருவோம்.
பக்கத்தில் இருந்த நண்பன் ராஜிடம்:
மாப்பு, இவர் என்னை தினந்தோறும் "அலாரம்" வைச்சி தாக்குறாரே , இவருக்கும் சரி, என்னை பார்த்து சிரிக்கும்பெண்களுக்கும் சரி, இந்த தீபாவளி ஒரு நாள் முன்னாலே வர போது.
புரியில விசு.
நாளைக்கு அவர் வகுப்பு தான் முதல் வகுப்பு. 9:00 ஆரம்பிக்கும், நீ முடிஞ்சா கொஞ்சம் சீக்கிரமா வா, ஒரு சின்ன வேலை இருக்கு. உங்கள் வீட்டில் தீபாவளிக்கு வெடி வாங்கிவிட்டார்களா?
வாங்கியாச்சி விசு...
நீ ஒரு காரியம் பண்ணு, நல்ல சத்தமா வெடிக்கிற மாதிரி ஒரு "அணு குண்டு வெடி" ஒன்னு எடுத்து கொண்டு வா.
சரி, அதை வச்சி என்ன பண்ண போற?
நாளைக்கு சூடு (இது தெலுகு சூடு). ஓகே மறக்காமல் ஒரு சிகரெட்டும் நெருப்பெடியும் எடுத்து கொண்டு வா.
விசு, எதுவும் பெரிய பிரச்சனை ஆகாதே,
ஒன்னும் இல்ல ராஜ், ப்ளீஸ் ஹெல்ப் மீ. ஐ அம் டூய்ங் திஸ் பார் ஆல் ஆப் அஸ்.
ஓகே, விசு,
என்று அவன் கூறும் போதே அன்றைக்கான வகுப்பை நடத்த அதே ஆசிரியர் நுழைய.. அதே சம்பிரதாயம் ஆரம்பித்தது.
விசு.. செக்ஷன் 80 G என்ன சொல்லுது?
தெரியல ஜி. (ஒரு குலுங்கி சிரிக்கும் சத்தம் கேட்டது, இந்த நாள் நல்ல நாள் தான்)
உடனடியாக அருகில் இருந்த மாணவியை எழுப்பி கேட்க அவள் சொன்ன பதில் வகுப்பையே அதிர வைத்தது.
"எனக்கும் தெரியில சார்",
சரி, மா, நீ உட்கார், நான் திரும்பவும் சொல்லி கொடுக்கின்றேன்.
நான் உடனடியாக மீண்டும் "என் குழந்தை தனத்தில் "
சார், முந்தி எல்லாம் நீங்க சொல்லி கொடுப்பது எனக்கு தான் புரியாது, இப்ப நல்ல படிக்கின்ற இந்த மாணவிகளுக்கே புரியவில்லை, இனிமேல் நீங்கள் என்னை நிற்க வைத்து கேள்வி கேட்க வேண்டாம்" ப்ளீஸ்.!
அன்றோடு அந்த நாள் முடிந்தது.
அடுத்த நாள் காலை 8:45க்கு வகுப்பின் வெளியே நானும் ராஜும்.
மாப்பு , அந்த "அணு குண்டு" திரிய அந்த சிகரெட்டின் மறுபக்கத்தில் நுழை.
ஏன் விசு.. ?
கொஞ்சம்பொறுமை, உனக்கு சீக்கிரம் புரியும்.
இப்ப அடுத்த பக்கத்தில் உள்ள பில்டரை எடுத்து விடு. சரியாக 8:55 க்கு சிகரெட்டின் மறுப்பக்கத்தை கொளுத்தி விடு.
அப்ப என்ன ஆகும்?
என்ன ஆகுமா? மாப்பு, இந்த பக்கத்த பத்த வைச்ச சிகரெட் என்ன ஆகும்?
மெதுவா புகைக்க ஆரம்பிக்கும்.
அந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமா போய் ஒரு 9:10 போல அந்த திரியை அடையும், திரியில் நெருப்பு பட்டவுடன்..
ஐயையோ .. விசு.. "அணு குண்டு வெடி" சத்தம் போட்டு வெடிக்குமே...
அதேதான்.. அப்ப இங்க சீரியஸா இருக்கிற "வாத்தி மற்றும் லேடீஸ் "ஐயோ அம்மான்னு குதிப்பாங்க இல்ல, அதை பாத்து நம்ம சிரிக்கிறோம். நீ இந்த வேலைய முடி, நான் நம் நண்பர்களிடம் எச்சரிக்கை கொடுத்து விட்டு உள்ளே இருக்கேன்.
நல்ல ஐடியா விசு.
உள்ளே நுழைந்து நண்பர்களிடம் விஷயத்தை சொல்லி கொண்டு இருக்கையில், அந்த மாணவி வந்தாள். அது தான் நேற்று பதில் தெரியாது என்றாளே, அவளே தான்.
விசு, உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.
(ஒரு கிளியின் தனிமையிலே... மாதிரி பாட்டு ஒன்று மனதில் இசைக்க) சொல்லுங்க.
நேற்று அவர் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் நன்றாகதெரியும்.
அப்ப ஏன் தெரியவில்லை என்று சொன்னீர்கள்?
இது கூடவா தெரியவில்லை.. "மண்டு, மண்டு.. உங்கள் கேரக்டர கொஞ்சம் மாத்துங்க விசு, உங்களுக்கு வாழ்க்கையில் பல நல்லது கிடைக்கும், இன்னுமா புரியல... ? இது தொடர்வதும் முடிவதும் உங்க கையில் தான் இருக்கு, கொஞ்சம் நல்லவனாக மாருங்க, அது தான் "நமக்கு" நல்லது..
என்று சொல்லும் போது "வகுப்பிலும் மனதிலும்" மணி அடித்தது.
கடைசியாக உள்ளே நுழைந்த ராஜிடம், மாப்பு, என்ன ஆச்சி?
எல்லாம் ஓகே. இன்னும் ஒரு பத்து நிமிடத்தில்.. "டமால்.."
டேய், தப்பு பண்ணிட்டோம் டா. எப்படியாவது வெளியே போய் அதை நிறுத்து.
இல்ல விசு, இப்ப போனா நான் மாட்டி கொள்வேன். அமைதியாக இரு...
என்று அவன் எனக்கு சொல்ல...வாத்தி உள்ளே நுழைந்தார்.
"ஐயையோ... பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழும்போது" இந்த மாதிரி ஒரு காரியத்தை செய்து விட்டோமே என்று நொந்து கொண்டுஇருக்கையிலே...பத்து நிமிடம் கழித்து .
"டமால்...."
வாத்தி சற்று பயந்தார். ஆனால் சில நிமிடங்களுக்கு முன் என்னோடு பேசி கொண்டு இருந்த அம்மணி, சத்தத்தை கேட்டு அலறிக்கொண்டே எதிரில் இருந்த மேசையின் மீது தலையை மோத...என் நண்பன் ராஜ், சத்தமாக...
"விசு, இங்க பார், நீ சொன்ன மாதிரியே ஆயிடிச்சி. இவங்கள பாரு, காலையில் டிபன் சாப்பிடும் போதே வெத்தலை போடுற வழக்கம் போல இருக்கு என்று சொல்ல, அம்மணி என்னை முறைக்க..", மற்றவர்களோ குலுங்கி குலுங்கி சிரிக்க...
நானோ..." நான் சிரித்தா தீபாவளி" என்று தேம்பி தேம்பி ..........
பின் குறிப்பு:
முற்றிலும் இல்லாவிடிலும் இங்கே அங்கே "கற்பனையே! ".மற்றும், இந்த ஆசிரியரும் சரி மற்றவர்களும் சரி, நான் செய்த அனைத்து சில்லறை தனத்தையும் அணைத்து, என்னை காத்து வழி நடத்தினர். என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லாத நேரத்தில்... "உன்னால் முடியும் தம்பி" என்று அவர்கள் அன்று தட்டி கொடுத்தது என்னை அதற்கு பின் வந்த அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி செய்ய உதவியது.
அந்த சக மாணவியை இருபது வருடங்களுக்கு பின் சந்தித்தேன்., பரவாயில்லையே... நீ ரொம்ப மாறி இருகின்றாயே என்று ஒரு பேரு மூச்சு விட்டார்கள். அந்த மூச்சிக்கான அர்த்தம் என்னவென்றே புரியவில்லை. தங்களில் யாருக்காவது தெரிந்தால் பின்னோட்டத்தில் இடுங்களேன்.
இனிய தீப ஒளி நல் வாழ்த்துக்கள்.

"அணு குண்டு வெடி" (புரிந்தால் சரி. )

ஆகா
பதிலளிநீக்குநண்பர் விசு,
பதிலளிநீக்குரசிக்கத்தக்க பதிவு. அருமையான நடை. வாழ்த்துக்கள். அதுசரி உங்களின் அந்த பேய் அறைந்த கதை சுஜாதாவின் மெக்சிகோ நாட்டு சலவைக்காரி ஜோக் போல பிரபலமாகிவிட்டதே?
வருகைக்கு நன்றி காரிகன்... என்னது? நான் சொல்லும் முன்பே பேய் அறைந்த கதை பிரபலமாகி விட்டாதா? "என்னை ஏமாற்றிய எழுத்தாளர் சுஜாதா" என்று நான் சில மாதங்களுக்கு முன்பு ஓர் பத்தவே போட்டேன்.
நீக்குநிறைய உள்குத்துகள் இருப்பது போல் இருக்கிறதே!
பதிலளிநீக்குஐயா, எதோ அரை குடம் ததும்புகின்றது என்று விட்டு விடுங்கள்.வருகைக்கு நன்றி.
நீக்குசிறந்த பதிவு
பதிலளிநீக்குதொடருங்கள்
எந்தக் கல்லூரி? எந்த பாடம்?
பதிலளிநீக்குவேண்டாம் ஐய்யா, இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் என்கிற காரணத்தினால் நான் இந்த ஆட்டதிற்கு வரவில்லை.
நீக்குhaahaahaa sirichu sirichu vaire valikkura alavu pochu sir.. ungaukku nalla comedy aa elutha varuthu thodarnthu ithu pola eluthunga...
பதிலளிநீக்குதம்பி விசு , உம்ம வாய்-கால் கதையை படிச்சிட்டு கால்-வாயை திறந்து தேம்பி தேம்பி சிரித்தேன் .ஆபிசில் இருப்பதால் முழு வாயை திறக்க முடியலை .
பதிலளிநீக்குஆனாலும் விசுஜி , எங்கிருந்து வருது உமக்கு இந்த ஹியூமர்ஜி ?
ஆமா நீ அப்ப நல்லவனா மாறாத காரணம் எனக்குத்தெரியுமே ?
nandri.. நன்றி. எங்கிருந்து வந்தது இந்த ஹுமர்...? நான் ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. என் தாயின் தாய் (அம்மாச்சி) என்னை கண்டிக்கும் போதெல்லாம்.. விசு, உனக்கு வாயில் தான் பிரச்சனை, அந்த மதுரை குசும்ப மனத்தில் வைத்து கொள், வெளியே எடுத்து கொண்டு வராதே என்ற ஒரே அறிவுரை தான் கொடுப்பார்கள். நீங்கள் சொல்லும் ஹுமர் தான் இந்த குசும்பாக இருக்குமோ?
நீக்குஅண்ணே, இன்னொரு வேண்டு கொள். அந்த காரணத்தை மனதில் வைத்து கொள்ளு(ல்லு)ங்கள், பழைய விரோததம் எதையும் வைத்து வெளியே விட்டு விடாதீர்கள். ஏன் என்றால் கத்தி பட இயக்குனர் முருகதாஸ் அதையும் சுட்டு ஒரு மாஸ் படம் தந்து விடுவார் (கத்தியின் கதை சுட பட்டது என்று இன்று காலை படித்தேன்)
ஹாஹஹஹ சிரிச்சு சிரிச்சு.....உங்க வாய்-கால் வழியா வந்த அந்த காமெடி......நான் சிரிச்சா தீபாவளி முடிந்தும் சிரிச்சு! செமய ரவுண்டு கட்டி அடிச்சுருக்கீங்க போல! ஹப்ப உங்கள் செல் நாளம் முழுவதும் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்தானோ!!! ரொம்ப நல்ல விஷயம் நண்பரே! ரசிக்கின்றோம்.
பதிலளிநீக்குஅந்த பின் குறிப்பில் இருக்கும் அந்த பெருமூச்சின் அர்த்தம் புரிந்து விட்டது!!! ஆனால் இங்கு வேண்டாம்....ஏன்ன அப்புறம் அணுகுண்டே வெடிச்சுடும்...ஹஹஹ....
வருகைக்கு நன்றி தளசி அவர்களே, தம்மும் சரி மற்றவர்களும் சரி, என் எழுத்தை பார்த்து "நான் சிரித்தேன்' என்று சொல்லும் பொது, என் முகத்தில் ஒரு ஆனந்த சிரிப்பு. இவ்வாறான ஒவ்வொரு பின்னோடதிர்க்கும் ஒவ்வொரு பதிவு போட வேண்டும் என்பது போல் ஓர் உற்சாகம் பிறக்கின்றது. தொடர்ந்து ஊக்குவியுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
நீக்குஅந்த பெருமூச்சின் அர்த்தம்...?
சூப்பர்'G.. பெருமூச்சி/சிறுமூச்சி எல்லாம் சரி.. அந்த அம்மணி பேரு "அணு"ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே...நண்பரே :)
பதிலளிநீக்குஈ -- இரும்பு அருமையான timing sense..
மிக நன்றி..
வாங்க நண்பா, வாங்க! என் பதிவுலக வழிகாட்டி பரதேசி (அதாங்க Alfred ) அவர் தளத்தில் நீங்க Internal Audit பன்னுவதை பார்த்து சிரித்து கொள்வேன். இப்போது எனக்கும் வந்து விட்டீர்கள். சரி, நான் சொல்ல வந்த அனுக்கு மூணு சுழி இல்லையே. இப்ப என்ன சொல்வீங்க? வருகைக்கு நன்றி நண்பா. தொடர்ந்து வந்து ஆதரியுங்கள்.
நீக்குவணக்கம் நண்பரே.. Audit எல்லாம் இல்லைங்க.. அந்த அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லைங்க.. நண்பர் alfred போட்ட அந்த பாடல்கள் எல்லாம் என் மிக விருப்ப பாடல்கள்.. கேட்பதற்கும் படிப்பதற்கும் ஏதோ வித்தியாசம் இருந்தால் சொன்னேன்..
நீக்குநீங்க உங்க அனு'வ அணு குண்டு'ன்னு செல்லமா சொல்லிடிங்களோன்னு நாங்க எல்லாம் நெனைச்சோம்!!! ;)
நீக்கு
நீக்குநண்பா.. தயவு செய்து தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். நம் சிங்க தலைவன் , சிம்ம குரலோன், அடுத்த முதல்வர் Alfred என்னும் பரதேசிக்கு கண்டிப்பாக Audit அவசியம். நீங்கள் செய்யாவிடில் நாங்கள் எங்கே போவோம். தயவு செய்து பின் வாங்க வேண்டாம். தொடர்ந்து அவரை கண் காணியுங்கள். வருகைக்கு நன்றி நண்பா!
//நீங்க உங்க அனு'வ அணு குண்டு'ன்னு செல்லமா சொல்லிடிங்களோன்னு நாங்க எல்லாம் நெனைச்சோம்!!! ;)//
நீக்குநீங்க எல்லாம் நினைச்சிங்களா? இல்லை எல்லாருக்காகவும் நீங்கள் நினைச்சிங்களா?
சரி நண்பரே.. கழக பொது செயலாளர் -- விசு அவர்களின் ஆணையை தொண்டன் நண்பன் ஏற்கிறேன்.. :)
நீக்குஹி..ஹி.. இத தான் Think Globally'ன்னு சொன்னான் வெள்ளைக்காரன்!!! :)
தம்மை தானே "Internal Auditor" ஆக்கினோம், அதற்குள் நான் எப்படி பொது செயலாளர் ஆனேன். கண்ப்புசன்!
நீக்குஎப்போது நண்பர் Alfie தலைவர் ஆனாரோ..நீங்கள் அப்போதே பொது செயலாளர் & கொள்கை பரப்பு செயலாளர் ஆகிவிட்டது.. பொருளாளர் பதவி மட்டும் தலைவருக்கே..
நீக்குவாழ்க ஜனநாயகம்!!! ;)
"Far the people - Buy the People - Off the People"வாழ்க ஜனநாயகம்
நீக்கு