Sunday, October 26, 2014

இரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டாது.

ஞாயிறும் அதுவுமா ஒரு காபியை பேஷா போட்டுண்டு செய்திதாளை  சொடுக்கினால், கண்ணுக்கு எதிரில் வந்த முதல் செய்தி...

" இரண்டாது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டாது."

என்னாடா இது, ஆரம்பமே சரியில்லை என்று நொந்து கொண்டு செய்தித்தாளை மூடிவிட்டு இதை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். எதற்காக இந்த சட்டம், இதினால் என்ன இலாபம், யாருக்கு...?சரி, இதற்கான பதிலை எனக்கும் - நமக்கும் தெரிந்த சிலரிடம் கேட்கலாமே என்று யோசித்து கேட்க ஆரம்பித்தேன். மற்றவர்களை கேட்பதற்கு முன் நம்மை நாமே கேட்டு கொள்வது தானே சரியான முறை, சரி இதோ அந்த பதில்கள்.

கேள்வி " இரண்டாது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டாது" - இதை பற்றி தங்கள் கருத்து?

விசுAwesome; முட்டாளுக்கு மன்னிப்பு உண்டு, ஆனால் "வடி கட்டிய அடி முட்டாளுக்கு" மன்னிப்பே இல்லை என்பது போல் உள்ளது.

அமெரிக்க (முன்னாள்) பிரதமர், பில் கிளிண்டன் : அலுவலகத்தில் ஒழுங்கான அப்பரன்டிஸ் அமைத்து கொடுத்து இருந்தால், இவன் இரண்டாம் திருமணமே செய்து இருக்க மாட்டானே, இந்நாட்டு சட்டத்தை மாற்ற வேண்டும்.

சோனியா காந்தி ; பிள்ளைக்கு முதல் திருமணத்திற்கே வழிய காணோம், இதில் ரெண்டாவது.. மூன்றாவது.?

மோடி ; என்னாது, இது என்ன புது கதையா இருக்கு; தாலி கட்டி நம்மள நம்பி வந்த பொண்டாட்டி வேண்டாம் என்றால், நீதிமன்றத்தை அணுக வேண்டுமா? சொல்லவே இல்லையே?

கருணாநிதி : மணம் மூன்றெழுத்து, ரத்து மூன்றெழுத்து, பித்து மூன்றெழுத்து! இதிலும் ஒரு நல்ல காரியம் தான் இருகின்றது. இரண்டாவது தானே பிரச்சனை, மூன்றாவதற்கு இதே சட்டம் வந்தால், கழக சார்பில் நாடு தழுவிய போராட்டம்.

ஜெயலலிதா ; பண்ணி வைச்ச முதல் கல்யாணத்திலேயே இவ்வளவு பிரச்னை... இதில் இரண்டாவதை பற்றி என்னத்த சொல்ல?

ரஜினி காந்த் : நான் ஒரு முறை ரத்து வாங்கினா, நூறு முறை வாங்கின மாதிரி...ஈஸ்வரன் டா கோட்டீஸ்வரன்.

விஜயகாந்த் ; ரெண்டாவது "விருமணத்திற்கு திவாகரத்து" இல்லையா? என்னை போன்ற குடி மகன்களால் இது ஏற்று கொள்ள முடியாது? இப்படியே போனால் அடுத்த சட்டமா, நாளை முதல் "ஆளுக்கொரு க்வாட்டர் தான் ரெண்டாவது இல்லை" என்று சொல்வீர்கள் போல இருகின்றதே.

ஸ்மிரிடி இராணி: சட்டு புட்டுன்னு விஷயத்திற்கு வாங்க. நான் இன்னும் ஒரு வாரத்திற்கு அமெரிக்காவிற்கு போறேன். ஹார்வர்ட் பலகலை கழகத்தில் ஒரு டிகிரி அவசரமா வாங்க போறேன்.

ராமதாஸ் ; ஏதாவது சொல்லி கொண்டு போங்கள், 2016ல் எங்கள் ஆட்சி தான்.

சுப்பிரமணி சுவாமி :  ராஜா பக்ஷேவிடம் இதை பற்றி பேசிஉள்ளேன், அவர் என்ன சொல்கின்றாரோ அப்படி செய்யலாம், முதலில் அவருக்கு நான் கேட்ட "பாரத் ரத்னா" என்ன ஆயிற்று என்று ஆராய வேண்டும்.

T ராஜேந்தர் ; அவன் பண்ணது திருமணம், அவன் மடியில் இப்ப அதுவே கனம், அவன்கிட்ட இருக்கு பணம், திருமணம் பண்ணுவான் தினம்...தினம்...

Director விசு: ரெண்டாவது மனைவியை வேண்டாம்னு  சொல்லி,  இவன் முதல் மனைவியிடம் போக, அந்த முதல் மனைவியின் ரெண்டாவது புருஷன் அவளை விட்டு விட்டு போன கதைய தெரிஞ்சே உடனே, நானே உனக்கு முதலும் மூணாவது புருசனும்மா இருக்கேன்னு சொல்ல, அவளோ  உன் ரெண்டாவது மனைவியுடை முதல்  புருஷன் ஏற்கனவே என்னை  ரெண்டாம் சம்சாரம வச்சிகிரன்னு சொல்ல... "மணல் கயிறு" படத்தின் ரெண்டாம் பாகம் எடுக்கலாம் போல இருக்கே!

சில வலை பதிவு நண்பர்களின் பதில் ;

பரதேசி : ஒரு தவறு செய்த ஆணுக்கு கிடைக்கும் மிக பெரிய தண்டனையே "அவனை அவளோடு வாழவைப்பது தான்" இரண்டாவது திருமணம் என்ன கொலை குற்றமா? இதற்கு ஏன் ஆயுள் தண்டனை. மரண தண்டனையே மேல் போல் தெரிகின்றது.

மதுரை தமிழன் : ரத்து கொடுக்க விட்டாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் அந்த பூரிகட்டையையாவது தடை செய்யுங்கள்.

திண்டுகல் தனபாலன் : இதுவும் கடந்து போகும்.

கோயில் பிள்ளை : இதில் என்ன தவறு? "பட்ட காலில் படும்" என்பது நீதி துறைக்கு தெரியவில்லை போல் இருகின்றது.

மாடிப்படி மாது:என்னங்க இது அநியாயமா இருக்கு. இப்பல்லாம் கல்யாணம் பண்ணுவதே விவாகரத்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே...நாட்டமை தீர்ப்ப மாத்து
( இது மாதுவின் கருத்தே, பின்னோட்டத்தில் தந்தார், அதை எடுத்து இங்கே போட்டு விட்டேன்.)

பின் குறிப்பு  : என்னை தவிர மற்றவர்கள் எண்ணம் கற்பனையே...

இந்த சட்டத்தை பற்றி  உங்கள் மனது என்ன சொல்கின்றது.. கீழே பின்னோட்டத்தில் எழுதினால் படித்து ரசிப்பேன். நன்றி,


15 comments:

 1. என்னது ரெண்டாவது கல்யாணமா? அப்டின்னு ஒன்று நடப்பது எனக்கு தெரியாமலே போச்சே.... விசு சார் எனக்கு நல்ல பொண்ணு ஒன்னை பாருங்க சார், ஒரே ஒரு கண்டிஷந்தான் அந்த பொண்ணுக்கு பூரிக்கட்டை உபயோகம் பற்றி தெரிந்து இருக்க கூடாது

  ReplyDelete
 2. பூரி கட்டையின் இரண்டாவது உபயோகம் (அது தான் பூரி செய்வது) தெரிந்து இருந்தால் போதும். முதல் உபயோகமான வன்முறை தெரியாமல் இருக்க வேண்டும். பொண்ணா, பேஷா பாத்துடலாமே...."Be careful of What you Wish For", you might get it ... Tamizaaa!

  ReplyDelete
  Replies
  1. //Be careful of What you Wish For", you might get it ... Tamizaaa!////
   அப்ப நயன்தாரா எனக்கு கிடைப்பாள் என்கீறீங்க....

   Delete
  2. தமிழா.....நயன்தாரா ராராரா ரகசுகு ராரா...நு வீட்டுலருந்து பூரிக்கட்டை வருதாம்.....

   Delete
 3. ஹாஹாஹா! நல்ல கற்பனை!

  ReplyDelete
 4. விசு சார் வந்து அந்தப் பூரிக் கட்டைய காட்ச் பண்ணி பேயோட்டப் போறாராம்.....பேயறைன்சா மாதிரி......ஆவாரான்னு பார்க்கலாம்.....ஆகாம இருந்தா சரி.....

  ReplyDelete
 5. ஹாஹஹஹ் செம கற்பனைங்க....அதுவும் கலைஞர், விசு(டைரக்டர்...நடிகர்) ரொம்பவே......சூப்பர்...!!!.

  முதல் கல்யாணத்துக்கான விவாகரத்து கிடைக்கறதே பெரிய பாடா இருக்குதாமே! அப்படித்தான் பேசிக்கறாங்கப்பா....அப்படி இருக்கும் பொது....2வதுக்கு எங்கப்பா.....சரி அப்படியே 2 வது பண்ணிக்கிட்டாலும்.....எப்படிப்பா 2 வதுக்கு அப்ளை பண்ண முடியும்?!!!

  ReplyDelete
 6. உங்களுக்கு கமல் பிடிக்காது போல.. அதான் சுத்தி சுத்தி அவரை திட்டுறீங்க..

  இப்போ வாசிங்க..

  கமலிடம் விசு : அரேஞிட் மேரேஜ் பத்தி என்ன நெனைக்கிறீங்க?

  கமல்: எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. நான் அனுபவிச்சவன் சொல்றேன். அந்தத்தப்பை நீங்க செஞிடாதீங்க

  விசு: சரி "லவ் மேரேஜ்"?

  கமல்: அந்தத் தப்பையும் செஞ்சிடாதீங்க.. நான் அனுபவிச்சவன். சொல்றேன் கேளுங்க..

  விசு: அப்போ எப்படி துணை இல்லாமல் வாழ்றது?

  கமல்: அது கஷ்டம்தான்.. யாரையாவது வச்சுக் கோங்க!

  விசு: ஐயய்யோ!

  கமல்: அழகா கேர்ள் ஃப்ரெண்டுனு சொல்லுங்க. பார்ட்னெர் னு சொல்லுங்க.. சட்டப்படி அது தப்பு இல்லைங்க. நம்ம கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்தை அவ பறித்துவிட்டுப் ஓட முடியாது. ஒரு துணை..அப்பப்போ வேற இளம் ஹீரோயினோட சுத்திக்கலாம்...தாலியைக் காட்டி மிரட்ட முடியாது பாருங்க..

  விசு: ஊர் உலகம் திட்டாதா? இப்படி வச்சுக்கிட்டு வாழ்ந்தா?

  கமல்: உடல் தானம், கண் தானம் மாதிரி ஏதாவது செய்தால் எல்லாரும் கம்முனு இருப்பார்கள். நமம்தான் உலகிற்கே அப்புறம் ரோல் மாடல்!

  விசு:??

  கமல்: அப்புறம் இன்னொன்னு இதை நான் சொன்னதா யார்ட்டயும் சொல்லீடாதீங்க.

  விசு: ஏன்?

  கமல்: சொல்லிப் பாருங்க. நீங்க பொய் சொல்றீங்கனுதான் சொல்லுவாங்க. உங்களூக்குத்தான் கெட்ட பேரு.. அப்புறம் உங்க இஷ்டம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருண்! இந்த பதிவில் முதலில் உங்க பேரையும் போட்டு உங்க கற்பனையான பதிலையும் போட்டு இருந்தேன். பிறகு " சும்மா கிடக்கும் சங்கை ஏன் ஊதி கெடுப்பானேன்னு" சொல்லி எடுத்து விட்டேன். உங்க கற்பனையான பதிலை உங்களுக்கு மின் அஞ்சல் மூலமா அனுப்புகின்றேன்.

   எனக்கும் கமலுக்கும் என்ன? வாய்க்கால் தகறாரா? அவர் எவ்வளவு பெரிய ஆள். நான் இங்கே குண்டு சட்டியில் குதிரை ஓடும் கிணற்று தவளையலாவா? என்ன, தன்னை தானே பகுத்தறிவாளி என்று சொல்வர்களிடம் கொஞ்சம் அதிகமாக எதிர் பார்க்க வேண்டி இருக்கே....

   Delete
 7. ***T ராஜேந்தர் ; அவன் பண்ணது திருமணம், அவன் மடியில் இப்ப அதுவே கனம், அவன்கிட்ட இருக்கு பணம், திருமணம் பண்ணுவான் தினம்...தினம்...

  Director விசு: ரெண்டாவது மனைவியை வேண்டாம்னு சொல்லி, இவன் முதல் மனைவியிடம் போக, அந்த முதல் மனைவியின் ரெண்டாவது புருஷன் அவளை விட்டு விட்டு போன கதைய தெரிஞ்சே உடனே, நானே உனக்கு முதலும் மூணாவது புருசனும்மா இருக்கேன்னு சொல்ல, அவளோ உன் ரெண்டாவது மனைவியுடை முதல் புருஷன் ஏற்கனவே என்னை ரெண்டாம் சம்சாரம வச்சிகிரன்னு சொல்ல... "மணல் கயிறு" படத்தின் ரெண்டாம் பாகம் எடுக்கலாம் போல இருக்கே!***

  Loved these two! lol

  ReplyDelete
 8. சிசிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 9. தங்களுடைய கருத்தைத் தவிர மற்றதெல்லாம் கற்பனை என்றால்,
  அனுபவம் தந்த பாடம் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 10. என்னங்க இது அநியாயமா இருக்கு. இப்பல்லாம் கல்யாணம் பண்ணுவதே விவாகரத்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே...நாட்டமை தீர்ப்ப மாத்து.

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் மாது. இது பின்னூட்டத்தில் இருக்க வேண்டிய விஷயமே இல்லை. தூக்கி பதிவிலேயே, உங்க பெயரையும் சேர்த்து போட்டு விட்டேன். வருகைக்கு நன்றி.

   Delete
 11. அப்பாடா நல்ல வேளை இரண்டாம் திருமணத்திற்குத்தானே விவாகரத்து கிடையாது ?

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...