ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை.


என்னங்க...

சொல்லும்மா:

இன்றைக்கு நம்ம வீட்டிற்கு ஒரு மூணு நண்பர்கள் குடும்பம்டின்னர்க்கு வருகின்றார்கள் அல்லவா? டின்னர் முடிந்ததவுடன் சாப்பிட இனிப்பு ஏதாவது  வாங்கி வாருங்கள். 

வருகின்றவர்கள் எல்லாம் தமிழ் மக்கள் தானே, இதற்க்கு ஏன் வெளிய வாங்க வேண்டும், நானே செய்கிறேனே.

செய்யுங்க.. ஆனால் இந்த விஷ பரிட்சைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. சரி, என்ன செய்ய போறீங்க?

Sugar- Silver - கிழங்கு உருண்டை தான்,

என்னாது..?

சக்கரை வெள்ளி கிழங்கு உருண்டை.

எதோ ஒன்னு செய்யுங்க..

இதோ... உங்களுக்காக.

தயாரிக்க தேவையானது:

சக்கரை வெள்ளி கிழங்கு
வெல்லம்
இஞ்சி (சிறு துண்டு)
தேங்காய் 
எலாக்காய் தூள்
நெய், மற்றும்
பொறுமை&
நல்ல மனது.

செய்யும் முறை :

முதலில் தேவையான அளவிற்கு கிழங்கை எடுத்து கொள்ளுங்கள். இவைகளை நன்றாக கழுவி வைத்து கொள்ளுங்கள். இவற்றை  கழுவும் போதே மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொது இந்த கிழங்கை அதில் போட்டு அவிய வையுங்கள்.

இங்கே இரண்டு விஷயம் கண்டிபாகே கடை பிடிக்க வேண்டும். 
முதலாவது, அவர்சர்ப்பட்டு தண்ணீர் கொதிக்கும் முன்பே கிழங்கை போட்டு விடாதீர்கள், இவ்வாறாக செய்தால் கிழங்கின் வெளிப்புறம் நன்றாக வெந்து, உள்புறம் கடினமாக இருக்கும். அதற்காகத்தான் தண்ணீர் கொதிக்கும் பொது போடவேண்டும். இப்படி செய்கையில் முழு கிழங்கும் ஒரே நேரத்தில் வேக ஆரம்பிக்கும்.


 கொதிக்கும் நீரில்  

 இரண்டாவதாக, கிழங்கின் தொலை உரீக்காதீர்கள். கிழங்கையும் வெட்ட கூடாது. இந்த கிழங்கின் மேல் உள்ள தோல் இயற்கையிலே இதன் நல்ல காரியனமான சத்துக்களையும் மற்றும் வாசனையையும் பாதுகாக்கும். இந்த தோலை எடுத்து விட்டு அவிக்க வைத்தால் அந்த வாசனை  போய் விடும். அதனால் முழு கிழங்கையும் அப்படியே வேக வைக்கவேண்டும்.
இந்த கிழங்கு வெந்து கொண்டு இருக்கும் போதே...


தேங்காய் 
வெல்லம் 
வெல்லம் - தேங்காய் கலவு
தேங்காயை தேவையான அளவிற்கு எடுட்து சிறிதாக நறுக்கி கொள்ளவும். இப்போது நறுக்கிய தேங்காயில் சிறிது வெல்லத்தை (பெயரிலேயே சக்கரை இருப்பதால் மீண்டும் சக்கரை போடா கூடாது, அதனால் தான் வெல்லம்) போட்டு  இரண்டையும் கலந்து வைத்துகொள்ளவும்.
ஒரு சிறிய இஞ்சி துண்டையும் எடுத்து அதன் சாரை பிழிந்து வைத்து கொள்ளவும். 
 ஒரு கூரான குச்சி அல்லது ஊசி போன்ற ஒன்ற ஒன்றை எடுத்து அந்த கிழங்கு வெந்து உள்ளதா என்று பார்த்து கொள்ளுங்கள். இந்த மாதிரி பார்த்தல் நான் ஏற்கனவே கூறியது போல் அந்த வாசனையும் சத்து பொருளும் வெளியே போகாது. கத்தி அல்லது கரண்டி போன்றவற்றை உபயோகிகாதீர்கள். 

நன்றாக வெந்த கிழங்கை இப்போது எடுத்து சூடு சிறிது ஆறியவுடன், அந்த தோலை எடுத்துவிடுங்கள். 


இப்போது அந்த கிழங்கையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அந்த பிழிந்த இஞ்சி சாரை ஊற்றவும். 



அத்தோடு ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யும் ஊற்றவும். 


ஏலக்காய் தூள் 

தொடர்ந்து ஏலக்காய் தூளை அதில் போடவும் 

பின் அந்த வெல்லம் கலந்த தேங்காயையும் அதில் போட்டு, இப்போது நன்றாக பிசையவும்.





 பின்னர் தங்கள் இல்லத்திற்கு தகுந்தார் போல் உருண்டை பிடிக்கவும்.



பின் குறிப்பு :

இன்று என் இல்லத்திற்கு  வந்த விருந்தினோர் இதை மிகவும் விரும்பி சாப்பிட்டனர். எனக்கு - உனக்கு என்ற போட்டி நடந்தது என்பதை தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.

அது மட்டும் இல்லாமல், முதல் வாயிலேயே என் மனைவி.. எங்க அம்மா செய்தது போல் இருக்கே என்றவுடன் மனதில். வெற்றி.. வெற்றி என்று ஒரு சத்தம்...

நீங்களும் செய்து பாருங்களேன். 

www.visuawesome.com

10 கருத்துகள்:

  1. விசு, சொன்ன வார்த்தையை காப்பாற்றி விட்டீர்கள். சமையல் குறிப்பை வீடியோ ஆக யூட்யூப்ல் போடுவதாக சொல்லியதாக நினைவு. பரவாயில்லை. போட்டோக்கள் போட்டு விளக்கம் குடுத்தது போதும். (முயற்சி) செய்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்கிறேன். நன்றி. - கிரிஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை வீடியோவில் போடுகிறேன். வருகைக்கு நன்றி. நீங்களும் செய்து பாருங்கள்.

      நீக்கு
  2. நல்ல சமையல் குறிப்பு. இனிய பாராட்டுகள்.

    அதென்ன வெள்ளி? அது வள்ளி இல்லையோ!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி நாட்களில் வள்ளி என்ற ஓர் பெண்ணோடு வந்த பிரச்சினையால், வள்ளி என்ற பெயரையே இன்னி உச்சரிக்க மாட்டேன் என்று எடுத்த சபததினால் வந்த வினை இது. ஜஸ்ட் கிட்டிங்.
      நான் உண்மையாகவே இது வெள்ளி கிழங்கு என்று தான் இந்நாள் வரை யோசித்து வந்தேன். சுட்டிகாட்டியதற்குநன்றி

      நீக்கு
  3. இந்த கிழங்கை நான் வேக வைக்காமல் சாப்பிடுவேன் என் மனைவிக்கோ வேக வைத்து சாப்பிடுவதுதான் பிடிக்கும்.

    சரி நீங்க சொன்னபடி செய்து என் மனைவிக்கு கொடுக்கிறேன் ஒரு வேளை அவளுக்கு பிடித்து இருந்தால் 2 நாளைக்கு பூரிகட்டையில் அடிவாங்குவது குறையும் ஹும்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் சமையல் குறிப்பினால் நீங்கள் இரண்டு நாள் அடிவாங்காமல் தப்பினால், ஒரு சந்தோசம் தான். இந்த கிழங்கை பச்சையாக உண்ண கூடாது நண்பா. அது நல்லதல்ல.

      நீக்கு
  4. விசு சார் நீங்களும் என்னை மாதிரி கிச்சன் கில்லாடியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமையல் ஓர் கலை ஆயிற்றே. அதை எப்படி நாம் விட்டு இருக்க முடியும்?

      நீக்கு
  5. சார்... நீங்க ஒரு கிச்சன் கில்லாடி....... அசத்திட்டீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதோ நம்மால் முடிந்தது மாது. வருகைக்கு நன்றி.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...