Wednesday, October 15, 2014

என்னதான் சொல்லு! அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி தான்.

விஷ் குட் மார்னிங்

குட் மார்னிங் மிகுவேல், ஹொவ் ஆர் திங்க்ஸ்?.

விஷ், உங்க காரை ஷோ ரூம் டெலிவரி பண்ணி விட்டது. நீங்க மெயின் ஆபிஸ் வந்து எடுத்து கொள்ள முடியுமா?

சரி மிகுவேல். இப்ப நான் ஒட்டி கொண்டி இருக்கின்ற வாடகை காரை என்ன செய்வது?அதை இங்கே விட்டு விடுங்கள், அந்த வாடகை வண்டி நிறுவனம் இங்கே வந்து எடுத்து கொள்வார்கள்.

தாங்க்ஸ் மிகுவேல். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே இருப்பேன், என்று சொல்லி வண்டியை மெயின் ஆபிஸ் நோக்கி விட்டேன்.

போகின்ற வழியில், சில மலரும் நினைவுகள், பல வருடங்களுக்கு முன்... சென்னை பிராட்வே அருகில்.

அண்ணே, அவசரமா, மின்ட் லைப்ரரி வரை போக வேண்டும், வாடகை சைக்கிள் தருவீர்களா?

தம்பி, உன்னை இங்கே பார்த்து இருக்கின்றேன், இருந்தாலும் அவ்வளவா தெரியாதே தம்பி.

அண்ணே இன்னும் 30 நிமிடத்தில் நூலகம் மூடி விடுவார்கள், கொஞ்சம் அவசரம், ப்ளீஸ்.

தம்பி, தெரிஞ்சவங்க யாரையாவது கூட்டி கொண்டு வா.

பக்கத்து கடை ராதா கிருஷ்ணன் சொன்னா கொடுப்பிங்களா?

ராதா கிருஷ்ணனை உனக்கு தெரியுமா?

தெரியும் அண்ணே, அவரை சொல்ல சொல்லட்டா?

இல்ல வேண்டாம் விடு, இந்தா வண்டியை எடுத்துக்கோ. சீக்கிரம் வா, நானும் கடைய மூடவேண்டும்.

நன்றி அண்ணே.

வாடகை காரை ஒட்டி கொண்டு போகும் போது அந்த காலத்தில் ஒட்டிய வாடகை சைக்கிள் நினைவிற்கு வந்தது. சைக்கிள் மற்றும் காருக்கும் இடையே நடந்தது என்ன? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

சில நிமிடங்கள் கழித்து மெயின் ஆபிஸ் வந்து சேர்ந்தேன்.

விஷ்,, தேங்க்ஸ் பார் கமிங் சூன், எனக்கும் அவசரமா வெளியே போகவேண்டும், ஜஸ்ட் வைடிங் பார் யு.

தேங்க்ஸ், மிகுவேல், எங்க அந்த  கார்?

இதோ இங்கே, அந்த வெள்ளை கார் தான். இந்தாங்க சாவி.

என்ன மிகுவேல், இந்த சாவி வேற மாதிரி இருக்கு?

விஷ், இந்த சாவியை எங்கேயும் போட்டு திறக்க வேண்டாம். பாக்கெட்டில் இருந்தால், ஏன் காருக்குள் இருந்தால் போதும், கார் தானாக ஸ்டார்ட் ஆகும்.

சூப்பர் மிகுவேல், ஐ லைக் திஸ் கான்செப்ட். தேங்க் யு அகைன் பார் யுவர் ஹெல்ப்.

என்று சக ஊழியருக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு, சீட் பெல்டை மாட்டி கொண்டு ஸ்டார்ட் பட்டனை அழுத்தினேன், ஸ்டார்ட் ஆகவில்லை. மீண்டும் ஒரு முறை அழுத்தினேன், பிரயோஜனம் இல்லை.

உடனடியாக மிகுவேல் அவர்களுக்கு (அவசரம்  என்று கிளம்பிவிட்டாரே) ஒரு போன் போட்டு,

மிகுவேல், இந்த வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை,

சாவி எங்க இருக்கு விஷ்?

பாக்கெட்டில் தான்

சரி ஒரு 5 நிமிடத்தில் நான் அங்கு இருப்பேன்.

5 நிமிடத்தில் அவர் வரும் வரை நானும் வண்டியிலேயே அமர்ந்து இருந்தேன்,
மிகுவேல் அவர் வண்டியை அருகில் நிறுத்தி விட்டு, என் வண்டியில் பயணியின் இருக்கையில் அமர்ந்து...

எங்கே அந்த சாவி? சில நேரங்களில் புது சாவியில் பாட்டரி இருக்காது. லேட் மீ செக்.

இதோ.

பாட்டரி நன்றாக தானே இருகின்றது!

என்று சொல்லி கொண்டே ஸ்டார்ட் பட்டனை அவர் அழுத்த, வண்டி ஸ்டார்ட் ஆகி விட்டது.

என்ன விஷ், கொஞ்சம் பொறுமையாக செய்ய வேண்டும், நீ அவசரத்தில் வேறு எதோ பட்டனை அழுத்தி இருக்கின்றாய்.  ப்ளீஸ் டேக் கேர்!

என்று ஒரு சிறு அறிவுரை கொடுத்து விட்டு அவர் வண்டியில் ஏறி சென்று விட்டார்.

இப்போது  வண்டியை எடுத்து கொண்டு நேராக ஆபிஸ் நோக்கி சென்றேன். ஆபிஸ் போகும் வழியில் தான் என் இல்லமும் இருக்கின்றது. நித்தம் நித்தம் நெல்லி சோறு, நெய் மணக்கும் கத்திரி காய் இல்லாவிடிலும், நேத்து வைச்ச மீன் கொழம்பு கண்டிப்பா இருக்குமே என்று எண்ணி வண்டியை வீட்டை நோக்கி விட்டேன். வீட்டின் எதிரில் நிறுத்தி விட்டு உள்ளே சென்று, ரெண்டு சப்பாத்தி (இங்கே சூப்பர் ரெடி மேட் சப்பாத்தி கிடைக்கும், என் வீட்டில் எப்போதும் இது இருக்கும்) சூடு பண்ணி, நெத்திலி மீன் கொழம்போடு ஒரு கட்டு கட்டு விட்டு, மீண்டும் வண்டியை நோக்கி சென்றேன்.

பாக்கெட்டில் சாவி உள்ளதா என்று செக் பண்ணிய பின், சீட்பெல்டை போட்டு கொண்டு, மீண்டும் அந்த ஸ்டார்ட் பட்டனை அழுத்த வண்டி... ஸ்டார்ட் ஆகவில்லை. இது என்னடா வம்பா போச்சே என்று நினைத்து ஒரு ஐந்து அல்ல ஆறு முறை திரும்ப திரும்ப முயற்சி செய்தேன். பிரயோஜனம் இல்லை.

கழுதை கெட்டால் குட்டி சுவர் ஆனா கதை போல்....மீண்டும்..

மிகுவேல்..

விஷ், ஹொவ் டூ யு லைக் தி கார்?

ஐ லவ் இட், பட் மீண்டும் ஸ்டார்ட் ஆகவில்லை.

விஷ், கேட்கின்றேன்   என்று தவறாக யோசிக்காதீர்கள், உங்கள் பாக்கெட்டில் சாவி உள்ளதா என்று பாருங்கள்.

இருக்கு மிகுவேல். நான் இப்போது சாவியை கையில் வைத்து கொண்டு தான் காரில் அமர்ந்து கொண்டு இருக்கின்றேன், ஆனாலும் இது ஸ்டார்ட் ஆகவில்லை,

சரி, விஷ், நீ அந்த காரை அங்கேயே விட்டு விடு, நான் உனக்கு மீண்டும் ஒரு வாடகை கார் அனுப்புகிறேன்.

தேங்க்ஸ் மிகுவேல்.

என்னடா இப்படி ஆகிவிட்டதே, மிகுவேல் வந்தால் ஸ்டார்ட் ஆகி விடுகிறது  , ஆனால் எனக்கு மட்டும் ஸ்டார்ட் ஆக மறுக்கின்றதே என்று நொந்து கொண்டே இருக்கையில்... "பல்ப்" எரிந்தது.

மிகுவேல் வந்தால் ஸ்டார்ட் ஆகி விடுகிறது.. மிகுவேல் வந்தால் ஸ்டார்ட் ஆகி விடுகிறது.

தொலை பேசியை எடுத்தேன்..

மிகுவேல்...

விஷ்... இன்னும் ஒரு 15 நிமிடத்தில் வாடகை வண்டி அங்கே இருக்கும்.
டோன்ட் வொர்ரி.

அதை விடு மிகுவேல், இன்றைக்கு ஷோ ரூம் ஆட்கள் எத்தனை வண்டி டெலிவரி பண்ணார்கள்.

உன்னோட காரையும் சேர்த்து ரெண்டு, ஏன் இந்த கேள்வி.

அந்த  இன்னொரு கார் என்ன மாடல்?

ரெண்டும் ஒரே மாடல் தான்.

அந்த வண்டியின் சாவி எங்கே?

என் பாக்கெட்டில் தான் இருக்கு விஷ். ஏன்?

அட பாவி, இந்த வண்டி சாவியை நீ வைத்து கொண்டு அந்த வண்டி சாவியை என்னிடம் கொடுத்து விட்டாய்.

நோ சான்ஸ், அப்படி இருந்தால் உன் கார் எப்படி இங்கே மெயின் ஆபிசில் ஸ்டார்ட் ஆகியது?.

எங்கே ஸ்டார்ட் ஆகியது? அது தான் ஸ்டார்ட் ஆகவில்லையே.

விஷ்,  உள்ளே அமர்ந்து நானே தான் ஸ்டார்ட் பண்ணி கொடுத்தேன்.

மிகுவேல், அந்த சாவி உன் பாக்கெட்டில் இருந்ததால் ஸ்டார்ட் ஆகி விட்டது, இப்போது நீ இல்லை அதனால் தான் ஸ்டார்ட் ஆகவில்லை.

ஒ, விஷ், இப்ப புரிகின்றது, நீ தவறான சாவியை எடுத்து கொண்டு கிளம்பி விட்டாய்.

என்னாது? நான் தவறான சாவியை எடுத்து கொண்டு கிளம்பினேனா? நீ தானே தவறான சாவியை கொடுத்தாய்?

விஷ், நான் ஒரு மெக்சிக்கன். எப்போது நாங்கள் என்ன தவறு செய்தாலும் அதை மற்றவர்கள் மேல் அழகாக போட்டு விடுவோம்.

அடே   டே , எங்க ஊர் பெண்களை போலவா?

பின் குறிப்பு ;
என்னதான் சாவி இல்லாத வண்டியை ஒட்டினாலும், அப்ப பிராட்வேயில் இருந்து   மின்ட் வரை   சைக்கிள் ஓட்டும் போது இருந்த சுகம், தெம்பு, கெத்து இப்ப இல்லை.


www.visuawesome.com

11 comments:

 1. கடைசி வரிகளில் நிஜத்தை சொல்லிவிட்டீர்கள் சார், எல்லாம் டெக்னாலஜி தான்...அல்ல பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. கடைசி வரி... அந்த மதராசில் இருந்த தெம்பை சொல்லுகின்றீர்களா, அல்ல, எங்கள் ஊர் பெண்களை போல... என்பதை சொல்லுகின்றீர்களா? வருகைக்கு நன்றி ஜெயசீலன்.

   Delete
 2. அட பாவி, இந்த வண்டி சாவியை நீ வைத்து கொண்டு அந்த வண்டி சாவியை என்னிடம் கொடுத்து விட்டாய்./// haahaahaa car concept puthusaa irukku sir...
  thodarnthu ithu matiriyaana puthiya puthiya vishayangkalai eluthungal sir.

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி புதுசா தான் ஏதாவது எழுதலாம்ன்னு நினைப்பேன் மகேஷ், அந்த நேரத்தில் பார்த்து.. அம்மா-அப்பா- தாத்தா- மாமான்னு நம்ம அரசியல்வாதிகள் கதை ஏதாவது கண்ணில் தென்பட்டு விடுது, உடனே இதை விட்டு விட்டு அங்கே ஓடி விடுகிறேன். நான் முதலில் செய்திகளை படிப்பதை நிறுத்த வேண்டும். வருகைக்கு நன்றி..

   Delete
 3. When u drive without key, didnt u see the indicator that the key is not around? You cant drive far without the key inside the car

  ReplyDelete
  Replies
  1. In fact, I did notice a yellow warning light, but didn't take it seriously then. With regards to "How far can you drive without the keys", it seems this car was configured for 60 miles. Thank you from dropping by and I really appreciate your follow up comments. Keep ' em coming!

   Delete
 4. "அடே டே , எங்க ஊர் பெண்களை போலவா?"
  Paarthu boss veetuku auto anuppida poranga :)

  Regards,
  A Yusuf

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ஆனாலும் பிரச்சனை இல்லை யூசுப். இப்ப அண்ணாமலை சைக்கிள் பாட்டு, அது போய் ஆட்டோ வந்தா... நான் ஆட்டோகாரன் ....ஆட்டோகாரன் பாட்டு.. வருகைக்கு நன்றி.

   Delete
 5. உனக்கும் அதே சாவி பிரச்சனையா தம்பி , என்னது வோல்க்ஸ் வாகன் ரூட்டன் மினி வேன் . எலெக்ட்ரானிக் சாவி .வேலை செய்யாம டுப்ளிகேட் சாவி வாங்க $484 செலவு
  ஆச்சு . ஆமா அது என்ன வண்டி ?

  ReplyDelete
 6. எங்க ஊர் பெண்களைப் போலவா.....பார்த்துங்க...பக்கத்துல நம்ம ஊர் பெண்கள் யாருடைய காதுலவாது உங்க மைன்ட் வாய்ஸ் கேட்டுடப் போவுது!

  பின் குறிப்பு சத்தியம்! நிஜம்! உங்கள் எழுத்தை மிகவும் ரசித்தோம்....

  ReplyDelete
 7. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...