"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்". - கங்கை அமரன்.
அண்ணன் அமரனுக்கு ஒரு சேதி ..
இந்த பதிவை மேலே படிக்கும் முன் (படிக்க நேர்ந்தால்.. அருமை ஞானி இளையராஜா அவர்களின் இசையில் வந்த .. "நேத்து ராத்திரி அம்மா".. மற்றும் "நிலா காயுதே" என்ற பாடல்களில் ஜானகி அவர்கள் மிதிபட்ட பூனை போல் அலறுவார்களே அந்த சப்தத்தை மனதில் வைத்து கொண்டு படிக்கவும்).
இளையராஜா அவர்களின் இசையை ரசித்து வாழ்ந்து வளர்ந்தவன் நான். அவரின் இசை அறிவை மிகவும் வியந்து பார்த்தவன் நான். ஆனாலும் இளையராஜாவின் இசை இருந்து விடாவிடில் நாங்கள் அனைவரும்"நாறி செத்து போய் இருப்போம்" என்று நீங்கள் சொல்வது ஒரு மொத்த சமுதாயத்தையே இழிவு படுத்துகின்றது.
வெள்ள நிவாரணத்திற்கு மனித தன்மையில் உதவி செய்ய போய் இருந்த இளையராஜாவிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி இடம் பொருள் ஏவல் இல்லாதது தான். ஆனால் இளையராஜா அவர்கள் அதற்கு அளித்த பதில் கேள்வியை விட மோசமாக இருந்தது. தனக்கு பிடிக்கும் அனைவரையும் "சுவாமி, சுவாமி" என்று அழைக்கும் இவர், பொறுமை இழந்து இருக்க கூடாது. அவரின் பதில், இது இதற்கான நேரம் இல்லை என்று சொல்லி இருந்தால், அது அவரின் வயதிற்கு ஏற்ற பதிலாக இருந்து இருக்கும்.
(ஒரு சிறிய விண்ணப்பம்.. படிக்கும் ஆர்வத்தில் பாடலை மறந்து விடாதீர்கள்.. அது தான் ஜானகி அவர்களின் ஆ... ஆ ... என்ற படுக்கை ஓலம் )
அமரன் அவர்களே, தங்கள் தொலை பேசி பேட்டியில் .. தாம்...
"சில பேர் கேள்விகளுக்கு அப்பார்ப்பட்டவர்கள்" என்று சொன்னீர்கள். இளையராஜ எப்போதில் இருந்து கேள்விகளுக்கு அப்பாற்பட்டவரானர் என்று கொஞ்சம் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும். முப்பது வருடங்களுக்கும் மேல் தான் பெற்ற சம்பளதிர்க்காக சினிமாவிற்கு இசை அமைத்த ஒருவர் தான் இளையராஜா. பொது வாழ்க்கையில் உள்ள இவரிடம் கண்டிப்பாக இம்மாதிரியான கேள்விகள் வரும். அதை சரியான வழியில் எதிர் கொள்ளவேண்டியது அவரின் கடமை.. அதை விட்டு விட்டு..
அறிவு இருக்கா என்பது?
மேலும் அந்த பேட்டியில்..
ஒரு பெண் நிருபரை .. "ஏய்".. என்று நீங்கள் கூச்சல் போடுவதும் நாகரீகமாக தெரியவில்லை. அது தங்களின் தனி ஒழுக்கத்தை படம் பிடித்து காட்டுகின்றது.
அடுத்து, ராத்திரி யார் பாடலை கேட்கின்றீர்கள்.. சோகமா.. காதலா சந்தோசமா.. எல்லாமே இளையராஜா பாட்டு தானே .. என்று தங்களிடம் இருந்து ஒரு கேள்வி..
அமரன் அவர்களே, இளையராஜாவின் இசை என்றுமே என் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்து உள்ளது. ஆனால்.. அந்த ஒரே காரணத்திற்காக எல்லாமே இளையராஜா என்ற ஒரு நிலைமை யாருக்கும் வந்தது இல்லை.
இளையராஜாவிற்கும் முன் வந்த அருமையான பாடல்கள் ஆயிரம் உண்டு. இப்படி தாறுமாறாக பேசுவதற்கு முன் தாம் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும்.
மேலும், அந்த பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு எச்சரிக்கை விட்டீர்கள். ஒரு வேளை அவரே மன்னிப்பு கேட்டாலும் தான் அளித்த பதிலும் தவறு என்று இளையராஜா ஒப்பு கொள்வாரா?
மற்றும்.. சாமியார் என்றால் என்ன சும்மா உட்கார்ந்து ஊதி ஊதி கொடுப்பார்களா என்ன? நல்ல கேள்வி.
ஊதி கொடுக்க வேண்டாம்.. ஆனால் அமைதி காத்து இருக்கலாமே.
இனிமேல் இளையராஜா எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். அவரின் பேச்சை கேட்க உங்களுக்கு "வக்கு" இல்லை.
அமரன் அவர்களே.. என்ன ஒரு கூற்று.
ஒட்டு மொத்தமாக எங்கள் அனைவரையும் முட்டாள்கள் என்றே முடிவு பண்ணிவிட்டீர்களா? இளையராஜாவின் இசையை விரும்பிய கோடி கணக்கானோர், அவரின் இயல்பை வெறுத்தார்கள் என்பதை தாங்கள் அறியவில்லையா.. அல்ல அறியாதது போல் நடிகின்றீர்களா?
இளையராஜாவின் பரம விசிரியனான நானே சொல்கிறேன், இனிமேல் அல்ல, இதற்கு முன்னாலும் இளையராஜாவின் பேச்சை நாங்கள் ஒன்றும் கேட்டு ரசித்தது இல்லை. இனி அவர் பொது நிகழ்ச்சியில் நடந்து கொள்ளாவிடில் ஒன்றும் குடி முழுகி போகாது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் .. நன்றாக பாடினீர்கள். ஆனால் இந்த பாடலை " நேத்து ராத்திரி .. நிலா காயுதே" பாடலுக்கு இசை அமைக்கும் முன் யோசித்து இருந்தால் இன்று இந்த நிலைமை வந்து இருக்காது.
யாகாவாரயினும் நா காக்கா.. சும்மாவா சொன்னார் வள்ளுவர்.
பின் குறிப்பு :
இளையராஜாவின் பாடல்களை மிகவும் ரசிப்பவன் நான். அவர் இசையின் மேல் நான் வைத்து இருக்கும் ஸ்பரிசத்தை பல பதிவுகளில் வெளியிட்டு இருக்கின்றேன்.
என்னுடைய ஆதங்கம் எல்லாம், நிதானம் இல்லையே, பொறுமை இழந்து விட்டாரே.. பொறுமை இழந்து விட்டீர்களே.
சரி விடுங்கள், இனி இவரை பொது வாழ்க்கையில் பார்க்காமல் இருக்க நாங்கள் பழகி கொள்கிறோம்.
இசைக்கு நன்றி.. அவரிடம் சொல்லி விடுங்கள்.

நண்பரே,
பதிலளிநீக்குஇறைவனின் நேரடி வாரிசுகளை நீங்கள் புத்திகூறி அவமானபடுத்தாதீர்கள்.
ராஜாவின் இசை எத்தனை கோடி மக்களின் பசியையும் பிணியையும் வறுமையையும் போக்கி இருக்கின்றது இன்னமும் போக்கிகொண்டிருக்கின்றது என்று தெரியாமல் நீங்கள் பேசுகின்றீர்கள்.
ஒரு யோகியை - (இசை)ஞானியை உலக அறிவின் மொத்தத்தையும் உள்ளடக்கிய ஒரு மெத்த படித்த - முற்றும் துறந்த ஒரு தவ மனிதரை , அவரின் தரிசனத்திற்காக ஏங்கும் மக்கள் போற்றும் ஒரு மா மனிதரை பார்த்து அந்த நிருபர் கேட்ட கேள்வி ஒரு மா பாதக கேள்வி என்பதை நீங்கள் உணரவில்லையா?
தம்பி கங்கை அமரனுக்கு இங்கிதம் தெரியாது, அறிவுடன் மரியாதையுடன் சபைகளில் பேசதெரியாது என்பதுபோல் நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது.
மைக் கிடைத்தால் அதை அறிவு பூர்வமாக பலருக்கும் பயன் தரும் வகையில் சபை நாகரீகம் கருதி உலகம் பிறந்து இதுவரை யாரும் அறியாத புதிய தகவலை மட்டும் அதுவும் ஒரே ஒருமுறை மட்டும் பகிர்ந்து கொள்ளகூடிய அருமை தம்பியை , நீங்கள் அந்த நிருபர் பெண்ணிடம் கண்ணிய குறைவாக பேசியதாக சொல்வது இந்த உலகம் ஏற்காத ஒரு உண்மைக்கு மாறான ஒரு விடயம். அவர் எல்லோரையும் மகனாகவும் மகளாகவும் நினைக்கும் ஒரு உத்தம தகப்பன்.
சிலருக்கு சில்லறை சேர்ந்த பின்னும் தன் சில்லறை புத்திகளின் வட்டத்தில் இருந்து விடுபடுவது கடினமாக இருப்பதுபோல் நீங்கள் சொல்லும் விஷயம் ரொம்ப சில்லரையான விஷயம்.
நாட்டில் எவ்வளவோ செய்யவேண்டி இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் பொன்னான நேரத்தை இப்படி வீணக்குவதும் அதை தொடர்ந்து என் நேரம் வீணாவதையும் குறித்தே எனக்கு கவலை.
உங்களிடம் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை, நன் உடனே ராஜாவின் பாட்டு கேட்ட்க்க வேண்டும் இல்லை என்றால் இன்னும் சில நொடிகளில் நான் மயக்கமுற்று தரையில் விழுந்துவிடுவேன், அவரது இசை மட்டுமே எனக்கு பிராண வாயு இல்லையேல் எனக்கு பிராணன் ஏது.
நீங்களும் போய் நேத்து ராத்திரிக்கு அப்புறம் என்னன்னு ஏதாவது பாட்டு அவர் போட்டிருந்தால் சீக்கிரம் கேளுங்கள் இல்லையேல் இன்று ராத்திரி உங்களுக்கும் தூக்கம் வராமல் அவஸ்த்தை பட கூடும்.
அந்த நிருபர் தம்பியை அறிவை வளர்த்துக்கொள்ள சொல்லுங்கள்
நன்றி வருகிறேன்.
கோ
ஹி... ஹி... வஞ்ச புகழ்ச்சி! ரொம்ப ரொம்ப சூசகமான வஞ்ச புகழ்ச்சி! புரியுது நண்பரே. :-)
நீக்குஇவர் பொது வாழ்க்கைக்கு வராவிட்டால் ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடாது
பதிலளிநீக்குதன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்மாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
பதிலளிநீக்குநன்றி: பரிசுத்த வேதாகமம்
விசு,
பதிலளிநீக்குஅட்டகாசம். கை கொடுங்கள்.
இந்த இளையராஜா, கங்கை அமரன், பாரதிராஜா, பாக்கியராஜ் வகையறாக்கள் வந்ததும்தான் நமது தமிழ் சினிமா நாறிப் போனது. குமட்டிக்கொண்டு வரும் பாடல் வரிகள் ( வாடி எ கப்பக்கிழங்கே, மாம புடிச்ச பூவு இத மோந்து மோந்து பாரு, போன்று) போர்ன் இசையமைப்பு ( இதற்கு உதாரணமே தேவையில்லை. இதன் உச்சம் நிலா காயுது) படு திராபையான மெட்டு என இந்த கோஷ்டி போட்ட ஆட்டத்தில்தான் நாம் பல நல்ல இசை, மெட்டுகள் கொண்ட பாடல்களை இழந்தோம்.
இராவுக்கும் க அ வுக்கும் எதோ மன வியாதி போலிருக்கிறது. இவர்கள் இல்லாவிட்டால் தமிழகமே சுடுகாடாகப் போயிருக்கும் என்கிற அளவில் உளரும் இந்த அதிகப்பிரசங்கித்தனம் இவர்களது குனாதிசியங்களில் ஒன்று. சுரணை கேட்ட இராவாசிகள் இதையும் அமோகமாக வரவேற்று ஆமோதிப்பார்கள்.
இராவுக்கு முன்னே தமிழ் இசை நன்றாகவே இருந்தது. இன்றைக்கும் காவியப் பாடல்கள் என்றாலே எம் எஸ் வி காலம்தான். இராவுக்கு கடைசி சீட்தான் உண்டு.
நான் இசை வசை என்ற பதிவில் ஏறக்குறைய இதே கருத்தை வைத்து எழுதியிருக்கிறேன்.
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2015/12/blog-post.html
உண்மையை உரக்கச் சொன்னதற்கு பிடியுங்கள் ஒரு பிரமாண்டமான சபாஷ்.
அசல் காரம் நண்பரே..சரிதான்...விடுங்கள் ஞானியின் தம்பிதானே....
பதிலளிநீக்குஎம்.எஸ்.வி க்கு இளையராஜா செய்த நினைவஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு கங்கை அமரன் ராஜாவை கன்னாபின்னாவென்று, ஏன் அபத்தமாகக் கூட விமர்சனம் செய்து முகநூலில் எழுதினார். இப்போது என்ன திடீர் பாசம்?
பதிலளிநீக்குGANGAI AMARAN IS A VERSATILE LYRIC WRITER GOOD MUSIC DIRECTOR
பதிலளிநீக்குALL KNOW THAT