வியாழன், 10 டிசம்பர், 2015

என் பெயரை சொல்லி *பால் அடிக்கவும், முகத்தில் *ரி துப்பவும்

மூன்று வாரத்திற்கும் மேல் சென்னை மழையில் மக்கள் படும் பாடை பார்த்து மனம் நோகாதவர்களே இல்லை.


இந்த பாழாய் போன நிலைமைக்கு நமக்கு நாமே தெரிந்து எடுத்த அரசும் அந்த அரசு நியமித்த அதிகாரிகளும் தான் என்று நொந்து கொண்டு இருக்கையில்..
சாவு செய்திகள்.



உதவி இன்றி கணவன் மனைவி சாவு..


உதவ போன வாலிபன் சாவு..

ஊர் அறிந்த  இணைய தமிழ் எழுத்தாளர் மனைவியோடு வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டு அவர்கள் இருவரும் அநாதை பிணமாக எடுக்க பட்டனர்.

உணர்வோடு உதவி செய்ய போன என் மகன் வீடு திரும்பவில்லை என்று தவிக்கும் தாய் ..

உயிர் காக்க  உதவி செய்ய வருவார்களா என்று காத்து இருக்கும் மக்கள்..

சாக்கடையான "வரம்" எப்போது வடியும் ...

தோற்று நோய் ... வருமா? தடுக்க முடியுமா?

பிரசவத்திற்கு இடம் தேடி அலைந்த பெண்கள் ..

திருமணம் நின்று போய் அழுத கண்கள்..

ஏன்...

இறந்தவரை எரிக்க கூட இடம் இல்லாமல் துவண்ட நெஞ்சங்கள்..

இவர்களையெல்லாம் ஆறுதல் படுத்த கோவமோ .. கனிவோ .. எல்லாரும் அவரவர் வழியில் ஏதோ ஒன்று செய்ய.. நானோ எனக்கு தெரிந்த தமிழில் எழுதி கொண்டே இருந்தேன்..

இன்று காலை ஒரு மின்னஞ்சல்..

விசு... இதற்கும் கீழே தமிழன் போக முடியாது. இந்த பாடலை கேட்டு பார். "தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா" என்பதையும் தாண்டி "தமிழன் என்று சொல்லடா .. தூக்கு போட்டு சாவடா" என்பதை போல் உள்ளது என்று ஒரு தொடர்பு அனுப்பி இருந்தார்.

இந்த வெள்ள அவல நிலைக்கும் கீழே ஒரு அவல நிலையா? சாத்தியமே இல்லை என்று எண்ணி. தொடர்பை சுட்டினேன்.


"சிம்பு - அனிருத் " சேர்ந்து வழங்கிய பாடல்... என்ன *க்கு லவ் பண்ண?
 இரண்டு வாக்கியம் கேட்டவுடன்.. உடம்பில் கம்பிளி பூச்சி ஊறுவதை போல் ஓர் உணர்வு.

இந்த இருவருக்கும் என்ன ஒரு திமிர். ஒட்டுமொத்த தமிழ் வாலிப இனத்தையே  இவர்கள் இருவரும் சேர்ந்து செருப்பால் அடித்துள்ளார்கள்.

மீண்டும் ஒரு முறை சொல்லுகிறேன்.

உதவி இன்றி கணவன் மனைவி சாவு..

உதவ போன வாலிபன் சாவு..

ஊர் அறிந்த  இணைய தமிழ் எழுத்தாளர் மனைவியோடு வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டு அவர்கள் இருவரும் அநாதை பிணமாக எடுக்க பட்டனர்.

உணர்வோடு உதவி செய்ய போன என் மகன் வீடு திரும்பவில்லை என்று தவிக்கும் தாய் ..

உயிர் காக்க  உதவி செய்ய வருவார்களா என்று காத்து இருக்கும் மக்கள்..

சாக்கடையான "வரம்" எப்போது வடியும் ...

தோற்று நோய் ... வருமா? தடுக்க முடியுமா?

பிரசவத்திற்கு இடம் தேடி அலைந்த பெண்கள் ..

திருமணம் நின்று போய் அழுத கண்கள்..

ஏன்...

இறந்தவரை எரிக்க கூட இடம் இல்லாமல் துவண்ட நெஞ்சங்கள்..

என்று நாம் அனைவரும் அழுது கொண்டு இருந்த வேளையில் இவர்கள் இருவரும் அமர்ந்து போட்ட  ராகம்.

என்ன *க்கு லவ் பண்ண? 


பொதுவாக என் எழுத்தில் மிகவும் கவனமாக இருப்பவன் நான். என்ன கோவம் வந்தாலும் நாகரீகமாக எழுத நினைப்பவன் நான்.

இதை படிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு  ஒரு வேண்டுகோள்.

இந்த இருவரை எங்கேயாவது பார்த்தீர்கள் என்றால் .. என் பெயரை சொல்லி  *பால் அடிக்கவும், முகத்தில் *ரி   துப்பவும்.

எவ்வளவு தைரியம் இருந்தால் .. அதுவும் இந்நேரத்தில்...

சிம்புவின் தகப்பன் TR  க்கு ஒரு வேண்டு கொள். 


என்ன ஒரு வளர்ப்பு ஐயா? மிகவும் அருமையான வளர்ப்பு. சிறு வயதில் தவறும் செய்யும்  போது தண்டிக்காமல் .. புனை பெயர் வைத்து பாராட்டினீர்களே .. அதனால் வந்த "வம்பு" இது.

உங்கள் வீட்டில் உஷா அம்மையார் இன்னும் இருகின்றார்கள்  தானே. நீங்களும் "லவ்" பண்ணி தானே திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் புதல்வனையும் அவன் நண்பனையும் ஒரு இருக்கையில் அமர்த்தி விட்டு அவர்கள் எதிர்ல் இந்த பாடலை தம் அருமை மனைவியிடம் பாடுங்கள். முடிந்தால் நீங்கள் பெற்றெடுத்த உங்கள் அருமை ராசாத்தியும் அருகில் இருக்கட்டும்.

இதில் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த பாடலை வெளியிட்ட நேரம். சென்னையே சோகத்திலும் வெள்ளத்திலும்  மூழ்கி இருக்கும் நேரத்தில் இவர்கள் ஆற அமர்ந்து போட்ட பாடல். 


என்னே ஒரு சுயநலம். என்னே ஒரு ஆணவம்.
 
சரி பாடலுக்கு வருவோம். இந்த பாடலின் முதல் வரி ஒன்றை மட்டும் தான் கேட்டேன். அதற்கே வாந்தி. ஆனால் இது எப்படி பட்ட பாடல் என்பதை அங்கே இங்கே சமூக வலைதளத்தில் படிக்கச் நேர்ந்தது.

முட்டாள்களே..

"கண்டவுடன் காதலே கொண்டாய் என் மீதிலே பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது" ?

அதுதானே ஓர் ஆணுக்கு அழகு. அவள் இவன் மீது ஆசை கொண்டாலும், அவளை கொண்டாடும் முன்
பெண்டாட்டி ஆகும் நாள் எப்போது என்று கேட்ட பாடல்..

பாட்டு பாடவா, பார்த்து பேசவா, பாடம் சொல்லவா, பறந்து செல்லவா... இதற்கு எல்லாம் அனுமதி கேட்டானே ... அது அல்லவா தமிழன்.. அது அல்லவா பாட்டு.


"சிம்பு - அனிருத்" நீங்கள் இருவரும் கெட்டு குட்டி சுவரானீ ர்கள், அது உங்கள் வளர்ப்பு. உங்களுக்கு பெயரும் புகழும் வர எங்களை அடகு வைக்காதீர்கள்.

நெஞ்சு பொறுக்குதில்லையே.
.. 



பின் குறிப்பு : 

மழை வெள்ளத்தினால் தமிழ்நாடு சோகத்தில் இருக்கு. அவர்களை கொஞ்சம் மகழ்ச்சி படுத்தவே இந்த  பாடல் என்று மட்டும் அறிக்கை கொடுத்து விடாதீர்கள். இந்த பாடலை கேட்டு மகிழ்வதற்கு பதில்.. வெள்ளத்தில் அடித்து கொண்டு போய் இலங்கை கடற்கரையில் "பெயர் தெரியா பிணமாய்" மடிவதே மேல்.   


இதை படிக்கும் சகோக்களே! உங்களிடம் ஒரு வேண்டுகோள். முடிந்தால் இந்த பதிவை பகிருங்கள். இந்த சனியன்கள் இதை படித்து  திருந்தும் வரை. 

4 கருத்துகள்:

  1. அதைப் பாடல் என்று சொல்லக்கூடப் பிடிக்கவில்லை..அது ஒரு கேவலம்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கோபம் நியாயம்தான். ஆணால், அவர்களுக்கு (சிம்பு, அனிருத்) வேண்டியது ஊடகங்களின் கவனம். அது கிடைத்துவிட்டது. There is nothing called Bad Publicity.. என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிவதில்லை.. அவர்களை உதாசீனப்படுத்துங்கள். தானாகவே காணாமல் போய் விடுவர்.

    பதிலளிநீக்கு
  3. என் செருப்பொன்றும் அவ்வளவு கேவலமானது அல்ல...கண்ட இடங்களில் எச்சில் துப்புவது நம் பழக்கமும் இல்லை...வேறு ஏதேனும் சொல்லுங்கள்...


    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...