செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஒரே பாட்டு... வெவ்வேறு அர்த்தம்.. நடந்தது என்ன?

ஒரே பாட்டு... வெவ்வேறு அர்த்தம்.. நடந்தது என்ன?

என்ன விசு.. சென்னையில் வெள்ளம் வந்தாலும் வந்தது நீ வெள்ளமா பொங்கி எழுறியே என்று நண்பன் தண்டபாணியின் கேள்வி வந்தது.

என்னத்த சொல்வேன் பாணி. தான் ஆடாவிட்டாலும் தசை ஆடுதே. அங்கே நடக்குற அநியாயத்த பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.

சரி.. இவ்வளவு எழுதுறியே.. மீண்டும் அங்கே போகலாம்னு முடிவு செய்திட்டியா?


அது எல்லாம் அவன் செயல் பாணி..நம்ம கையில் ஒன்னும் இல்ல.

சரி விசு.. இந்த கோவத்தை எல்லாம் ஒரு நாள் மூட்டை கட்டி வச்சிட்டு எல்லாரும் கொஞ்சம் சந்தோசமா இருக்குற மாதிரி ஒரு பதிவு போடு..

இப்ப எப்படி பாணி.. உடன் பிறப்புகள் எல்லாரும் இவ்வளவு கஷ்டத்தில் இருக்கும் போது..

அவங்கள சந்தோஷ படுத்த தான், ஒரு ரெண்டு நிமிஷமாவது கஷ்டத்தை மறக்கட்டுமே..

சரி..எதை பத்தி எழுதுறது..?

அம்மணி இல்லாட்டி கண்மணிகள பத்தி தான்..

சரி, பாணி.. முயற்சிக்கிறேன்.

அப்படி வந்த பதிவு தான் இது.

என்ன எழுதுவது. வாழ்க்கையே ஒரு சக்கரம் தானே .அதில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சி ஒன்றை எழுதலாம்.

"ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான்" என்று பாடி கொண்டு இருக்கையில் ,

விசு , உனக்கு பொண்ணு பாத்து இருக்காங்கோன்னு சொல்ல..

எந்த ஊருன்னு நான் கேக்க..

உனக்கு இந்தியாவில் எவன் தருவான் அதனால் ஈழத்து பெண் பார்த்து

இருக்கோம்னு சொல்ல..

நானோ ஒரு பாடலை பாட ஆரம்பித்தேன்...

இது பெண் பார்க்கும் போது பாடிய பாடல்... மீண்டும் ஒருமுறை

உங்களுக்காக..
பெண்  பார்க்க  செல்கையில்  ...

அதே பெண்ணை மணந்து ஒரு வருடம் குப்பை கொட்டிய பின் அதே பாடல் (சற்று வித்தியாசமான ராகத்தில்)  மனைவிக்கு பாடுகையில் சற்று வித்தியாசமாய் வந்தது. இதோ அதை இங்கே கேளுங்கள்.


                                                 திருமணம்  முடிந்த  பின் ..

இந்த பாடலுக்கு கிட்டார் வாசிப்பவர் எங்கேயோ பார்த்த முகம் போல் தெரிகின்றது அல்லவா? கண்டிப்பாக..

"சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே" என்ற  மறக்க முடியாத இலங்கை பாப்பிசை பாடலை நமக்கு அளித்த பாப்பிசை பிதா "நித்தி கனகரத்தினம்" தான் இவர் .என்னே ஒரு மனிதர்.

இவருக்கும் எனக்கும் விட்ட குறை தொட்ட குறை உண்டு. கல்லூரி நாட்களில் இவர் பாடல்கள் அனைத்தும் (சின்ன மாமியே.. ரோசி, கள்ளு கடை பக்கம் போகாதே, ஊரே கேட்டு போச்சு, அவள் வேண்டாம்) மனபாடம் செய்து பாடி கொண்டு திரிந்தேன். தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து வந்த உனக்கு இலங்கை பாப்பிசை பாடல்கள் மேல் இவ்வவளவு பிரியம் என்று என்னை கேட்காதோர் இல்லை. பல வருடங்கள் கழித்து ஈழத்தில் பெண் எடுக்க போகிறேன் என்று இரைவனூகு அன்றே தெரிந்து இருக்க வேண்டும். சிறு  வயதிலே இந்த பாடல்களில் ஒரு ஈர்ப்பை தந்து விட்டார். பாப்பிசை மேல் அவ்வளவு பிரியம்.

அதனாலோ என்னமோ அவர்  இப்போது எனக்கு மாமனார் முறையாகிவிட்டார்.  அவரும் என் மனைவியும் சாப்பாடு மேசையில் அமர்ந்து "கதைக்கையில்"அந்த யாழ்ப்பான தமிழை கேட்டு கொண்டே இருக்கலாம்.அவ்வளவு இனிமையான தமிழ்.

பள்ளி கூட படிப்பை இலங்கையில் முடித்த இவர், இந்தியாவில் கல்லூரி படிப்பை முடித்து பின் ஆஸ்திரேலியா சென்று அங்கே அறிவியலில் "டாக்டரேட்" முடித்து அங்கேயே மிகவும் புகழ் பெற்ற ஒரு பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து இப்போது ஓய்வு பெற்றுள்ளார்.

ஓய்வு பெற்ற பின்னும் தாம் பிறந்த வளர்ந்த ஜாப்னா பகுதிக்கு சென்று அங்கே நிறைய சமூக பணி செய்து கொண்டு இருகின்றார். நல்ல ஒரு மனிதர்.

இவர் பாடலை நான் பாடி அடித்த லூட்டியை விட இவரோடு பாடி அடித்த லூட்டி மிகவும் அருமை.

நீங்களும் ரசித்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.  நன்றி.

பின்  குறிப்பு : 
இவர் எழுதி இசை அமைத்து பாடிய " சின்ன மாமியே " பாடலை நான் என் திருமணத்திற்கு முன் கோடி முறை பாடி இருப்பேன். ஆனால் அதே பாடலை இப்போது பாடுவதை நிறுத்திவிட்டேன். எவனாது என்னிடமே கற்று கொண்டு அம்மணிக்கே பாடிவிட்டால்...?
ஒரே பாடல் தான் ..  வெவ்வேறு அர்த்தம்!

8 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே !
    சின்னமாமியே சின்னமகள் எங்கே பாடல் மற்றும் தகவல்கள் அருமை .எமது மருமகனுக்கு அதாவது உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் .நித்தி பற்றி அண்மையில் தான் சில தகவல்கள் வெளிவந்தது நீங்களும் எழுதி இருகிறிர்கள் அமுதன் அண்ணாமலை இங்கு கனடாவில் வசிக்கிறார் .
    இது பற்றி நான் எழுதிய ஒரு பதிவை பார்க்கவிரும்பினால் இங்கு செல்லவும் .http://karikaalan.blogspot.ca/2005/05/blog-post_12.html
    அன்புடன் கரிகாலன்

    பதிலளிநீக்கு
  2. இந்த பாட்டை சிறு வயதில் நானும் பாடியிருக்கேன்...சார்...மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  3. அப்பாடி,,,விசு கொஞ்சம் கோபம் குறைந்திருக்கிறார்.....
    ஆனாலும் உங்கள் கோபம் இங்கே கொஞ்சம் வேலை செய்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. ஆஹா!! பாடி முடிச்சதுக்கு அப்புறம் என்ன நடந்தது? :)

    கடைசியில் சொன்னீங்க பாருங்க..அது :))

    இளைஞனாய்! அப்பாவாய்!

    பதிலளிநீக்கு
  5. “உங்கள் ராஜ் டிவி“ என்று இப்போதும் கேட்கும் (சன் னில் ஒரு பாட்டு நிகழ்ச்சியும் நடத்துகிறாரே) அவரது தமிழும், இவரது “சின்ன மாமி” பாட்டும் கேட்டு ரசிக்காதவர் தமிழ்நாட்டில் யார் இருக்கப்போகிறார்கள்? ஆனால் “பொப்பிசைப்பாடல்கள்” என்று அவர்கள் சொன்னதாகவே எனக்கு நினைவு. சரியா நண்பர் விசு? (ஆனாலும் உங்கள் பாடலைக் கேட்டு மயங்கித்தான் போனேன், உங்கள் துணைவியார் மயங்கியதில் சந்தேகமென்ன? மயக்கமென்ன இந்த மௌனமென்ன பாட்டுத்தான்...

    பதிலளிநீக்கு
  6. ஆம் விசு எங்களுக்கு (இருவருக்குமே) இலங்கை வானொலிதானே அருமையான பொழுதுபோக்கு. அதில் திரு கனகரத்தினம் அவர்களை நன்றாக அறிவோம். (அவருக்கு எங்களைத் தெரியாது!!!) சின்ன மாமியே இப்போதும் ரசிக்கும் பாடல். அப்போதும். அவரது பொப்பிசைப் பாடல்கள் எல்லாமே கேட்டும் பாடியும் உண்டு. இந்தப் பாடலை முன்பே உங்கள் தளத்தில் நீங்கள் பாடியது கேட்டதுண்டு என்றாலும் மீண்டும் கேட்க கசக்குமா என்ன?!1 அருமை. செம கலாட்டாதான் போங்க...இலங்கைத் தமிழ் மிக மிக இனிமையான தமிழ்.இப்போது அந்த வானொலி இல்லாமல் ஒன்ஸ் அப்பான் எ டைம் ..கோல்டன் மெமரிஸ் என்றாகிப் போனது. அதைத் தவிர வேறு எந்த வானொலியும் கேட்டது கிடையாது!! தமிழ் என்றால் தமிழ்!!!!

    பதிலளிநீக்கு
  7. நண்பா,

    சின்ன மாமி பொண்ணையும் கணக்கு(!!!) பண்ணி இருக்கும் உங்களை நினைத்தால் பெரிய பொறாமையாக இருக்கிறது.

    நமக்கு அந்த பாக்கியம் எல்லாம் இல்லை.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் நமது கல்லூரி நாட்களில் மிகவும் பிரபல்யமாக இருந்த ஒன்று, அதிலும் நம்முடன் பயின்ற இலங்கை தமிழ் மாணவர்களின் வருகைக்கு பின் அடிக்கடி பாடும் பாடலாக மாறியதும் நினைவில் குரலெடுத்து ஒலிக்கிறது.

    பகிர்விற்கு நன்றி- உங்களை உங்கள் பாணிக்கு திருப்பிய தண்டபாணிக்கும்.

    கோ

    பதிலளிநீக்கு
  8. மிக மிக அற்புதம் வித்தியாசம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...