கல்தோன்றி மண்தோன்றா காலம் முதல் வாழ்ந்து வந்த குடி அல்லவா தமிழினம்.
நேற்று வந்த கூகிளில் உலகில் முதலில் பேச பட்ட மொழி என்னவென்று கேட்டு பாருங்கள் .. தமிழ் என்று பதில் வரும்.
ஊமையாக இருந்த மற்ற மானிடனே நம்மை பார்த்துதானே தனக்கு என்று ஒரு மொழியை படைத்து கொண்டான்.
தனக்கு கிடைத்த "வாழ் கனியை" எனக்கு வேண்டாம், நீ உண்டாயானால் உலகிற்கு நன்மை என்று ஒரு கிழவி இடம் கொடுத்தானே அதியமான் ..அவன் வழி வந்தவர்கள் தாமே நம் இனம்.
பல்லாயிர ஆண்டுகள் வாழ்ந்து வந்த நாம் ஐம்பதே ஆண்டுகளில் தாழ்ந்தது ஏன்? சற்றே பார்போம்.
பாதிக்க பட்டவர்களுக்கு எடுத்து சென்ற நிவாரண பொருட்களை வழிபறித்து கொள்ளை அடிக்கும் தொண்டர்கள் - பொது மக்கள்.
எங்கே தவறினோம்?.
ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து வந்த நம் தன்மானம் எப்படி இந்த கீழ்த்தரமான நிலைக்கு தள்ள பட்டது. சற்று யோசிக்க வேண்டாமா?
கடந்த ஐம்பது வருடங்கள் தான். குனிய குனிய குட்டி குட்டி, வலி என்று அழும் போது இலவசமாக தைலத்தை கொடுத்து நம்மை அடக்கிவிட்ட அரசியல்வாதிகள்.
இன்னும் எத்தனை நாள். தமிழனே பொங்கி எழுந்து விடு. இன்று நீ எழாவிடில் அடுத்த தேர்தல் அறிக்கையில்..
வாக்காள பொது "மா"க்களே , ஆளுங்கட்சியினர் சொல்கின்றார்கள், அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்உங்கள் இல்லத்தில் யாராவது அடிப்படை தேவை இன்றி அவதி பட்டு செத்தால்அவர்களை எரிக்க விறகு கட்டையும், புதைக்க குழியும் வாய்கரிசியாக கால் கிலோ அரிசியும் தரப்படும்" என்று...
அது ஒரு ஏமாற்று வேலை.
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விறகு - குழி - அரிசி மட்டும் இல்லாமல் செத்தவன் வாயில் ஊற்ற கால் லிட்டர் பாலையும் தருவோம என்பதை பெருமையுடன் சொல்லி கொள்கிறோம் " என்றும் சொல்ல துணிவார்கள்.
தன்மானம் வேண்டாமா தமிழா. முல்லைக்கு தேர் கொடுத்தவன் பரம்பரையில் வந்தவன் அல்லவா நாம். களிமண்ணை வைத்து கல்லணை கட்டினவன் வம்சம் அல்லவா நாம். உன்னால் என்ன செய்ய முடியும் .. முடிந்தால் என் கப்பலை மூழ்கடித்து கொள் என்று ஆர்ப்பரித்து செக்கு இழுக்க சென்றானே வ வு சி... அவரும் நம் பாட்டன் தானே. முண்டாசு இன்று இருந்திருந்தால் தூக்கில் தொங்கி இருப்பான்.
வந்தோரை வாழ வைக்கும் நாம் இப்போது வருவோரிடமிரத்து பிச்சை கேட்டு.... எங்கே தவறினோம்?
கடந்த ஐம்பது ஆண்டுகளே..
இவன் திருந்த மாட்டன்.. இவன் திருந்த மாட்டான் என்று நம்மை அடி மாடுகளாக நினைத்து .. அதை மீண்டும் மீண்டும் சொல்லி நம்மை அடி மாடுகளாக்கி விட்டார்கள்.
இன்றும், மழை வெள்ளத்தில் தங்கள் அறையில் அமர்ந்து கொண்டு மசாலா டீ குடித்து கொண்டு வெள்ளத்தில் கழுத்துவரை நீர் வந்து சாக கிடப்போரை பார்த்து, அவர்களின் கோவத்தை பார்த்து, கவலையே படவேண்டாம்.
இதுவும் கடந்து போகும்.
முதலில் சில பொருட்களை பிச்சை போடு. கோவம் அடங்கவில்லையேல் இல்லத்தை இழந்தோருக்கு ஐந்தாயிரம்.
ஆறே மாதத்தில் சாக்கடை நீர் வடிந்து குடிநீர் கேட்டு இவர்கள் வரிசையில் நிற்கையில் ஆளுகொரு பிளாஸ்டிக் பக்கட் இலவசம் என்று ஒரு அறிக்கை விட்டால் அனைவரின் வாக்கும் நமக்கே என்று சிரித்து கொண்டு இருப்பார்கள்.
அருவி, நீர்வீழ்ச்சி, ஆறு நதி சிற்றாறு, காட்டாறு, ஓடை, சிற்றோடை
நீரோட்டம், நீர்த்தாரை, நீரோடை, விசை, கீழாறு, நீரூற்று, நீர்ச்சுனை, சுனை, நீர்த்தாரை, ஊறணி, ஊற்று, இலஞ்சி, கிணறு, உறை கிணறு, நடைகிணறு, கேணி, குட்டை, சிறிய குட்டம்,குளம்,பொய்கை, மடு,, குட்டம், குண்டம்,குண்டு,தடாகம்,வாவி,கயம்,ஏரி,பண்ணை,ஏல்வை,
கழிமுகம்,கயவாய், முகத்துவாரம்,கடற்கழி,முகத்துவாரம்,காயல், களப்பு,உப்பங்கழி,உப்பளம்,கடல்வாய்க்கால்,அல்குகழி
அகழி,ஆழிக்கிணறு,நீர்த்தம்பம், கடல்...
இவை அனைத்தும் எதோ இலக்கிய வார்த்தைகள் அல்ல. நீர் வழிக்கு நம் முன்னோர்கள் வைத்த செல்ல பெயர்கள். ஆயிர கணக்கான ஆண்டுகள் நடைமுறையில் இருந்த இந்த வார்த்தைகள் அனைத்தையும் கடைசியாக வந்த ஐம்பது வருடங்களில் நம் அரசியல்வாதிகள் ஒரே வார்த்தையாக மாற்றிவிட்டார்கள். இவை அனைத்திற்கும் அவர்கள் இட்ட ஒரே பெயர் என்ன தெரியுமா?
சாக்கடை.
தமிழா... வார்த்தைகளை "சாக்கடை" என்று மாற்றியவர்கள் நம் வாழ்க்கையும் "சாக்கடை" என்று ஏறகுறைய மாற்றி விட்டார்கள்.
எழுந்து விடு.. இனியும் பொறுக்காதே.. நம்மில் உள்ள நல்லவர்களை .. நல்ல காரியத்தை சாதிப்பவர்களை தட்டி எழுப்பு.
மாணவ சமுதாயமே.. ஒரு புரட்சி என்பது உன் உரிமை. மாணவர்கள் இல்லாத புரட்சி என்று ஒன்று யாரும் அறியாதது.
அடுத்த தேர்தல் ஆறே மாதத்தில். மக்கள் மாற்றத்தை தேடுகின்றார்கள். தலைவர்களே புறப்பட்டு வாருங்கள். தறுதலைகளை ஒழிப்போம்.
ஒன்றே நன்றே இன்றே செய்வோம்!
#SagaayamforCM

ஒரு மண்ணும் நடக்காது.
பதிலளிநீக்குநம்பிக்கை தான் வாழ்வே.. நம்புவோம் !
நீக்குஇப்படி சொல்றது தப்புத்தான். ஆனால் மன்னித்துக்கொள்ளுங்கள். இதுதான் நடைமுறை.
பதிலளிநீக்குA small correction sir - King Athiyamaan gave the gooseberry to Avvai, not the other way around.
பதிலளிநீக்குIt is not a small correction, my Friend, its a big mistake. My Bust. Feel real bad. என்ன ஒரு பெரிய தவறு. சுட்டி காட்டியதற்கு நன்றி. இதற்கு தான் பள்ளிகூடத்தில் ஒழுங்காக படித்து இருக்க வேண்டும் என்பது. மிக்க நன்றி நண்பரே. திருத்தி விட்டேன்.தங்கள் பெயரை சொல்லி வந்து இருந்தால் மிக்க மகிழ்ந்து இருப்பேன்.
நீக்குவணக்கம் நண்பரே .நினைக்கையில் நெஞ்சு பொறுக்குதில்லை இந்த மதிகெட்ட மனிதரை நினைக்கையில் ,இம்முறை திருந்தினால் சரி இல்லாவிட்டால் மக்கள் இனி என்றுமே திருந்த சான்சே இல்லை.
பதிலளிநீக்குமாற்றம் வரலாம், சரியான தலைமை இல்லை என்ற நிலையில்தான் தமிழகம் இருக்கிறது. ஆனாலும் இந்த ஏக்கம் எல்லோரிடமும் இருக்கிறது.
பதிலளிநீக்குபுறப்படு பாரதீயின் போர்ப்படையே
பதிலளிநீக்குஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு ,
அத்தனை உண்டு தமிழில்....
பதிலளிநீக்குஉங்கள் ஆதங்கம்
அருவியாய் கொட்டத்தொடங்கி
கடலாய் நிறைந்திருக்கிறது...
தமிழகமே மாற்றத்தை விரும்புகின்றதுதான் ஆனால் நல்ல தலைமை இல்லை என்ற ஆதங்கமே. புரட்சி வர வேண்டும் விசு. ஓட்டுப் போடாமல் இருப்பதுதான் தவறு. எந்த சாக்கடை நல்ல சாக்கடை என்று சொல்ல முடியும் என்பதால் போடாமல் இருப்பவர்கள் அதிகம். அதற்காகக் கொண்டுவரப்பட்டதே நோட்டா. மக்களின் உரிமை.
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குநம்புவோம்
பதிலளிநீக்குநிச்சயம் மிகச் சீரழிந்த பின்
மிகச் சிறந்தது கிடைக்கும்
சீரழிவினைப் பார்த்துவிட்டோம்
இனி நிச்சயம் சிறந்ததையும் பார்ப்போம்
வாழ்த்துக்களுடன்...
எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை. மீண்டும் .அம்மா’தான். அம்மாவுக்குப் பிறகு யார் என்றுதான் தெரியவில்லை. அப்போது இந்த விசுவாசிகள் இடம் மாறிக் கொள்ளுவார்கள். நீங்களும் ஒரு பதிவை இதே மாதிரியும் எழுதுவீர்கள்.
பதிலளிநீக்குபார்பனர் போதும் என்று நினைக்கும் வரை தமிழனை மிதிப்பதை நிறுத்த மாட்டார்கள். அவர்களையும் அவர்கள் படைத்து வைத்த புளுகுகளையும் நம்பும் மக்கள் இருக்கும் வரை அவர்களின் ஆட்டம் உண்டு. அவர்கள் பெருமை மிகு வாழ்வு, ஒற்றுமை உணர்வு இல்லாத தமிழரின் கையில் உள்ளது. தம்பியோ/உறவினரோ/வேறு சாதிகாரர்களோ வருவதை காட்டிலும் பார்பான் வருவதை மேல் என்று நினைக்கும் இனம். இன்னும் கொஞ்சம் மிதிக்க மாட்டனா என்று எங்கும் இனம். இதில் எதற்கு இந்த மூத்த குடி பெருமை. தன்னை அவன் எப்படி இழிவு செய்தாலும் அதை பெருமையாக நினைக்கும் குணம் அவலம். ஒரு முன்னாள் பாலியல் குற்றவாளி பொன்னாடையை குச்சியால் போர்த்த அதை பெருமையுடன் வாங்கிய இளையராஜா உதாரணம். இங்கு அனைத்தையும் முடிவு செய்வது பார்ப்பானே. வேதனை.
பதிலளிநீக்கு