Friday, December 11, 2015

வாராய் ... நீ வாராய்...

என்னை ஏமாற்றிய எல் நினோ..

மார்ச் 2015.இணைய தளத்தில் ஒரு அறிவிப்பு.

தென் கலிபோர்னியா மக்களுக்கு ஒரு செய்தி. பசிபிக் பெருங்கடலில் நடந்துள்ள காற்றழுத்த மாறுதலால் இந்த வருட இறுதியில் துவங்கி அடுத்த வருடம் ஆரம்ப  நாட்களில் வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்பு.


தென் கலிபோர்னியாவில் வாழும் மக்களுக்கு இந்த செய்தி வயிற்றில் பாலை ஊற்றியது. கடந்த  சில  வருடங்களாக மழை இல்லாத காரணத்தினால் இங்கே அமைந்துள்ள ஏரிகள் வற்றி விட்டன. சென்ற வருடத்தில் இருந்தே அரசாங்கத்திடம் இருந்து .. நீரை சேமியுங்கள் நீரை சேமியுங்கள் என்ற அறிவிப்பு.

வீட்டில் - விளாகத்தில் உள்ள புல்தரையை நீக்கி மரம் வைப்பவர்களுக்கு அரசாங்கமே பணம் தரும். அந்த புல் தரையை சீராக்குவதற்கு நாம் ஒரு டாலர் செலவு செய்ய தை இல்லை.' பச்சை பசேல் என்று இருந்த புள் தரை (அடியேனின் இல்லத்திலும் தான்)  நீர் சேமிப்பிற்காக காய்ந்து போனது.
                                                                 ஆறும்  தாயார்..ஏப்ரல் 2015ல் இங்கே உள்ள அனைத்து "சுத்தமான"  ஆறுகளும் இன்னும் சுத்த படுத்த பட்டன. எங்கள் இல்லத்தை சார்ந்த முனிசிபாலிட்டி  தெரு தெருவாக வந்து கால்வாய்களை சுத்த படுத்தினர்.
                                                       முக வாயாலும் தயார்

ஏரிகளின் முகவை எல்லாம் சீர் படுத்த பட்டன. கடரினவில் படித்த பாடங்களும் நிறைய உள்ளன தானே. அதையும் சரி பார்த்து கொண்டோம்.

                                                              ஏரியும் தயார் ...

பின்னர் ... இங்கே இருக்கும் காவல் துறையினரிடம் இருந்து ஒரு அறிவிப்பு. எல் நினோவின் தாக்கம் அதிகமாக இருக்கும். பல இடங்களில் அடிப்படை வசதி கூட கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இந்த மாதிரியான நேரத்திற்கான அடிபடிய தேவைகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி ஒரு சில அறிவுரைகளும் தந்தார்கள்.

அதில் ஒன்று.

இல்லத்திற்கு ஒரு அவசர தற்காப்பு பெட்டி. அதில் ஒரு குடும்பத்திற்கு தேவையான அடிப்படை உணவு, டார்ச், டென்ட், கழிவு நீரையும்சுத்தகரித்து குடிநீராக்கும் வடிகட்டும் சாதனம், பெண்களுக்கான பொருட்கள், சில கம்பிளி போர்வைகள் ... மற்றும் சில.

இந்த பெட்டியை வைத்து ஒரு சராசரி குடும்பம் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது சமாளிக்கலாம்.

இந்த பெட்டியின் விளம்பரமே...

பேரிடர் வந்தால் பிரச்சனையாகாதீர்கள், அதற்கு விடையை இருங்கள் ..
(Be part of solution not problem). 

அரசாங்கம் அறிவித்தால் நானும் சரி , நான் அறிந்தோர்களும் சரி, இந்த பெட்டியை வாங்கி இல்லத்தில் வைத்துள்ளோம். அலுவலகத்திலேயும் இந்த பெட்டி உள்ளது.


 அலுவலகத்தில்

கடைசியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு எச்சரிக்கை தொலை பேசி. வரலாறு காணாத மழை வர வாய்ப்பு, உடனே உங்கள் பாலிசியை புதுப்பித்து கொள்ளுங்கள் என்று.

ஊரும் தயார்.. ஆறும் தாயார், நான்கு பேரும் தயார். ஆனால் இன்னும் கொட்ட வில்லை மழை.

அனைத்தும் தயாராகி விண் மேல் விழி வைத்து காத்து கொண்டு இருகின்றோம். சீக்கிரம் வா.. எங்கள் ஏறி குளங்களை நிரப்ப..

அழையா விருந்தாளியாக அங்கு சென்று வாங்கி கட்டி கொண்டாயே.. தலை வாழையோடு காத்து கொண்டு நாங்கள் இங்கு இருக்க..சீக்கிரம் ஓடி வா.. உன்னை வைத்து அழகு பார்கின்றோம்

இன்னும் ஏன் தயங்குகிறாய்... ஓ, ஒருவேளை ..யாருடைய ஆணைக்கோ என்றால்.. நீ இங்கே வர முடியாது. ஏன் என்றால்.. இங்கே பொதுவாக உன் ஆணையை தான் நாங்கள் ஏற்போம் .

வாராய் ... நீ வாராய்...


15 comments:

 1. அங்கு மழை இன்னும் வாராததற்கு காரணம் உங்கள் நண்பர் பரதேசியும் ,மதுரைத்தமிழனும்தான் காரணம். உங்கள் பகுதியில் பெய்ய வேண்டிய மழையை இவர்கள் இருவரும் களவாடி கொள்கின்றனர்

  ReplyDelete
  Replies
  1. தமிழா அண்ட் பரதேசி உங்கள் நண்பரை ஏன் புலம்ப வைக்கின்றீர்கள் கொஞ்சம் அனுப்பிக் கொடுங்களேன்...

   Delete
 2. முன்னேற்பாடுகள என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்
  சென்னையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது
  தம 1

  ReplyDelete
  Replies
  1. என்னதான் நாம் முன்னேற்பாடுகள் நாம் செய்தாலும் இயற்கை நம்மை எதிர்க்கும் போது நாம் செயலற்றுதான் போகிறோம் இதற்கு அமெரிக்காவும் விலக்கு அல்ல.

   Delete
  2. தமிழா நீங்க சொல்லுறது சரிதான். இயற்கையின் முன் நாம் செயலற்றவர்தான். ஆனால் இப்போது சென்னையில்/கடலூரில் நடந்தது அப்படி இல்லையே. எந்தவிதத்திலும் கூட முன்னேற்பாடுகள் இல்லையே. ஒவ்வொரு பெருமழை/புயலின் போது கடலூரில் இப்படித்தான் அடிக்கும் என்பது பாமரர் கூட அறிவார்கள். ஆனால் கடலூருக்காக நம் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? சென்னையிலும் அப்படித்தானே. முன்னேற்பாடுகள் செய்தும் பல நடவடிக்கைகள் எடுத்தும், மக்களின் கோணத்தில் யோசித்துச் செய்த பின்னும் நடப்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாதுதான்.

   Delete
 3. சகோ, கோடையில் வறட்சியும், வின்டரில் பெருமழை இருக்கும் என்று சொல்கிறார்களே..தயாராகவே இருங்கள்.

  ReplyDelete
 4. பெய்யெனப் பெய்யாது மழை! ஆனா..சூப்பர் ஸடார் மாதிரி...வரவேண்டிய நேரத்துல வந்துரும். வந்தபின் எழுதுங்கள்.
  ஆனா..உங்க ஊர்ல அரசாங்கமே எச்சரிக்கையெல்லாம் பண்ணி, குளம் ஆத்தைத் தூர்வாரி இப்படித் தயாரா இருந்தா மழை யோசிக்குது பாருங்க..சென்னையில எதிர்பாரா விருந்தாளியா வந்துதானே வெளுத்து வாங்கினிச்சு.. ஆனாலும் இந்த நிலை அங்குவேண்டாம்

  ReplyDelete
 5. முன்னேற்பாடுகள் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள், இதெல்லாம் நம்ம ஊரில் நடக்கவே நடக்காது.

  ReplyDelete
 6. மழையே... அங்கும் "சிறிது" கருணை காட்டு...

  ReplyDelete
 7. ஆறும் தாயார்... --> ஆறும் தயார்...
  முக வாயாலும் தயார்... --> முகவாயிலும் தயார்...

  ReplyDelete
 8. உங்கள் தவம் புரிகிறது...பெய்யட்டும் மழை....

  ReplyDelete
 9. நல்ல முன்னேற்பாடு. இந்தியாவும் எப்போது இப்படி மாறுமோ..!

  ReplyDelete
 10. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 11. நாங்கள் எல்லாம் பின் ஏற்பாடு செய்யவே
  பழக்கப்பட்டவர்கள் ஆகையால் இதைப் படிக்க
  ஆச்சரியமாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது

  ReplyDelete
 12. அதாங்க உங்க ஊரு. உங்க ஊரப் பத்தி நல்லாவே தெரியும் ரொம்பவே முன் ஜாக்கிரதிய முத்தன்ணாதான். உயிருக்கு அத்தனை மதிப்பு. பாருங்க எல்லாம் தூர் வாரி ரெடியா இருக்கீங்க அதான் மழை யோசிக்குது. எங்கள் மாதிரி இருந்திருந்தா, அறிவித்தால் கூட நாங்க ரெடியா இருக்க மாட்டோம்... வந்த பின் தான் அப்படினு இருந்திருந்தா வந்து கொட்டியிருக்கும் உங்க ஊருலயும். கொஞ்ச நாள் அதக் கண்டுக்காம இருங்க. அப்ப வந்து கொட்டும் பாருங்க...

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...