Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Friday, January 8, 2021

"கணக்குக்கு எதுக்கு வாக்சின்"

சென்ற வாரம் முதல் இங்கே மக்களுக்கு வாக்சின் போட ஆரம்பித்துள்ளார்கள்.

என் குடும்பத்தில் என் அம்மா (வயதானோர் என்ற காரணத்தினால்) அம்மணி (மருத்துவ துறை) அண்ணன்   ( மருத்துவ துறை) அக்கா (மருத்துவ துறை ) என்ற காரணத்தினால்  முன்னுரிமை பெற்று வாக்சின் பெற்று கொண்டார்கள்.


பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் இரண்டு வாரத்தில் மூத்தவளுக்கு  அத்தியாவசிய துறை என்பதாலும் இளையவளுக்கு விளையிட்டு துறை என்பதாலும் வாக்சின் அளிக்கபடுமாம். இப்படி இருக்கையில் நேற்று, இல்லத்தில் அம்மணியிடம் ..

"வாக்சின் போட்டியே, ஏதாவது சைட் எபெக்ட், வந்ததா""

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, கொஞ்சம் அதிகமா தூக்கம் வந்துச்சி"

மனதில்...

அதுக்கு எதுக்கு வாக்சின். நமக்கெல்லாம் வாக்சின் போடாமலே ஏன் இன்னும் சொல்ல போனால் பொங்கல் சாப்பிடாமலே கூட அதிகமா தூக்கம் வரும்.

Thursday, July 9, 2020

கட்டை மட்டும் இல்லாட்டி கட்டையில் போயிடுவோம்!

கொரோனா  காலத்தில் இல்லத்தில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மருத்துவதுறையில் பணிபுரியும் அம்மணியோ, 

"சும்மா எப்ப பார், எப்ப ஆபிஸ்க்கு போவேன்னு புலம்பின்னு இருக்காதிங்க, இது இன்னும் ரொம்ப நாளைக்கு போகும்ன்னு "

சொல்லிட்டு, வேளைக்கு கிளம்பிட்டாங்க. எனக்கு மட்டும் தான் வீட்டில் இருந்து வேலை. இவங்க மூணு பேரும் கிளம்புடுறாங்க.

காலையில் ஒரு ஒருத்தரா இவங்க ரெடியாகி 

"ஓகே பை"

ன்னு சொல்லிட்டு போகும் போது, என்னடா நம்ம நிலைமை இப்படியாச்சேன்னு ஒரு பீலிங்.  இருந்தாலும் இது ஒரு பிரச்சனையே இல்லை, நமக்காவது வேலை வீடுன்னு ஒன்னு இருக்கே. இந்த கொரோனாவிலினால் அம்புட்டையும் இழந்து தவித்து நிக்குறவங்கள  நினைச்சி பார்க்கையில் நம்ம நிலைமை எவ்வளவோ தேவலன்னு தோணுச்சி.

Sunday, May 31, 2020

விண்வெளி பயணம் ஒரு மறக்க முடியாத Space !

கடந்த இரண்டு 24 மணி நேரத்தில் கிட்ட தட்ட 12 மணி நேரம் போல் தொலைக்காட்சியின் எதிரிலேயே அமர்ந்திருந்தேன் என்று தான் சொல்லவேண்டும்.
Rakesh Sharma

எந்த சேனலை திருப்பினாலும் ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிலோய்ட் க்கு நடந்த அநீதிக்காக நியாயம் கேட்டு நடக்கும் போராட்டமாகவே இருந்தது. இந்த போராட்டத்தினை பலர் வன்முறையில் ஈடுபட, மீண்டும் ஒரு தவறு நிகழ்கின்றதே என்று மனது கனத்தது.

ஆனால் நான் தொலைக்காட்சியின் எதிரில் அமர்ந்தது வேறு ஒரு காரியத்திற்காக. SPACE X என்ற தனியார் நிறுவனமும் NASA வும் சேர்ந்து விண்கலத்திற்கு வீரர்களை அனுப்பும் நிகழ்ச்சி.

சென்ற புதன் அன்று மதியம் 12 :30 க்கு புறப்பட வேண்டிய விண்கலம் புறப்பட ஏழு நிமிடம் இருக்கும் நேரத்தில் தட்பவெப்ப நிலை சரியில்லாத காரணத்தினால் சனிக்கிழமைக்கு தள்ளி வைக்க பட்டது.

நேற்று அனைத்தும் சரியாக முடியாக மதியம் இரு வீரர்களுடன் விண்கலம் கிளம்ப, மனதோ 1984 ஏப்ரல் மாதத்திற்கு சென்றது.

விண்வெளிக்கு அமெரிக்காவும் ரஷியாவும்  போட்டி போட்டுகொண்டு வீரர்களை அனுப்பி கொண்டார் இருந்த அந்த நாட்களில் இந்தியாவை சார்ந்த ராகேஷ் சர்மா என்பவர் ரஷ்ய விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு சென்ற நாள் தான் அது.

அந்த காலத்தில் இந்த மாதிரி ஒரு செய்தி கிடைத்தால் போதும். செய்திக்கு தாள், வார இதழ் மாத இதழ் என்று தேடி பிடித்து அலசி ஆராய்ந்து எடுத்து விடுவோம்.

அப்படி படிக்கையில் ராகேஷ் ஷர்மா என்ற இந்திய விமான படையை சார்ந்த இவர் பல போட்டிகளுக்கு பின்னர் தகுதி செய்ய பட்டார் என்று தெரிய வந்தது.

அவர் விண்கலம் செல்ல, நாடே அவரை பாராட்ட, அந்நாள் பிரதமர் இந்திரா காந்தி அவரோடு அவர் விண்வெளியில் இருக்கையிலே உரையாட, ஒரே கொண்டாட்டம் தான்.

இருந்தாலும் மனதில் ஒரு விசனம். இந்த நாடே ராகேஷ் சர்மாவை கொண்டாடி கொண்டு இருக்கையில் என் மனமோ ரவீஷ் மல்ஹோத்ரா என்ற இன்னொருவரை நினைத்து மிகவும் வருந்தியது.

Ravish Malhotra with Rakesh Sharma
நமக்கு எப்பவுமே வெற்றி பெற்றவர்களை பாராட்டுவதோடு சோர்ந்து இருப்பவர்களை நினைத்து ஆறுதல் செய்யும் புத்தி தானே. அதனால் அன்று  ரவீஷ் மல்ஹோற்றா என்பத்வருக்காக ஒரு பிரார்த்தனை செய்தேன்.

யார் அந்த ரவீஷ் மல்ஹோத்ரா.. ? இது என்ன அந்த காலமா? நூலகத்திற்கு சென்று செய்திதாள் , வார இதழ் மாத இதழில் தேட..

கூகிளில் தட்டுங்கள். நீங்களும் அவருக்காக ஒரு முறை.. அட சே.. இவருக்கு இப்படி ஆயிடிச்சேன்னு சொல்லுவீங்க!

Monday, May 18, 2020

புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமும்.

கொரோனாவின் பயங்கர தாக்குதலால் உலகமே திக்குமுக்காடி கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவின் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை மற்றவர்களை விட மிகவும் கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.

திடீரென்று பிரதமர் ஊரடங்கை அறிவிக்க ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சென்னையில் தவித்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களிடம் விசாரிக்கையில் ...நேற்று இரவு காதுக்கு எட்டியது!


பிரதமர் ஊரடங்கு என்று சொல்லும் போது ஓரிரு நாட்கள் தான் இருக்கும் என்று நினைத்தோம். கையில் இருந்த பணத்தை வைத்து சமாளித்தோம். பின்னர் அதுவே வாரமாகி பின்னர் மாதங்களாகிய நிலையில் ஒருவேளை உணவுக்கே வழி  இல்லாமல் இருந்தோம்.

Friday, December 11, 2015

வாராய் ... நீ வாராய்...

என்னை ஏமாற்றிய எல் நினோ..

மார்ச் 2015.இணைய தளத்தில் ஒரு அறிவிப்பு.

தென் கலிபோர்னியா மக்களுக்கு ஒரு செய்தி. பசிபிக் பெருங்கடலில் நடந்துள்ள காற்றழுத்த மாறுதலால் இந்த வருட இறுதியில் துவங்கி அடுத்த வருடம் ஆரம்ப  நாட்களில் வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்பு.

Friday, October 31, 2014

ஏன் பிறந்தாய் மகனே...

டேய் சேகரு...

சொல்லு முத்து

உன்னை பார்த்தா பரிதாபமாக இருக்குடா?

என்ன சொல்ல வர?

உனக்கு 8 வயசு இருக்கும் போது உங்க அம்மா இறந்துட்டாங்க. அவங்கதான் உன்னை என்னா நல்லா வைச்சிருந்தாங்க.. அவங்க போன பின்ன இந்த 4 வருஷத்தில் உனக்கு என்ன கஷ்டம். உன்ன பார்க்கையில் மனசுக்கு ரொம்ப விசனம்.. எப்படி இருந்த நீ...

Sunday, September 7, 2014

பள்ளிக்கூடம் போகாமலே...

பள்ளி கூடம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஒரு வாரம் முடிவதற்குள் ஒரு வருடம் முடிந்தது போல் ஒரு உணர்வு. இன்று ஞாயிறு, மதியம் 1 மணி போல். நாளைக்கு பள்ளியில் அறிவியல், மற்றும் ஆங்கில தேர்வு. என்ன செய்வேன் இப்போது. அது மட்டும் இல்லாமல் கணக்கு வீட்டு வேலை இன்னும் முடிக்கவில்லை. எங்கே ஆரம்பிக்க போகிறேன் என்றே தெரியவில்லை.


Monday, August 25, 2014

மனைவியிடமே.... " I Love you" வா? பிச்சி புடுவேன் பிச்சி...

சில வாரங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. "திருமணமான இந்திய தம்பதியருக்கான அறிவுரை" நிகழ்ச்சி. இந்த அறிவுரையை வழங்கியவர் நன்கு படித்த ஓர் பேச்சாளார்.
வெளி நாட்டு ஆட்களை பற்றி தெரியும். கொழம்பில் உப்பு இல்லாவிட்டால் கூட மனைவியும் - புருஷனும், வக்கீல், கௌன்செலர் என்று செல்வார்கள். ஆனால் நாம் இந்தியன் ஆயிற்றே. அதிலும் தமிழன் ஆயிற்றே. நம் வீட்டில் நடப்பது நாலு சுவற்றில் தான் நடக்க வேண்டும் அது வெளியே தெரிய கூடாது என்று நினைப்பவர்கள் ஆயிற்றே.

Friday, August 15, 2014

நீ கணக்கு எழுத தான் லாயிக்கு!


கோடை விடுமுறை முடிய போகிறது. என் மூத்த ராசாத்தி 9 வகுப்பு முடித்து 10ம் வகுப்பு செல்ல தயார். இங்கே பள்ளி கூட்டத்தில் 9, 10,11, 12ம் வகுப்பே என்று யாரும் சொல்லமாட்டார்கள். இவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பெயர் :

9ம் வகுப்பு : Freshman
10ம் வகுப்பு : Sophmore
11ம் வகுப்பு : Junior
12ம் வகுப்பு : Senior

Tuesday, August 12, 2014

எலி இல்லாத வீட்டுக்கு பூனை, திருடன் வராத வீட்டிற்கு நாய்!

"வா விசு... மூன்று வருடம் கழித்து எங்கள் வீட்டிற்கு வர, வலது கால எடுத்து வச்சி வா" என்று அழைத்தான் என் நண்பன் சத்தி. சத்தியும் நானும் இளங்கலை, முதுகலை ஒன்றாக படித்தவர்கள். படித்து முடிந்து 25 வருடங்கள் ஆகியும், ஒவ்வோர் முறையும் நான் இந்தியா செல்லும் போது, அவனை சந்தித்து ஒருவரை ஒருவர் பற்றியும், மற்றும் சுற்றம் உற்றம் பற்றியும் அறிந்து கொள்வேன்.

என்ன சத்தி.. வீட்டில் எலி தொலையா? ரெண்டு பூனை வீட்டுக்கு உள்ளேயே இருக்குது.

எலி எல்லாம் ஒன்னும் இல்ல விசு, இது என் பிள்ளைகள் தொந்தரவு.

அட பாவி, இந்த பூனை எல்லாம் வீட்டிற்குள் இருந்தால் பிள்ளைகள் நோய்வாய் படுவார்களே, இத ஏன் "வேலி மேல போற ஓணான்"  கதை போல வீட்டிற்குள் வைத்து கொண்டு..?

ஒன்னும் பண்ண முடியாது விசு, கண்டிப்பா வேணும்னு அவங்க அம்மாவை "ஓகே" பண்ணிடாளுங்க.. அம்மா சொன்னா அதுக்கு ஏது மறு பேச்சி.

நல்ல சொன்ன சத்தி..அது சரி, அது என்ன அழகான நாய் போல ஒரு விளக்கு?

அட பாவி, அது விளக்கு இல்ல, விசு! உண்மையாவே நாய் தான்.

நல்ல வேளை சொன்ன, அது விளக்குதான்னு நினச்சி சுவிட்ச் தேட ஆரம்பிச்சிட்டேன். டேய், என்னாடா இது, ரெண்டு பூனை, ஒரு நாய், ஒரு மிருக கண்காட்சி சாலையே வீட்டில் இருக்கே...சரி இங்க என்னா திருட்டு பயமா?

சீச்ச்   சீ..இது ரொம்ப நல்ல ஏரியா விசு, அந்த மாதிரி எல்லாம் பயம் இல்ல..

பின்ன ஏன்டா, எலி இல்லாத வீட்டுக்கு பூனை, திருடன் வராத வீட்டிற்கு நாய்?

என்னத்த சொல்ல? மூத்த பிள்ளைக்கு ரெண்டு பூனை, இளையவளுக்கு நாய்..

நல்ல வேளை, ரெண்டோட நிறுத்திட்ட, அடுத்த பிள்ளை இருந்தா என்ன கேட்டு இருக்குமோ..

சரி ஏன் அந்த நாய்க்கு கழுத்த சுத்தி அந்த விளக்க மாட்டி இருக்க..

ஒன்னும் இல்ல விசு, வழக்கமா ராத்திரி வீட்டுக்குள்ள எங்களோடு வந்து படுத்துக்கும். போன வாரம் கொஞ்சம் மறந்து ஒரு நாள் வெளியே வச்சிட்டோம்.

நாய் குணமே ராத்திரி முழுவதும், வெளியே இருப்பது தான சத்தி, அதுக்கும் இந்த கழுத்த சுத்தி இருக்க விளக்குக்கும் என்ன சம்பந்தம்?

விவரமா சொல்றேன் கேளு. அன்னிக்கு வெளியே இருக்கும் போது நடு ராத்திரி "கூர்க்கா" வந்து ஒரு விசில் அடிச்சி இருக்கான். அந்த விசில் சத்தம் கேட்டு பயந்து ஓடி வந்து கதவில் தலைய மோதி கழுத்தில் பலமான அடி. அதுக்கு தான் அந்த விளக்கு மாதிரி ஒன்னை டாக்டர் இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு போட சொல்லி இருக்கார்.

என்ன சத்தி, நாயை பார்த்து மனுஷன் ஓடி இருக்கான்னு கேள்வி பட்டு இருக்கேன், இது இவ்வளவு பெரிய நாயா இருந்தும், கூர்க்கா விசில் கேட்டு பயந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு.

சரி, இந்த மூணு பிராணிகளுக்கும் மாசத்துக்கு எவ்வளவு செலவு ஆகுது?

செலவு ஒரு பக்கம் இருக்கட்டும் விசு, இதை கவனிக்க எவ்வளவு நேரம் ஆகுதுன்னு யோசித்தாத்தான் மண்டை காயுது. இந்த மூணு பிராணிகளுக்கும் செலவு செய்யற நேரத்தில் சக மனிதர்களுக்கு எவ்வளவோ உதவி செய்யலாம். என்னத்த பண்றது?

சரி, எவ்வளவு காசு செலவு ஆகுது சொல்லு,

கிட்ட தட்ட மாசத்திற்கு 1000 ருபாய், சாப்பாட்டிற்கே. அப்புறம், மருத்துவ செலவு, குளியல் செலவு, முடி வெட்ட செலவு, லொட்டு லொசுக்குன்னு இன்னொரு 500 ருபாய்.

கேட்கவே ஆச்சரியமா இருக்கு சதி, உங்க அப்பா மட்டும் இத பாத்து இருந்தா, மவனே உனக்கு நடந்த கதையே வேற..

என்னத்த செய்வேன், விசு, புலி வாலை புடிச்சாச்சி, விட்டா கடிச்சிடும்.

சரி, இப்ப இதுல இருந்து எப்ப விடுதலை, சத்தி?

நாய் என்னமோ 10 வருஷம் கிட்ட வாழுமாம். இந்த கூர்க்கா விசில் விபத்தினால இதுக்கு எப்ப வேண்டும் என்றால் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். பூனைங்க ரெண்டும் இன்னும் ஒரு 4 வருஷம் இருக்கும்.

சத்தி... டேய்.. என்னடா வீட்டுக்குள்ள எலி ஓடுது? இப்ப தான சொன்னே இங்க எலி இல்லைன்னு.

நான் கூட இப்பதான் பாக்குறேன் விசு, இதுதான் முதல் முறை.

சரி, எதிரில் ஓடுற எலிய என்னமோ சினிமாவில் கதாநாயகியா அறிமுக படுத்துற காட்சி பாக்குற மாதிரி இந்த ரெண்டு பூனையும் உட்கார்ந்து கொண்டு இருக்கே...இதுங்களுக்கு முன்ன பின்ன எலினா என்னவென்று தெரியுமா?

தெரியாது போல இருக்கு. பாலை வைச்சா குடிக்குங்க, அப்புறம் மீன் விரும்பி சாப்பிடுங்க.

நல்ல நாய், பூனை சத்தி உங்க வீட்டில்!

அது சரி விசு, அங்க உங்க வீட்டில் இந்த மாதிரி பூனை , நாய் எல்லாம் எதுவும் இல்லையா? அமெரிக்காவில் வீட்டுக்கு வீடு இந்த மாதிரி இருக்குன்னு எங்கேயோ படிச்சி இருக்கேன்.

நிறைய பேர் வீட்டில் இருக்கு சத்தி. அது அவனவனுக்கு எவ்வளவு நேரம் இருக்கோ அதை பொருத்து. என்னை பொறுத்தவரை நாய் வளக்கறது திருடன் வீட்டிற்கு வராமல் இருக்க, பூனை வளர்ப்பது எலி தொல்லைக்காக. இது ரெண்டும் இல்ல, பின்ன எதுக்கு  எங்க வீட்டில் நாய், பூனை?

சரி விசு, குறைந்த பட்சம் ரெண்டு பறவையாவது..

பாவி.. நல்ல சந்தோசமா சுத்தி இருக்க வேண்டிய கூண்டில் போட்டு அடைச்சி அத வேற நான் ரசிக்கனும்மா?

ரெண்டு மீனாவது...

மீன் சமையல் அறையில் கொழம்புல இருந்தா போதும், ஒன்னும் நடு வீட்டில் நீச்சல் அடிகனும்னு அவசியம் இல்ல.

அப்ப 'டைம் பாஸ்' எப்படி விசு?

அதுக்கு தான் சிங்க குட்டிங்க மாதிரி ரெண்டு பெத்து வைச்சி இருக்கேனே? அந்த ராசத்திகளோடு தான்.

ராசத்திங்க என்னைக்காவது நாய் பூனை வேண்டும் என்று கேட்டால்...?

கேட்க்க மாட்டார்கள்.. ஏன்னா என்னை சமாளிக்கவே அவங்களுக்கு நேரம் இல்லை.

Tuesday, July 22, 2014

அமெரிக்காவில் CPA ( இந்திய CAக்கு சமம்) படிப்பது எப்படி?



ஏன் விசு? உன் இடுகையில் எப்ப பாரு சொந்த கதை சோக கதையாகவே போடுறியே? நாலு பேருக்கு உதவற மாதிரி ஒரு நல்ல காரியம் ஒன்னு போடு என்று நண்பன் "தண்டபாணி" சொன்னதால் இட்ட இடுகை இது.

இந்த இடுகையில் உங்களுக்கு நன்மை கிடைத்தால் அதற்க்கு சொந்தகாரன் "தண்டமே" , நான் இல்லை.

இந்தியர்களும் சரி, மற்ற சர்வதேச நாட்டு மாணவர்களும் சரி, அமெரிக்காவில்  படிப்பது எப்படி?

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களும் இந்த படிப்புக்கான விதிமுறைகளை தனக்கு என்று ஒரு அமைப்பை வைத்து நடத்தி கொண்டு வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்தின் விதிமுறைகளும் சற்று வித்தியாசமாக இருக்கும்.


ஆனால், இந்த தேர்வு என்பது பொதுவாக ஒரே மாதிரியாக இருக்கும். இந்த படிப்பை முடிக்க ஒருவர் நான்கு தேர்வுகளை சந்திக்க வேண்டும். இந்த தேர்வுகளை பொதுவாக அமெரிக்காவில்தான் எழுத முடியும். சில வருடங்களாக துபாய், பிரேசில் மற்றும் சில நாடுகளில் எழுதலாம் என்று கேள்வி பட்டேன், அனால் அதற்கு அந்நாட்டின் குடியுரிமை அவசியம் என்று யாரோ சொன்னதாக நினைவு.

சரி இப்போது எப்படி இந்த தேர்விற்கு தகுதி ஆகலாம் என்று பார்ப்போம்.

நான் வாழும் கலிபோர்னியா மாகணத்தில் ஒருவர் இந்திய முதுகலை (M.COM) பட்டதாரியாக இருந்தால் அனுமதிக்க படுவார். இளநிலை பட்டதாரிகளும் (B.COM) சில வேலை அனுபவத்துடன் தகுதி ஆகலாம்.

TO LEARN MORE ABOUT TO GET ELIGIBLE FOR STATE OF CALIFORNIA, CLICK HERE..



இன்னும் சில மாநிலங்களில் இந்திய (CA) நேராக இந்த பரிட்சையை எழுதலாம்.

இங்கே இந்த பரிட்சையை சந்திக்கும் முன் எந்த ஒரு தணிக்கையாலரிடமும் வருட கணக்கில் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேர்ச்சி பெற்ற பின், நம் செய்ய போகும் வேலையே, போதும்.

உங்களில் யாருக்காவது இந்த படிப்பை பற்றி மேலும் அறிய விருப்பம் இருந்தால், இங்கே பின்னோட்டத்தில் உங்கள் மின் அஞ்சலை தரவும். நான் உங்களுக்கு என்னால் முடிந்ததை செய்வேன்.

பின் குறிப்பு: இப்ப சந்தோசமா , தண்டபாணி?





கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...