வியாழன், 9 ஜூலை, 2020

கட்டை மட்டும் இல்லாட்டி கட்டையில் போயிடுவோம்!

கொரோனா  காலத்தில் இல்லத்தில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மருத்துவதுறையில் பணிபுரியும் அம்மணியோ, 

"சும்மா எப்ப பார், எப்ப ஆபிஸ்க்கு போவேன்னு புலம்பின்னு இருக்காதிங்க, இது இன்னும் ரொம்ப நாளைக்கு போகும்ன்னு "

சொல்லிட்டு, வேளைக்கு கிளம்பிட்டாங்க. எனக்கு மட்டும் தான் வீட்டில் இருந்து வேலை. இவங்க மூணு பேரும் கிளம்புடுறாங்க.

காலையில் ஒரு ஒருத்தரா இவங்க ரெடியாகி 

"ஓகே பை"

ன்னு சொல்லிட்டு போகும் போது, என்னடா நம்ம நிலைமை இப்படியாச்சேன்னு ஒரு பீலிங்.  இருந்தாலும் இது ஒரு பிரச்சனையே இல்லை, நமக்காவது வேலை வீடுன்னு ஒன்னு இருக்கே. இந்த கொரோனாவிலினால் அம்புட்டையும் இழந்து தவித்து நிக்குறவங்கள  நினைச்சி பார்க்கையில் நம்ம நிலைமை எவ்வளவோ தேவலன்னு தோணுச்சி.

இப்படி வீட்டுல உக்காந்து வேலை செய்யும் போது பகல் முழுக்க இங்கே என்ன நடக்குதுன்னு ஒரு ஐடியா கிடைச்சது.   அப்படி கிடைச்ச புது அனுபவம் தான் இன்னைக்கான பதிவு.

நேத்து மதியம் ரெண்டு மணி போல, பக்கத்துல இருக்க வங்கிக்கு போகலாம்னு போயிட்டு அதுக்கும் பக்கத்துல இருந்த கார் ஷோ ரூம் போயிட்டு  ஒரு மணிநேரத்துக்குள்ள திரும்பி வந்தா ஒரே ஷாக்.

எதிர் வீட்டை ஒரு கிப்ட் போல  பேக் பண்ணி வச்சி இருந்தாங்க. இந்த மாதிரி  வீடை திடீருனு  இப்படி கலர் கலரா சுத்தி வைச்சி இருக்குறத அங்கே இங்கே பார்த்து இருந்தாலும் பக்கத்துல நடக்குறது இது தான் முதல் முறை. 

முதல் முதலா இதை பார்க்கும் போது உங்களை போல தான் எனக்கும் சந்தேகம் வந்தது . என்னடா இது ? ஏன் இப்படின்னு.. அப்புறம் தான் புரிஞ்சது.

அமெரிக்காவில் பொதுவாகவே 99 % வீடுகள் மரக்கட்டைகளினால் தான் செய்ய பட்டு இருக்கும். வீடுகள் மட்டும் இல்ல, பெரிய பெரிய அபார்ட்மெண்ட்ஸ் கூட இப்படி தான்.

பார்க்க என்னமோ கான்க்ரீட்டில் செஞ்ச மாதிரி ஸ்ட்ராங்கா தெரிஞ்சாலும் அம்புட்டும் கட்டை தான். நேசமணி தலையில் விழுந்த சுத்தியை எடுத்து ரெண்டு தட்டு தட்டுனா போல  போலன்னு விழுந்துடும்.

கிழக்கு பகுதியில் ஏன் கட்டையில் கட்டுறாங்கன்னு தெரியல. ஆனா மேற்கு பகுதியில் அதுவும் கலிபோர்னியாவில் வாழும் எங்களுக்கு கட்டையில் வீடு கட்டினா தான் வாழ்வு. இல்லாட்டி கட்டையாலபோயிடுவோம்.

புரியல?

கலிபோர்னியா மாநிலத்தில் எப்போதுமே நிலநடுக்கம் வரும்னு ஒரு பயம் இருக்கும். இங்கே அடிக்கடி நில நடுக்கமும் வரும். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வந்த ஒரு மோசமான நில நடுக்கத்தை பத்தி இன்னும் சோகம் கதை நிறைய பேசுவாங்க.

அதுமட்டுமில்லாமல், அடுத்த பெரிய நில நடுக்கம் எப்ப வேணுமானாலும் வரும்னு ஒரு  செய்தி சுத்தினே இருக்கும். நில நடுக்கத்துக்காக தனியா இன்சூரன்ஸ் கூட இருக்கு. நம்ம வீடை இன்சூர் பண்ணும் போது பொதுவா இத சேர்க்க மாட்டாங்க. இதுக்கு தனியா ஒரு பாலிசி வாங்கணும். கலிபோர்னியாவில் இருக்குற யாரவது இதை படிச்சீங்கனா , அந்த இன்சூரன்ஸ் பத்தி உங்க ஏஜென்ட் கிட்ட விசாரியுங்க.

சரி, வீடை ஏன் கட்டையில் காட்டுறாங்க?

முக்கியமான காரணம் நிலநடுக்கம் தான். இப்படி வருசத்துக்கு ஏற குறைய டஜன் நில நடுக்கம் வர இடத்துல கான்க்ரீட்டில் வீடு கட்டினா என்ன ஆகுறது?  உடைஞ்சி கிடைஞ்சி விழுந்தா, ரொம்ப கஷ்டம். 

ஆனா, இந்த மாதிரி கட்டைகளை நிலநடுக்கத்துக்கு ஏத்த மாதிரி கட்டுவாங்க. இந்த மாதிரி சமயத்தில் வீடே ஆடும் ஆனா எதுவும் சிதறாது.

சில சமயங்களில் தூங்கி எழுந்து காலையில் வந்து கதவை திறக்கும் போது  கதவு இறுக்கி இருக்கும். அப்ப புரிஞ்சிக்கலாம். ராத்திரி ஒரு சின்ன நடுக்கம் வந்து இருக்கும்னு.

இந்த மாதிரி கட்டையில் கட்டுவதால். சில பிரச்சனைகளும் உண்டு. அதுல ஒன்னு, நெருப்பு. திடு திப்புன்னு எரிஞ்சிடும். அதுக்குன்னு என்ன என்னமோ  விதிகள் உண்டு. இருந்தாலும் நெருப்பை யார் அடக்க முடியும்?

அடுத்த பிரச்சனை.. பூச்சிகள். சில நேரங்களில் எப்படி வருது எங்கே இருந்து வருதுன்னு தெரியாது. பூச்சிகள் வந்துடும். அந்த மாதிரி நேரத்தில் தான் இப்படி வீடை கிப்ட் போல பண்ணி டைட்டா மூடி வைச்சி பூச்சி மருந்து அடிப்பாங்க. மருந்து அடிச்சி ஒரு வாரத்துக்கு இப்படி மூடி வைப்பாங்க. 

அப்படி தான் நேத்து எதிர் வீட்டுக்கு பண்ணி வைச்சி இருக்காங்க. 

சரி.. உங்களில் யாருக்காவது ஒருத்தருக்காவது..

அட பாவத்த, மொத்த வீடும் கட்டையிலான்னு, இது எத்தனை வருசத்துக்கு தாங்கும்ன்னு கேக்க தோணும். ஒழுங்கா கட்டின வீடு 100 வருடத்துக்கு மேல இருக்கும். 


3 கருத்துகள்:

  1. ஒரு வாரமா?   அதுவரைக்கும் அவங்க எங்கே தங்குவாங்க?  அவ்வளவு பக்கத்து வீட்டுக்கு வந்து விட்ட பூச்சி நம்ம வீட்டுக்கும் வந்துவிட வாய்ப்பிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வாரம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை ஸ்ரீராம். 2018 கிறிஸ்துமஸ் நேரத்தில் எங்க வீட்டில் தண்ணி பைப் உடைய ரெண்டு மாசம் ஹோட்டலில் தான். ஒழுங்கான இன்சூரன்ஸ் இருந்ததால் எல்லாத்தையும் அவங்களே பாத்துக்கிட்டாங்க, சாப்பாடு உட்பட.

      இது என்ன வகை பூச்சின்னு தெரியல. இதுவரை எங்க வீட்டில் பார்க்கலை. அதுமட்டுமில்லாமல் அவங்க வீடை சுத்தி ஏக பட்ட மரம். இப்ப தான் குடிவந்தாங்க. ரெண்டு மூணு சின்ன குழந்தைகள் வேறு. ஒரு வேளை முன்னெச்சரிக்கையாக கூட செஞ்சு இருக்கலாம்.

      நீக்கு
  2. 100 வருடத்துக்கு தாங்கும் என்பதும் வியப்பாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...