எங்க அப்பா மட்டும் இருந்து இருந்தா?
என்று சொல்லி கொண்டே அம்மணி எதிரில் வர...
"கார் ஆயில் ரிப்பேர் எல்லாம் அவரே செஞ்சி இருப்பாரா?"
"அதுவும் தான்"
"அதுவுமா?!!!, பாத்ரூமில் லேசா தண்ணி லீக் ஆகுதே அதை அவரே சரி பண்ணி இருப்பாரா?"
"அதுவும் தான், கண்டின்யு"
"பின்னால கதவு லேசா ஆடுதே, அதை ."
"கண்டிப்பா, ஆனா சொல்ல வந்தது வேற.."
"வேற என்னவா இருக்கும்?"
என்று கேட்கையிலே..
"இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் இவ்வளவு யோசிக்க மாட்டார். சட்டுனு புட்டுன்னு வடிவா பதில் தருவார், ரொம்ப சமத்து, கவர்மெண்ட் ஆர்க்கிடெக்ட் ஆக்கும்"!
"பசங்களுக்கு அவரே கணக்கு, ம்யூசிக் சொல்லி கொடுத்து இருப்பாரா?
"அதுவும் தான்"
"வேற என்ன செஞ்சி இருப்பார்,விதவிதமா சமையல்?"
"சமையல் ஒரு விஷயமா? யாரு வேணும்னாலும் கத்துக்கலாம்"
"உடம்பு சரியில்லாட்டி கஷாயம் அது இதுன்னு "
"அதுவும் தான்"
"வேற?"
இந்த தோட்டத்தை சொல்ல வரேன்"
"தோட்டத்துக்கு உங்க அப்பா எதுக்கு, நானே வைச்சி தாக்கின்னு தானே இருக்கேன்"
"இருந்தாலும் எங்க அப்பா"
"ஹலோ..முக்கனியில் பலா மட்டும் தான் இல்ல.. மா வாழை இரென்றும் இருக்கு. அதோட சேர்த்து திராட்சை , மாதுளை, கொய்யா வேற!"
"ஹ்ம்ம்"
"எலுமிச்சை நீ கடைசியா கடையில் வாங்கி எத்தனை வருஷம் ஆகி இருக்கும்? , மரம் முழுக்க எலுமிச்சை."
"ஹ்ம்ம்"
கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா "
"அது மூணும் யாரு வைச்சாலும் தானா வளரும், என் அப்பா மட்டும் இருந்து இருந்தாருன்னா? "
"வெந்தய கீரை, பொன்னாங்காணி, முலை கீரை ..?"
"அது நான் வைச்சது"
"வைச்சது நீ தான். தண்ணி ஊத்தறது நான் தானே.., உங்க அப்பா இல்லையே.."
"பூச்செடி ரோஜா மல்லி வகையறா?"
"அதுங்க சும்மா அழகுக்கு தான்.. யாருக்கு என்ன பிரயோசனம்? எங்க அப்பா அதுல நேரத்தை வீணடிக்க மாட்டாரு"
"நான் வீணடிக்கிறேன்னு சொல்ல வரியா?"
"நான் அப்படி சொல்லல, எங்க அப்பா இருந்தாருன்னா "
"சரி, சொல்லு , முயற்சி பண்றேன்"
":வெண்டை, பச்சை மிளகாய், தக்காளி!"
"மூணும் தான் வளருதே..."
"வளருது சரி, 3னும் கொத்து கொத்தா ஒரே தொட்டியில் வளருதே.. அதை தனி தனியா எடுத்து வைக்கணும்."
"விதையை போடும் போதே சொன்னேன்... அப்படி தூவாதேனு.."
"நான் ஏதாவது ஒன்னு ரெண்டு தான் வரும்னு நினைச்சேன். எங்க அப்பா ராசி எனக்கும் இருக்கு, எதை போட்டாலும் காடா வளருது"
"இப்ப உங்க அப்பா இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்பாரு?"
"அதை எப்படி நான் சொல்றது?"
"சரி, சொல்ல வேண்டாம், செஞ்சி காட்டு"
"'கிண்டலா!!!?"
"சாரி... சொல்லேன்.. முயற்சி பண்றேன் "
"இந்த வெண்டை தக்காளி பச்சை மிளகாய், மூணையும் அந்த தொட்டியில் இருந்து எடுத்து தனி தனியா வேற இடத்துல வைப்பார்"
நம்ம என்ன உங்க அப்பா மாதிரி ஜமீன்தார் பரம்பரையா? அவருக்கு யாழ்ப்பாணத்தில் ஏக்கர் கணக்கில் இருந்தது தனி தனியா வைச்சார்.. இங்கே நமக்கு இருக்குறது ஆறடி தானே.. "
"அதுலே ஏதாவது சமத்தா செஞ்சி இருப்பார்"
என்று சொல்லி கொண்டே .. அப்பாவை நினைத்து கொண்டே அம்மணி இடத்தை காலி பண்ண..மனதில்.
என்ன பண்ணி இருப்பாருன்னு கூகுளை தட்ட..
இதற்கும் கூகுளா? என்னவென்று பார்க்கத் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் பாணியில் சொல்லி சென்றவிதம் அருமை ரசித்து மகிழ்ந்தேன்.., உங்கள் பதிவு தொடர்வது மாதிரி எனது வருகையும் தொடரும்
பதிலளிநீக்குகைராசிக்கு போட்டியா...?!
பதிலளிநீக்குகொஞ்சம் பெரிய தொட்டியிலேயே கூட வெண்டையை வளர்க்கலாம் கொஞ்சம் தள்ளி தள்ளி வைக்க வேண்டும். தொட்டி அல்லது கார்டன் பேக் இருக்குமே அதில் கூட வளர்க்கலாம்.
பதிலளிநீக்குநீங்க என்ன செஞ்சுங்கீன்னு பார்க்க வருகிறேன்..
கீதா
தலைப்பைப் பார்த்ததும் உங்கள் அப்பாவைப் பற்றி என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குஎன்ன செய்தீர்கள் என்று அறிய தொடர்கிறோம்
துளசிதரன்