சனி, 25 ஜூலை, 2020

பெண்களின் ஆட்டத்தில் பண வாசனை உள்ளதா என்றோ ஆராய்ச்சி!

போயே போச்சி, போயிந்தி. இட்ஸ் கான்..

என்னதான் சொல்ல வரேன்னா? 

ஒன்னு ஒன்னா  சொல்றேன். வெயிட் எ நிமிட் பார் பைவ் நிமிட்ஸ்.

கொரோனா வந்ததுன்னு உலகம் முழுக்க நடக்குற அம்புட்டு ஸ்போர்ட்ஸையும் காலவரையின்றி தள்ளி வைச்சிட்டாங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.


இதுல ரொம்ப விசனமான காரியம் இந்த வருஷம் ஜப்பானில் நடக்க இருந்த ஒலிம்பிக்ஸ். ஒலிம்பிக்சில் பங்கேற்கும் வீரர்களுக்கு பொதுவா பரிசு தொகைன்னு பெருசா எதுவும் கிடைக்காட்டிலும் அதில் பங்கேற்ற பெருமையை சொல்லி மாளாது.

அதுக்கு தேர்வு பெறுவதற்காக செஞ்ச தியாகங்கள், பயிற்சிகள், உழைப்புகள் அனைத்தும் நிறைய பேருக்கு வீணாபோச்சி. அடுத்து ஒலிம்பிக்ஸ் வர நாலு வருசமாகும். அதுக்குள்ள என்ன என்ன நடக்குமோ.

சரி, தலைப்பில் அது என்ன பெண்கள்.. ஆட்டம் பண வாசனை?

ஒன் மோர் நிமிட் ப்ளீஸ்..!!

இங்கே அமெரிக்காவில் அம்புட்டு ஆட்டத்தையும் தள்ளி வைச்சாலும் NBA BASKETBALL இந்த வாரம் கடைசியில் ஆரம்பிக்குதுன்னு கேள்வி பட்டேன் பிளோரிடாவில் ஒரு ஊரில், ஒரே அரங்கில், 16 அணிகள் போட்டியிட, ஒன்று அல்லது ரெண்டு ஹோட்டலில் அனைவரும் தனிமைப்படுத்த பட்டு ஆடுறாங்களாம். இது வேலைக்கு ஆவதுன்னு மண்டை மனசு ரெண்டும் அடிச்சி சொல்லுது. அதை பத்தி இன்னொரு நாள் பார்ப்போம். 

என்ன நடக்க போதோ ஆணடவனுக்கே வெளிச்சம்!

தலைப்புக்கா... ? தலையை திங்குறீங்களே.. இதோ வாறன்..

இந்தியாவில் கிரிக்கெட் உட்பட அனைத்தும் ரத்தாகியநிலையில், நிறைய பேருக்கு நஷ்டம். இதுல பொதுமக்கள் அவனவன் அடுத்த வேலைக்கு -  வேளைக்கு என்ன பண்ண போறேன்னு இஞ்சை தின்ன குரங்கை போல் முழிக்கையில் .. 

அங்கே IPL அணி முதலாளிகளுக்கு பெரிய பிரச்சனை.. வசூல். இன்னாது இந்த வருஷம் போட்டி இல்லையா? அப்ப எங்க வசூல்.? 

போட்டி நடக்காட்டி இங்கே அமெரிக்க அணி முதலாளிகள் போல இன்சூரன்ஸ் கிட்ட போங்க.. அம்புட்டு நட்டத்தையும் சரி பண்ணிடுவாங்க.. 

அதுக்கு பாலிசி எடுத்து இருக்கணுமே.. எவனுக்கு தெரியும் கொரோனா வரப்போவதுனு..?

"ஹெலோ.. தெரியாத  திடுதிப்புன்னு வர விஷயத்துக்கு தான் இன்சூரன்ஸ் எடுக்கணும்"!

"சொல்லவே இல்லையே" 

சரி, கிரிக்கெட் அம்புட்டும் ரத்தானது. ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த உலக கோப்பை உட்பட.

பெண்கள்.. ஆட்டம் பணவாசனை?

சொல்றேன்..

இந்த வருடம்  ஜூன் ஜூலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து  பயணம் மேற்கொள்ள இருந்தது. கொரோனாவினால் இது  ரத்தாகி போனது.

ஜூலை மாதம் நடுவில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், புது புதுசா  ரூல்ஸ் போட்டு, மேற்கிந்திய தீவு அணிகளும் இங்கிலாந்து அணியும் கிரிக்கெட் ஆட  ஏற்பாடு செஞ்சி, பார்வையாளர்களே இல்லாம ஆட்டம் படு ஜோரா நடந்ததுன்னு இருக்கு.

இதை பார்த்த IPL முதலாளிகள்... அது தான் ஆட்டம் நடக்காதே. அதனால IPL போட்டிகளும் நடத்தலாமேன்னு அடம்பிடிக்க... இந்தியாவில் இருக்க பெரும்பாலான நகரங்களில் கொரோனா... உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டேன்னு எகிறி எகிறி குதிக்க.. 

IPL போட்டியை துபாயில் வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்காங்க.  இம்புட்டு அவசர பட்டு ஏன் இந்த போட்டி தெரியுமா?

ரசிகர்கள் பாவமாம். கிரிக்கெட்  இல்லாம நொந்து பொய் இருக்காங்களாம். சரி அப்படியே அதுவே உண்மையா  இருக்கட்டும். 

இந்த IPL போட்டியை கொஞ்சம் தள்ளி விச்சிட்டு மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தை கொஞ்சம் நடத்தலாமே. அந்த வீராங்கனைகளுக்கு கடினமா  உழைச்சி தானே இருப்பாங்க. 

ரசிகர்களுக்காக .. 

ஐயோ..பெண்கள் கிரிக்கெட்  இப்பவா? கொரோனா.. கொரோனா என்று அலறுகிறார்கள்.

அவன் எவனோ என்னைக்கோ  சொன்னது முக்காவாசி சரி தான்.. 

CRICKET IS A GAME OF GENTLEMEN ..

இதுல எந்த கால் வாசி தவறு?

CRICKET IS A GAME OF GREEDYMEN ..ன்னு சொல்லி இருக்கணும். 

பெண்களின் கிரிக்கெட்டில் பணவாசனை உள்ளதா என்றோர் ஆராய்ச்சி! 

போங்கடா நீங்களும் உங்க சமூக நீதியும்.  

விசில் போடு.. விசில் போடு... 

3 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...