புதன், 1 ஜூலை, 2020

ஆளில்லா கடையில் டீ ஆத்தின்னு இருக்கும் பதிவர்!!!


பல வருடங்களுக்கு முன்பு குறிப்பாக சொல்லப்போனால் 2013ம் வருடத்தில் போல் நண்பன் ஒருவர் 

"நம்ம பரதேசி@நியூயார்க்  அல்ப்ரெட் அண்ணனின் பதிவுகளை படித்து இருக்கிறாயா?"

 என்று கேட்டார்?


"இது என்ன பதிவு?" 
என்று கேட்க அவரோ.. 

"அட பாவி! தமிழ் பதிவுலகத்தை பத்தியே உனக்கு தெரியாது போல இருக்கே. இப்ப அதுதான் லேட்டஸ்ட். போய் சிலரோட பதிவை படிச்சி பாரு.சிறுகதை, தொடர்கதை, உண்மை நிகழ்வுகள், அரசியல், சமூதாயம், சினிமா , நகைசுவைன்னு வைச்சு தாக்குறாங்க. படிச்சி பாரு"

என்று சொல்ல...

முதலில் கண்ணில் தென்பட்டது ..

"தருமி" அவர்களின் பதிவு.

பேராசிரியர் சாம் அவர்கள் தருமி என்ற பெயரில் எழுதிய சில எழுத்துக்களை படித்தேன். பல விடயங்களை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக எழுதி இருந்தார். அவற்றை படிக்கையில் ஒரு பின்னூட்டத்தில் பரதேசி என்ற பெயர் தென்பட  அவரின் "காதல் கசக்குதய்யா" என்ற ஒரு பதிவை படிக்க ஆரம்பித்தேன். மிகவும் ரம்மியமாக நகைச்சுவையோடு இருந்தது.

அண்ணனை அழைத்து வாழ்த்து சொல்ல அவரோ, வாழ்த்துக்கு நன்றி. என் வாழ்வில் நடந்த சம்பவங்களை விடு. உன் வாழ்க்கையில்  இந்த மாதிரி  ஏழரை சம்பவங்கள்  அட்ரஸ் தேடி வந்து இருக்குமே. அதை கொஞ்சம் எழுது என்று உசுப்பி  விட  2013 டிசம்பர் மாதம் என் முதல் பதிவை எழுதினேன்.

முதல் சில வாரங்கள் என் பதிவை 25 பேர் படித்தாலே பெரிய காரியம். அப்படி இருக்கையில் அண்ணன் தமிழ்மணத்தில்  உன் பதிவை இணை என்று சொல்ல.. இணைத்தேன். 

இந்த 25 கிட்டத்தட்ட 50 வரை சென்றது. தமிழ்மணத்தில்  முதல் சில தரவரிசையில் யார் இருக்கின்றார்கள், அவைகளை படிக்கலாமே என்று  தேட, ஒவ்வொரு பதிவிற்கும் 1000 பார்வைக்கும் மேல் வாசகர்களை வைத்து , நீ எல்லாம் ஜுஜுபி என்று என்னை நினைக்க வைத்தார், அவர்கள் உண்மைகள் பதிவர் மதுரை தமிழன்.

சரி, நமக்கு 100 வந்தா போதும் என்று தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கையில் திடீரென்று ஒரு நாள் என் பதிவில் 700 பேர் படித்ததாக எண்கள் வர, இது என்னடா என்று பார்க்கையில் கிட்ட தட்ட 40 பின்னூட்டங்கள். 

அவற்றில் எப்போதும் கொஞ்சமும் சோர்ந்துடாத. தொடர்ந்து எழுது என்று உற்சாகப்படுத்தும் திண்டுக்கல் தனபாலனனின் பின்னூட்டம் இருக்கும்.


நமக்கு எப்படி இம்புட்டு பார்வைகள்ன்னு விசாரிக்கையில் ...  சிலர் timesforsomelove என்ற தளத்தில் எழுதும் வருண் அவர்களின் சிபாரிசில் இங்கே வந்துள்ளேன் என்று சொல்ல  அவர் தளத்திற்கு செல்ல அங்கே ஒரு பதிவில் அவர் அடியேனின் பதிவை பாராட்டி எழுதி சிபாரிசும் செய்ய ..

அடுத்த சில மாதங்கள் நானும் தமிழ்மணத்தில் டாப்  பதிவராக இருந்து வந்தேன். எந்த பதிவு எழுதினாலும் 1000 பேர் படிப்பார்கள் . நிறைய பின்னூட்டங்கள் வரும். 

நடுவுல என்னைக்கோ சுதந்திரத்தை தேடி போன கீதாவும் துளசிதரணும் தடம்மாறி என் தளத்திற்கு வந்து.. ஆஹா .. ஓஹோ என்று புகழ் பாட.. என் பதிவுகள் "விசுவாசமின் சகவாசம்" என்ற புத்தகமாக வெளிவந்தது.

சரி, நம்ம எழுத்தையே இப்படி ரசிக்கின்றார்களே, கல்லூரி நாட்களில் தமிழை அமிழ்த்தென எனக்கு எடுத்துரைத்த நண்பன் கோவில்பிள்ளை எழுதின்னா எப்படி இருக்கும் என்று யோசித்து, பின்னர் கோர்த்து விட.. 

ஹ்ம்ம்.. இப்ப "கோ' விற்கு கோயில் கட்டும் வரை கட்டுக்கட்டாக விசிறிகள். வாழ்த்துக்கள் கோ.! 

அட அட அட ..

நம் எழுத்தும் நாலு பேரிடம் சேருகின்றதே என்று மகிழ்ந்து தொடர்ந்து எழுதி வந்தேன். நல்ல வரவேற்பையும் பெற்றது.  2018 வரை வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு பதிவு எழுதி வந்த நான் 2019ல் இளையவள்  பள்ளி இறுதி ஆண்டில் அவளுக்கு ஒத்தாசையாக நிறைய பயணம் மற்றும் வேலையின் நிமித்தம் ஒன்றுமே எழுத வில்லை. 

சரி 2020 ஆரம்பிக்க.. மீண்டும் எழுதலாம் என்று நினைத்து எழுதி ஒன்றை பதிய மீண்டும் அதன் பார்வை 25க்கு சென்றது. சரி, மக்கள் நம்மை மறந்து இருப்பார்கள் என்று நினைத்து கொண்டு அண்ணன் அல்ப்ரெட் அவர்களை அழைக்க அவரும், தமிழ்மணம் கிட்டத்தட்ட மூடியாட்சி. பொதுவா நம்ம பதிவை அங்கே பார்த்து தான் படிக்க வருவாங்க. 25 பார்வையாவது வருதே சந்தோச படு என்று பதிலளிக்க ..

சரி, அந்த 25 பேருக்காவது எழுதலாம்னு தொடர்ந்து எழுத.. தமிழ் சரத்தில் இணையுங்கள் என்ற ஒரு மின்னஞ்சல் வர  இணைத்தேன். இணைத்து இரண்டு மாதத்திற்கு மேலாகிவிட்டது. ஒவ்வொரு பதிவிற்கும் பார்வை 70 முதல் 100 போல் இருக்கின்றது.

என் தளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை தான் இப்படியா? அல்ல, பொதுவாகவே பதிவை படிப்பவர்களின்  எண்ணிக்கை குறைந்துவிட்டதா? 

மதுரை தமிழனுக்கு இன்னும் ஆயிரம் கணக்கில் வருகின்றதா? அப்படி என்றால் நம் எழுத்து பார்ப்போரை ஈர்க்க தவருகின்றதா? என்ற கேள்வி வந்து கொண்டு தான் இருக்கின்றது. 

பேசாம தினந்தோறும் மதுரை தமிழன் தளத்திற்கு போய் அவர் பதிவை படிச்சிட்டு  அதையே வேற பாணியில் எழுதிடலாமா? என்றும் நினைக்க  தோன்றுகின்றது. 

பின்னூட்டங்களும் சரி, புதிதாக யாரிடம் இருந்தும் வருவதில்லை. நாம் அறிந்த முகங்களிடம் இருந்து மட்டுமே, மற்றும் நம் யார் யார் பதிவிற்கு  பின்னூட்டம் விடுகிறோமோ அவர்களிடம் இருந்து மட்டுமே வருகின்றது. 

யாரும் இல்லாத கடையில் டீ  எதற்கு ஆற்றுகிறோம்   என்ற நினைப்பை தவிர்க்கமுடியவில்லை.

எனக்கு மட்டும் தான் இப்படியா?   

  

13 கருத்துகள்:

  1. விசு சார்,

    பதிவில் நீங்கள் குறிப்பிட்ட ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவரது பதிவின் மூலம்தான் உங்களோட
    ப்ளாக் எனக்கு அறிமுகம் ஆச்சு.
    அந்தச் சமயம் எனக்கு  பதிவுகள் வாசிக்க  நிறைய சமயம் இருந்ததால்
    பதிவுகள் நீங்கள் வெளியிடவும் உடனுக்குடன் வாசித்துவிடுவேன்.

     உங்கள் நண்பரை நீங்க  கோர்த்து விட..
    கோ  சாரோட  பதிவுகள்  எனக்கு அறிமுகம் ஆச்சு...

    ***

    உங்களது நகைச்சுவை எழுத்து  பிடிக்கும்....

    சமீபத்தில் ஒருநாள்   நீங்கள்   நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய
    ஐரோப்பா பயண கட்டுரைகள்  வாசிக்கனும்னு நினைச்சேன்...

    தங்களது வலைப்பூவை சைலெண்ட் ரீடராக வாசித்துக் கொண்டுதான்  இருக்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திருப்பதி.

      ஓ அந்த ஐரோப்பா பயணமா? அது ஒரு கானா காலம். கொரோனா அடைப்பு முடிந்தவுடன் மீண்டும் செல்லலாம் என்று ஒரு திட்டம்.

      நீக்கு
  2. விசு சார்,
    கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். வேடிக்கையான உங்கள் பதிவுகள் பல நேரங்களில் என்னோட stress buster. தொடர்ந்து எழுதவும் ப்ளீஸ்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி உஷா. தங்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர்என்று அறிந்தது மகிழ்ச்சியே. முயல்கிறேன்.

      நீக்கு
  3. விசு சார்,
    கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். வேடிக்கையான உங்கள் பதிவுகள் பல நேரங்களில் என்னோட stress buster. தொடர்ந்து எழுதவும் ப்ளீஸ்!.

    பதிலளிநீக்கு
  4. அன்புல்ல விசு சார், உங்களையெல்லாம் முன்னோடியாகவும், ஊக்கமாகவும் வச்சுத்தான் சின்ன பசங்க நாங்க எழுத வந்திருக்கோம். எனக்கும் உங்க எழுத்துக்களும் எள்ளோரையும் ஊக்குவிக்கிற உங்கள் பின்னூட்டமும் அவ்ளோ பிடிக்கும். உங்களுக்கு ஆருதல் சொல்கிற அளவிற்கு எனக்கு வயதோ அனுபவமோ அல்ல சார். ஆனா ஒரு நல்ல வாசகனா உங்களுக்கு இருப்பேன்னு சொல்லமுடியும் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரெனாண்டோ.. :)

      நீ சின்ன பையன் வேணும்னா சொல்லிக்கோ. அதுக்காக.. திரும்ப திரும்ப சார்.. உனக்கு வயசாயிடிச்சி, எனக்கு வாழ்த்த வயதில்லைன்னு ...


      ஜஸ்ட் ஜோக்கிங்.

      நன்றாக எழுதுகிறாய் ப்ரெனாண்டோ. தோடர்ந்து எழுது.

      நீக்கு
  5. மிக மிக மிக கேவலமாகதான் உள்ளது

    தமிழ்நாட்டிந் நிலை ...........................

    பதிலளிநீக்கு
  6. என்ன விசு, நல்லாத்தான போய்ட்டு இருக்கு? திடீர்னு ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க? அந்தக்காலத்தில் இருந்த பதிவுலக ஜாம்பவாங்கள் எல்லாம் ட்விட்டர், முகநூல்னு போயி ஒன்னுமில்லாமல் போயிட்டார்கள். நீங்கதான் நிலைத்து நிக்கிறீங்க. ;) ஆமா "பரதேசி" என்ன ஆனார்? அவர் வலைபூ வை அடைச்சுட்டாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி வருண்.

      பரதேசியுடன் தினமும் பேசிக்கொண்டு இருக்கின்றேன். வேலை பளு சுமை என்று சொன்னார்கள். அது மட்டும்மல்லாமல் அவர் எப்போது பார்த்தாலும் தம் அறிவை வளர்த்துக்கொள்ள எட்டாவது ஒரு கல்லூரில் சேர்ந்து ஏதாவது படித்து கொண்டு இருப்பார். இப்போதும் அப்படியே.

      தொடர்ந்து எழுதுமாறு அவரிடம் நேற்று கூட சொன்னேன்.

      நீக்கு
  7. வணக்கம் நண்பரே! 2014 ல் தமிழ் பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்தேன். அது கொஞ்சம் அதிகரிக்க 2016ல் இருந்து வலையுலகப் பதிவுகள் குறைந்துவிட்டது. வாசிக்கவும் முடிவதில்லை. குடும்ப சூழலும் கொஞ்சம் சரியில்லாமல் போனதால் வலைப்பக்கம் வருவதில்லை. அவ்வப்போது வந்து ஒன்றிரண்டு பதிவுகள் வாசிப்பது உண்டு. பத்திரிக்கைகளில் வந்த படைப்புகளை என் வலையில் போடுவேன். தேன்சிட்டு என்ற மின்னிதழும் இணைய தளங்களும் நடத்தி வருகின்றேன். உங்கள் பதிவுகள் என்றைக்கும் சுவாரஸ்யம். தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்கவும் கருத்திடவும் நண்பர்கள் வருவார்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் நண்பரே! பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்தமையால் வலைப்பக்கம் வருவது குறைந்துவிட்டது. அவ்வப்போது வந்து வாசித்து செல்கிறேன். என் பதிவுகளும் குறைந்துவிட்டது. தொடர்ந்து எழுதுங்கள்! உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்கு வாசகர்கள் கட்டாயம் வருவார்கள்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. என்னைக் கேட்டால் படிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை ஆனால் அவர்களை சென்று அடையும் வழிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கப்பட்டு வருகின்றது. என நினைக்கிறேன் முன்பு எல்லாம் என் பதிவிற்கு அதிகம் வருகை தந்தவர்கள் இண்டலி மூலம் வந்தவர்கள் அதற்கு அடுத்து கூகுல் ப்ளஸ் அடுத்தாக தமிழ்மணம் மூலமும் கூகுல் சர்ச் முலமும்தான்...இப்படி வருகை தந்தவர்களின் வழி எல்லாம் அடைத்த பின் இப்போது வருகை தருபவர்கள் கூகுல் சர்ச் மூலம்தான் இப்போது பதிவுகள் இடாவிட்டால் தினமும் 500 பேர்களின் வருகையும் பதிவுகள் இட்டால் அடிசனலாக 500 பார்வையும் வருகிறது.. நல்ல பதிவுகளாக இட்டால் இன்னும் 500 அதிகமாகிறது அவ்வளவுதான் விசு.. இதுதான் இன்றைய நிலை...

    தமிழ்சரம் மூலம் என் தளத்திற்கு வருபவர்கள் வாரத்திற்கு 20 க்கும் குறைவானவர்களே... பல சமயங்களில் தமிழ்சரத்தில் என் பதிவுகளை இட்ட பின் தேடிபார்த்தாலும் அதில் வருவதில்லை


    ஆரம்பத்தில் இருந்து நான் சொல்லி வருவது இதுதான் யார் வருகிறார்கள் வரவில்லை கருத்து இடுகிறார்கள் இடவில்லை என்பது பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை நான் சாதிக்க வேண்டும் என்று எண்ணியெல்லாம் எழுதவில்லை எனது பொழுது போக்கிற்காகமட்டுமே எழுதுகிறேன் அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...