சரி...
இன்னாடா இது வாழ்க்கையே இப்படி தலை கீழே இருக்கே, வெளிய எங்கேயும் போக முடியலைன்னு என்று நினைக்கையில்...
எங்கேயும் வெளிய போக முடியாது! சினிமா, விளையாட்டு, கான்சர்ட், நண்பர்கள் இல்லம் இப்படி அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டதால் ...
சரி, ஒரு தமிழ் படமாவது பாக்கலாம்னு நினைச்சி டிவியை ஆன் பண்ணேன். அதில் ப்ரைம் டைம் சேனல் தட்டி தமிழ் மூவிஸ் என்று தேடியதில் "திருமணம் " என்ற ஒரு படம் வந்தது.
படத்தின் ஸ்டில்லை பார்க்கையில் ஒரு குடும்ப படம் போல் இருந்ததால் சரி இதை பார்ப்போம் என்று ஆரம்பிக்க..
முதல் ஸ்டில்...
புகை பிடிப்பது உடலுக்கு கேடு.
அடுத்த ஸ்டில்
குடிப்பது உடலுக்கு கேடு
அடுத்தது
எந்த விலங்கும் துன்புறுத்த படவில்லை.
என்று வர,
இது என்னடா? சினிமா பார்க்க வந்தோமா இல்லாட்டி கல்லூரியில் Moral Science படிக்க வந்தோமான்னு ஒரு சந்தேகம் வர, படம் ஆரம்பிக்க அஞ்சி நிமிசத்தில், சரி வேற ஏதாவது பண்ணலாம்னு படத்தை மூடி வைச்சிட்டு.. தோட்டம் பக்கம் போய் களை பிடுங்குகையில்..
ஒரு படத்தை பாக்கும் போது ஏன் குடிக்காத, புகை பிடிக்காத, விலங்குகளை துன்புறுத்தாதன்னு போடுறாங்க..
ஒரு மனுசன் படம் பார்த்துதானா இதெல்லாம் கத்துக்குவான் என்ற நினைவு வந்தது.
கூடவே.. இந்த மாதிரி அறிவுரை வேறு மொழி படங்களில் வருகின்றதா? என்று யோசிக்கையில்.. ஆங்கில படங்களில் இதை பார்த்த மாதிரி ஒரு நினைவு எதுவும் இல்லை.
மற்ற இந்திய மொழி படங்களில் இப்படி வருகின்றதா என்று அறிந்தோர் சொல்லவும். அப்படி இல்லை என்றால்..
தமிழ் படத்தில் மட்டும் இப்படி வருவதற்கான காரணம் என்ன என்று வியக்காமல் இருக்க முடியவில்லை!
அறிந்தோர் சொல்லவும்!
மற்ற மொழிப் படங்களை பார்க்கும் போது கவனிக்க வேண்டும்...
பதிலளிநீக்கு