வியாழன், 16 ஜூலை, 2020

இல்லத்தரசிகளுக்கு ஒரு சலாம்!

அறிந்தோ அறியாமலோ தெரிந்து தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ வாழ்க்கையில்...

விடிந்தவுடன் கணவன் வேலைக்கு செல்வான், பிள்ளைகள் பள்ளி / கல்லூரிக்கு செல்வார்கள். 

அம்மணி மட்டும் இல்லத்தில் இருந்து இவர்களுக்கான மதிய மற்றும் இரவு உணவை தயாரிப்பதிலும் மற்றும் இல்லத்தை சுத்தம் செய்வதிலும் நேரத்தை கழிப்பார்கள். 

அது என்ன பெரிய வேலை? ஒரு மணி நேரத்தில் இந்த வேலை எல்லாம் முடித்து விட்டு பின்னர் புத்தகம் படிப்பது ( அந்த காலத்தில்) தொலை காட்சி  (இந்த காலத்தில்) பார்ப்பது என்று சுகமாய் இருப்பார்கள் 

என்று தான் நினைத்து இருந்தேன்.

கொரோனா இவை அனைத்தயும் மாற்றி போட்டது.

மார்ச் மாதம் முதல் வாரம் துவங்கி அடியேன் இல்லத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். அம்மணியும் சரி, பிள்ளைகளும் சரி தங்கள் வேலையை எப்போதும் போல் மருத்துவமனையிலும் அலுவலகத்திலும் தான் தொடருகின்றார்கள்.

வேலையில் ஈடுபட்டு இருந்தாலும், இல்லத்தில் 24 மணி நேரம்  அமர்ந்து கொண்டு இருப்பது பெரிய சவால் தான். 

காலை 6  மணிக்கு அம்மணி வேலைக்கு செல்ல..

ஒன்பது மணி போல் பிள்ளைகளும் எகிற, அடுத்த பத்து மணி நேரம் அடியேன் மட்டும் இல்லத்தில். 

கராஜ் கதவை அம்மணி  திறக்கும் சப்தம் கேட்டு அடித்து பிடித்து கதவை திறந்து ஒரு "ஹவ் எ குட் டே " என்று சொல்லிவிட்டு ..

சமையலறை வந்து அவர்கள் போட்டு வைத்த காப்பியை குடித்து கொண்டு இருக்கும் போது ...

இளையவள் வேலைக்கு தயாராகும் சப்தம் கேட்டு..

"என்ன சாப்பிட்டு போற? மதியம் சாப்பிட என்ன செய்வ?"

என்று கேட்க..

அவளும் பதிலளிக்க ...

சிறிது நேரம் கழித்து அவளையும் "ஹேவ் எ  குட் டே " என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டு, என் அலுவலக பணியை ஆரம்பித்தால்..

தரை முழுக்க என்னமோ பிசு பிசு..

சரி, என்னமோ கீழே ஊத்தி இருக்குன்னு அதை சுத்தம் பண்ணும்போதே ..

அழைப்பு மணி... 

என்னவென்று கேட்டறிந்து அதற்கு பதிலும் சொல்லி அனுப்பினால்..

தொலை  பேசியில் மார்க்கெட்டிங் கால்ஸ்..

அதையும் பேசி முடித்து பணியை தொடருகையில்...

அம்மணி சொல்லி விட்டு போன வேலைகள்..

"இதை போஸ்ட் பண்ணிடுங்க.."

"இதை டெபாசிட் பண்ணிடுங்க..."

"இந்த காய் கறியை வாங்கிடுங்க.."

அதை செய்து முடிக்கையில்..

இளையவள்...

"இதை ரிட்டர்ன் பண்ணிடுங்க.. "

"லன்ச் ஏதாவது சூடா செஞ்சீங்களாக..? என் ஆபிஸ் பக்கம் எடுதுன்னு வர முடியுமா? "

"ஸ்கூலுக்கு போன் பண்ணி அந்த மார்க் சீட் கேட்டீங்களா ?"

இதை எல்லாம் முடித்த பின்..

மூத்தவள் அலை பேசி..

"என் வீட்டில் ஏ சி சர்விஸ் பண்ணனும் போல இருக்கு. "

"இன்டெர் நெட் பில் கட்டுனீங்களா?  என்னமோ நோட் வந்து இருக்கு.."

அவளின் வேலைகளையும் முடித்து, என் பணியை தொடர...

மாலை...

,"பத்து நிமிசத்துல இருப்பேன், பயங்க டயர்ட். கொஞ்சம் டீ போட்டு வையுங்க.. "

சரி.....

மீண்டும் அலை பேசி, இளையவள் .. 

"இப்ப தான் அம்மா வண்டியபாத்தேன், அவங்களும் வந்துனு இருக்காங்க.. அவங்களுக்கும் டீ, ப்ளீஸ்.."

ஓகே..

பணியை சற்று ஒதுக்கி வைத்து விட்டு.. டீ போடுகையில், அலை பேசி, இளையவள்..

"டீ போட்டுடீங்களா? "

"போட்டுனே இருக்கேன்"

"மறந்துடாதீங்க, எனக்கு ஓட்ஸ் மில்க் அம்மாவுக்கு அல்மன்ட் மில்க்."

ஓ.. நல்ல வேலை ஞாபக படுத்தின"

என்று சொல்லி வடி கட்டி வைக்கையில்..

இருவரும் வந்து சேர..

"வாங்க .. வாங்க.."

உள்ளே நுழையும் போதே.. இளையவள்..

"என்ன... காலையில் இருந்து வீட்டில் தானே இருக்கீங்க.. அப்படி என்ன டயர்ட்... ?

கேட்டாளே  ஒரு கேள்வி!

இப்படி நாலு மாதத்திலேயே என் நிலைமை இப்படி ஆயிடிச்சேன்னு நினைக்கையில்.. வாழ்க்கை முழுக்க இல்லத்தில் இருந்து உழைக்கும் அம்மணிகளை நினைத்தேன்.

Not for nothing you all are called " இல்லத்தரசிகள்"

வளமுடன் வாழ்க!


பின் குறிப்பு :

இந்த பதிவில் வந்த பின்னூட்டம் இதைதொடர வைத்தது. தொடர்ந்து என்ன ஆனது என்பதை படிக்க இங்கே சொடுக்கவும்.

5 கருத்துகள்:

  1. வேலை முடிச்சுட்டீங்களா என்று உங்கள் பாஸ் கேட்கலையா :))
    jokes apart, thank you for acknowledging the thousand different things that stay at home person(mostly ladies) does.

    பதிலளிநீக்கு
  2. உண்மை.  அவர்கள் செய்யும் வேலைகளை ஒரு நாள் சமாளிக்க முடியாது நம்மால்.

    பதிலளிநீக்கு
  3. இருப்பதிலேயே வீட்டு நிர்வாகம் செய்வது தான் மிகப்பெரிய வேலை ம்ஹிம்... சாதனை...

    குடும்பத்தலைவர் இப்படி வாய்க்க வீட்டில் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்...!

    பதிலளிநீக்கு
  4. எங்க வூட்டுல மாமிதான் வொக் ப்ரம் ஹோம்... நான் வேலைக்கு போயிட்டுக் வரும் வழியில் வீட்டுக்கு தேவையானதை வாங்கிட்டு வீட்டுக்கு வந்தவுடனே மாமி என்னங்க வேலை சாஸ்தி எனக்கு ஒரு காபி போட்டு தரீங்களான்னு கேட்குறாங்க என்னத்த சொல்ல... ஹும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுர..

      வூட்டுல இருக்க அம்மணிக்கு காப்பி போட்டு கொடுக்குற பாக்கியம் அம்புட்டு பேருக்கும் அமையாது. என்சாய் மாடி.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...