ஞாயிறு, 26 ஜூலை, 2020

வாழை மீன்... ஐ க்நொவ் வாட் ஐ மீன்..

அம்மணி வேலையில் இருக்க மூத்தவள் தன் வழி தனி வழி என்று இருக்க சனிக்கிழமை 11 மணி போல் இளையவள்...

"மதியம் என்ன சாப்பாடு?!!!"

"ஒன்னு சொல்றேன் கோச்சிக்க மாட்டியே..?"

"கோச்சிக்க சான்ஸ் இருக்கு தானே, பின்ன எதுக்கு அதை சொல்லணும், மதியம் என்ன சாப்பாடு!!!?"

"சரி, கோச்சிக்காட்டியும் பராவாயில்லை, சொல்றேன்".

"சொல்லுங்க, கூடவே மதியம் என்ன சமையல்னும் சொல்லுங்க..."

"இந்தியாவில் மட்டும் நாம் இருந்து இருந்தோம்னா?"

"இருந்தோம்னா ?!!!"

"சனி கிழமை காலையும்  அதுவுமா.. அப்பா, நான் பதினோரு மணி வரை தூங்கி இருக்க, உன்னை மாதிரி பதினெட்டு வயசு மக, இட்லி தோசை சட்டினி சாம்பாருன்னு ஏதாவது செஞ்சிட்டு எழுப்பி இருப்பா"

"ஹ்ம்ம்"

"அதை நான் சாப்பிட்டு, அப்படியே டிவி இல்லாட்டி பேப்பர், புக்ஸ் ஏதாவது படிச்ன்னு ரிலாக்ஸ் பண்ணினு இருக்கும் போது"

"போது?"

"நீயே  திரும்பவும் வந்து அப்பாட்ட , என்ன சமைக்கட்டும் கேட்டு சமைப்ப"

"நல்ல ஜோக், சரி கோசிக்கல, விடுங்க.. மதியம் என்ன சமையல்?" 

"மீன்"

"திரும்பவும் மீன்  கொழம்பு பொறியலா.. !!!?"

"ஏன் என் சமையல் பிடிக்கலையா.மீன் பிடிக்காதா?"

"மீனும் பிடிக்கும், உங்க சமையலும் பிடிக்கும், ஆனா அதுக்குன்னு வாரத்துக்கு அஞ்சு நாள் மீன் மீன் மீன்... அதே கொழம்பு, அதே பொரியல்!!!"

"ஆமால்ல, ஆனா மீனை கழுவிட்டேனே.. இப்ப என்ன பண்றது?"

"மீனே பண்ணுங்க, ஆனா வேற ஏதாவது பண்ணுங்க..கொழம்பு பொரியல் வேண்டாம்"

"வேற...?"

"உலகம் முழுக்க சுத்தி வந்து இருக்கீங்க இல்ல, இந்த கொழம்பு பொரியல் தவிர வேறு எதுவும் பாத்தது இல்ல!!!?"

மனதில், அட பாவத்த, சுறா மீனா இருந்தா புட்டு பண்ணி இருக்கலாம், இது பெரிய சங்கக்காரா மீன் வகையறா.. என்ன பண்ரது என்று நினைக்கையில் பல வருடங்களுக்கு முன் தென் அமெரிக்காவில் ஒரு சிறிய தீவில் உண்ட  "ஆவி மீன்  (Steamed  Fish ) நினைவிற்கு வந்தது.

அதற்கு என்ன என்ன வேண்டும் என்று மண்டையில் ஆராய..

"சரி, குழம்பு   பொரியல் இல்ல, வேற ஒன்னு  செய்யுறேன்."

"தேங்க்ஸ்.."

மீன் இரண்டும் நல்ல பெரிதாக இருந்தது.  இரண்டு வெங்காயத்தை பெரிய பெரிய கீறலாக நறுக்கி கொண்டேன். அதே போல் பச்சை மிளகாய்.  இந்த ஐட்டத்துக்கு முட்டை கோஸ் அல்லது வெண்டைக்காய் நன்றா இருக்கும். இரண்டுமே இல்லை, கேரட் சில இருக்க அதையும் நீளமாக நறுக்கி கொண்டேன்.  சில சேலட் தக்காளிகளையும்  கூட முழுமுழுதாக வெட்டாமல் அப்படியே சேர்த்து கொண்டேன்.

இஞ்சி பூண்டை சற்று தட்டி வைத்து, கூடவே மிளகாய், மஞ்சள், தனியா வாசனைக்காக கொஞ்சம்  வெந்தய தூள் தேவைக்கேற்ற உப்பு போட்டு அனைத்தையும் பிரட்டி மசாலா ரெடி. அந்த தீவில் ரோஸ் மெரி என்ற இல்லையே போடுவார்கள். நல்ல வாசனை, இப்போ அதுக்கு எங்க  போறது, என்று ஆங்கிலோ இந்திய ரோஸ் மேரியை கிராமத்து கருவேப்பிலையை வைத்து சமாளித்தேன்.

தோட்டத்திற்கு சென்று இரண்டு வாழை இலையை வெட்ட, மாடியில் இருந்து இளையவள்..

"அதுக்குள்ள ரெடியா? வாழை இலையிலா சாப்பிட போறோம்?எனக்கு பிளேட் வையுங்க, இதோ வரேன்.."

"இன்னும் ரெடி ஆகல, ஒரு மணி நேரம் ஆகும்"

"பின் எதுக்கு வாழை இல்லை?"

"சமைக்க"

"ஐயோ.. அதையும் கீரை மாதிரி சமைக்குறீங்களா, எனக்கு அதை போடம சமையுங்க"

"அதை போட்டு சமைக்கல ,அதுல வைச்சி சுத்தி வைச்சி சமைக்கிறேன்.. இலைய சாப்பிட தேவை இல்லை!!"

வாழை இலையே மேசையில் பரப்பி, நீர்  போட்டு துடைத்து.. கொஞ்சம் பட்டர் எடுத்து இலையின் மேல் தடவி, கலந்து வைத்து வைத்த வகையறாக்களை பரப்பி மீன்களை  நடுவில் வைத்து மீண்டும் அதன் மேல் சில கலவை போட்டு, சில பட்டர் துண்டுகளை  வெட்டி போட்டு இன்னொரு வாழை இலையை மேலே வைத்தேன்.

பின்னர் இருப்பதிலே மிக பெரிய சில்வர் வ்ரப்பர் எடுத்து அதன் மேல் இவற்றை   வைத்து காற்று கூட போக முடியாதவாறு சீல் செய்து, இரண்டு மீன் பாக்கட் தயார்.

வெளியே இருக்கும் க்ரில்லில் சூடேற்றி இரண்டையும் போட்டு மிக குறைந்த அளவிற்கு நெருப்பை வைத்து விட்டு அடுத்த நாற்பது நிமிடம் மூடி வைத்தேன். நடுவுல ஒரு முறை இரண்டையும் திருப்பி போட்டேன்.

நாற்பது நிமிடம் முடிந்தது.  வாசனையும் பிள்ளையும் போட்டி போட்டு கொண்டு வந்தார்கள் 

"நைஸ் வாசனை!!"

"வாசனையை விடு, டேஸ்ட்டை பாரு.."!

"இதுக்கு என்னா வைச்சி சாப்பிடுறது, சோறா!!?"

"அங்கே பிரட் வைப்பாங்க..,"

"பிரெடுக்கு பதிலா சப்பாத்தி...!!? 

"குட் ஐடியா!!"

காஸ்ட்கோவில் வாங்கிய சப்பாத்தியை தயார் செய்து, ஆளுக்கு இரண்டு  வைத்து ஒரு மீனை பிரிக்கையில், ஆவியோடு வாசனை மூக்கை துளைக்க. சும்மா சொல்ல கூடாது போங்க..

நமக்கு வாயில் பிரச்சனை தானே. வந்த மீனை ஒரு படம் எடுத்து எங்கள் குடும்ப வாட்சப் க்ரூபில் போட..

"நல்லா  இருக்கே, எங்க ஷேர் எங்கே?"

என்ற கேள்வி உடன் பிறப்பிடம் இருந்து வர ... மீண்டும் இன்னொரு மீன் செய்ய தயாரானேன்.


மாலை.அம்மணி வீட்டுக்கு வர அவர்களும் ரசித்து ருசிக்க, இளையவளோ..

"பரவால்ல அம்மா, இவர் சின்ன வயசுல வெட்டியா ஊரை சுத்துனாலும் கொஞ்சம் விஷயம் காத்து வைச்சிகினு இருக்காரு"

என்று சொல்ல, அந்த நாள் இனிதே முடிந்தது.

நீங்களும் சமைத்து பாருங்கள். சைவ பிரியர்கள், மீனிற்கு பதிலாக பச்சையாக உன்ன தகுந்த  எந்த காய் வகைகளையும் வைத்து  செய்யலாம். அருமையாக இருக்கும். 


பின்  குறிப்பு: 

"செம்ம  டேஸ்ட் டாட். இதுக்கு நல்ல டெசர்ட் - இனிப்பு வேணுமே.. அந்த தீவுல கேக் ஐஸ் க்ரீம் தருவாங்களா..!!?"

"கேக் ஐஸ் க்ரீம் இல்ல, அதோட பெட்டர், வெயிட் எ நிமி பார் பைவ் நிமிட்ஸ்...!!"

வந்தேன் இனிப்போடு.


11 கருத்துகள்:

  1. இந்த பதிவுக்கு என்ன கமெண்ட் போடுறது......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னா மதுர!

      இதுக்கு என்ன கம்மெண்ட் போடுவேன்னு சொல்லிட்டு நாலு கம்மெண்ட் போட்டு இருக்க?

      வஞ்ச புகழ்ச்சியா?

      நீக்கு
  2. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... கொஞ்சம் யோசிப்போம்.......

    பதிலளிநீக்கு

  3. விசு இப்பத்தான் நீயூஸ் பார்த்தேன் உம்மாலதான் பசிபிக் கடலில் மீன் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியை....பாவம்மய்யா மீன்

    பதிலளிநீக்கு
  4. படங்கள் மிக அழகாக வந்திருக்கின்றன விசு.....சமையலும் அருமையாக இருக்கும் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. எங்கள் வீட்டில் வாரத்துக்கு மூன்று நாட்கள் கோவைக்காயும், பீன்ஸும் இருக்கும்.  எனக்கு இரண்டுமே பிடிக்காது!  அது போல நீங்கள் வாரத்தில் நிறைய முறை மீன் சமைப்பீர்கள் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இல்லத்தில் இருந்து ஐந்தே நிமிடத்தில் பசுபிக் பெருங்கடல் ... அதனால் தான் !

      கோவை பீன்ஸ் இரண்டுமே எனக்கு பிடிக்கும். வாரத்திற்கு மூன்று முறை செய்தால் alla, மூன்று வாரத்துக்கு ஒரு முறை செய்தால்

      நீக்கு
  6. விசு நீங்க நல்லா சமையல் செய்வீங்களே.

    இப்படிக் கிரில் செய்தது நான் சேனைக்கிழங்கில், அல்லது பனீர், காலிஃப்ளவர் வைத்து. மசாலா எல்லாம் பொட்டு. இங்கு ரோஸ் மேரி கிடைக்குது. ஒரிகேனொ எல்லாம் இருக்கும் வீட்டில். ஸோ மகன் இருந்தப்ப செய்தது. இங்கு பங்களூர் வந்த பிறகு செய்யலை. இங்கு வாழை இலை இல்ல அதுதான் அந்த மணமும் கலந்து வாசனை நல்லாருக்கும்.

    சேனைக்கிழங்கை கொஞ்சம் திக் பீஸாக நீள் செவ்வகமாகவோ, நீளமாகவோ வெட்டி கொஞ்சம் மசாலாவில் மேரினேட் செய்து வைத்தால் அதில் மசாலா சுவை இறங்கிடும். அதில் மசாலா இறங்கவும் நாக்கில் அரிக்காமல் இருக்கவும் கொஞ்சம் தயிர் = புளி பேஸ்ட் கொஞ்சமே கொஞ்சம் சேர்த்து மேரினேட் செய்துவைத்துவிட்டு அப்புறம் ஸேம் ப்ராஸஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வாரத்துக்கு அஞ்சு நாள் மீன் மீன் மீன்... அதே கொழம்பு, அதே பொரியல்!!!" So Mean, Visu.

    பதிலளிநீக்கு
  8. விசு ,பாவம் நீங்க .பழைய இந்தியாவை நினைத்து கொண்டுள்ளீர்கள் .பெண்கள் சமைக்க ஆண்கள் உட்கார்ந்து சாப்பிட்ட காலம் இமயமலை ஏறிவிட்டது.பாதி பெண்களுக்கு கிட்சன் என்றால் என்ன என்று கூட தெரியவில்லை.டேய் (வேற யாரையும் இல்லை )புருஷனைத்தான் ,ஏண்டா இன்னைக்கு என்ன சமையல் செய்திருக்க ...இப்படி இருக்கு இங்க நிலைமை

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...