செவ்வாய், 28 ஜூலை, 2020

என் பணம் பணம் என் பணம் என் பணம் உன் பணம்..

பல மாதங்களுக்கு பின்னால் அலுவலக பணி நிமித்தம் வங்கி ஒன்றுக்கு செல்ல நேர்ந்தது.

முன்பெல்லாம் பார்க்கிங்கில் ரெண்டு முறை  சுற்றி இடத்திற்காக அலைவேன். கொரோனாவினால் காலியாக இருந்தது. வங்கியின் எதிரிலே நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, கண்ணாடியின் மறுபக்கத்தில் இருந்து என்னை கண்ட ஒரு வங்கி பணியாளர், என்னை நோக்கி..

"மாஸ்க் மாஸ்க்" என்று முகத்தில் சைகை காட்டினார். 

ஓ... 

சுதாரித்து வண்டியில் இருந்த மாஸ்க்கை அணிகையில்., போன வருடம் அக்டோபர்  மாதம் ஹாலோவீன் நேரத்தில் இதே வங்கிக்கு வந்த போது  அங்கே ஒரு தற்காலிக நோட்டிஸ்.

"யாரும் முகமூடி அணிந்து உள்ளே வர வேண்டாம் "

காலம் தான் எப்படி மாறி விட்டது என்று நினைத்து கொண்டே டெல்லரிடம் செல்ல....

"எப்படி இருக்கீங்க..?"

என்று அந்த அம்மணி விசாரிக்க 

"இருக்கேன்?"

"குழந்தைகள் எப்படி இருக்காங்க?!"

"குழந்தைகளா?, மூத்தவ 20  இளையவ 18 "

"ரெண்டு பேரும் காலேஜா? "

"எஸ் "

"எந்த காலேஜ்?"

சொன்னேன்.. 

"மகிழ்ச்சி " என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் AWESOME என்று சொன்னார்கள்...

"என்ன படிக்குறாளுங்க?"

"மூத்தவ அக்கௌன்ட்ஸ் மேஜர், இந்த வருஷம் பைனல் இயர், முடிஞ்சதும் CPA படிக்கறேன்னு சொல்றா?"

"ஓ, உன்னை மாதிரியே!  அதை ஏன் செலக்ட் பண்ணா?"

"நீயே பாஸ் பண்ணிட்ட, கண்டிப்பா ஈஸியா தான் இருக்கும்னு சொல்றா"

"சின்னவ!!?" 

"அவங்க அம்மா மாதிரி, பயாலஜி படிக்கபோறா!"

"சந்தோசம்"

பணத்தை பெற்று வாங்கி கொள்கையில்.. வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காமல்..

"எடுக்குற அம்புட்டும் அவளுங்களுக்கு தான் செலவு.. இன்னும் 3 வருஷம் தான், சின்னவளுக்கும் இருபத்தி ஒன்னு ஆகும். அதுக்கு அப்புறம்  நான் சம்பாதிக்கிற அம்புட்டும் எனக்கே "

என்று கொக்கரிக்க.. 

அந்த அம்மணியும் சரி, அருகில் இருந்த அனைவரும் சரி, குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தனர்.

"ஏன் சிரிக்கிறீங்க!!?"

"இல்ல பிள்ளைகளுக்கு 21 ஆன பின்னால எல்லா பணமும் உனக்கேன்னு சொன்னீயே.. அதை கேட்டு தான்..."

"21 வரை தானே, அதுக்கு அப்புறம் தான் படிச்சி இருப்பாளுங்களே.. வேலை ஏதாவது எடுத்து சமாளிப்பாங்க!"

தொடர்ந்து சிரித்தார்கள்.

"வேலை எடுப்பாளுங்க.. அது அவங்க கை செலவுக்கு !"

வேதம் புதிது "பளார் " என்ற சப்தம் கேட்டது. 

"என்ன சொல்றீங்க!!!?"

"நாங்களும் அப்படி தான் ஒரு கனவு வாழ்க்கையில் இருந்தோம், 21 ஆன உடனே எல்லா சம்பாத்தியமும்  எங்களுக்குன்னே இருந்தோம். "

"21 ஆச்சா!!!?"

"ஆச்சி, செலவும் ஜாஸ்தி ஆச்சி"

"வாட்!!!?"

" இவளுங்க, டிகிரி முடிச்சி , அதுக்கு மேல ப்ரொபசனல் கோர்ஸ் - சர்டிபிகேட் ஏதாவது வாங்கி நல்ல வேலைக்கு வர வரைக்கும்,..."

"வர வரைக்கும்..!!"

"அஸ் க்ரீமில் இருந்து ஆயுள் காப்பீடு வரை நீ தான் ! "

என்னமோ தெரியல, வங்கியில் இருந்து வந்து மூணு மணி நேரமாச்சு.. மண்டையில் ஒரு ராகம் தான்.. ரிப்பீட் மோடில் இருக்கு..

என் பணம் பணம் உன்  பணம் பணம் என் பணம் உன் பணம்! 


பின் குறிப்பு :

இதை படிக்கும் உங்களில் யாருக்காவது 21 வயதை தாண்டிய பிள்ளைகள்  இருந்தால்.. இங்கே  கேள்வி பட்ட அனைத்துமே பொய் என்று சொல்லுங்களேன், ப்ளீஸ்!  

5 கருத்துகள்:

  1. அதானே... அவர்களே உலகம் என்றாகி விட்டால், நமக்கு எதற்கு...?

    பதிலளிநீக்கு
  2. பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் பெத்தவங்க பணம்(பென்ஷன் உட்பட) எல்லாம் பிள்ளைகளுக்கு போக மிச்சம்தான் நமக்கு என்றாகிப்போயிருக்கின்றது .?

    பதிலளிநீக்கு
  3. எப்படிச் சொல்ல முடியும் விசு? என் பிள்ளைகள் ஒவ்வொன்றாக கல்லூரியில் அடி எடுத்து வைத்து....அப்புறம் பெரியவன் மேற்படிப்பு படிக்க வேண்டுமே. அதற்குச் செலவு. முதல் இரண்டு பேரும் மருத்துவம் மூன்றாமவள் மருத்துவம் படிக்க முயற்சி இப்போது. அரசுக் கல்லூரி என்றாலும் செலவுதான் என்றாலும் கூடப் பரவாயில்லை ஆனால் தனியார்க்கல்லூரி என்றால் பெரும்பாடு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. ஹா ஹா ஹா ஹா விசு!

    உங்களுக்கு ராசாத்திகள். உங்கள் உலகமே அவர்கள்தானே. இது நீங்க நகைச்சுவையாகத்தான் சொல்லிருக்கீங்கன்னு தெரியும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நம் குழந்தைகளின் செலவு நம் கையில்தான்!  ஆனால் உங்கள் ஊர் நடைமுறைகள் எனக்குப் புரிவதில்லை!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...