வெள்ளி, 24 ஜூலை, 2020

ட்ரைவ் இன் பட்டமளிப்பு விழா !

இளையவளுக்கு இன்று பள்ளி இறுதியாண்டில் நடக்கும் பட்டமளிப்பு விழா! பொதுவாகவே இந்த விழா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் 900 மாணவர்களும் அவர்களின் சொந்தம் பந்தம் என்று மொத்தம் 4000 ஆட்கள் வர திரு விழா போல் இருக்கும். 

ஆனால் இந்த வருடம் நிலைமையே வேறு. கொரோனாவின் கொடுமையால் சமூக விலகல் என்று சொல்லி, இந்த விழாவை தள்ளி தள்ளி வைத்து கடைசியில் இனிமேலும் தள்ளி வைக்க முடியாது என்று முடிவு செய்து இன்று வைத்தார்கள்.

புதிதாக, இதுவரை செய்யாத முயற்சி.

மாலை நான்கு மணி துவங்கி இரவு எட்டு வரை மாணவர்களின் குடும்ப பெயர்  வரிசை படி அவர் தம் வாகனத்தில் வர, பள்ளி வளாகத்தில் ஒரு மேடை அமைத்து அங்கே குடும்பம் முழுக்க வாகனத்தில் இருக்க, பிள்ளைகளின் பெயரை மட்டும் அவர்கள் சப்தம் போட்டு அழைக்க, மாணவர் மட்டும் வாகனத்தை விட்டு இறங்கி, பட்டத்தை பெற்று கொண்டு, ஒரு இருபது அடி நடக்க, பெற்றோர்கள் மற்றும் டீச்சர்கள் ஆர்ப்பரிக்க, மற்ற வாகனங்கள் ஹார்ன் சப்தம் போட்டு ஆர்ப்பரிக்க பட்டமளிப்பு விழா.
 
எங்கள் அலுவலகத்தில் இருந்து நான்கு பணியாளர்களின் பிள்ளைகள் இதில் இருப்பதால், ஆபிசில் எப்படி சிறப்பாக செய்யலாம் என்று நினைத்து, காலையிலே அவர் தம் காரை சிறிது டெக்கரேட் செய்தோம். 











வாழ்த்துக்கள், பள்ளியில் பங்கேற்ற விளையாட்டு மற்றும் கொயர் (பாடுவது) மற்றும் போக இருக்கும் கல்லூரி என்று எழுதி அவர் தம் இல்லத்திற்கு செல்ல எங்களுக்கு அழிக்க பட்ட நேரம் 4 . 20 

சரியாக நான்கு மணிக்கு பள்ளிவளாகத்தில் வண்டி நுழைய, சில டீச்சர்களின் வாழ்த்துகளோடு மெதுவாக ஊர்ந்து செல்ல, 

நிகழ்ச்சியை நேரடியாக கேட்க ரேடியோ FM 90 . 5 ல் வைத்து கொள்ளவும் என்ற தகவல் எதிரில் இருந்தமின்சார பலகையில் மின்ன ...   

ஒரு மாஸ்க்  போட்ட  ஆசிரியர் அருகில் வந்து  என்ன என்ன எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல .. அடுத்த சில நிமிடங்களில் வண்டி மெதுவாக ஊர்ந்து செல்ல.. 

"இளையவள் பெயர் அழைக்கப்பட .. எங்களுக்கு புல்லரிப்பு. 12  வருடம்  
பள்ளி காலம் முடிந்து வெற்றி பெற்ற தருணம்.

பட்டத்தை பெற்று அவள் போட்ட வெற்றி நடை என்றுமே மனதில் நிற்கும். 

8 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் உங்கள் ராசாத்திக்கு! .என் பெண்ணின் பள்ளியில் வாக்கின் பட்டமளிப்பு விழா நடை பெற்றது. இடைவெளி விட்டு குடும்பம் குடும்பமாக சென்றோம்.. ஸ்டேஜ்க்கு பெண் மட்டும் சென்றாள் அதன் பின் ஸ்டேஜுக்கு அருகில் இன்னொரு இடத்தில் குடும்பத்தினருடன் குடும்ப போட்டோ எடுக்கப்பட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துமதுர தங்களின் ராசாத்திக்கு வாழ்த்துக்கள்.
      மகளின் எதிர்க்கலாம் வழமையாக விளங்க பிரார்த்தனையும் வாழ்த்துக்களும்.

      நீக்கு
  2. https://www.mtsd.k12.nj.us/Page/17143 .என் பெண்ணின் பள்ளி பட்டமளிப்பு விழா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுர

      தங்கள் ராசாத்தியின் விழாவை பார்த்து கொண்டு இருகிறேஸ். என்ன மதுர.. மூணுல ரெண்டு பிள்ளைங்க நம்ம ஊர் பிள்ளைங்க..

      வாழ்த்துக்கள்.

      நீக்கு
    2. ராசாத்தி பட்டம் பெறுவதை கண்டேன் மதுர. மகிழ்ச்சி

      நீக்கு
  3. மனமார்ந்த வாழ்த்துகள்.   வாழ்வில் ஒரு இனிய தருணம்.  பின்னாட்களில் இந்தக் காணொளிகளை பார்க்கும்போது இதன் வித்தியாசமே நினைவிலிருந்து விலகாமல் இருக்கும்.  மறுபடியும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      பிரமாண்டமான பட்டமளிப்பு இல்லையே என்று முதலில் மிகவும் வருத்தமாக தான் இருந்து. பின்னர், இதன் வித்தியாசம் சற்று ஆறுதலை தந்தது.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...