போன வாரமே அம்மணி ..
"அடுத்த வாரம் உங்களுக்கு டென்டிஸ்ட் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு, மறந்துடாதீங்கன்னு"
சொல்ல..
"கொரோனா நேரத்தில் எல்லாம் மூடி இருப்பங்களே"
"மூடி தான் இருந்தாங்க.. இந்த வாரம் தான் திறந்தாங்க, மறக்காம போங்க"
என்று அன்போடு அதட்ட..
என்னாடா இது.. ஒரு ஜுரம் மூச்சு திணறல் வறட்டு இருமல் வந்தா கூட டாக்டரிடம் நாம போக மாட்டோம் . டென்டிஸ்ட்க்கிட்ட போக வேண்டி இருக்கே, என்று நினைத்து கொண்டு இருக்கையில்..
இளையவள்..
"அம்மா.. நான் டென்டிஸ்ட்க்கிட்ட போய் ஆறு மாசத்துக்கு மேலே ஆச்சி. எனக்கும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குங்க"
என்று அன்போடு அதட்ட, நானோ..
"என்னடா இவ, நம்ம இதை எப்படி அவாய்ட் பண்ணலாம்னு பாக்குறோம், இவை என்னடானா வாலண்டரியா வந்து வண்டியில் ஏறுறாளேன்னு நினைத்து..
"நீ வேணும்னா என் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக்கோ"
என்றேன். என் தாராள மனதை தவறாக புரிந்து கொண்ட தாயும் சேயும்..
"உங்களுக்கு டென்டிஸ்ட்னா ஏன் பாவக்காய் போல கசக்குது?"
"பாவக்காய் கசக்கும், ஆனா எனக்கு பிடிக்கும், டென்டிஸ்ட்டை பிடிக்காது"
"அது தான் ஏன்?"
"பிறந்ததில் இருந்து முதல் இருபது வருடம், ஆலும் வேலும் பல்லுக்குறுதின்னு வாழ்ந்தவன் நான். அந்த காலத்தில் எல்லாம் இந்த டென்டிஸ்ட் கான்சப்ட்டே இல்லை"
"அதனால தான் உங்க பல் எல்லாம் வீக் ஆகி இருக்கு"
"என் பல்..? இப்ப .. .இப்ப ஒரு கிலோ நெஞ்செலும்பு வாங்கி சுக்கா வறுவல் செஞ்சி வை. ஒவ்வொரு எலும்பையும் மெஷினில் போட்ட மிளகாய் போல அரைச்சிவைக்கிறேன்"
"பேச்சுக்கு குறைச்சல் இல்ல "
"நான் கொஞ்சம் பிசி.. இவ போகட்டுமே. பாவம்"
"ஆமா.. ஆடு நனையுதுன்னு "
"ப்ளீஸ்"
"உங்களுக்கு ஏங்க டென்டிஸ்ட்டை கண்டா பிடிக்க மாட்டுது?"
"தெரியல.. ஒவ்வொரு முறை அங்கே போய் அவங்க சாஷ்டாங்கமா படுக்க வைச்சி அடுத்த அரை மணிநேரம் "முந்தானை முடிச்சில் தீபா டீச்சர் ஸ்டுடென்ட்ஸ் போல" வாயை "ஆ"ன்னு திறந்து வைச்சிக்கின்னு..."
"கிளம்புங்க.. நேரமாச்சு"
தயாராகினேன். எப்படி தெரியுமா?
சென்ற முறை இந்தியா சென்ற போது:
உறவினர் ஒருவர் இல்லத்திற்கு சென்று அவர்களிடம் பேசி கொண்டு இருக்கையில், கணவன் மனைவியிடம்
"இன்னைக்கு வியாழ கிழமை தானே.. வேலை ஆளு அம்மணி எத்தனை மணிக்கு வருவாங்கன்னு கேக்க.. "
அந்த அம்மணியோ..
"அட பாவத்த , இப்ப வந்துடுவா.."
என்று சொல்லி, என்னை நோக்கி..
"நீங்க இவர்ட்ட பேசினு இருங்க, இதோ வந்துடுறேன்"
என்று சொல்லி அடித்து பிடித்து சமையலறையில் இருந்த சில பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு வீட்டை அடாவடியாக கூட்டி பெருக்க ஆரம்பிக்க, நானோ அந்த கணவரிடம்...
"வேலைக்கு தான் உதவிக்கு வர போறாங்களே.. அவங்க செய்யமாட்டாங்களா? இவங்க ஏன் இப்ப அவசரமா அடாவடியாக கழுவி சுத்தம் பண்றங்க?!! "
என்று கேட்க, அவர் ஒரு வறட்டு சிரிப்போடு..
"வேலைகாரமா வீடை இவ்வளவு அழுக்கா பாத்துட கூடாது தானே, அதுக்கு தான்!!"
"அழுக்கை சுத்தம் பண்ண தானே அவங்க வராங்க. பணமும் தரீங்க தானே"
"ஐயோ புரியாம பேசாத விசு, அவங்க வரும் போது வீடு இப்படி இருந்தா. அந்த அம்மணி பில்டிங் முழுக்க நம்ம கதையை கந்தலாக்கிடும். அதனால அவங்க வரத்துக்கு முன்னாலே நாங்களே சுத்தம் பண்ணிடுவோம்."
"நீங்களே சுத்தம் பண்ண பின்னாலே அவங்க எதுக்கு வரணும்?!!!"
"ஐயோ, திரும்பவும் புரியாம பேசாத. வீட்டை சுத்தம் பண்றதுக்கு கூட நாங்க ஆள் வைக்கலைன்னு தெரிஞ்சா பில்டிங் முழுக்க நம்ம கதை கந்தலாகிடும்"
என்று அவர் சொல்ல..
நானோ, இப்ப எழுத வந்தது அமெரிக்காவில் இருக்க பல் டாக்டர் பத்தி, அது எப்படி இந்தியாவில் இருக்க வேலைக்கார அம்மணிக்கு போச்சினு யோசிக்க..
எஸ்.. !!!
டென்ட்டிஸ்ட்டிடம் கிளம்பும் முன், பிரஷில் பேஸ்ட் போட்டு அடுத்த பத்து நிமிடம் பல கரைந்து போகுமளவுக்கு தேய்த்து பின்னர் பிளாஸ் கயிறை எடுத்து வாயை சல்லடை போல் சுத்தம் செய்து..
"என்ன கிளம்ப இவ்வளவு நேரம்?"
"நல்ல ப்ரெஷ் பண்ணி வாயை சுத்தம் பண்ணேன். "
"இதை தினமும் பண்ணா தான் அங்கே போக தேவை இல்லையேன்னு "
அம்மணி சொல்ல, டென்டிஸ்ட் இடத்தை அடைந்தேன்.
"வாங்க.. போன மூணு அப்பாயிண்ட்மெண்ட் கான்செல் பண்ணிட்டீங்க.."
என்று அங்கே இருந்த வெள்ளை அம்மணி சொல்ல ..
"சாரி, ட்ரேவலில் இருந்தேன்"
"இது ரொம்ப அவசியம், விஷ்! ஆறு மாசத்துக்கு ஒரு முறை ப்ளீஸ் இங்கே வந்து பல்லை டீப்கிளீன் பண்ணுங்க "
என்று பேசி கொண்டு தலை சாய்த்து சாஷ்டாங்கமாக படுக்க வைக்க..
நானோ "ஆ" என்று வாயை திறந்து கொண்டு தீபாவின் மாணவனானேன்.
மனதிலோ ..
"பல் எல்லாம் மாணிக்க பல் ஆகுமா? "
என்ற பாடல் ஒலித்தது.!
ஹா ஹா ஹா ஹா விசு பல் எல்லாம் மாணிக்கப் பல்லேதான் அதான் பல்லைப் பாதுக்காக்கணும்னு வீட்டுல உங்க அம்மணி சொன்னா அது பொன்னான சொல்!!!!!!!
பதிலளிநீக்குகீதா
விசு பாருங்க அவங்க என்னா மனசுன்னு...உங்களுக்கு வயசானாலும் கூட விக்ரோ வஜ்ர தந்திக்கு வர தாத்தா பல்லு போல இருக்கணும்னு நினைக்கறத போயி .....
பதிலளிநீக்குகீதா
"பேச்சுக்கு குறைச்சல் இல்ல " இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே.
பதிலளிநீக்குசாஷ்டாங்கமா படுக்க வைத்தார்களா ? எல்லோருக்கும் முகத்திலிருக்கும் வாயில் தானே பற்கள் இருக்கும்? சாஷ்டாங்கமும் , குப்புற படுப்பதும் ஒன்றுதானே? என்னமோ தீபாவை நினைத்துக்கொண்டு என்னென்னமோ எழுதிட்டிங்க போல இருக்கு. இந்த பல் தேய்க்கும் பழக்கம் எப்போதிலிருந்து? கல்லூரி நாட்களில் விடுதியில் நண்பர்களோடு தங்கி இருந்தபோது தூங்கி எழுந்து அப்படியே நேராக உட்லண்ட்ஸ் போய் சாயா குடிக்கும்போதும் டிபன் சாப்பிடும்போதும் பல்லைப்பற்றி கவலையே பட்டதில்லையே இப்போது மட்டும் ஏன்? ஓ... ஒருவேளை அதன் விளைவுதானோ?
கோ .. கல்லூரி நாட்களில் வுட்லன்ட் சாயாவும் சரி முனியாண்டியின் பாயாவும் சரி, பல் விளக்கி உட்கொண்டால் ருசி குறையும் என்பது உலகறிந்த உண்மையாயிற்றே.
பதிலளிநீக்குஎன்னய்யா... என் தமிழுக்கு வந்த சோதனை?
சாஷ்டாங்கம் என்பது வானத்தை பார்த்து படுப்பது என்று நினைத்துவிட்டேன்
கோ கரெக்டா பிடிச்சீங்க! நேற்று சொல்ல நினைத்து விட்டுப் போச்சே லேட்டாகிப் போனதால்...
நீக்குகீதா
சாஷ்டாங்கம் பற்றி..
நீக்குகீதா
பற்களுக்கிடையே தங்கியிருக்கும் உணவுப்பொருள்களில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன.. அவை வாய் துர் நாற்றத்தையும், பற் சிதைவையும் உண்டாக்கும்... ஆகவே....
பதிலளிநீக்குOf course. Thays why I have already booked my next two appointments. Thanks.
நீக்குசிரமம் தான்... பக்கத்தில் வரும் அனைவருக்கும் நல்லதாயிற்றே...!
பதிலளிநீக்குபற்கள் நலமுடன் இருந்தால்தான் சொற்கள் தெளிவாகவும் வரும்.
பதிலளிநீக்குஇல்லை என்றால் நமக்குத்தானே அதனால் சில விளைவுகள் ஏற்படும்.
வழக்கம் போல் உங்கள் பாணியில்.
துளசிதரன்