வெள்ளி, 31 ஜூலை, 2020

அரபு மல்லி ஆட ...அபிநயங்கள் கூட..

வீட்டின் எதிரில் உள்ள ரோசா செடியில் பூக்கள் பூத்து பூத்து  குலுங்கினாலும்   ஏதோ பூச்சி தாக்கியதால் இலைகள் சற்று பாதிக்க பட்டு இருந்ததால் அதற்கு  மருந்து வாங்க கடைக்கு சென்றேன்.

இந்த வித விதமான ரோஜாக்கள் வெவ்வேறு  நிறத்தில் போது குலுங்குவதை  பார்க்கையில் தான் மனதில் நம்மை அறியாமலே ஒரு மகிழ்ச்சி. 


வாரத்திற்கு இருமுறை இந்த பூக்களில் சிலவற்றை பறித்து  அலங்கரித்து இல்லத்தின் நடுவில் வைத்து அழகு பார்ப்பதே அழகு தான்.

கையிலே பாதிக்கப்பட்ட சில இலைகளை  எடுத்துக்கொண்டு அதை அவர்களிடம் காட்ட, அவர்களும் ஒரு மருந்தை தர அதை வாங்கி கொண்டு  வெளியேற முற்படுகையில், அது கண்ணில் பட்டது.

மல்லி..

என்னதான் ரோஜா பூக்களின்  ராஜாவாய் இருந்தாலும் மல்லி பூக்களின் ராணியாயிற்றே. அருகில் சென்று என்ன வகை மல்லி என்று சோதிக்கையில்  ...

அந்த காலத்தில் இல்லத்தில் இருந்த மல்லி. அதே பூ, அதே வாசம். அதையே கூர்ந்து பார்த்து கொண்டு இருக்கையில் அங்கே பணிபுரியும் அம்மணி..

"அது என்னனு தெரியும் தானே..!!?"

"எஸ், ஜாஸ்மீன்..."

"நாட் எனி ஜாஸ்மீன், அரபியன் ஜாஸ்மீன்.."

மனதில், இது என்ன கதையா இருக்கே.. அரேபியா வெயிலுக்கு இது எப்படி அங்கே வளரும். இது கல்  தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய தமிழகத்தின் மல்லி அன்றோ என்று வாங்கி வந்தேன்.

வீட்டின் எதிரில் டசன் கணக்கில் ரோஜா, மற்றும் கொடி  மல்லி வகைகள். 


அவை அனைத்தும் இருந்தாலும் இவள் "ராணி" அல்லவா! அதற்கென்று ஒரு சிறப்பு இடம் வேண்டும் என்று வாசலிலே வைத்தேன், தினந்தோறும் வாசம் காண!



10 கருத்துகள்:

  1. மல்லிகை என் மன்னன் மயங்கும்...   மல்லிகையே மல்லிகையே, மல்லிகை முல்லை, மல்லிகை முல்லை பூப்பந்தல், மல்லிகையே மல்லிகையே, மல்லி மல்லி செண்டு மல்லி...     போன்ற பாடல்களை தினசரி போட்டு அதையும் கேட்க வைக்கவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம். ஆமா பாட்டு போட்டா செடி நல்லா வளரும்னு எங்கேயோ வாசித்த நினைவு!!!!!

      கீதா

      நீக்கு
  2. அன்பு விஷு ,
    நான் யாரை பார்த்தும் , எதற்கும் பொறாமை பட்டவள் அல்ல .ஆனால் உங்கள் தோட்டம் என்னை பொறாமை பட வைக்கிறது .திருஷ்டி சுற்றி போடுங்கள்

    பதிலளிநீக்கு
  3. ராஜா ராணியோடு நலம் வாழ வாழ்த்துக்கள். பஹரைனிலும் மல்லி உண்டு நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மல்லி மட்டுமா, அகத்திக்கீரை, அகத்திப் பூ (அதையும் விற்பாங்க), அங்கேயே விளைந்த முருங்கை மற்றும் கீரை, ஏன்... மாங்காய் கூட உண்டு. (அங்கதான் 23 வருஷம் இருந்தேன்)

      நீக்கு
  4. அழகான மல்லிகை மற்றும் பூ செடிகள். உங்கள் தோட்டம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  5. அரேபியன் குதிரை என்று கேட்டிருக்கிறேன். அரேபியன் மல்லி என்றும் இருக்கிறதா!

    துளசிதரன்

    ராணி அழகாகத்தான் இருக்கிறாள் அரேபியன் ராணி!! தோட்டம் ஈர்க்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மல்லிகையும் சேர்ந்து கொண்டதா! அழகும் வாசனையும் அருமையாக இருக்கும் வாவ்! அரேபியன் மல்லிகையாஆ!! :)
    வீட்டுக்கு முன் நம்மூரு போல் காம்பவுண்டுச் சுவர் கட்டலாமா கலிபோர்னியாவில்? இங்கு சாலையிருந்து 15 அடிக்கு ஒன்றும் கூடாது. backyard fence கூட அதனைத் தாண்டிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னாது ?

      காம்பௌண்ட் சுவர் கட்ட கூடாதா? இந்திய பாணியில் "இப்ப கட்டிக்கலாம் , அப்புறம் பிரச்சனை வந்தா பாத்துக்கலாம்னு கட்டிட்டேன்.."

      கிட்டிங்..

      இங்கே சிட்டியிடம் அனுமதி பெற்று கட்டி கொள்ளலாம். இரண்டு பக்கத்து வீட்டு மற்றும் எதிர் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியும் தேவை.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...