புதன், 5 ஆகஸ்ட், 2020

வீணா போனா சைனா மைனா

இடம் :பெங்களுர்
காலம் : 1989  - 1991 போல்
வயது : 22 - 24 போல்.

ஒவ்வொரு ஞாயிறும் காலை கோயில் முடிந்து அங்கே இருந்து  நேராக மதிய உணவை ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலில் முடித்து விட்டு அதன் பின் எம் ஜி ரோட் - பிரிகேட் ரோட் அருகே உள்ள எதாவது ஒரு தியேட்டரில் ஒரு ஆங்கில படம்.

இப்படி போய்  கொண்டு இருந்த நாட்கள்.

இவ்வாறான நாட்களில் என்றாவது ஒரு நாள் ஜாக்கி சான் நடித்த சைனீஸ் படம் வெளிவரும் போது அன்று மட்டும்   சங்கரிலா என்ற சைனீஸ் உணவகத்தில்  உணவு.

ஏன் அப்படி?

சைனீஸ் படத்தை சைனீஸ் உணவு சாப்பிட்டு விட்டு பார்த்தால் இன்னும்  கூடுதலாக ரசிக்கலாம் எ..

Just Kidding..

என்றாவது ஒரு நாள் தான் சைனீஸ் உணவு. 5 பேர் போனாலே 250 ருபாய் போல் பில் வரும். அதனால் தான்.

இந்த சைனீஸ் ஹோட்டலில்  சமையலறையில்  பணிபுரிபவர்கள், காரைக்குடியை சேர்ந்த தமிழழகன், மற்றும் கர்நாடகா ஹுப்ளியை சேர்ந்த நஞ்சுட்டாங்கப்பாவாக இருந்தாலும், கேஷியர் ( அந்த அம்மணியை நாங்கள் அன்பாக சைனா மைனா என்று தான் அழைப்போம்) வைட்டர்  மற்றும் சர்வர்கள் அஸ்ஸாம் மற்றும் நக்லாந்தை சார்ந்தவர்கள்.  

அவர்கள் முக அமைப்பு சைனீஸ் மக்களின் முக அமைப்பு போல் அமைந்துள்ளதால்!

"எங்கள் ஹோட்டலில் நூறு சதவீதம் சுத்தமான நெய்யினால் செய்த சைனீஷ்கள் தான் பணிபுரிகின்றார்கள்"

என்று ஊரை ஏமாற்றி கொண்டு இருந்த காலம் அது.

மெனுவில் பிரைட் ரைஸ், பிரைட் நூடுல்ஸ், ஸ்வீட் அண்ட் சர் சிக்கன், எக் டிராப் சூப் என்று சில  பழக்க பட்ட ஐட்டங்கள் இருக்கும். பொதுவாகவே இங்கே செல்பவர்கள் இதில் ஏதாவது ஆர்டர் பண்ணுவார்கள்.

நமக்கு தான் சமையல்காரன் பூர்வீகம் தெரியுமே. 

வைட்டர்," என்ன சாப்பிடறீங்க!?"

""என்ன இருக்கு!!? "

"மெனுவில் இருக்க எல்லாம் இருக்கு!"

"மெனு சாப்பிட்டு சாப்பிட்டு போர், வேற ஏதாவது ஆரடர் பண்ணலாமா!!?"

"கண்டிப்பா"

ஒருவரையொருவர் பார்த்து விட்டு..ஒருவன்..

"யூங் பாங் டன் சிக்கன் இருக்கா?"

"ஒரு நிமிஷம்..கிச்சனில் கேட்டுட்டு வரேன்"

ஒரு நிமிடத்தில் வந்தார்.

"இருக்கு, பத்து நிமிஷம் எக்ஸ்டரா ஆகும்.."
 
" அது ஒன்னு சொல்லுங்க!!"

"வேற!!?"

அடுத்தவர் சிறிது யோசித்து..

"சுவான் குவான் பீப் சூப்!!!? "

"இருக்கு, காரம் எப்படி.? மைல்ட்!! ஆர் ஸ்பைசி!!?"

"மைல்ட்!"

அடுத்தவர்...

"வீங்கடௌ உன் போர்க் சாப்ஸ்!!?"

"இருக்கு.. " 

"ஒரு பிளேட்டில் எத்தனை பீஸ் வரும்?"

"ஒரு நிமிஷம், இருங்க, கிச்சனில் கேட்டுனு வரேன்.."

வந்தார்..

"  ஹாப் பிளேட்டில் 6 பீஸ் "

"ஒரு பிளேட், ப்ளீஸ்"

அடுத்த இருவர், 

"நாங்க மெனுவில் இருந்தே ஆர்டர் பண்றோம்.. பிரைட் ரைஸ், சூப் போதும்"

அனைத்தும் வந்தது..

"எல்லாம் நல்லா இருக்கு, ஆனா இந்த ""சுவான் குவான் பீப் சூப் " ரொம்ப  கெட்டியா இருக்கே. சைனா போயிருந்த போ  தண்ணியா இருந்தது"

"ஒரு நிமிஷம் இருங்க.. "

வந்தார்.

"நீங்க பீஜிங்கில் இந்த சுவான் குவான் பீப் சூப் குடிச்சீங்களா?"

"கரெக்ட், எப்படி கண்டுபிடிச்சீங்க!!!?"

"கிச்சனில் சொன்னார், பீஜிங்கில் மட்டும் இதை தண்ணியா செய்வார்களாம். மத்தபடி வடக்கு சைனாவில் இப்படி கிரேவி போல தான் வருமாம்."

சாப்பிட்டு விட்டு, பில்லைகட்டி விட்டு வெளிவே  வந்து விழுந்து விழுந்து சிரிப்போம்.

ஏன் தெரியுமா? 

அங்கே ஆர்டர் பண்ண ஒரு ஐட்டமும் உண்மையான ஐட்டம் இல்லை. வாய்க்குள்ள  நுழைஞ்ச ஏதாவது நாலு வார்த்தைகளை சொல்லி   கடைசியில் சிக்கன், பீப் , போர்க்குன்னு  சொன்னா ...

"இருக்கேன்னு!"

சொல்லி செட்டிநாடு சிக்கனில் சோம்பை கம்மியா  போட்டு இல்லாட்டி பிசிபிலாபாத்தில் போர்க்கை போட்டுட்டு கூடவே கொஞ்சம் சோயா சாஸ்ஊத்தி தருவாங்க..

சரி நல்ல நாளும் அதுவுமா.. பொண்ணு  கிடைச்சாலும் கிடைக்காத புதனும் அதுவுமா இந்த "சைனீஸ் " பதிவு ஏன்? 

நல்ல கேள்வி.

கொரோனாவினால் இல்லத்திலேயே வேலை செய்தாலும் சில முக்கிய வேலைகளுக்காக அலுவலகம் வருகிறேன். இன்று செம்ம பசி. சரி, என்ன சாப்பிடலாம் என்று நினைக்கையில் ...

"சைனீஸ்" நினைவிற்கு வந்தது.

அமெரிக்காவில் சைனீஸ் எனக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று. நிறைய சைனீஸ் உணவகங்கள் இருந்தாலும் அதிகம் பிடித்தது "பாண்டா எக்ஸ்பிரஸ்"   அதற்கு  ருசி மட்டும் காரணம் அல்ல. இன்னும் பல காரணங்கள் உண்டு. 

இந்திய  மற்றும் அரேபியா கிரேக்க ஸ்பானிஷ் உணவகங்கள் போல எந்த டிஷ் எவ்வளவு ருசியாய் இருக்கும் என்று தெரியாமல் காசை குப்பையாக வேண்டியதில்லை. எதிரில் இருக்கும் உணவில் சாம்பிள் வாங்கி அது பிடித்து இருந்தால் ஆர்டர் பண்ணலாம்.  ஒரு உணவின் ருசி என்றுமே மாறாது. அதே மணம்  குணம் ருசி.  அதனால் அஞ்ச வேண்டாம்.

கடைசியாக, இந்திய உணவகத்தை போல் சாப்பிட்டு விட்டு இதுக்கு போய் இம்புட்டு பணமா என்று அழ வேண்டாம். 

இன்றைக்கு நான் வாங்கிய ...

பிரைட் நூடுல்ஸ், சிக்கன், மற்றும் பீப் மூன்றுக்கும் சேர்த்தே பத்து டாலர் கூட வரவில்லை. இதே இந்தியன் உணவகத்திற்கு சென்றால் குறைந்த பட்சம் 25 டாலர். 

அது மட்டுமா! இன்னொரு விஷயமும் உண்டு..

சைனீஸ் உணவகத்தில் உண்டபின் "Fortune Cookie" என்ற நொறுக்கு தீனி  ஒன்று தருவார்கள். அதில் நமக்கான ராசி ஒன்று எழுதி இருக்கும்.

பொதுவாகவே எங்கள் அலுவலகத்திலும் சரி நட்புகளிலும் சரி, இந்த  "ராசியை" பத்திரமாக பாக்கெட்டில் போட்டு, மற்றவர்களிடம் காட்டி படிக்கையில்  அனைவரும் குலுங்கி குலுங்கி சிரிப்பார்கள். 

"என்ன விசு?  ஒரு ராசி பலனை பார்த்தால் மகிழலாம் அல்லது சோகப்படலாம்.. குலுங்கி குலுங்கி ஏன் சிரிப்பீர்கள்!!?"

என்று  உங்களில் சிலர் கேட்பது காதில் விழுகின்றது.

ஏன் என்று அறிந்தோர் அறியாதோர்க்கு சொல்லுங்கள்.

இன்றைக்கான ராசி..




"அய்யகோ.. சிரிக்க யாரும் அருகில் இல்லையே.. .பாழா போன கொரோனா!!


6 கருத்துகள்:

  1. என்ன உளறினாலும் அந்த வகை உணவு, இல்லை என்று சொல்லக் கூடாது என்று முடிவு எடுத்திருப்பார்கள் போர்...!

    பதிலளிநீக்கு
  2. சைனா ரெஸ்டாரன்ட் ல நீங்க வைச்ச ஆர்டரைப் பார்க்கறப்பவே வெள்ளாட்டுனு புரிஞ்சு போச்சு!!

    அப்போவே நாகாலாந்து அஸ்ஸாம் மக்கள் இங்க ரெஸ்டாரன்ட்ல வேலையா? ...இப்ப நிறைய பார்க்கலாம்.

    ராசி பார்த்து சிரித்துவிட்டேன்!!! இது ஸ்டாண்டர்ட்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வழக்கமான உங்கள் விளையாட்டு. ரசித்தேன் நன்றாக எஞ்சாய் செய்திருக்கிறீர்கள் உங்கள் இளம்பருவத்தை என்று தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வது ஒருமுறை. அதிலும் இளமையில் அருமை நட்ப்புகள் அமைவது அரிது.

      சிரிப்பிற்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்தோம்.

      நீக்கு
  4. சமையல் செய்பவரைக் கூப்பிடுங்கள் ரெசிப்பி கேட்டுக்கொள்கிறேன், என்றோ, ரெசிப்பி சொல்லித்தருகிறேன் என்றோ சொல்லி இருந்தால் நம்ம காரைக்குடிக்காரர் வந்து விழித்திருப்பாரோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா சொன்னீங்க போங்க. இம்புட்டு செஞ்சவங்க அதை செய்யாம இருந்து இருப்போமா? ஒரு நாள் இப்படி தான்.. "பாவ் வோங் டோங் சிக்கன்" ஆர்டர் பண்ணி , அதுல ஏன் சக்கரை போடல .. உங்க சமையல் காரை கூப்பிடுங்க.. ஒரு வார்த்த விசாரிக்கணும்னு சொல்ல..

      அது பிசினஸ் சீக்ரட்ஸ்..அவரு தன்னோட சீக்ரெட் ரெசிபியை சொல்ல மாட்டார்.. அவரை மீட் பண்ண கூடாது.. அடுத்த முறை இதை ஆர்டர் பண்ணும் பொது சக்கரை போட சொன்னா போடுவார்...

      வெளியே வந்து மீண்டும் சிரித்தோம்..

      இது ஏன்னா ராதா கடை டீயா? அண்ணே ஸ்ட்ராங்.. கொஞ்சம் சுகர் தூக்கலா ன்னு சொல்ல..

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...