வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கலிபோர்னியா காட்டு தீயின் நடுவில் ஒரு ஏலியன் பிணம்!

வருடாவருடம் கலிபோர்னியாவில் இடையூறு இல்லாமல் வரும் 
கடுமையான காட்டு தீ! ஒரு வாரத்திற்கும் மேல் தொடர்ந்து பரவி வர ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் கொழுந்திட்டு எரிந்தன.

தீயை அணைக்க அணைத்து முயற்சிகளும் எடுக்க பட்டன. தீயணைப்பு வாகனங்கள் துவங்கி விமானத்தில் இருந்து பலவித தீயணைப்பு மருந்துகளும் தூவ பட்டன. அது மட்டும் இல்லாமல் ஹெலிகாப்ட்டர் மூலமாக அருகில் உள்ள பசிபிக் கடலில் இருந்து பெரிய பெரிய வாளிகளில் கடல் நீர் நிரப்பி அதுவும் அங்கே அந்த தீயை அணைக்க வானில்  இருந்து கொட்டப்பட்டன.

கடும் போராட்டத்திற்கு பின்பு இந்த தீ அனையஅதில் ஏற்பட்ட விபரீத விளைவுகளையும் நட்டத்தையும் கணக்கிட ஒரு குழு காட்டிற்குள் நுழைந்தது.

என்னே ஒரு அழிவு..பல்லாயிரக்கணக்கான மரங்கள் கருகி கிடந்தன. அதில் வாழுந்து வந்த பறவைகள் தான் எத்தனை? அவை எங்கே சென்றிருக்கும், நினைக்கவே மனம் பதறி இருந்த வேளையில் அவர்களை அதிர வைத்தது ஒரு காட்சி.

நடு காட்டில் ஒரு கருகிய மிக மிக உயரமான  மரத்தின் மேல் கருகிய கறுத்த நிறத்தில் ஏறக்குறைய மனித உடல் அமைப்பில் ஒரு உருவம் தொங்கி கொண்டு இருந்தது.

ஒருவராத்திற்கும் மேல் அந்த சடலம் அங்கே இருந்து இருக்கும் போல், ஒரு துர் வாசனை  மூச்சை அடைக்க, உடனடியாக மேலதிகாரிகளுக்கு அறிவிக்க பட்டு அந்த சடலம் கீழே இறக்க பட்டது.,

முழுவதுமாக கருகி தீயான உடல். அந்த உடல் ஏறகுறைய ஒரு மனித ஆண்  உடலை போல் இருந்தாலும் அதன் தோல் மனிதனுக்கு இல்லாததை போன்று இருந்தது. 

ஏதோ ஒரு வேற்று கிரக வாசி பூமியை சோதிக்க அனுப்பப்பட்டுளார்.ரகசியமாக இருக்க தான் நடு காட்டில் இறக்கி விடப்பட்டுள்ளார். தீ வேகமாக பரவுகையில் அதில் இருந்து தப்பிக்க உயர்ந்த மரத்தின் மேல் ஏறி இருக்கலாம் என்று ஒரு சாரார் கூற..

இன்னொரு சாரார்..

கண்டிப்பாக வேற்று கிரகவாசி தான், தோலை பார்த்தாலே தெரிகின்றது. முகம் கூட எதோ வேறொரு சதையினால் ஆனது போல் உள்ளது. தீயில் இருந்து அவரை காப்பாற்ற வேற்று கிரகவாசிகள் தங்களின் விமானத்தை  தரையில் இறக்க முடியாத காரணத்தினால் மரத்தின் மேல் வர சொல்லி காப்பாற்ற முயற்சித்து இருக்கலாம்.

சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்ய பட்டது. அதில், உடலமைப்பு மொத்தமும் ஒரு ஆண் மனிதன் என்றே சொல்கின்றது. எலும்பு வகைகளும் பூகோள வாசி என்று உறுதி படுத்துகின்றது. இருந்தாலும் அந்த தோல்  மிகவும் தடியாக  ஒரு பன்றி அல்ல காண்டாமிருகம் போன்ற வகையாக இருக்கின்றது என்று அந்த சோதனையின் முடிவு வந்தது.

மற்றும், இவர்  தீ மற்றும் மூச்சடைப்பினால் இறக்கவில்லை என்றும் உடலில் பட்ட காயங்களினால் தான் இறந்துள்ளார் என்றும் அந்த அறிக்கை கூறியது.

இவ்வளவு அடிபட்ட நபர் எப்படி அவ்வளவு உயரம் ஏறி இருக்க முடியும். இதில் எதோ வினோத சக்தி உள்ளது என்று அனைவரும் தடுமாறினார்.

என்னவாய் இருக்கு, யாராய் இருக்கும்.. ஏதுவாய் இருக்கும்.. நடு காட்டில், தீயின் நடுவில், ஒரு தனி மனிதன் உதவி எதுவும் இல்லாமல் என்ற முடியாத உயரமான மரத்தின் மேல்.. 

எப்படி.. எப்படி எப்படி...?

என்று அனைவரும் மண்டையை பிய்த்து கொண்டு இருக்கையில்..

பதினைந்து மைல் தொலைவில் உள்ள ஒரு கடல் சார்ந்த கிராமத்தில், ஒரு காவல் நிலையத்தில் ஒரு பெண்..

" கடலுக்கு Scuba Diving போன என் கணவன் ஒரு வாரமா வீட்டுக்கு வரவில்லைன்னு "

என்று ஒரு கூற..

அங்கே காணாமல் போனவர்கள் யார் யார், வேறு யாவது கடல் அலையில் ஒதுங்கினார்களா என்று விசாரிக்கையில்..

அந்த கடலின்  காணாமல் போனவரின் DNA , இங்கே நடு காட்டில் தீயின் நடுவே இருந்த வேற்று கிரகவாசியின் DNA  வோடு ஒத்து போனது தெரிய வந்தது.

மேலும் விசாரிக்கையில்..

நடந்தது இது தான்.

வாரந்தோறும் கடலுக்கு "Scuba  Diving " போகும் இந்த நபர், அன்றும் அப்படியே கிளம்பினார். இவ்விதமான நீச்சலுக்கு ஒரு விஷேஷ சூட் அணிய வேண்டும். அது பொதுவாக மிகவும் தடியான ரப்பாரினால் செய்ய பட்ட "சூட்". தலை முதல் கால் வரை உடலை முழுவதும் மறைத்துவிடும்.

கடலுக்கு சென்ற அவர் சூட்டை அணிந்து கொண்டு நீருக்குள் மூழ்கி தான் உண்டு தான் வேலையுண்டு என்று இருக்கையில், 

காட்டில் தீ என்று அதை அணைக்க பெரிய பெரிய வாலியோடு கடல் மேல் வந்த ஹெலிகாப்டர்கள் அங்கே நீரை அள்ள, நீரோடு சேர்ந்து இவரையும் அள்ளி, பதினைந்து மைல்கள் அப்பால் உள்ள காட்டு தீயின் மேல் கொட்ட அங்கே அந்த மரத்தின் மேல் விழுந்துள்ளார் இந்த நபர்,  அந்த வாளியில் சிக்கும் போதும் மற்றும் மேலே இருந்து மரத்தில் விழும் போதோ சரியான அடி பட்டதால் தான் அந்த காயங்களாம்.

ரப்பாரினால் செய்த அந்த "சூட்" நெருப்பில் கருகி தோலோடு சேர்ந்துவிட்டதால் தான், அது என்ன விதமான தோல் என்ற கேள்வி வந்ததாம்.

என்னத்த சொல்வேன் போங்க.. !!!

7 கருத்துகள்:

  1. துளசிதரன்: என்ன கொடுமை இது? இப்படியுமா மரணம்?

    கீதா: அடப்பாவிங்களா!!! வாயடைச்சுப் போனேன்!

    பதிலளிநீக்கு
  2. அடப்பாவி... நீங்க வாளின்னதும் ஆழ்கடலுக்கு ஸ்கூபா டைவிங் போனவரைப் பிடிக்கும் அளவு பெரிய வாளின்னு தோணலை.

    அது சரி..உப்புத் தண்ணீரைத் தெளித்தால் அந்த இடங்களில் மீண்டும் மரம் வளருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே பல வேளைகளில் கடல்நீரை தீ அமைக்க ஹெலிகாப்டரில் வாளிகளில் எடுத்து செல்வதை நன் கண்டுள்ளேன்.

      உப்பு தண்ணி பட்டால் மரம் வளருமா? அடுத்த சில நாட்களிலே மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகையில் உப்பு காணாமவ் போய் என்று நினைக்கின்றேன்,

      நீக்கு
  3. இதை உண்மை என்று பலர் சொன்னாலும் புரளி என்று சொல்பவர்களும் உள்ளார்கள். கூகிளை தட்டினால் உறுதியான பதில் இல்லை.

    இப்படி நடந்து இருக்கு? நடந்து இருந்தால் ...?

    பதிலளிநீக்கு
  4. மிகவும் கொடுமை.    படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.  புரளியாகவே இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  5. Facts are stranger than fiction என்று சொல்வது சரியாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...