செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 1 (என் வானிலே ஒரே வெண்ணிலா)

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்.  

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!

கரிவடைக்கு பதிலாக வடைகரியினால் வந்த  ஏமாற்றத்தை நினைத்து கொண்டே மீண்டும் டாக்சியில் ஏற..


மீண்டும் கண்கள் சினிமா போஸ்ட்டரை மேய துவங்கின. எத்தனையோ நடிகர்கள் போஸ்டர்கள் இருந்தாலும் கண்கள் என்னமோ ரஜினியை மட்டுமே தேடின.

வெற்றிகரமான 150  நாளை நோக்கி "பில்லா"புதிதாக ஓட்ட பட்டு இருக்கும் "அன்புக்கு நான் அடிமை"

அன்றும் இன்றும் என்றும் என் வானிலே ஒரே வெண்ணிலா என்று கூறும்  விரைவில் " ஜானி"

என் வாழ்வின்  பொற்காலமான 15 - 23 வயதுகளை ரஜினி இளையராஜா கொள்ளை அடிக்க போகின்றார்கள் என்று அறியாமலே கொள்ளை போனேன்.

  டாக்சி பாரிஸ் கார்னர் அருகே குறளகம் தாண்டி ஒரு லெப்ட் எடுத்து கொஞ்சம் குறுகலாக இருந்தாலும் "Broadway" என்ற பெயரோடு இருந்த சாலையில் நுழைந்தது.  காலை நேரமாக இருந்ததால் போக்குவரத்து இல்லை. 

இருபுறம் நிறைய டீக்கடைக்காரர்கள். இவர்கள் தான் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கின்றார்கள். இவர்களில் இருவர் தான் இன்னும் பல வருடங்கள் கழித்து நம் நாட்டின் பிரதமர் மற்றும் முதல்வர் என்று அன்று அறிய வாய்ப்பில்லை.

டாக்சி ஆள் இல்லாத தெருவில் ஹார்ன்  அடித்து கொண்டே செல்ல, வலது புறத்தில் ஒரு கிறிஸ்துவ ஆலயம், அடுத்து ஒரு கால்பந்து மைதானம், எதிரில்  "பாமா ருக்மணி "  போஸ்டருடன் பிராட்வே தியேட்டர் அருகில்   பிரபாத் தியேட்டர்.

கழுத்தை சற்றே வளைத்து மீண்டும் அந்த போஸ்டர்களை பார்க்கையில் அம்மா..

"விசு, பத்தாவது போல + 2  விலும் மார்க்கில் கோட்டை விட்டுடாத. சினிமா சினிமான்னு இருக்காத, படிப்பில் கவனம் செலுத்து"

"பத்தாவது மார்க்கிற்கு சாரி மா, என்றும் +2 மார்க்கிற்கு சரி மா என்றும் சொல்லி முடிக்கையில் அத்தை வீட்டை அடைந்தோம்"

குளித்து உடைகளை மாற்றி கொண்டு பள்ளி கூடம் கிளம்பி அங்கே பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்த தருணம்..

மதராஸ் எனக்கு அடுத்த ஏமாற்றத்தை தந்தது.

உங்களில் சிலர்.

ஓ.. அந்த பள்ளிக்கூடம் என்ன பாய்ஸ் ஒன்லி பள்ளியா.. அது போய் ஒரு ஏமாற்றமா? என்று சொல்வது கேட்கின்றது. 

அதுவும் தான் ஆனால் அது மட்டும் இல்லை. இன்னொரு ஏமாற்றம் . 

தொடரும்....

அடுத்த ஏமாற்றத்தை அறிய கீழே சொடுக்கவும் 


3 கருத்துகள்:

  1. // நம் நாட்டின் பிரதமர் மற்றும் முதல்வர் என்று //

    ஹா... ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  2. "பத்தாவது மார்க்கிற்கு சாரி மா, என்றும் +2 மார்க்கிற்கு சரி மா"
    அருமையான பாதங்கள். நம்ம போஸ்டரும் வந்திருக்கவேண்டியது … கொஞ்சத்தில் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு….
    தமிழ் நாட்டு மக்கள் கொடுத்துவைக்கல … நாம் என்ன செய்ய முடியும்? ம்ம்ம்ம்… குறைந்த பட்சம் ...டீக்கடையாவது வைத்திருந்திருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ ...

      I am not a type of a person who regrets for "What would have been". I let go many a "would have beens"

      ஆனாலும்.. அந்த கன்னா ஹோட்டலில் நாம் சந்தித்து வகுத்த திட்டங்களை செயல் படுத்த முடியவில்லையே என்று எப்போதும் ஒரு Regret மனதில் உள்ளது.

      யார் நஷ்டமோ... நமதா அல்ல தமிழக மக்களுடையதா.. இன்னும் புரியவில்லை.

      இன்னும் மனதில் ஒரு சிறிய Hope உள்ளது. பார்ப்போம்!

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...