முந்தைய ஏமாற்றத்தை படிக்க இங்கே சொடுக்கவும்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 2 (Doctor- Pilot and பாமா ருக்மணி)
நாட்கள் வாரங்களாக..
அதுவரை கமர்கட்டு, நாவற்பழம், குச்சி ஐஸ் என்ற நொறுக்கு தீனிகள், டீ, சமோசா மற்றும் கோன் ஐஸிற்கு மாறின.
பள்ளி துவங்கி வாரத்திற்கும் மேலாகிவிட்டதே. இனம் இனத்தோடு சேரும் என்பது போல்..
கவாஸ்கர் க்ரூப்
கபில் தேவ் க்ரூப்
ரஜினி க்ரூப்
கமல் க்ரூப்
மேலே இருக்கும் அனைவரும் இருக்கும் இளையராஜா க்ரூப்
நன்றாக படிப்போர் க்ரூப்
பணக்காரர் க்ரூப்
பேக் பெஞ்ச் க்ரூப்
என்று பல க்ரூப்கள் தலையெடுக்க..
எனக்கு கிடைத்தான் ஒரு அருமையான நண்பன் "எழில்"
அவனும் பத்தாவது வரை வேறு ஏதோ பள்ளியில் படித்தவன். என்னை போலவே பத்தாம் வகுப்பு தேர்வில் எக்கசக்க மதிப்பெண் எடுத்து கெக்கபெக்க என்று முழித்ததால் அவன் பெற்றோர் இவனை +2 வில் நல்ல பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று St.Gabriels பள்ளியில் சேர்த்தார்கள்.
இது எல்லாம் இருக்கட்டும்.. மெட்றாஸ் உன்னை இன்னும் எப்படி எல்லாம் ஏமாத்திச்சின்னு சொல்லு விசுன்னு நான் எழுதும் பதிவுகளை உடனடியாக வாசிக்கும் ஒரு வாசகர் கேட்பது புரிகின்றது.
"எழில்!!"
"சொல்லு!!!"
"சினிமா பாப்பியா"?
"அப்பா அம்மா எப்பவாது கூட்டினு போவாங்க, ஏன்?"
"இந்த பாமா ருக்மணி பாத்துட்டீயா?"
"இல்ல, நாங்க பொதுவா ரஜினி கமல் படம் தான் போவோம்"
"பாமா ருக்மணி போலாமா? "
"எப்ப?"
"காலை காட்சி"
"ஸ்கூல்!?"
என்னமோ, பேய் அறைந்தவன் (பேய் அறைந்த கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்) போல் முழித்தான்.
"காலை காட்சி 10 மணிக்கு, பனிரெண்டரைக்கெல்லாம் முடிஞ்சிடும். முதல் பீரியடில் தான் அட்டெண்டன்ஸ் எடுப்பாங்க. அட்டண்டன்ஸ் போட்டுட்டு எகிரிட்டோம்னா லன்ச்க்கு அப்புறம் வந்துடலாம்".
என்ன, விசு? என்னமோ பேனாக்கு இங்க் போட கூப்பிட்ற மாதிரி இவ்வளவு சாதாரணமா சொல்ற, மாட்டுனா?"
"மாட்டுனா தானே.."
திட்டம் வகுத்து கொண்டு இருக்கையில் NCC வகுப்பில் யார் யார் சேர போகின்றீர்கள் என்று ஒரு தாளோடு NCC மாஸ்டர் வர..
வாரத்திற்கு ஒரு மசாலா தோசை அல்லது பூரி செட், அதை ஏன் விடுவான் என்று, நான் கைதூக்க, எழில் ..
"NCC யில் சேர போறீயா"?
சேரும் காரணத்தை விளக்கினேன். அவனும் கை தூக்கினான்.
இருவருக்கும் NCC விண்ணப்பம் கொடுக்க பையில் கை விட்ட மாஸ்டர், பார்ம்ஸ் ஆகிடிச்சி என்று சொல்லி RK நாராயண் எழுதிய The Blind Dog என்ற முதல் அத்தியாயத்தை நடத்தி கொண்டு இருந்த எங்கள் ஆங்கில வாத்தியார் சில்வஸ்டரிடம் ,
"Mr. Sylvester, can I borrow these two boys for an hour?"
"offcourse, you can"
"இரண்டு பேரும் என் ரூமுக்கு வாங்க"
என்று அழைத்து ஒரு தாளை கொடுத்து,
"பக்கத்துல பிஷப் கொரி பள்ளி கூடம் இருக்கு தெரியும் தானே"
"விமன்ஸ் ஆர்ட்ஸ் கால்லேஜுக்கு பக்கத்துல தானே சார்!"
"அதே தான் " என்று என்னை ஆச்சரியத்தோடு பார்க்க..
அந்த பதிலுக்கு ஏன் இப்படி ஆச்சர்யபடுரார் என்று நினைக்கையில்..
"இந்த லெட்டரை அந்த ஸ்கூல் NCC மஸ்டார்ட்ட கொடுங்க, ஒரு கவர் தருவார், வாங்கினு வாங்க"
வாங்கி கொண்டு கிளம்பினோம், அங்கே..
"நாங்களும் அந்த பார்ம்ஸுக்கு தான் வெயிட் பண்றோம் , இங்கேய இருங்க, இன்றும் ரெண்டு மணி நேரத்தில் வந்துடும்.
என்று அவர் சொல்லும் போது மணி பத்து.
"இன்னும் ரெண்டு மணி நேரம் இங்கேயே வா !!?"
என்று நினைக்கையில்... பாமா ருக்மணி பாக்யராஜ் மூக்காலே..
"என்னடா பசங்க நீங்க.. இப்ப மணி 9.30.. காலை காட்சி 10க்கு. இங்கே சும்மா உக்காந்துன்னு இருக்குறதுக்கு பதிலா பிராட்வே தியேட்டர் போய் படத்தை பாத்தீங்கன்னா, கோடம்பாக்கத்தில் இருக்க எங்க வீட்டிலும் உலை வைப்பங்கா தானே., சீக்கிரம் கிளம்புங்க "
என்று சொல்ல,
எழிலிடம் விவரித்து கிளம்பினோம்..
என்ன விசு.. எப்படி ஏமாந்திங்கன்னு சொல்லலையே..
இம்புட்டு ஏமாந்த நானே அமைதியா நிதானமா இருக்கேன். என்ன அவசரம்? அடுத்த பதிவில் சொல்றேன்.
பலே திட்டம்...!
பதிலளிநீக்குதிட்டம் எல்லாம் பலே தான் தனபாலன். இருந்தாலும் அறியா வயசு பாருங்க excecution தான் தடுமாறும்.
நீக்குநமது கனவு ப்ராஜெக்டின்(கண்ணா ஓட்டல்) இயக்குனர் பெயரும் பழனி எனும் "எழில்" தான் நினைவிருக்கும் என நினைக்கின்றேன்.
பதிலளிநீக்குநண்பர் எழில் பின்னாளில் அஜித்தை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கினார் என்று கேள்வி பட்டேன்.
நீக்குவிசு , இந்த பேய் அறைஞ்ச கதையை சொல்லாம, நீ அறைஞ்ச கதை தான் ரொம்ப வலிக்குது
பதிலளிநீக்கு