திங்கள், 24 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!

அதற்கு முன் பல முறை சென்று இருந்தாலும் மெட்ராஸ் என்றவுடன் நினைவிற்கு வருவது பதினான்காம் வயதில் +2 வகுப்பிற்கு சென்ற பயணம் தான்.

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பெரம்பூரை தாண்டியவுடன் தலைக்கு  மேலே உள்ள பைகளை கீழ் இறக்கி கதவருகில் காத்திருக்க  பேசின் பிரிட்ஜ்ன் அருகே இரண்டு பெரிய வாளிகளை போன்ற புகை கக்கிகள் கண்ணுக்கு  தெரிய அடுத்த சில நிமிடங்களில் சென்ட்ரல் நிலையம்.

போர்ட்டர் ஒருவரை வைத்து வெளியே வந்து டாக்சி ஒன்றை பிடித்து அத்தை   வீட்டை நோக்கி செல்ல சாலையின்  இருபுறமும் 70MM அளவிற்கான சினிமா போஸ்டர்கள். 

எங்கு பார்த்தாலும் பில்லா ரஜினி!

மனதில்..

என்னடா இது? இந்த பில்லா என்பவன் டெல்லியில் தன் தோழன் ரங்கா என்பவனோடு சேர்ந்து அக்கா தம்பி என்று பள்ளிக்கூடம் சென்று கொண்டு இருந்த இரு  பிள்ளைகளை கடத்தி  பாலியல் வன்முறை செய்து கொடூரமாக கொலை செய்தவன். அவன் பெயரில் பில்லா என்று படம் எடுத்து வைத்து இருக்கின்றார்களே , வேற பேரே கிடைக்கவில்லையா என்று நினைக்க தான் தோன்றியது. 

வழியில் அம்மா டாக்சியை நிறுத்தி விட்டு ஏதாவது சாப்பிட்டு விட்டு போகலாம் என்று சொல்ல, ஒரு சிற்றுண்டியில் நிறுத்த, டேப் ரெக்கார்டரில் SPB ..

"Hey, my dear... look here.. here I say.. பறந்தாலும் விடமாட்டேன்"

 என்று பாடிக்கொண்டு இருந்தார்.

அம்மா, வைட்டரிடம் ..

"இட்லி மற்றும் வடகறி " என்று சொல்ல..மனதிலோ.

மெட்றாஸ் ஆரம்பமே சூப்பர்! 

ரஜினி - கமல் - அதையும் மீறி காலை ப்ரேக்பாஸ்டுக்கே இட்லிக்கு கரி!  என்று நினைத்து கொண்டு இருக்கையில், ஆர்டர் செய்தது வந்தது.

என்னடா இது? நம்ம ஊர் முனியாண்டிவிலாஸில் முதலில் கரி ஐட்டத்தானே எடுத்துன்னு வருவாங்க, இங்கே என்ன .. இட்லியும் தொட்டுக்க எதையோ கொடுக்குறாங்க.. இன்னும் கரி வரலையேன்னுகாத்து இருக்கையில், பில் வந்தது. அம்மாவும் பணத்தை தர..

"அம்மா, இன்னும் கரிவட வரல.."

"அது கரி வட இல்ல, வட கரி..."

"என்னமோ.. ஆனா இன்னும் கரி வரல?"

வடகரியில் கரி இருக்காது. நேத்து மீந்த வடை எல்லாத்தையும் பிசைஞ்சி கொஞ்சம் எண்ணெய் போட்டு தாளிச்சா "வடகரி"!

மாட்றாஸின் முதல்  ஏமாற்றம்......


தொடரும் ...

அடுத்த ஏமாற்றத்தை அறிய கீழே சொடுக்கவும் 

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 1 (என் வானிலே ஒரே வெண்ணிலா)


 

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அடுத்து வர போற கரிய நினைச்சினு இருந்ததில இந்த பழைய வடையோட ருசி எல்லாம் தெரியல தனபாலன்.

      நீக்கு
  2. ஒன்பதாம் வகுப்புக்குறிய வயதில் +2...ம்ம்ம் …; வடகறி இட்லி சரியான பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ.. 14 ல் 10 வது பாஸ் 16 ல் +2 பாஸ் 19 ல் டிகிரி முடிச்சாச்சு. இதுல பொருத்தம் எல்லாம் பாக்க என்ன இருக்கு?

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...