சனி, 8 ஆகஸ்ட், 2020

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா?

"பொண்ணு வயசு ஆகினே போது! ஏதாவது ஒரு நல்ல வரன் வந்தா சட்டு புட்டுன்னு முடிங்க.."

"கோயில் மாடு மாதிரி சுத்தினு இருக்கான், ஒரு கால்கட்டை போடுங்க.. "

இப்படி பெற்றோர்களை உற்றார் உறவினர் "டார்ச்சர்" செய்ய, நேராக திருமண தரகர்..


ஆயிரம் பொய்யாவது சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்ற லாஜிக்கில் ஜாதகத்தை எடுத்துனு வாங்கோன்னு.. 

சொல்லி.

ஊர் ஊரா தேடி..

வயசு, 

உயரம்

நிறம்

வேலை

சம்பளம்

கிம்பளம்

எத்தனை வீடு இருக்கு

கூட பிறந்தவங்க எத்தனை பேர் 

வீட்டுல மூத்தவரா?

இவரு பேருல என்ன என்ன சொத்து இருக்கு?

பொண்ணோட அக்க்காவுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகல?

மாப்பிளையுடைய தம்பிக்கு ஏற்கனவே ஏன் கல்யாணம் ஆகிடிச்சி?

பொண்ணுக்கு அவனை கட்டிக்க சம்மதமா என்ற கேள்வியை தவிர மத்த தேவையில்லா கேள்வியை கேட்டு..

அதுக்கும் பதில் வருதோ வரலையோன்னு கூட கவலை படமா...

பூ மாத்திக்கலாம்.

தட்டு மாத்திக்கலாம்

நிச்சயதாம்பாலம்ன்னு சொல்லி  

ஊருல இருக்குற அம்மணிகள்ட்ட எல்லாம் ஆளுக்கொரு தட்டில் பழம் நகை புடவை சந்தானம் வைச்சி ...

அதுக்கொரு சாப்பாடு. அது மாப்பிளை வீட்டு செலவா .. பொண்ணு வீட்டு செலவானு ஒரு பிரச்சனை;..

தட்டு மாத்தின உடனே..

"பொண்ணு MSC கம்ப்யூட்டர் ஸயன்ஸ்ன்னு சொன்னீங்க.. அவ MCA வாமே.."

"மாப்பிளை பெரிய ஆளுன்னு சொன்னீங்க.. வெறும் என்ஜினியர் தானாமே." 

என்று .. முன்பு "டார்ச்சர்" கொடுத்த அதே உற்றார் உறவினர் டார்ச்சர் கொடுக்க..

ஒரு நிச்சய தாம்பலத்துக்கு இம்புட்டு அளப்பறையா இருப்பதை பார்த்து வளர்ந்த எனக்கு அமெரிக்காவின் நிச்சயதார்த்தம் ஒரு "பிளசன்ட்  சர்ப்ரைஸ்".

இங்கே ஒரு ஆண்மற்றும் பெண் பழகுவாங்க. ஒருத்தரோட ஒருத்தர் கொஞ்சம் நாள் மனம் விட்டு திரிவாங்க. இவன்தான் எனக்கு, அவள் தான் எனக்குன்னு அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்ததும்..

ஆண், ஒரு மோதிரம் வாங்கி, அந்த பெண்ணுக்கு எதிரில் முட்டி போட்டு ..

"Will You Marry Me"? ன்னு கேக்க.. அந்த பொண்ணும்

"Yes  ! Yes !" ன்னு ஆர்ப்பரிக்க.. 


அதுதான் நிச்சயதார்த்தம்..

இது முடிஞ்சவுடனே.. அவங்க ரெண்டு பேரும் "We are engaged" ன்னு ஊருக்கெல்லாம் சொல்லுவாங்க.

இந்த ஊருக்கெல்லாமில் பெற்றோர்களும் அடங்குவார்கள். எங்க ஆபிசில் நாங்க இருக்கும் போது, திடீர்ன்னு கூட வேலை செய்யுறவங்க...

My daughter just got engaged.. My son got engaged ன்னு சொல்லுவாங்க. ஆரம்பத்தில் என்னடா இது ? நிச்சயதார்த்தம் எம்புட்டு முக்கியம், பெற்றோர்கள் இல்லாமல் நடக்குத்தேன்னு யோசிச்ச நான் இப்ப, இது தான் வாழ்க்கை முறைன்னு தெரிஞ்சிக்குனேன்.

100 க்கு 99 பொண்ணுங்க "எஸ்" ன்னு பதில் சொன்னாலும்.. அங்கே இங்கே "நோ"ன்னு பதில் சொன்ன பொண்ணுங்க இருக்குறதையும் கேள்வி பட்டு இருக்கேன்.

அந்த நேரத்தில் கூட எல்லாரும்..

என்ன இந்த அபிஸ்டு... ?ஒரு பொண்ணு மனசை கூட அறியாமல் இப்படி பண்ணி வைச்சி இருக்கானேன்னு அவனை தான் திட்டுவாங்க.

இப்படி "Will you marry me"ன்னு சொல்ற விதம் அவரவர் வசதிக்கேற்ப இருக்கும். பொதுவாக பூங்காவில் சொல்லுவாங்க. அப்புறம் விளையாட்டு மைதானத்தில், அப்புறம் கோயிலில், சில பேர் பீச்சில் , கோல்ப் கோர்ஸில் .. 

பொதுவாகவே.. அந்த பெண்ணிற்கு மிகவும் பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று கேட்பார்கள்.

இன்று நானும் இளையவளும் கோல்ப் கோர்ஸில் இருக்கையில்.. இளையவள் வானத்தை பார்த்து..

"Awww.. so cute" என்றாள்.

என்னவென்று பார்த்தேன். ஒரு குட்டி விமானத்தில் மேலே "Marry Me"? என்று எழுதி கொண்டு இருந்தார்கள்.

கீழே அந்த பெண்ணின் எதிரில் அவன் ஒரு மோதிரத்தோடு முட்டி போட்டு அவளின் Yesகாக காத்து கொண்டு இருப்பான்.

நம்ம கணக்கு பிள்ளை புத்திய மாத்த  முடியாதே. கூகுளை தட்டி இதுக்கு எவ்வளவு செலவுன்னு விசாரிச்சா, குறைந்த பட்சம் ஆறாயிரம் டாலராம்.  வசதியான பையன் போல இருக்கு..

பின் குறிப்பு:

நீங்க அம்மாட்ட எப்படி கேட்டீங்க?

"நான் எங்கே கேட்டேன்.. நான் எதுவும்  கேக்குறதுக்கு முன்னாலேயே வைச்சி செஞ்சிட்டாங்க"

ஒரு வேளை  அமெரிக்காவில் பிறந்து வளந்து இருந்தீங்கனா இப்படி வானத்துல எழுதி இருப்பீர்களா?

நான் என்ன முட்டாளா? அந்த விமான கம்பெனியில் எவனாவது இந்த பிளான்  வைச்சி இருக்கானான்னு கண்டு பிடிச்சி அவன் எழுதற அன்னிக்கு அம்மணிக்கு எதிரில் முட்டிய போட்டு.. மேல வானத்தை பாரு...

"Will you marry me "ன்னு கேட்டு இருப்பேன்.






 

6 கருத்துகள்:

  1. ஒரு சில கேள்விப்பட்டதுண்டு. வித்தியாசமான ஒன்று நீங்கள் இங்கு சொல்லியிருப்பது. செலவு மயக்கம் வருகிறதே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  2. விசு நீங்க சொல்லியிருபது முன்னாடி இங்க. இப்பல்லாம் வேற லெவல்!! கல்யாணம் நடக்குமான்னு ஒரு சாரார் பசங்களை வைச்சுக்கிட்டு பொண்ணு கிடைக்கலைன்னு தேடுறாங்க. பொண்ணுங்க கல்யாணமே வேண்டாம்னும் இருக்காங்க....

    ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ப்ளஸ் உண்டு மைனஸ் உண்டு என்றே எனக்குத் தோன்றுகிறது. இங்கும் சிம்பிளாக முடியும் திருமணங்கள் இப்போது நடக்கிறது. ஹெலிகாப்டர்ல மாப்பிள்ளை வந்து இறங்கும் வகைக் கல்யாணங்களும் நடக்குது!! நீங்க சொல்லிருக்கற நிச்சயச் செலவு யம்மாடியோவ்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நாம் ஊருல கல்யாணத்திற்கு அப்புறம் முட்டி போட வைப்பாங்க இங்கே நிச்சயதார்த்தமே முட்டி போட்டால்தான் நடக்கும் ஹூம்ம்ம் என்ன சொல்ல... நான் இது வரை முட்டி போட்டதில்ல.. இப்ப போட ஆசை ஆனால் என்ன பொண்ணுதான் சிக்க மாட்டேங்கிது

    பதிலளிநீக்கு
  4. கூந்தல் இருக்கற சீமாட்டி அள்ளி முடிவான்னு சொல்வாங்க...    அதுபோல பணம் இருப்பவர்கள் எப்படி வேணும்னாலும் ப்ரபோஸ் பண்ணுவாங்க...    நம்மூர்ல காதலை இவங்க பண்ணினாலும் கல்யாணத்தை, பெத்தவங்கதான் நடத்தி வைக்கறாங்க...

    பதிலளிநீக்கு
  5. கணக்கு பிள்ளை என்பதை பின் குறிப்பில் அதிகமாகவே தெரிகிறார்...!

    பதிலளிநீக்கு
  6. ஆயிரம்தான் இருந்தாலும் நம்ம ஊர் முறைமையில்தான் எனக்கு முழுமையான உடன்பாடு.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...