சனி, 29 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 5 (ஓயாத அலைகள் )

முந்தைய ஏமாற்றத்தை படிக்க இங்கே சொடுக்கவும் 

 ஸ்பீக்கரில்.. 

"எல்லாரும் அசம்ப்ளிக்கு வாங்க, நம்ம ஸ்கூல் - ஸ்டுடென்ட் - சினிமா...  " 

கேட்டவுடன், அம்மா நினைப்பு என்னை அறியாமலே வந்தது..

""விசு, பத்தாவது போல + 2  விலும் மார்க்கில் கோட்டை விட்டுடாத. சினிமா சினிமான்னு இருக்காத, படிப்பில் கவனம் செலுத்து"

சே.. என்னடா மகன் நான்! அவங்க சொல்லிட்டு போய் ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள, மாட்டிகிட்டேனே என்று நினைக்கையில்..


மனசாட்சி..

"விசு, அப்ப கூட தப்பு பண்ணிட்டேன்னு வருந்தாம, மாட்டிக்குனோமேன்னு பீல் ஆகற பாரு.. ரொம்ப தப்பு"

ஸ்கூல்- ஸ்டுடென்ட் -சினிமா.. 

"ஏன், எழில், நாம ரெண்டு பேர் மட்டும் தானே தப்பு பண்ணோம்.அதுக்கு ஏன் ஸ்கூல் ஸ்டுடென்ட் சினிமான்னு என்னமோ சொல்லி எல்லாரையும் வர சொல்லுறாங்க..?"

"எல்லாருக்கும் எதிரில் வைச்சி பனிஷ்மென்ட் போல இருக்கு, எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா.."

"அடிப்பாரா? "

"அடிச்சா பரவாயில்லையே.. கோச்சிக்குவார்"

"சரி, என் தப்பு தான், வா போகலாம் "

அருகில் இருந்த லாரன்ஸிடம்,

"இப்படி மாட்டுனா என்ன தண்டனை!!!?"

PT மாஸ்டார்ட்ட உட்டுடுவாங்க. அவரு அவர் மூடை பொறுத்து கிரௌண்டில் பாத்து இருபது ரவுண்டு ஓடசொல்வாரு. 

இருபது ரவுண்டு, நினைக்கையில் மூச்சு வாங்கியது. 

என்று அஸம்ப்ளியில் நுழைய, மேடையில் பிரின்சிபால் மற்றும் சிலர்.

பிரின்சிபால்," மாணவர்களே, இன்று நம் பள்ளிக்கு நம் ஓல்ட் ஸ்டூடன்ட் தியாகராஜன் சிவானந்தம் வந்துள்ளார். இவர் அடுத்தவருடம் வெளிவர இருக்கும் 'அலைகள் ஓய்வதில்லை " என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். அவரை கைதட்டி வரவேற்போம்"

என்று சொல்ல, தியாகராஜன், வாயை திறக்காமலே சில வார்த்தைகளை பேசி முடிக்க ...

(பின்னாட்களில் இதே தியாகராஜன் நீங்கள் கேட்டவை படத்தில் "பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா" என்ற பாடலை வாயை திறக்காமலே பாடும் போதுஅட பாவி, இவரு என்ன இன்னும் வாயை திறக்காமலே இருக்கிறாரேன்னு நினைக்காமல் இருக்க முடியவில்லை)  

ஓ.. அது தான் ஸ்கூல் -சினிமா - ஸ்டுடென்ட், அப்பாடா தப்பிச்சோம்.

இருவரும் பெரு மூச்சு விட்டோம்.

அடுத்த ஒரு வருடம் சென்னையில் பல ஏமாற்றங்கள் தொடர்ந்தது..

நாளுக்கொரு பதிவென்றாலும் அடுத்த இரண்டு வருடத்திற்கு எழுதலாம். எழுதலாமா? 


2 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...