முந்தைய ஏமாற்றத்தை படிக்க இங்கே சொடுக்கவும் .
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 1 (என் வானிலே ஒரே வெண்ணிலா)
என்ன இது சினிமா - ரஜினி - இளையராஜா என்று நன்றாக ஆரம்பித்த மெட்றாஸ் மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தையே தர போகின்றது என்பதை இரண்டாம் நாளிலே புரிந்து கொண்டேன்..
மெட்றாஸ் எனக்கு தந்த இந்த ஏமாற்றம் என் வாழ்க்கையையே புரட்டி போட்டு மாற்றி விட்டது.
பத்தாவது வரை ஒவ்வொரு வகுப்பிலும் இன்ஸ்பெக்சனுக்கு ஆபிசர்கள் வருகையில் ஒரே ஒரு கேள்வி தான் அனைவரிடம் கேட்கப்படும். அதுவும் மேஜர் சுந்தராஜன் பாணியில்..
"பெரிசானாவுடன் நீ என்னவா வர போற, What do you want to be when you grow big?"
இந்த கேள்விக்கு வருடா வருடம், மொத்த வகுப்பும் "டாக்டர், டாக்டர்" என்று பதில் சொல்லும். அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏழாவதோ அல்லது எட்டாவதிலோ இந்த இன்ஸ்பெக்சன் நடக்கையில் சன்னல் வழியே பார்க்க ஆகாயத்தில் ஒரு விமானம் தெரிய, ஒரு சேஞ்சிற்க்காக சிட்டுவேஷன் கருதி "Pilot" என்று மாற்றி கொண்டேன். மற்ற படி "டாக்டர்" தான்,
சரி, மெட்றாஸ் என்ன ஏமாற்றியதா?
என் பதிவை தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பள்ளி இறுதி ஆண்டான பத்தாவதில் எக்கசக்க மதிப்பெண்களை பெற்று கேக்கபெக்க என்று முழிக்க அந்த மதிப்பெண்களுக்கு அறிவியல் படிக்க அறிவு பத்தாது என்று St.Gabriels பள்ளியின் தலைமை ஆசிரியர்,
"நீ அக்கௌன்ட்ஸ் படி"
என்று சொல்லிவிட..
மெட்றாஸின் ஏமாற்றம் தொடர்ந்தது.
மனதில்..
விசு, இந்த வருஷம் இன்ஸ்பெக்சன் வரும் போது மேஜர் சுந்தராஜன்
"பெரிசானாவுடன் நீ என்னவா வர போற, What do you want to be when you grow big?"ன்னு கேட்டா...
உணர்ச்சி வசப்பட்டு "டாக்டர்" ன்னு மட்டும் சொல்லிடாத என்று குறித்து வைத்து கொண்டேன்.
பள்ளி ஆரம்பித்தது. ஒவ்வொரு முறை PT நேரத்திலும் தடுப்பு சுவருக்கு அந்த பக்கம் இருந்த பாமா ருக்மணி பாக்யராஜ்..
"இப்படி எப்ப பாரு ஸ்கூல் படிப்புன்னு நீ இருந்தா கோடம்பாக்கத்து ஆட்கள் நாங்க எல்லாம் எப்படி புழைக்குறது, சட்டு புட்டுன்னு படத்துக்கு கிளம்பி வா !!!"
என்று மூக்கால் பேசி அழைக்க..
மெட்றாஸின் அடுத்த ஏமாற்றம் தொடர்ந்தது...
அதனை படிக்க கீழே சொடுக்கவும்
நகைச்சுவை மட்டும் கணக்கிலாமல்... அது தான் எங்கும் எதிலும் என்றும் வேண்டும்...
பதிலளிநீக்குநகைசுவை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை அணுஅணுவாக ரசிக்க வேண்டும்
நீக்குபதிவில் ட்வீஸ்ட்டுகள் "!எக்கச்சக்கம்".
பதிலளிநீக்குசென்னை நாட்கள் மிகவும் ட்விஸ்ட்டான நாட்கள். கோ.
நீக்கு14 ல் இருந்து 16 வரை.. மறக்க இயலுமா...