Friday, July 27, 2018

நானும் கலைஞரும் .. "A Love - Hate Relationship"

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்து கொண்டு இருக்கையில், ஒரு புத்த மத கோயிலில் நம்பியார் எம்ஜியாரை புரட்டி கொண்டு இருக்கையில்.. எதிரில் இருந்த பெருசு ஒன்று குடித்து விட்டு அலறியது..


"இந்த நம்பியாரை கூட மன்னிச்சிடலாம் ஆனா அந்த கருணாநிதி .. கருணாதியை மன்னிக்க கூடாது வாத்தியாரே..."

எனக்கு நினைவு தெரிந்த வரை அதுதான் நான் கருணாநிதி என்ற பெயரை முதன் முதலாக கேட்டேன்..

அந்த வயதில் அனைவரை போலவே அடியேனும் MGR விசிறி. அதற்கு முன் வந்த அனைத்து படங்களிலும் முதல் பாதியில்  நாயகியை நம்பியார் கற்பழிக்க முயல MGR வந்து காப்பாற்ற, பின்னர் இரண்டாம் பாதியில் MGR நம்பியார் செய்த அதே வேலையை சிரித்து  கொண்டே செய்ய எனக்கோ புரியாத வயது...

வரவு பத்தணா .. வந்தது எட்டணா !

டாடா..

அலை பேசி அடித்தது  அதை எடுத்து ஹலோ சொல்வதற்கு முன் அலறினாள்  மூத்தவள்.

ஹெலோ...

டாடா...

வாட்?

என்ன நடக்குது இங்கே?

மகள்.. காலையில் அஞ்சறை .. எவெரிதிங் ஆல்ரைட்  வித் யு ?

நோ.. ஐ அம் வெறி அப்செட் .

எனிபடி ஹர்ட்?

நோ..

ராசாத்தி.. காலையில் அஞ்சி மணி.. அப்புறமா பேசலாமே..

கால் மீ . .இட்ஸ் அர்ஜன்ட்.

கடந்த 16  வருசமா இவளுங்க ரெண்டு பேரை பள்ளி கூடத்தில் டிராப்  பண்ண காலையில் அஞ்சி அஞ்சறை போல எழுறேன். மூத்தவ கல்லூரிக்கு போய்ட்டா.. இளையவ இந்த வருஷம்  11வது   போறா.  செப் மாசம் பள்ளி ஆரம்பிக்கும் போது அவளே வண்டி ஓட்டிடுவா.. 16 வருஷம் கழிச்சி கொஞ்சம் ரிலாக்ஸ்சா காலையில் நிதானமா எழலாம் என்ற மிதப்பில் மீண்டும் கண்ணை மூடினேன்.

ஏங்க...

கொர் ர் ர் ர் ர் ர் ர்

இந்த நடிப்பு எல்லாம் வேணாம்.. ஏங்க?

என்ன?

Tuesday, July 24, 2018

ஆணியை பிடுங்கும் VIPகள்

ஓகே..

கீழே குறிப்பிடபட்டுள்ள  இந்த வசதியெல்லாம் உங்களுக்கு வாழ்நாள் வரை மட்டும் இல்லாமல், நீங்கள் இறந்த பின்பும் தங்களின் அடுத்த பரம்பரைக்கும் இருக்கும் என்பதை நினைத்து கொண்டு இதை படியுங்கள்.

இலவச மின்சாரம்..
இலவச குடிநீர்..
இலவச ரயில் பேருந்து..
இலவச வெளிநாட்டு விடுமுறை..
இலவச விமான டிக்கட்..
இலவச வீடு..
இலவச அலுவலகம்..
காவலுக்கு குறைந்த பட்சமாக மூன்று போலீஸ் (தற்போதைய நிலை படி நம் நாட்டில் 736 குடிமகன்களுக்கு ஒரு போலீஸ் தான் வாய்த்துள்ளது. இதில் இந்த தேச தியாகிகளுக்கு 24  மணி நேரமும் மூன்று பேர்!)...
சாலையில் செல்லுகையில் போலீஸ் பந்தோபஸ்து..
அரசு நடத்தும் உணவகத்தில் குறைந்த விலையில் உணவு...
சாகும் வரை மற்றும் செத்தபின்பும் பென்ஷன் ( இது எப்படி என்று ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். மறைந்த நடிகர் SS சந்திரன் MP  யாக சில வருடங்கள் இருந்ததால் இன்று வரை அவர் குடும்பத்திற்கு கிட்டத்தட்ட மாதத்திற்கு  ஒரு லட்சம் பென்ஷன். நம்ம மானஸ்தன் கூட போன வருஷம் வரை அவர் நாட்டிற்காக செய்த தியாகத்திற்காக பென்ஷன், இந்த பென்ஷன் வகையில் மல்லையா. நடிகை ரேகா, அமிதாப் பச்சன்,டெண்டுல்கர் போன்றோர்கள் சேர்ந்து இருக்கவும் சேட்டை போகும் வாய்ப்பு இருப்பதும் கசப்பான உண்மை)

பிள்ளையை பெத்தா இளநீரு...

என்ன ஒரு அற்புதமான நாள் இன்று.

காலை எழுந்து முகநூல் திறக்கையில் என் அருமை நண்பனின் பதிவு.ஆண்டவனின் அருளால் என் மகன் தணிக்கையாளர் தேர்வில் வெற்றி பெற்றான் என்று.
என் நண்பனும் தணிக்கையாளனே.
நான் தணிக்கையாளனாவதற்கு பல பேர் உற்சாக படுத்தி இருந்தாலும், இந்த நண்பனின் உந்துதலை மறக்கவே இயலாது.

ஒரு முறை பரீட்சைக்கு செல்லும் போது, கடைசி நிமிடத்தில் ஒரு சந்தேகம் வர, நேரமின்மை காரணமாக புத்தகத்தை எடுக்காமல், ஒரு இன்டர்நெஷனல் ( அந்த காலத்தில் அந்த கால் ரொம்ப அரிது) கால் போட்டு அவன் சந்தேகத்தை விளக்க .. அதே கேள்வி தேர்வில் வர..
விட்ட குறை தொட்ட குறை தான் போங்க.

வளைகுடா பிரதேசத்தில் கடைசியாக பார்க்கும் போது அவன் மகனிற்கு நான்கோ ஐந்தோ வயது. விடை பெரும் போது,
நல்லா தானே இருக்கே.. நீ ஏன் அமேரிக்கா போற? இன்னும் கொஞ்சம் வருடம் இங்கேயே இரு..
இல்லே...மொத்த குடும்பமே அமெரிக்காவில் இருக்காங்க.. என் பொண்ணுக்கு (அப்ப ஒரு ராசாத்தி தான்) அவளோட கசின் மற்றும் சொந்தம் பந்தம் எதுவுமே தெரியாம வளருறா.. நான் அங்கே போறது தான் சரி...
ஓகே..


நீ இன்னும் எவ்வளவு நாள் இங்கே இருக்க போற...

Sunday, July 22, 2018

"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்"

வாரம் முழுக்க வேலைக்கு சென்று விட்டு, வெள்ளி வரை காத்திருந்து வெள்ளி ஐந்து அடித்தவுடன்.. "ஹாப்பி வீக்கெண்ட்" என்று அலுவலகத்தில் அலறி விட்டு இல்லத்தை அடைந்து...

இசை ..

டிவியில் ஸ்போர்ட்ஸ்..

சாப்பாடு ...

கோல்ப்  (அதை தான் வாரமுழுக்க தாக்குவோமே)

நண்பர்கள்..

உறவினர்கள்...

என்று தாக்க திட்டம் போட்டு,

அந்த திட்டத்தையும்  சனி இரவு வரை நேர்த்தியாக நடத்தி விட்டு

ஞாயிறு காலையில் ஆலயத்திற்கு சென்று, எல்லாம் வல்ல இறைவனை வணங்கிவிட்டு ..

மதிய உணவை முடித்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுகையில், மணி 3:45.

மூத்தவள் எங்கே?

அவ வீட்டுக்கு போய்ட்டா ..

Saturday, July 21, 2018

50+லும் ஆசை வரும்!

ஜூலை 20 . ஆம். "That's one small step for man, one giant leap for mankind,"  என்று  நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலை பதித்து விட்டு சொன்னாரே அந்த நாள் தான். அடியேனின் பிறந்த நாளும்.

ஒரு மாதத்திற்கு முன்னே ராசாத்திக்கள் இருவரும் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க, மனமோ என்னத்த பிறந்த நாளோ.. என்னமோ.. 53  ஆக போகின்றது. இனிமேல் என்ன பிறந்த நாள் என்று சொல்ல..

அவர்களோ.. "Age is just a number" என்ற அப்பட்டமான பொய்யை சொல்லிவிட்டு ... யோசித்து சொல்லுங்கள் என்றார்.

பிறந்த நாள் பரிசு...

வயது ஒன்றில் இருந்து ஆறு வரை என்ன விருப்பட்டேன் என்று நினைவில்லை.

ஆறில் இருந்து 13  வரை வெவ்வேரு பள்ளிகள் - விடுதிகள். பிறந்த நாள் என்பது எப்போது வரும் போகும் என்று தெரியாது. Nobody Cares! வாழ்த்துவதற்கே ஆள் இல்லை என்னும் போது, பரிசாவது கரிசாவது...
12  வது பிறந்தநாள் என்று நினைக்கின்றேன். பிறந்த நாள் வந்து போனதையே மறந்துவிட்டு மூன்று நாள் கழித்து பள்ளியில் எதோ ஒரு விண்ணப்பத்திற்க்காக பிறந்த தேதியை எழுதும் போதுதான் நினைவிற்கே  வந்தது. அவ்வளவு கொண்டாட்டம்.

Wednesday, July 18, 2018

பனிரெண்டு தானே

திங்கள் முதல் வெள்ளி வரை
ஞாயிறுடனே விழிப்பதனால்
சனி காலையில் சற்றே அயர்ந்து
நித்திரையில் இருக்கையில்..

அப்பா அப்பா..
கனவு தான் இது என்று
திரும்பி படுக்க முயல்கையில்
அப்பா..அப்பா..
அலறினாள் என் ராசாத்தி...

பனிரெண்டு தானே..

அம்மாடி...
அவசரம் எதுவானாலும்
காக்கட்டும்..
இன்னும் ஐந்தே நிமிடம் கொடு
என்று சொல்ல...

சரி என்று சொல்லி
கடிகாரத்தையே பார்த்து கொண்டு
அருகிலேயே அமர்ந்து விட்டாள்
அவளையும் அறியாமல்
ஒரு  மெட்டைமுணுமுணுத்து கொண்டு.

பனிரெண்டு தானே..

நொடி முள் முன்னூறு தாண்ட
நொடி இருக்கையில்..
அப்பா..அப்பா..
அவசரமா ஓடி வா...
ஓடினோம் ..
கதவை திறந்து
காட்டினாள்..
குண்டு மல்லியை..
பூத்திடுச்சி ..
அப்பா
பூத்திடுச்சி..

பனிரெண்டு தானே..

Friday, July 6, 2018

வருமுன் காப்போம் (Go Fund Me)

இந்த பதிவை எழுதும் போதே மனதில்..

இதை நாம் எழுதி தான் ஆகவேண்டுமா என்ற ஒரு கேள்வி வந்தது. அது மட்டும் இல்லாமல், இந்த பதிவிற்கான சரியான நேரம் இது தானா? என்ற கேள்வியும் வந்தது.

இரண்டாம் கேள்விக்கு பதில்.. இந்த பதிவிற்கென்று ஒரு சரியான நேரம் அமையாது. எப்போது இதை பற்றி எழுதினாலும் யாராவது தவறாக நினைக்க வாய்ப்புள்ளது அதனால் இப்போதே எழுதிவிடலாம் என்பது சரியாக பட்டது.

முதல் கேள்வி!

அமெரிக்காவிலும் மற்றும் பல வெளிநாடுகளிலும் பல வருடங்கள் வாழ்ந்தவன். இரண்டு இளவயது பெண்களின் தகப்பன். அம்மணியின் கணவன். எங்கள் கூடவே வசிக்கும் அம்மா. மற்றும் தொழில் ரீதியாக நிதி துறையில் படித்து பணிபுரிபவன். இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கும் போது இதை நான் எழுதியே ஆகவேண்டும் என்ற எண்ணம் தான் வந்தது.

Monday, July 2, 2018

நாய் கடி ஜனா !

1986 உலக கால்பந்து சீசன்..கல்லூரி நாட்கள்.. கால் பந்து நடப்பது என்னமோ அமெரிக்காவில இருந்தாலும்.. கால் பந்துபோட்டியில் இந்தியா கலந்துக்காம இருந்தாலும்..

உலகமே தலை கீழே போனாலும் பரவாயில்லை .. இந்த கால்பந்து போட்டியை அணு அணுவா அனுபவிக்கணும்னு உடம்பில் இருக்க ஒவ்வொரு செல்லும் சொல்ல.. ரசிக்கணும்னு முடிவும் பண்ணியாச்சு

கல்லூரி ஆரம்பிச்சி  ரெண்டே நாள் தான் ஆச்சி.. ரெண்டு வாரத்துக்கு முன்னால தான் அம்புட்டு பேருக்கும் எம்புட்டு அரியர்ஸ் என்ற செய்தி வந்தது. இந்த வருடம் மூன்றாம் ஆண்டு. கடைசி வருடம். முதலாம் ரெண்டாம் வருடம் அரியர்ஸ் இருந்ததை வீட்டில் மறைச்சிடலாம். ஆனா மூணாவது வருஷம் பெயில் ஆனா.. வூட்டுக்கு தெரிஞ்சிடும்ன்னு கொஞ்ச பயத்துல முதல் நாளில் இருந்தே படிக்கலாம்னு ஒரு முடிவு பண்ண ரெண்டே நாளில் உலக கோப்பை ஆரம்பிச்சிடிச்சி.

சரி .. ஒரு மாசம் தானே உலக கோப்பையை முழுசா பார்த்துட்டு அப்புறம் படிச்சிக்கலாம்னு ஒரு முடிவெடுத்துட்டு நண்பர்களோடு சேர்ந்து ஒரு எந்த அணியோட எந்த அணி என்னைக்கு ஆடுறாங்கன்னு ஒரு பெரிய வரை படம் போட்டு கையில் கிடைச்ச அஞ்சையும் பத்தையும் வைச்சி பந்தயம் கட்டினு  இருந்த நாட்கள்..

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...