வெள்ளி, 17 ஜூலை, 2020

அன்றொரு ஒரு நாள் இதே நிலவில் ...

காலையில் அலாரம் அடித்தவுடன்.. அடிச்சி பிடிச்சி எழுந்து போய்.. அன்பான அதட்டலோடு பிள்ளைகளை  எழுப்ப...

அவர்களோ..

"அஞ்சு நிமிசம்"

ன்னு கெஞ்ச..

அம்மணி சமையலறை போய் .. காபியோ டீயோ போட...

நாமும் ஓடி போய் எல்லாருடைய மத்திய உணவை கட்டி அவங்க வாங்க பையில் போட்டுட்டு..கையில் கிடைத்த இட்லி தோசையை.. .அவசரமா முழுங்கிட்டு..

வீட்டில் இருக்கும் அம்மாவிற்கு காலை உணவு மத்திய உணவை தயார் செய்து மேசையில் வைத்து விட்டு...

அம்மணி ஒரு புறம்.. மூத்தவள் ஒரு புறம்.. அடியேன் ஒரு புறம் இளையவளோடு கிளம்பும்  போது...

அலை பேசி..

"இன்னைக்கு அவ பள்ளிக்கூட மீட்டிங் .. நீங்க போறீங்களா..?"

"அடுத்த வாரம் மூத்தவளை கூட்டினு வேற ஊருக்கு ஒரு விளையாட்டு போட்டி.. டிக்கட் வாங்கிட்டிங்களா?"

"உங்க அம்மாவுக்கு மாத மருத்துவ சோதனை.. டாக்டரிடம் கூட்டினு போகணும்"

இளையவள பள்ளியில் விட்டுட்டு நம்ம அலுவலகம் போகும் போது, அலை பேசி அலற..

மூத்தவள்..

"டாடி.."

"சொல்லு.."

"ஐ லவ் யு .."

"என்ன வேணும்...?"

"இல்ல சும்மாவா தான் ஐ லவ் யு.."

"சீக்கிரம் சொல்லு என்ன வேணும்?"

"வீட்டு பாடத்தை மறந்து வீட்டிலே வைச்சுட்டு வந்துட்டேன்..ப்ளீஸ்.."

"அட உங்கப்பனுக்கு  தப்பாம பிறந்தவளே..."

"ஐ லவ்  யு டாடி.."

"மீ டூ..."

என்று வைக்கும் போது

சின்னவள் அழைத்து..

"டாடி..."

"சொல்லு.."

"அக்காவுடைய வீட்டு பாடத்துக்கு வீட்டுக்கு போறீங்கள?"

"ஆமா!"

"ஐ லவ் யு டாடி.."

"நீ எதை மிஸ் பண்ண?"

"லன்ச்.. விட்டுட்டு வந்துட்டேன்."

"ஐ லவ்  யு டூ.. பை."

என்று  வைக்கையில்..

"ஏங்க... போன மாசம் போன் பில் ஒரு கவரில் போட்டு  கொடுத்தனே?  போஸ்ட் பண்ணிங்களா?"

"பண்ணிட்டேன்..!!"

 என்று சொல்லிவிட்டு வண்டியின்  முன்புற பெட்டியை திறந்து பார்த்தால்.. அந்த கவர்.. என்னை பார் என் அழகை பார் என்று சிரிக்க..

மாலை அனைவரும் இல்லத்திற்கு வர..

மூத்தவள்...

"தேங்க்யு டாடி..."

இளையவள் 

"தேங்க யு டாடி "

அம்மணி..

"என்ன? ரெண்டு பெரும் தேங்க் யு ன்னு சொல்லுன்னு இருக்காளுங்க.. எதையாவது மறந்துட்டு போய் இருப்பாளுங்க. நீங்க எடுதுன்னு போய் கொடுத்தீங்களா?"


பிள்ளைகள் இருவரும், ஒன்றாக சேர்ந்து..

"ஹி இஸ்எ குட் மென் அம்மா.. நாங்க என்ன சொன்னாலும் கரெக்ட்டா செஞ்சிடுவார்!"

"நீங்க கொடுக்குற வேலையை சரியா செய்வார். நான் ஏதாவது செய்ய சொல்லி கொடுத்தா அடுத்த ரெண்டு நாளைக்கு காலில் சுடு தண்ணி ஊத்துனா மாதிரி தான் டென்ஷன்!"

"ம்ம்ம் "

"டீ ஆற போகுது, போய் உங்க அம்மாட்ட கொடுங்க!"

சரி தலைப்பிற்கு வருவோம்! 

இப்படி போய் கொண்டு இருந்த நாட்கள் எல்லாம் கடந்த காலமாகிவிட்டது. இனிமேல் கெஞ்சினாலும் வராது.

சரி, இந்த பதிவை இப்ப ஏன் போடுற.. ?ஏன் இந்த புலம்பல்ன்னு யாரோ கேட்பது கேட்கின்றது.

ஒன்றுமில்லை. தங்களில் யாராவது இம்மாதிரியான நாட்களை தற்போது அனுபவித்து கொண்டு இருந்தால், மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்.

பிற்காலத்தில் தலை கீழ் நின்றாலும் இந்நாட்கள் கிடைக்காது. நினைவுகள் மட்டுமே தங்கும். 

அந்த நினைவுகள் இனிப்பாக இருக்க வேண்டும் அல்லவா !

1 கருத்து:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...